Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கல் பண்டிகை பெருமை மிகுந்தது. இயக்குனர் பொன்வண்ணன்

Featured Replies

கிராமத்து பக்கம் எல்லாம் சில விஷயங்களைத்தான் திருவிழாவாக கொண்டாடுவார்கள். அது எது? என்னன்னு? பார்த்தீங்கன்னா வீட்டில யாருக்காவது உடல் நிலை சரியில்லைன்னா சாமிக்கிட்ட வேண்டிக்குவாங்க. உடம்பு சரியாயிடுச்சுன்னா கெடா வெட்டுறேன்... கோழி அடிக்கிறேன்... பொங்கல் வைக்கிறேன்னு சொல்லுவாங்க! இதெல்லாம் அவங்களுடைய மனசைப் பொறுத்தது.

அந்த நோயை பொறுத்தது. ரொம்ப சீரியஸôன விஷயமாக இருந்தால் மொட்டை அடிச்சுக்கிறேன்னு வேண்டிப்பாங்க. வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு ஏதாவது பிரச்சினையோ, பிரசவ நேரமாகவோ இருந்தால் அதுக்கும் இந்த மாதிரி வேண்டிக்கொள்வார்கள். ஒரு பெரிய உயிரைக் காப்பாற்ற சின்ன உயிரை பறிப்பதாகவும் சில நேரங்களில் இருக்கும். இது கிராம வாழ்க்கையில் எளிதாக காணக்கிடைக்கிற விஷயம்!'' ஆசுவாசமாக பேசத் தொடங்குகிறார் பொன்வண்ணன்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் தனக்கென தனி முத்திரைப் பதித்துக்கொண்ட போராளி. ஓவியம், எழுத்து, இயக்கம், நடிப்பு என பன்முகம் கொண்ட படைப்பாளி. சமூகத்தின் மீதான தனது அக்கறையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேசியும், எழுதியும் வருபவர். தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சிலருக்கே மொழியின் மீதும், பண்பாட்டு அடையாளங்களின் மீதும் மிகுந்த மரியாதையும், நேசிப்பும் இருக்கிறது. அந்த பட்டியலில் எப்போதும் பொன்வண்ணனுக்கும் இடமுண்டு. பொங்கல் வந்தாச்சு. இதில் எத்தனை பேருக்கு பொங்கலைப் பற்றியும், அதன் கொண்டாட்டத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதோ? என்ற எண்ணத்தை மனதில் சுமந்தவாறே பொன்வண்ணனை சந்தித்தோம்.

பொங்கல் பண்டிகை குறித்த உங்களுடைய அபிப்பிராயத்தை கூறுங்களேன்?

இன்றைய சமூக சூழலில் நன்றியுணர்ச்சி மனிதர்களிடம் ரொம்ப குறைந்து போயுள்ளது. ஒருத்தன் நமக்கு ஏதாவது உதவி செய்கிறான் என்றால் அதை சொல்லிக்காட்டும்போது எதிர்காலத்தில் அவனுக்கு நாம் எதையாவது செய்யணுமோன்னு நினைத்துக்கொண்டு நன்றி கூட சொல்ல மறந்துவிடுகிறோம். படிப்பறிவு இல்லாத கிராமத்து மக்களாக இருந்தாலும், வருடம் முழுக்க தனக்கு உழைத்த மண்ணுக்கும், ஆடு, மாடுகளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்கிற விதத்தில் கொண்டாடுவதுதான் பொங்கல். தனக்கு வாழ்வாதாரமாக விளங்கும் அஃறினை பொருட்களுக்கும், உயிருக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்வதுதான் பொங்கல். இப்படியொரு நன்றியை தெரிவிக்கும் மிகப் பெரிய மனிதர்கள் வாழும் இடம்தான் கிராமம்!

