Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத் தீவு அருகே எண்ணெய் கிணறுகள்: தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கச்சத் தீவு அருகே எண்ணெய் கிணறுகள்: தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி

கச்சத் தீவு அருகே, இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால், இயற்கை வளம் அழிவதோடு, தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடா பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாக பாதுகாக்கப்படும் பகுதி. இங்கு, பல்வேறு அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன.

எனவே, மன்னார் வளைகுடாவிலுள்ள 20-க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நிறுவனம் ஒன்று, 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ. பரப்பளவுள்ள மன்னார் வளைகுடா பகுதியில், 1750 சதுர கி.மீ. பகுதியை தோண்டி, 450 கோடி ரூபாய் செலவில், மூன்று பெட்ரோலிய கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்நிறுவனம், பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது. அந்நிறுவனம், இந்தியாவில் தொழில் செய்ய, ‘கெய்ர்ன் இந்தியா’ என்றும், இலங்கையில் ஆதரவு பெற, ‘கெய்ர்ன் லங்கா’ என்றும் தனது கம்பெனிக்கு பெயரை வைத்துள்ளது. இரு நாட்டு அரசியல்வாதிகளையும் நமது நிறுவனத்தில் பங்குதாரர்களாக்கி, இந்திய கடல் எல்லையில் கால் பதிக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் நுழைந்ததுபோல, ‘கெய்ர்ன் இந்தியா மற்றும் கெய்ர்ன் லங்கா’ என்ற பெயரில் இந்திய - இலங்கை எல்லையில் நுழையும் இந்நிறுவனத்தால், தமிழக கடல் பகுதியின் சூழல் பாதிக்கப்படும். மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் எடுக்கும் முயற்சியில் இந்தியா - இலங்கை நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என, 1974 இல் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

ஆனால், மன்னார் வளைகுடாவில் ஒரு பகுதியை எண்ணெய் கிணறு அமைக்க, சீனாவுக்கு குத்தகைக்கு விட்டுள்ள இலங்கை அரசு, இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்க, பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 1974 ஒப்பந்தப்படி, இந்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய எண்ணெய் வளத்தின் லாபத்தை, இரு நாட்டு பெயர்களிலும் நிறுவனம் நடத்தும் இங்கிலாந்து நிறுவனம் சுரண்டப் பார்க்கிறது. இதற்கு, இந்திய எண்ணெய் இயற்கை எரிவாயு கழகமும் அனுமதி அளித்துள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், எண்ணெய் கிணறுகள் அமைந்தால், இனி, கச்சத் தீவு திசைக்கே தமிழக மீனவர்கள் போக முடியாத நிலை ஏற்படும். இலங்கை மீனவர்களுக்கும் இதேநிலை தான்.

http://periyardk.org/pm.php?subaction=showfull&id=1297174484&archive=&start_from=&ucat=1&

கச்சத்தீவு அருகே இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால் இயற்கை வளம் அழிவதோடு, தமிழக, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்திற்கு நேர் கிழக்கே அமைந்துள்ள மன்னார் வளைகுடா, யுனெஸ்கோ அமைப்பினால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். உயிர்க்கோள காப்பமாக பாதுகாக்கப்பட்டுவரும் இந்த பகுதியில் பல்வேறு அரியவகை பவளப்பாறைகள், கடல்புல் உள்ளிட்ட தாவரங்கள், கடல்பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. எனவே மன்னார்வளைகுடாவில் உள்ள 20க்கும் மேற்பட்ட குட்டித்தீவுகளில் மீன்பிடிக்கவும் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில்தான் இங்கிலாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மன்னார்வளைகுடா பகுதியில் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் பெட்ரோலிய கிணறுகளை அமைக்க பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வு மதிப்பீடுகளை முடித்துள்ளது. விரைவில் மூன்று சோதனை கிணறுகளை தோண்ட உள்ளது.

