Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எயிட்ஸ் நோயை எதிர்கொள்ளுமா எம்மினம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெங்கு நோய் பற்றி எல்லோர் மனதிலும் பயமும் தொடர்ந்து எல்லா மட்டத்திலும் பரப்புரைகளும் நிலவுகின்றன. ஆனால் அதைவிட பெரியதொரு துன்பியலை எம்சமுகம் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது எமது சமுகத்தில் எல்லாம் காலம் தவறிவிட்டன என்றால் தவறில்லை. டெங்கு நோய் வரும்போது எமது சமுகத்தில் எதிர்பார்க்கமுடியாத அளவு இழப்புக்களே உருவாகின அது தொடர்ந்தும் நிலைகொள்ள ஏதுவாக எமது சூழல் அமைந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. இருப்பினும் டெங்கு நோய் கொடியது ஆனால் உயிர்தப்பிக்கொள்ள வழி உண்டு மருந்து உண்டு சேலைன் தொடக்கம் குருதி மற்றும் குருதிப்பிரித்தெடுப்பு இவை எல்லாம் உள்ளன எனினும் இங்கு ஏற்படும் மரணங்கள் பொதுவாக தவறுதலானவை எனறே அமைகின்றன. ஆனால் எயிட்ஸ் நோய் இவ்வாறு விசமத்தனமாக பரவின் மருந்தில்லை மரணம் தான் இருக்கும் என்னும் நிலையே உள்ளது

மேலும் திடீர் மாற்றங்கள் உருவாகியதன் பலித விளைவு திறந்த பாலியல் கலாசாரத்தை திணித்து விட்டதென்றால் தவறில்லை எதிர் கொள்ளமுடியாத உணர்வுத்தடுமாற்றம் இளம்சந்தியினரை மிகவும் பாரதூரமாக பாதிக்காது இருக்கும் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றே கூறவேண்டும் எமது மக்கள் மத்தியில் கலாச்சாரகட்டமைப்பு என்பது முற்றுமுழுதாகவே சிதைக்கப்பட்டு விட்ட ஒரு நிலை விரும்பியோ விரும்பாமலோ வாங்கிக்கொணட பரிசாகவே உள்ளது இத்துடன் எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வும் அருகிவிட்டது எயிட்ஸ் நோய் பற்றிய அச்ச உணர்வும் குன்றிவிட்டது எயிட்ஸ் தொடர்பான பதாகைகள் கூட ஒளியிழந்துவிட்டன இதற்கு காரணம் முன்பிருந்த சூழ்நிலை இதன்போது மிகவும் இறுக்கமான கலாச்சார கட்டமைப்பு காணப்பட்டது இதனால் விழிப்புணர்வு பற்றி அதிகம் யோசிக்கவேணடி ஏற்படவில்லை எனறே கூற வேண்டும்

பரீடசை அறை தொடக்கம் பாடம் கற்கும் இடம் வரை பாலியலே செய்முறை சோதனை என்னும் காலமாகிவிட்ட நிலை….கல்வி குற்றிழந்து கலவியாகி…. ;கற்றதற்கு மாறாய் ஒழுகும் கணவான்கள் அது தாண்டி பாலியல் தொழிற்சாலை போன்று வளம் பெற்றுவிட்ட தொழிற்றுறை ..கருச்சிதைவுகள் நிறைந்துவிட்டன வல்லுறுவுகள் பல காதல் என்னும் பெயரில் மாங்கனி உண்ணும் பஞ்சபாண்டவர் போன்று மாறிவிட்டன அனேகமான காதல்கள்… கருத்தடை மாத்திரைகள் தட்டுப்பாடடில்..சட்டம் தூங்கும் நிலையில் ..கற்பை பறிகொடுத்த யுவதி தீயில் வீழ்வதா இல்லை கண்ணீரிலா..

இன்னும் பலபடி நகர்ந்து வேற்று கிரகவாசிகள் விபச்சாரத்திற்காக வந்திறங்கிய காட்சிகள் போன்று ஆடைக்கலாச்சாரம் அது ஊருடுவிவிட்ட உயிர்கொல்லியாகவேமாறிவிட்டது. இந்நிலையில் போதையென்றால் எல்லாம் கிடைக்கும் தாராளம் அப்படிப்பட்ட தன்னிறைவு.