பொங்கல் பண்டிகையை பார்த்தீர்கள் என்றால் ஒரு காலகட்டம் வரைக்கும் வெளி தாக்கங்கள் இல்லாமல் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்துவதாகத்தான் இருந்தது. அதன் பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி அடைய அடைய பொங்கல் ஒரு சடங்காக மாறிவிட்டது. நன்றி சொல்வதை விட்டு விட்டு இத்தனை வருடமாக பின் தொடர்ந்த ஒரு விஷயத்தை நான் பின் தொடர்கிறேன் என்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. அன்றைக்குப் பார்த்த பொங்கலுக்கும், இன்றைய பொங்கலுக்கும் நிறைய மாற்றங்கள் உருவாகிவிட்டதைத்தான் நான் பார்க்கிறேன்!

பொங்கல் பண்டிகை இன்று வெறும் சடங்காக மாறிவிட்டாலும், சிறுவயதில் நான் அனுபவித்த அந்த நல்ல விஷயங்களையும், பொங்கல் பண்டிகையையும் என் பிள்ளைகள் ஓரளவுக்காவது தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தைப் பொங்கல் அன்று என் பிள்ளைகளை கிராமத்துக்கு அழைத்துப்போய் என் அப்பா, அம்மாவோடதான் கொண்டாடுவேன்.

நீங்கள் வாழ்ந்த அந்தக் கிராமம் குறித்து சொல்லுங்களேன்?

ஈரோட்டிற்கு அருகில் இருக்கும் முடக்குறிச்சி கிராமத்தில்தான் நான் பிறந்து, வளர்ந்தேன். அந்த கிராமத்தில் இருந்து வந்தவர்தான் சுப்புலட்சுமி அம்மாவும்! அதனால் எங்கள் கிராமத்தைப் பற்றி ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரியும். எங்க கிராமம் காவிரியின் மேல்பகுதியில் இருக்கிறது. அதனால் எப்பவுமே நீரும், வாழ்வாதாரங்களும் ரொம்ப நன்றாக இருக்கும். அதேபோல உழவர்களும் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி எங்களுடையது. கொங்கு வெள்ளாளர்கள் அதிக அளவில் வசிக்கும் அந்தப் பகுதியில் உழவு தன்மையும், வெள்ளாளத் தன்மையும்தான் அதிகமாக கலந்திருக்கும். எங்களது முடக்குறிச்சி என்பது பக்கத்தில் இருக்கிற பதினெட்டு கிராமங்களின் தலைமையிடமாக இருக்கிறது.

அதனால்தான் அங்கே சந்தை கூடும். நகரப் பஞ்சாயத்து, காய்கறி அங்காடி எல்லாம் அங்கேதான் இருக்கிறது. அதனால் எங்களுடையதை கிராமம் என்று சொல்ல முடியாது. ஓரளவிற்கு நகரத்து வசதிகளுடன் இருக்கும் இடம்தான் நான் வசித்த இடம். அதனால்தான் அந்த இடத்தை விட்டு விட்டு சென்னை நகரத்திற்குள் வந்துவிட்டாலும் கிராமத்தை தவற விட்டுவிட்டோமே என்கிற உணர்வு எழுந்ததேயில்லை. எல்லாவிதமான கடவுள்களையும், எல்லா தரப்பு மனிதர்களையும் வாழ்வதற்கு வசதி ஏற்படுத்திக்கொடுத்த கிராமம்தான் என்னோட முடக்குறிச்சி!

இயக்குநராக பரிணமித்தது பற்றி?

நான் சென்னைக்கு வந்ததன் நோக்கமே ஒரு ஓவியனாக வேண்டுமென்றுதான்! இங்கு வந்ததும் முதன்முதலில் பேனர் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் வேலை செய்தேன். அந்த நேரத்தில் பேனர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு சரியான எதிர்காலம் இல்லையென்று என்னுடைய சீனியர் ஓவியர்கள் சொன்னார்கள். அதனால், அதிலிருந்து வெளியேறி பாரதிராஜா ஸôரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். உதவி இயக்குநராக இருந்த காலகட்டத்திலேயே அவர் எனக்கு சில அங்கீகாரங்களைப் பெற்றுத் தந்தார். சில படங்களுக்கு வசனம் எழுதவும், சில படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு தந்தார். ஆனால், அதையெல்லாம் மீறி எனக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆர்வம்தான் அதிகமாக இருந்தது. முதல் முயற்சியாக "அன்னை வயல்' என்கிற படத்தை இயக்கினேன். அந்தப் படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. முதல் படத்தின் இழப்பை சரி செய்வதற்காக இரண்டாவது படத்தை எடுத்தேன்.

