Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையே போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையே போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது

2011-02-03 23:04:04

மதவாச்சிக்கும் அநுராதபுரத்துக்கும் இடையே றம்பவ என்ற இடத்தில் உள்ள கனந்தலாவ குளத்தின் அணைக்கட்டு நேற்றுப் பிற்பகல் உடைந்தது. இதனால் குளத்து நீர் ஏ9 வீதியைக் குறுக்கறுத்துப்பாய்வதால் அந்த வீதியூடான போக்குவரத்து நேற்று பிற்பகலில் இருந்து முற்றாகத் தடைப்பட்டு கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த அணைக்கட்டு நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் உடைந்தது. இதனால் ஏ9 வீதியை மேவி சுமார் 10 அடி உயரத்துக்கு வெள்ளநீர் பாய்ந்தது. வெள்ளத்தில் சில வாகனங்கள் சிக்கித் தடம்புரண்டன.

எனினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து இப்பகுதி ஊடான போக்குவரத்து நேற்றுப் பிற்பகலில் இருந்து தடைப்பட்டுள்ளதாக மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். யாழப்பாணத்தில் இருந்து சென்ற பயணிகள் பேரூந்துகள் மற்றும் பாரவூர்திகள் வவுனியாவில் நிறுத்தப்பட்டுள்ளனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

newjaffna.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 ஆவது நாளாக பெய்யும் கடும் மழையால் வவுனியாவிலும் மக்கள் இடம்பெயர்வு

[ பிரசுரித்த திகதி : 2011-02-04 06:05:22 AM GMT ]

கடும் மழை காரணமாக வவுனியாவிலும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக 5 ஆவது நாளாக பெய்யும் மழையினால் வவுனியா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இடங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நேற்று வியாழக்கிழமை 517 குடும்பங்களைச் சேர்ந்த 2309 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் 15 இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதேச செயலாளர் அ.சிவபாதசுந்தரன் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகளூடாக சமைத்த உணவுகளைத் தொடர்ச்சியாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஓச்சா நிறுவனத்தின் மூலம் இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் கந்தசாமி நகரிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அக்கிராமத்தில் 198 குடும்பங்களில் இருந்து 792 பேர் இடம்பெயர்ந்து அருகிலுள்ள கிராமங்களிலும் ஆண்டியா புளியங்குளத்தைச் சேர்ந்த 247 குடும்பங்களைச் சேர்ந்த 1019 பேரும் இடம்பெயர்ந்து பொதுக்கட்டிடங்களிலும் மெனிக்பாம் வீட்டுத்திட்டத்தில் இருந்து மக்கள் முழுமையாகவும் வெளியேறி பாடசாலை மற்றும் கல்யாண மண்டபத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செட்டிகுளம் உதவிப் பிரதேச செயலாளர் கே.கமலதாசன் இடம்பெயர்ந்தவர்களுக்கு 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 ரூபாவுக்கும் 12 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு 80 ரூபாவுக்கும் உட்பட்ட பெறுமதியில் சமைத்த உணவுகளை வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை,வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம் மூடப்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாகவுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருப்பதனால் சில பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மழை காரணமாக மலசலகூடங்கள் நிரம்பி நீருடன் கலந்துள்ளது. உணவு மற்றும் நீர் மூலமாக நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இதன் காரணமாக சுட்டாறிய நீரைப் பருகுமாறும் சமைக்காது உண்ணும் உணவு வகைகளைச் சுத்தமான நீரில் கழுவிய பின் உண்ணுமாறும் கோரியுள்ளார். இத்துடன், வவுனியாவில் பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார். பாவற்குளத்தின் 4 வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளது. செட்டிகுளம் நேரியகுளம் வீதியினூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது

tamilulakam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.