Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகத்தில் போலிஸ் குவிப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் போலிஸ் குவிப்பு: பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள செல்வதற்காக தயாராகவிருந்த மாணவர்கள் துரத்தப்பட்டனர். யாழ்.பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்கள் அஞ்சலி

[Tuesday, 2011-02-22 07:18:45]

அவர்கள் செல்லவிருந்த பஸ் வண்டியும் திருப்பி அனுப்பபட்டது பல்கலை வாசல் எங்கிலும் பொலிஸ் மயம். மாணவர்கள் கொந்தளித்தபடி உள்ளனர். பல்கலியில் பயச் சூழல் காணப்படுகிறது என அங்கிருந்து கிடைத்தள்ள செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவளை,பார்வதி அம்மாள் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் சுவரொட்டிகள் இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரிலும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரிலும் அஞ்சலி தெரிவிக்கும் இந்த சுவரொட்டிகளில் தேசத் தாய்க்கு வீர வணக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விரிவுரை வகுப்புக்களின் போது பார்வதி அம்மாளுக்கு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அத்தோடு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளைப் பகிஷ்கரித்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது

seithy.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(3ம் இணைப்பு) யாழ் பல்கலைக்கழகத்தில் போலிஸ் குவிப்பு: பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள செல்வதற்காக தயாராகவிருந்த மாணவர்கள் துரத்தப்பட்டனர். யாழ்.பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்கள் அஞ்சலி

[Tuesday, 2011-02-22 07:18:45]

அவர்கள் செல்லவிருந்த பஸ் வண்டியும் திருப்பி அனுப்பபட்டது பல்கலை வாசல் எங்கிலும் பொலிஸ் மயம். மாணவர்கள் கொந்தளித்தபடி உள்ளனர். பல்கலியில் பயச் சூழல் காணப்படுகிறது என அங்கிருந்து கிடைத்தள்ள செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவளை,பார்வதி அம்மாள் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் சுவரொட்டிகள் இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரிலும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரிலும் அஞ்சலி தெரிவிக்கும் இந்த சுவரொட்டிகளில் தேசத் தாய்க்கு வீர வணக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விரிவுரை வகுப்புக்களின் போது பார்வதி அம்மாளுக்கு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அத்தோடு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளைப் பகிஷ்கரித்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது. இதேவேளை,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனும் குற்றஞ்சாட்டியுள்ளார். வல்வெட்டித்துறை நோக்கிப் பயணிக்கும் பயணிகள் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களைச் சோதனையிடும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பயணிகளிடம் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவா செல்கிறீர்கள் என்றும் அவ்வாறு செல்வதாயின் அதற்கு அனுமதி வழங்க முடியாது, திரும்பிச் செல்லுங்கள் என்றும் கூறி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கூறியுள்ளார். இதேவேளை, பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளுக்கோ, அதில் கலந்துகொள்பவர்கள் மீதோ பாதுகாப்பு தரப்பினர் எவ்வித இடையூறுகளையும் விளைவிக்கவில்லை எனவும் இறுதிக் கிரியைகளில் கலந்துக்கொள்ள செல்பவர்களை படையினர் தடுக்கவில்லை எனவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அதரிவித்துள்ளார். பல்லைக்கழக மாணவர்கள் தடுக்கப்பட்டதாக தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாளின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளச் செல்பவர்களை தடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.