அதுவும் வெற்றி பெறாமல் போய்விட்டது. இக்கட்டான சூழலில் நானே என்னை உயர்த்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். அதனால் என்னுடைய பொருளாதாரத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், சினிமாவில் நான் தொடர்ந்து இருக்க வேண்டுமென்பதற்காகவும் நடிப்பை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். பாரதிராஜா ஸôரின் மூலமாக கிடைத்த நடிக்கிற வாய்ப்பை பிறகு முழு நேரமாக்கிக் கொண்டேன்!

நடிக்கிற வாய்ப்பு உடனே கிடைத்ததா?

பாரதிராஜா ஸôர் ஆரம்பத்திலேயே என்னை ஒரு நடிகனாகவும் அறிமுகப்படுத்தியிருந்ததால் அந்தப் பிரச்சினை எனக்கு வரவில்லை. அதேபோல அவர்தான் மறுபடியும் "கருத்தம்மா' படத்தில் இன்னும் அழுத்தமான ஒரு பாத்திரத்தை எனக்கு வழங்கி மக்கள் மத்தியில் பதிய வைத்தார். தொடர்ந்து நடிகனாக என்னை வளர்த்துக்கொள்ள அந்தப் படம் எனக்கு மிகவும் உதவியது. பத்தாயிரம் பேர் பார்க்கக் கூடிய ஒருவனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு நடிப்பு எனக்கு உறுதுணையாக இருந்தது.

தொலைக்காட்சித் தொடர்களில் கூட நடித்தீர்களே! அந்த அனுபவம் எப்படியிருந்தது?

திருமண வாழ்க்கைக்குள் நான் அடியெடுத்து வைத்திருந்த நேரம். நடிப்பு, வாழ்க்கை என்று ஒரு பேலன்ஸ் பண்ணி உட்காரும்போதுதான் திரைத்துறையில் படைப்பாளிக்குள்ளே பிரச்சினை வந்து இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டேன். அப்போது பொருளாதார ரீதியாக என்னை தக்க வைத்துக்கொண்டு அடுத்த நிலைக்குப் போக வேண்டுமென்று எண்ணினேன்.

அந்த சமயத்தில் சின்னத்திரையில் நாகா இயக்கத்தில், பாலசந்தர் ஸôர் "மர்மதேசம்' என்ற தொடரை கொண்டு வந்தார். அந்த தொடரில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அந்த தொடர் சன் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. அதில் நடித்ததன் மூலமாக "அண்ணாமலை' தொடரில் நடிக்க ராதிகா வாய்ப்பு தந்தார்.

இந்த வாய்ப்புகளின் மூலமாக என்னுடைய பொருளாதாரத் தேவை ஓரளவிற்கு பூர்த்தியடைந்தது. அப்போது தொடர்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்து, உச்சத்தில் இருந்த நேரம். அதனால், தொடர்ந்து சின்னத்திரை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு ஒரு ஐந்து வருடங்கள் நடித்தேன். சின்னத்திரைதான் எனக்கு மக்கள் மத்தியில் ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது.

மீண்டும் பெரியத் திரைக்கு வந்தீர்களே?