மன்னார்வளைகுடா 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ., பரபரப்பளவை உள்ளடக்கியது. இதில் ஆயிரத்து 750 சதுர கி.மீ.,பகுதியை எண்ணெய் தோண்டும் கிணறுகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை ஒட்டியுள்ள தலைமன்னாருக்கு அருகில் இந்த கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பகுதி கச்சதீவிற்கு 6 கடல்மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் தமிழக மீனவர்கள் கச்சதீவு அருகே செல்வதையே மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடல்எல்லையில் கால் பதிக்கிறது. கிழக்கிந்திய கம்பெனி : இங்கிலாந்தை சேர்ந்த அந்த பெட்ரோலிய நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய "கெய்ர்ன் இந்தியா' என்ற பெயரிலும், இலங்கையில் ஆதரவு பெற "கெய்ர்ன் லங்கா' எனவும் தமது கம்பெனி பெயரை மாற்றிவைத்துள்ளது. இருநாட்டு அரசியல்வாதிகளையும் தமது நிறுவனத்தில் பங்குதாரர்களாக ஆக்கிக்கொண்டு இந்திய கடல்எல்லையில் கால் பதிக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் நுழைந்ததுபோல கெய்ர்ன் இந்தியா, கெய்ர்ன் லங்கா என்ற பெயரில் தேச எல்லையில் நுழையும் இந்த நிறுவனத்தால் தமிழக கடல்பகுதியின் சூழல் பாதிக்கப்படும். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்கள் இனி மன்னார் வளைகுடா பகுதிக்குள்ளும், கச்சதீவு பகுதிக்குமே செல்லமுடியாத நிலை ஏற்படும்.

சீனாவுக்கு இலங்கை குத்தகை: மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் எடுப்பதற்கான முயற்சியில் இந்தியா-இலங்கை ஆகியன கூட்டாக ஈடுபடவேண்டும் என 1974 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. ஆனால் மன்னார் வளைகுடாவில் ஒரு பகுதியை எண்ணெய் கிணறு அமைக்க சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்துள்ளது. இந்தியாவைத் திருப்திப்படுத்த இந்தியாவுக்கு ஒரு பகுதியைக் கொடுத்திருக்கிறது.

இது போக இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்க இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். 1974 ஒப்பந்தத்தின்படி இந்திய அரசுக்கு கிடைக்கவேண்டிய எண்ணெய் வளத்தின் லாபத்தை இருநாட்டு பெயர்களிலும் நிறுவனம் நடந்தும் இங்கிலாந்து நிறுவனம் சுரண்டப்பார்க்கிறது.

இதற்கு இந்திய எண்ணெய் இயற்கை எரிவாயு கழகமும் அனுமதியளித்துள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் இச்சூழலில் எண்ணெய் கிணறுகள் அமைந்துவிட்டால் இனி அந்த திசைக்கே போகமுடியாத நிலை ஏற்படும். தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது இலங்கை மீனவர்களும் அங்கு செல்ல இயலாத நிலை ஏற்படும்.

தமிழக மீனவர்களின் நிலை : குடியரசு தினத்தன்று தமிழக கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். நாளை ( புதன்கிழமை ) நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டுகொள்ளாத அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். இதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராம மீனவர்கள் தயாராகிவருகின்றனர்.

தேசிய மீனவர் கூட்டமைப்பின் சார்பிலும் எண்ணெய் கிணறு விவகாரத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்திவருகின்றனர். இருப்பினும் அரசோ, எதிர்க்கட்சிகளோ இந்த விவகாரத்தை கையில் எடுக்காதவரை தமிழக மீனவர்களின் நிலை பரிதாபத்துக்குறியதாகவே இருக்கும்.

http://www.ramnad.in/2011/01/kachchatheevu.html

Cairn India Wins Mannar Basin Block

http://www.oilandgasinsight.com/file/65629/cairn-india-wins-mannar-basin-block.html

Expression Of Interest / Pre-Qualification For Provision Of Logistical Support Base And Associated Services At Singapore For Exploratory Drilling Campaign In Deepwater Block Off Sri Lanka

http://www.cairnindia.com/Media/Pages/ExpresionInt.aspx?UIDV=20

Message from Indrajit Banerjee, Executive Director and CFO, Cairn India, post signing of exploration acreage in Sri Lanka

http://www.cairnindia.com/Media/PressRelease/MessagefromCFO.html

=====

Muthamizh

Chennai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.