இங்கு உணர்விழந்து அன்னியச்செலாவணியின் செழுமையுடன் அலையும் இளைஞர் கூட்டத்திற்கு அமிர்தம் வார்ப்பது போன்று அழகான பறவைக்கு அறிமுகம் வேண்டுமா என்ற தப்பான எண்ணத்தில் தப்பிக்க வழிகளிருந்தும் மூழ்கின்ற நிலையில் பாலியல் நரகத்தில் அமுதென்று விசம் பருகுவதுபோன்று எயிட்ஸ் நோயின் பிடியில் சிக்குவதாய் …எனின் வலசைபோகும் பறவை வழிதோறும் எத்தனை தெருக்கரை பிச்சைக்கார்க்கு கற்பை பிச்சையிட்டிருக்கும் என்று எண்ணிக் கொள்ள முனைந்தால் எவ்வளவு நல்லது

மருத்துவம் வியாபாரமாகி.. தொண்டுடன் தொடரபுடையோர் நிலை தவறி ஏதோ தேசத்தில் நுழைவதாய் ஒருபுறம். மேலைத்தேயகலாசாரம் உடை தொடக்கம் நடைவரை ஆக்கிரமித்துவிட்டது. மக்கள் கையிறு நிலையில் இளைஞர்கள் மேய்ப்பானற்று மந்தைகளாகி உயர்பதவிகளில் உள்ளேர் கேள்விகளை மட்டுமன்றி விடைகளுடன் சென்றால் விடை சொல்கின்ற அறிவுத்திறனுடனும் பழிவாங்கலுக்கு பயந்து பாலியல் தீயில் வீழ்கின்ற துன்பியல் இவை யாவும் முகவரி தொலைத்த மனிதன் படும் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும்

இவ்வாறன நிலையில் மருத்துவதுறை மட்டும்போதாது மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு அடையவேணடியது காலத்தின் தேவையாகும்.

அன்றேல் டெங்குநோய் பற்றி தற்போது உள்ள நிலையைவிட மிகமோசமான நிலையை எதிர்கௌ;ள வேண்டியே அமையும் முன்பு டெங்குநோய்க்கான கிருமி எமது குருதியில் காணப்படவில்லை என்றால் ஏற்கககூடிய விடயம் எனறே கூறவேண்டும் ஆனால் தற்போது எமது குருதியில் இல்லை என்று சொல்ல முடியாத விடயமாகிவிட்டது அவ்வாறே எயிட்ஸ் நோயின் பரவல் காணப்படும் நிலையே உள்ளது எனினும் எயிட்ஸ் குறித்து கருதின் காலவோட்டத்தில் சுமார் பத்துவருடங்களில் பெரியதொரு குடித்தொகை நோயின் பிடியில் சிக்கிவிட்ட பரிதாபத்தை அறியலாம். எனெனில் .இங்கு டெங்கு போனறல்லாது எயிட்ஸ் நோய்க்குரிய கிருமிதொற்றி பல வருடங்களின் பின்பே அறிகுறிகள் தென்படுவதே வழமை இதனாலே இவ்வாறு அமைகின்றது அதாவது சில சமயம் ஜந்து ஆறு வருடங்களில் அறிகுறி தென்படலாம் நோயாளியின் நீர்;ப்பீடணத்தின் வீரியத்தை பொறுத்து இந்நோய் சுமார் பதினைந்து வருடங்களின் பின் கூட இனம்காணப்படலாம்

தற்போது கவனக்கலைப்பான்கள் அதிகரித்து விட்டன பாலியல்ரீதியான ஈர்வை மிகக் கூடி விட்டது இதைவிட சீரழியும் சமுகத்திற்கு சொன்னால் விளங்காது எனினும் விழிப்புற தவறின் பாவம் அறியாதவர்களாய் சில நோய்நிலை அதாவது குருதிப்புற்று நோய் குருதியுறையாநோய் உடையவர்கள் குருதி மாற்றிட்டின் போதுதொற்றுக்கு உள்ளாவது எயிட்ஸ் நோயின் வரலாற்றை புரட்டிப்பார்பின் அறியலாம் இன்னும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் தொடக்கம் தாதியர் ஆய்வுகூட பரிசேதகர் வரை குருதியினுர்டு தொற்றை பெற்று எளிதில் நோயாளியாகும் ஆபத்தான பாதையில் பயணிக்கவேண்டியது காலத்தின் வெகுமதி என்றே ஆகிவிடும் எயிட்ஸ்நோயாளி ஒருவரை கையாளும் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் இனம் காணப்பட நோயாளியை கையாளும் போது கடைப்பிடிக்க தவறும் போது ஏற்படும் பரிதாபத்தையே சுட்டி நிற்கின்றது