ஆமாம். தொடர்ந்து சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தபோது "பருத்திவீரன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் பெரிய அளவில் வெற்றியடையவே எனக்கும் தொடர்ந்து "அஞ்சாதே', "அயன்', "மாயாண்டி குடும்பத்தார்' போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் என்னை காப்பாற்றி வருவது நடிப்புதான். இப்போது அடுத்தவர்கள் என்னை தீர்மானிப்பதும் நடிப்பின் மூலமாகத்தான். ஆகவே, நான் என்னை தீர்மானிக்க வேண்டுமென்றால் இந்த நடிப்பை விட்டு விட்டு யோசிக்கணும். அந்த மாதிரியான சூழ்நிலை அமைந்தால் அதையும் செய்வேன். நான் ஓவியனாக வேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் வந்தேன். அதில் எதிர்காலம் இல்லையென்று தெரிந்ததும், வேறு ஒரு துறைக்கு என்னை மாற்றிக்கொண்டேன். இன்று பேனர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் வினையல் போர்டு, டிஜிட்டல் போர்டு என்று வந்துவிட்டது. பெயிண்டில் வரைகிற முறையே தற்போது இல்லை. அன்று அந்த முடிவை நான் எடுக்காமல் விட்டிருந்தால் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன்.

ஒரு கலையை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?

என்னுடைய அப்பா, அம்மா இருவருமே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெரிய படிப்பெல்லாம் படிக்கவில்லை. ஆனாலும், தனிமனித ஒழுக்கத்தோடு, அன்பாக வாழ்ந்தார்கள்; எங்களையும் வளர்த்தார்கள். ஓவியம், எழுத்து, படிப்பு என்று எப்படி எனக்குள் ஆர்வம் வந்ததென்று தெரியவில்லை. எங்க குடும்பத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருக்கும் கலையோடு தொடர்பு இருந்ததில்லை. எப்படியோ கலையின் மீது நான் கவரப்பட்டேன்.

குடும்ப வாழ்க்கையை எவ்வாறு தகவமைத்துக் கொண்டீர்கள்?

நம்முடைய வாழ்க்கையில் நாம் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், அவர்கள் நம்முடைய வாழ்க்கை முழுவதும் கூட வரப்போவதில்லை. அதில் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் கவலையில்லை. திருமண வாழ்க்கை அப்படியில்லை. நம்மோடு தலைமுறை தலைமுறையாக வருவது. சினிமாவில் முடிவு எடுப்பது போல எல்லாம் வாழ்க்கையில் முடிவு எடுக்க முடியாது. இப்போது என் எதிரே வருபவள் ஒரு பெண்.

அவள் என்னைப் போலவே உருவானவள்; சிந்திக்கத் தெரிந்தவள்; கேள்விக் கேட்க தெரிந்தவள்; சந்தோஷப்பட தெரிந்தவள். அவள் என்னுடைய ரசனைக்கு உட்பட்டவளாக இருக்கிறாளா? அல்லது நான் அவளுடைய ரசனைக்கு ஏற்றுவாறு மாறிக் கொள்ள வேண்டுமா? என்று தெரியவில்லை. எனக்கு இருக்கிற ரசனை அவளுக்கும் இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை.

குடும்ப வாழ்க்கையில் நாம் நம்முடைய துணைவியிடம் வாழ்க்கையின் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். சிந்தனையிலிருந்து, படிப்பிலிருந்து, குழந்தைகளுடைய எதிர்காலம் வரைக்கும் அவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதனால் நான் மனைவியா தேர்ந்தெடுக்கிற பெண் கிராமத்திலிருந்து வந்தால் நான் பத்து வருடங்களுக்கு முன்பு வந்த நிலையில்தான் அவங்க இருப்பாங்க. கண்டிப்பாக உடனே அவர்களால் என்னை புரிந்துகொண்டு ஈடுகொடுக்க முடியாது.

அதனால் சென்னை வாழ்க்கையை நன்கு புரிந்துகொண்ட ஒரு பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன். அந்த நேரத்தில்தான் நானும், என் மனைவி சரண்யாவும் "பசும்பொன்' படத்திலிருந்து தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் ஒன்றாக நடித்து வந்தோம். இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்தோம். ஆனால், திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துடன் பழகவில்லை.

