Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்பான்மை இனத்தவரிடம் நாட்டை ஏன் தாரை வார்த்தீர்கள்? பிரி.தூதரக அதிகாரிகளிடம் கேள்வி

Featured Replies

பெரும்பான்மை இனத்தவரிடம் நாட்டை ஏன் தாரை வார்த்தீர்கள்? பிரி.தூதரக அதிகாரிகளிடம் கேள்வி (பட இணைப்பு)

செவ்வாய், 01 பெப்ரவரி 2011 21:31 .இலங்கையை ஆண்ட பிரித்தானியர்கள் நாட்டை பெரும்பான்மை இனத்தவர்களிடம் ஒப்படைத்துச் சென்றமையே பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தது- எனவே பிரச்சினைக்கான தீர்வை பிரித்தானியர்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழு கோரி உள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருக்கும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடியபோதே இக்குழு மேற்கண்டவாறு விண்ணப்பித்தது.

இச்சந்திப்பு யாழ். ஆயரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழுவினர் இங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:

பிரித்தானிய அரசு 1948 ஆம் ஆண்டு நாட்டை பெரும்பான்மையினரிடம் கொடுத்து விட்டது சென்றது. இதுவே இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது.. எனவே நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தினருக்கு தீர்வை பெற்றுத் தர வேண்டிய தார்மீக பொறுப்பு பிரித்தானியர்களுக்கு உள்ளது.

தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பேரவலங்களுக்கு பிரித்தானியர்கள் இழைத்த அத்தவறுதான் காரணம். எனவே அதை சரிசெய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் பிரித்தானியர்களுக்கு இருக்கின்றது . இதை உணர்ந்து எமது மக்கக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.

இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். பொருளாதார தமிழ் மக்களின் மேம்பாட்டுக்கான வழிகளை கண்டு பிடித்துத் தர வேண்டும். இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றித் தர வேண்டும்.

பிரித்தானியப் பல்கலைக் கழகம் பிரிட்டிஸ் தூதரக கிளை ஆகியவற்றை யாழ். மண்ணில் திறக்கவேண்டும் .

மத்தியில் நடக்கின்ற ஆட்சியில் தமிழர்கள் பங்கு வகிக்கும் வகையில் செயல் திட்டங்களை பிரித்தானிய அரசு செய்து தரவேண்டும்.

பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் பதிலில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டவை வருமாறு:

"கடந்தகாலங்களைப் போன்று எதிர்வரும்காலத்திலும் சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசுக்கு பிரிட்டன் அழுத்தம் கொடுக்கும்.

பல்கலைக்கழகம், தூதரக காரியாலயம் ஆகியவற்றை திறப்பது தொடர்பில் சம்ப்பந்தப்பட்டவர்களுடன் பேசி உரிய நடவடிக்கைகள் எடுப்போம்

(பட இணைப்பு)

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17804:2011-02-01-16-08-09&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.