பொதுவாக எயிட்ஸ் நோய் தொற்றுடையோர் இனம் காணப்படும் போது அவரால் தொற்றுக்குஆளான பலர் .இருப்புது சகஜம் மேலும் பாலியல் உணர்வென்பதுநோய் பற்றி சிந்திக்குமா என்பது விடை காணமுடியாத வினாவேயாகும் .இன்னும் போதையில் உடற்சுத்தம் மறந்த நிலை மற்றும் தம்மை தாமே காயப்படுத்தும் மனநிலை இந்தநிலையிலா…????. ஒருவர் பாதுகாப்பான உடலுறவிலா …?? ? நகைப்புக்குரிய விடயமல்லவா அது

மேலும் போரின் பின் பல்லாயிரக்கணக்கில் இளம்பெண்கள் விதவையாக்கப்பட்டநிலை இதை மெருகேற்றும் வண்ணம் போரில் ஆண்கள் கொல்லப்பட்டமை அத்துடன் வாழ்வில் முதன்முதலாக வேலை தேடி செல்கின்றனர் இவை யாவுமே விரும்பியோ விரும்பாமலே பாலியல் பண்டத்தை விற்பனை செய்வதற்கு ஏதுவாகின்ற நிலையில் வறுமையும் வலுச்சேர்க்கும் என்றால் தவறில்லை ஈராக் யுத்தத்தின் பின் சிரியா யோர்தானில் தஞ்சாம் புகுந்த அகதிகள் நிலை பற்றி உலகத்தின் பார்வை அவ்வாறே அமைகின்றது இதுபோலவே தலிபான்களின் வீழ்ச்சியுடன் இறுக்கமான கலாசாரம் தளர்வடைந்ததால் எயிட்ஸ் நோய்த்தெற்று எதிர்கொள்ளப்பட்டமை நடந்தேறிய விடயமே ஆகும் இவ்வாறன நலிவுற்ற நிலைகளை இலக்காகக் கொண்டு பாலியல் தொழில் முகவர்களும் நகர ஆரம்பிக்காமல் இருப்பார்கள் என்றால் அது மடமைத்தனம் எனறே கூறவேண்டும். எயிட்ஸ் பற்றி நாம் சிந்திக்க தவறி விட்டோம் போரின் பின் எம்மினம் பெரியதொரு திறந்த கலாசாரத்தினுள் நுழைந்து ஓரு வருடம் கடந்துவிட்டது கண்ணுக்குதெரியா பெரியதொரு அழிவை எதிர்கொள்கிறது ஆகவே காலம் கடந்தபின் எனினும் ..எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வு உருவாகுமா அன்றேல் தொற்று தன் முழு வீச்சத்துடன் பரவிவிடும் என்புதெ உறுதி இதன் பின் மருத்துவத்துறையால் எயிட்ஸ் நோய்க்கட்டுபாடு என்பது அவ்வளவு சுலபமானதாக அமையமாட்டாது இன்னும் மருத்துவத்துறையால் குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கோடிட்டுகாட்டப்படும் விடயமாகவே உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்து கூட நோயின் தீவிரத்தன்மை குறைக்குமேயன்றி குணப்படுத்த மாட்டாது எனவே இக்கொடிய நோயின் விசமத்தனமான பரவல் கட்டுப்படுத்தவேண்டிய மிகப்பெரும் பொறுப்பு யாவர்க்கும் உரியதே

’பொறுப்புக்களில் இருந்து நாம் விலகி ஓடலாம் ஆனால்

விளைவுகள் நம்மை நோக்கியே தேடிவரும்

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் பொருண்மிய பலம் கொண்ட மேற்கு நாடுகளே இது விடயத்தில் இடர்படுகின்றன. ஒரு ஏழை மக்கள் கூட்டம் எப்படி தான் இதில் இருந்து மீளப் போகிறதோ..??!