எங்கள் இருவரின் எண்ணமும், ரசனையும் ஒன்றாக இருந்ததால் நாங்கள் திருமணம் செய்து கொண்டால் என்னவென்று தோன்றியது. நான் என் மனைவியிடம் என் சூழ்நிலையைப் பற்றி சொன்னேன். ""உங்களுக்குப் பிடித்திருந்தால் பேசலாம்... இல்லையென்றால் கட்டாயம் இல்லை!'' என்றேன். அதன்பிறகு எங்கள் இரு வீட்டார் சம்மதத்தோடு எங்களின் திருமணம் நடந்தது.

தங்களது மனைவி சரண்யா பற்றி?

எங்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை சரண்யாவால் நடிக்க முடியவில்லை. முதலில் "வீட்டுக்கு வீடு லூட்டி' தொடரில் நடித்தார். அதன் பிறகு அமீர் இயக்கத்தில் "ராம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதிலிருந்து தற்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். பல படங்களில் தன்னுடைய அழுத்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

உங்கள் முப்பாட்டன்கள் குறித்து ஏதேனும் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு விதமான சப்தமும் நம்முடைய உடலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும். நான் ஒரு கிராமத்திலிருந்து வந்தவன். ஆனால், என்னைச் சுற்றி கிராமத்துக்கான சூழ்நிலையை வளர்த்துக்கொள்ள முடியாதபடி சென்னை வாழ்க்கை இருக்கிறது. ஒரு மோட்டார் சத்தமோ, குருவி சத்தமோ, தண்ணீர் ஓடுகிற சத்தமோ, காற்று வந்து இலையில் பட்டு சலசலக்கும் சத்தமோ, இல்லை தூரத்தில் இருக்கிற ஒரு மாடு கத்தும் சத்தமோ, இல்ல யாரோ ஒருத்தர் மற்றொருவரை கூப்பிடுகிற சத்தமோ அல்லது நாய் குரைககும் சத்தமோ... இவையெல்லாமே அமைதியாக எனக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தும். என் இருபது வயது வரையும் நான் அப்படித்தான் வாழ்ந்தேன். அது மட்டுமில்லை. என்னுடைய பரம்பரைக்குள்ளேயே அதிகபட்சமாக கமர்ஷியல் சத்தத்திற்குள் வாழ்கிற முதல் ஆள் நான் மட்டும்தான்!

என்னுடைய தாத்தாவுக்கு முன்பு இருந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் இயற்கையோடு ஒன்றித்தான் வாழ்ந்திருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் கடைசியாக இருந்த தலைமுறைதான் நல்ல சத்தங்களை கேட்டிருக்கிறது. நான் அதிலிருந்து இன்னும் அதிகமான சத்தத்திற்குள்ளே வந்துவிட்டேன். நான் நானல்ல... அந்த ஒரு கோடி மனிதர்களுடைய தொடர்ச்சிதான் நான்! அவனை தூக்கிக்கொண்டு வந்து சென்னையில் போட்டுவிட்டேன். பொன்வண்ணன் என்பது அடையாளத்துக்கான பெயர்தானே தவிர, மற்றபடி நான் மூத்த தலைமுறையினுடைய தொடர்ச்சிதான்! ஆகவேதான், என்னுடைய அக மனம் இயற்கையைத் தேடுகிறது. இயற்கை வேண்டுமென்றால் நான் கிராமத்துக்குத்தான் போய் ஆக வேண்டும். ஆனால்,நடிப்புத் தொழிலில் இருந்துகொண்டு அங்கே போய் இயற்கையை அனுபவிக்க முடியாது. ஆகவேதான், என்னுடைய வீட்டையே ஒரு பூந்தோட்டமாக வைத்திருக்கிறேன்... என் வீட்டிற்கு பச்சை நிறத்தையும், என்னை சுற்றி பறவைகளின் ஒலியையும் ஏற்படுத்திக் கொள்கிறேன். நல்ல மனசு எப்போதும் நல்லதையே நாடும்! அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

டைரக்டர் பொன்வண்ணனின் குடும்ப புகைப்படம் காண...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6133

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.