Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அதிகாரிகளின் ஆதரவுடனேயே இலங்கைக் கடலில் மீனவர் அத்துமீறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அதிகாரிகளின் ஆதரவுடனேயே இலங்கைக் கடலில் மீனவர் அத்துமீறல்

இந்திய அதிகாரிகளின் ஆதரவுடனேயே இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடல் எல்லைக்குள் வருகின்றார்கள். அதனைத் தெளிவாக தங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.இவ்வாறு மாதகல் மீனவர்களால் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரக அதிகாரி வி.மகாலிங்கத்துக்கு கையளிக்கப்பட்டுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்து மீறல்களைக் கண்டித்தும், அதனைத் தடுத்து நிறுத்தக்கோரியும் நேற்றுக்காலை இந்தியத் தூதரகத்தின் முன்னால் மாதகல் மீனவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாதகல் உள்ளூர் மீனவர் சமூகத்தின் சார்பில் மாதகல் புனித அந்தோனியார் தேவாலயத்தின் பங்குத்தந்தையும், மாதகல் சமூக சேவைகள் அமைப்பின் பேரரசருமாகிய வணபிதா எஸ்.எம்.பி. ஆனந்தகுமார் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிக்கு மகஜர் ஒன்றைக் கையளித்தார். அந்த மகஜரிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளவை வருமாறு

இந்த மகஜரை மிக மனவருத்தத்துடன் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். 2010 பெப்ரவரி தொடக்கம் இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் எங்கள் பாரம்பரிய கடற் றொழில் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்ளன. இந்திய மீனவர் எமது எதிர்கால மீன்பிடித் தொழிலுக்கும், வருமானத்துக்கும் மீன்பிடி உபகரணங்களுக்கும் அளவிட முடியாத இழப்பை எமக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.இவர்கள் றோலர் படகின் உதவி மூலம் இலங்கை கடற்பரப்பில் தொழில் செய்து கடல்வளத்தை அழித்து வருகின்றனர். இந்திய மீனவர்களின் அத்து மீறலைச் செய்மதிப்படங்கள் மூலமும் உறுதி செய்யமுடிகிறது. இந்திய மீனவர்களின் தவறு அல்ல இது. இந்திய அதிகாரிகளின் ஆதரவுடனேயே திட்டமிட்ட முறையில் இது இடம்பெறுகின்றது.இந்திய மீனவர்கள் வலைகளை வெட்டுவதற்கும், எம்மை பயமுறுத்துவதற்கும் வாள்கள் சகிதம் வருகின்ற காரணத்தால் எமது மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அஞ்சுகின்றார்கள். இதன் காரணமாக 150 வள்ளங்கள் செல்வதற்குப் பதிலாக ஒன்றுமுதல் 10 வரையான வள்ளங்களே தற்போது ஆழ்கடலுக்குச் செல்கின்றன.

எனவே எமது வேண்டுகோளை இங்குத்தருகிறோம்.

இந்திய அரசினால் இந்திய மீனவர் இலங்கை கடற்பரப்பினுள் செல்ல பகிரங்கமாகத் தடைசெய்யவேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவேண்டும். தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் தவறு செய்வதனைத் தடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மகஜரின் பிரதிகள் இலங்கை ஜனாதிபதிக்கும் மற்றும் ஏனையோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

22 பெப்ரவரி 2011, செவ்வாய் 7:55 மு.ப

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.