1. பாடசாலைகளில் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதோடு சமூகக் கட்டமைப்பு பற்றிய அறிவூட்டல் அவசியம்.

2. தவறான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் நல்ல இளைஞர்கள் யுவதிகள் (குறிப்பாக மாணவர்கள்) விழிப்புக் குழுக்களை அமைத்து செயற்படுவதோடு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

3. எயிட்ஸ் தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுவதோடு அவர்கள் எயிட்ஸை பரப்பாமல் இருக்க அறிவூட்டப்பட வேண்டும்.

4. பொது இடங்கள்.. களியாட்ட இடங்கள்.. போன்றவற்றில் பாலியல் காப்புறைகளை வழங்க வேண்டும்.

5. வெளிநாடுகளில் வெளியூர்களில் இருந்து விஜயம் செய்வோர் தொடர்பில் அவதானமாக இருப்பதோடு அறிமுகமற்ற எவரோடும் பாலியல் தொடர்வை பேணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

6. வீடுகள் தோறும் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள்.. சாரணர்கள்.. சென் ஜோன்ஸ் முதலுதவி படையினர்.. லயன்ஸ்.. லியோ கழகத்தினர்.. மற்றும் மதம் சார் அமைப்புக்கள் இதில் தன்னார்வத்தோடு ஈடுபட வேண்டும்.

7. பாதுகாப்பான பாலுறவு பற்றி மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

8. கலாசார சீரழிவை உண்டு பண்ணும் சக்திகளை தாய் மண்ணில் இருந்து படிப்படியாக அகற்றும் அரசியல் வேலைத்திட்டங்களை இளைஞர்கள்.. இன ஆர்வம் உள்ள அரசியல் சக்திகள் முன்னெடுக்க வேண்டும்.

9. புலம்பெயர் நாடுகளில் உள்ள எயிட்ஸ் கட்டுப்பாட்டில் நிபுணத்துவம் மிக்க மக்களின் ஆலோசனைகள்.. உதவிகள் பெறப்படத்தக்க வகையிலும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையிலும் எயிட்ஸ் தடுப்பு நிபுணத்துவ அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி தன்னார்வ அடிப்படையில் அதை செயற்படுத்த வேண்டும். அதன் கீழ் செயற்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

10. சிவில் கலாசார பண்பாட்டு விழுமிய பாதுகாப்புக் குழுக்களை அமைப்பதோடு அவர்கள் சுதந்திரமாகவும் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன் நிறுத்த உதவ வேண்டும்

11. பகிரங்கமாக... துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு தண்டனைகள் வழங்கப்படும் என்று சட்ட ரீதியில் அறிவிக்க வேண்டும்.

12. துஸ்பிரயோகத்தில் திட்டமிட்டு ஈடுபடுவோரை பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தும் வகையில் பிரசுரங்களில் இணையத்தில் செய்திகளை வெளியிட வேண்டும்.

13. வீதிகள்.. வீடுகள்.. விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை அமுலாக்க கோருவதோடு மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை அல்லது சமூக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14. சிறீலங்கா படைகளின் ஈடுபாடுகளை கண்டறிந்து அவற்றை பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புக்கும்.. உலக சுகாதார ஸ்தாபனத்துக்கும் அறிவிக்க வேண்டும்

15. எயிட்ஸ் ஒழிப்பு தொடர்பில் பன்னாட்டு உதவிகளை நிபுணத்துவத்தை தொண்டை உள்வாங்கிக் கொண்டு செயற்பட வேண்டும்.

எம் மக்களின் கல்வி அறிவு உயர்ந்த மட்டத்தில் இருப்பதால் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை இந்தியா மற்றும் ஆபிரிக்காவைக் காட்டிலும் இலகுவாக கொண்டு வர முடியும்.

ஆனால் அதற்கு கிரமமான தொடர்ச்சியான செயற்திட்டங்கள் அவசியம். அத்தோடு எயிட்ஸ் நோய் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மனிதாபிமானத்தோடும் கெளரவத்தோடும் நடத்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலமே அவர்களை மேலும் தொற்றுக்களை செய்யாதபடிக்கு அறிவூட்ட முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.