Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேபி ஒரு கைதி - உரையாடவோ அவரைப் பேட்டி காணவோ முடியாது – பாய்ந்தார் படை அதிகாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேபி ஒரு கைதி - உரையாடவோ அவரைப் பேட்டி காணவோ முடியாது – பாய்ந்தார் படை அதிகாரி:-GTNசெய்தியார்

31 ஜனவரி 2011

கேபியின் விஜயத்தை வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழக முக்கியஸ்த்தர்கள் புறக்கணிப்பு:-

கேபி ஒரு கைதி அவருடன் உரையாடவோ அல்லது அவரைப் பேட்டி காணவோ யார் உங்களுக்கு அனுமதி தந்தது என ஒருசில ஊடகவியலாளர்களிடம் பாய்ந்து விழுந்துள்ளார் பாதுகாப்பு அதிகாரி.

குடாநாட்டுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை கேபி மேற்கொண்டதாகக் கூறப்பட்ட போதிலும் கேபியின் விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு யாழ் மாவட்ட படைத்தலைமையே தகவல்களை வழங்கியிருந்தது. ஆனாலும் யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மூடப்பட்ட அறையில் மிகக் குறைவானவர்களை மட்டுமே கேபி சந்தித்திருந்தார். அங்கு சென்ற ஊடகவிலாளர்கள் அனைவரும் படையினரால் வாசலில் வைத்தே திருப்பி அனுப்பி விடப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஒருசில ஊடகவியலாளர்கள் மட்டும் மாணவப் பிரதிநிதிகள் போன்று உள்ளே நுழைந்து சிட்டனர். அவர்களே உள்ளே தங்கியிருந்தனர். அவர்களை அடையாளம் காணமுடியாத சூழலில் படையதிகாரிகள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கேபியிடம் அவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு செவ்வி ஒன்றை பெற முற்பட்டுள்ளார்கள். அவரும் செவ்வி ஒன்றினை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தார். அவ்வேளையில் கேபியுடன் சென்றிருந்த இருவரில் ஒருவர் குறித்த பத்திரிகையாளர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு உத்தரவிட்டார். அவர் அங்கிருந்த மற்றுமொரு படையதிகாரியின் கண்ணசைப்பிற்கேற்பவே ஊடகவிலாளர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகின்றது.

கேபி ஒரு கைதி அவருடன் உரையாடவோ அல்லது அவரைப் பேட்டி காணவோ யார் உங்களுக்கு அனுமதி தந்தது, அவர் அவ்வாறு எல்லாம் செய்ய முடியாது என அச்சுறுத்தியுள்ளார். இந்த அச்சுறுத்தலின் பின்னர் கேபி வாயை மூடிக் கொண்டு ஒரு புறமாகச் சென்று விட்டார். இதனிடையே அங்கு ஒரு சில ஊடகவியலாளர்கள் சென்றிருந்த விடயம் பின்னரேயே கசிந்தது.

இதனையடுத்து அங்கு சென்றிருந்த புலம்பெயர்ந்தவர்களும் குழப்பமடைந்து காணப்பட்டனர். ஆனாலும் குறித்த படையதிகாரியின் கண்ணசைவுடன் குறித்த ஊடகவிலாளர்களை மட்டும் அங்கு தொடர்ந்து பிரசன்னமாகியிருக்க அனுமதித்தார். ஆனாலும் அவ்hகளுக்கு கேபியுடன் உரையாடுவதாற்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இதனிடையே கேபியின் குடாநாட்டிற்கான விஜயத்தினை ஒரு பரபரப்பான செய்தியாக்கவே படைத்தரப்பு முற்பட்டிருந்தது. கேபியின் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக்கழகம் பிசுபிசுத்துப் போயுள்ள நிலையில் யாருமே அதனை தீண்டாத நிலையே காணப்பட்டிருந்தது. குளோபலே முதன்முதலில் அவரது வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக்கழகம் தொடர்பான செய்திகளையும் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கேபி அண்மைக்காலமாக வன்னிப் பகுதிகளில் நடமாடுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அவரைக் கொண்டு செல்வதற்கு படைத்தரப்பே முற்பட்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான ஒரு அரசியல் நகர்வாகவே கேபியின் விஜயம் பார்க்கப்பட்ட போதிலும் கேபி வெறுமனே கௌரவமாக தடுத்து வைக்கப்பட்ட ஒரு கைதி போன்றே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பது அப்பட்டமாக வெளியாகியிருக்கின்றது.

கேபியின் விஜயத்தை வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழக முக்கியஸ்த்தர்கள் புறக்கணிப்பு:-

யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த கேபியின் விஜயத்தை வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகத்தினது தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேற்றைய தினம் பகிஸ்கரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட மீனவ சமாச சம்மேளனத் தலைவர் சி; தவரட்னமும் அங்கத்தவர்களாக முக்கிய பிரமுகர்களும் உள்ளடங்கியிருந்தனர். இவர்களை உள்ளடக்கியே மேற்படி நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

வன்னி யுத்தத்தில் சிக்குண்டிருந்து அனாதைகளாக்கப்பட்டு தென்னிலங்கையில் வளர்கின்ற சிறுவர்களை மீட்டெடுத்து வன்னிக்கு கொண்டு சென்று யுத்த நடவடிக்கையில் அங்கவீனமான ஆதரவற்ற பொதுமக்கள் மற்றும் போராளிகளைப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக தமக்கு உறுதிமொழி மற்றும் ஆசைவார்த்தைகள் காட்டப்பட்டதை அடுத்து அவரது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக உள்ளுர் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையிலேயே அவரது சங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் சுதந்திரமாக வெளியே வந்து செயற்படுவார் என தாங்கள் நம்பியிருந்ததாகவும் உள்ளுர் மீனவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கேபியோ இன்னமும் சிறைக்குள் உள்ளவராகவே இருக்கின்றார். அவர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்.

அரச உயர் மட்டத்தினது உத்தரவு காரணமாகவோ தெரியவில்லை. கணணி வழங்குவது, தையல்பயற்சி வழங்குவது என்பது தற்போதைய சூழலில் அவருக்கு தேவையானது அல்ல. அதனைச் செய்வதற்கு பலபேர் இருக்கின்றார்கள். அங்கவீனர்களாக்கப்பட்ட அனாதைகளாக்கப்பட்ட சிறார்கள் தொடர்பில் கேபி கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எங்களை சந்திக்கக் கூட அவர் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நாங்கள் அவரை சந்திக்க தயாராகவில்லை என உள்ளுர் மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் வியாபாரிமூலையில் மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற உதவி வழங்கும் நடவடிக்கையில் கூட தலைவர் உள்ளிட்ட அனைவருமே பகிஸ்கரித்து விட்டனர். குடாநாட்டில் நேற்றைய தினம் கேபியுடன் புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்றவர்கள் மட்டுமே பிரசன்னமாகியிருந்தனர். உள்ளுர் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் ஆர்வம் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.