Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் பெருமளவில் நடமாடத் தொடங்கியிருக்கும் ராணுவப் புலனாய்வினர்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பெருமளவில் நடமாடத் தொடங்கியிருக்கும் ராணுவப் புலனாய்வினர்...

23 பெப்ரவரி 2011

வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி வடக்கு கரையோரப் பகுதி மக்கள் அச்சத்தில்..

வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி வடக்கு கரையோரப் பகுதிகளில் மீண்டும் பெருமளவில் நடமாடத் தொடங்கியிருக்கும் ராணுவப் புலனாய்வினர் தொடர்பில் கரையோர மக்கள் பெரும் அச்சத்துள் ஆழ்ந்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் 2008, 2009 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் கொலைகளுடன் தொடப்புபட்ட பல்வேறு ராணுவ புலனாய்வுத்துறையினர் முள்ளிவாய்கால் யுத்தத்தின் பின்னர் பெரிதும் இல்லாமல் போயிருந்தனர் அல்லது காணாமல் போயிருந்தனர். எனினும் அண்மைய பிரபாகரனின் தாயாரின் மரணத்தின் பின்னர் அவர்கள் பெருமளவில் நடமாடத் தொடங்கியிருப்பதாக கரையோரக்கிராம மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சிப் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகள் ஆட்கடத்தல்கள் என்பவற்றுடன் தொடர்புபட்டவர் செம்மணி எனப்படுகின்ற படையதிகாரி. அவரது சொந்தப் பெயர் எதுவாக இருந்த போதிலும் செம்மணிப் படுகொலைகளை நினைவு கூரும் வகையில் அவருக்கு செம்மணி என பொதுமக்களால் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படையதிகாரி உள்ளிட்ட குழு இப்பொழுது வடமராட்சி வடக்கு கிழக்குப் பகுதிகளில் தற்பொழுது சுதந்திரமாக திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை படைத்தளத்தை கட்டுப்பாடுத்தளமாக வைத்துக் கொண்டுள்ள இவர்கள் குறிப்பாக கரையோரக் கிராமங்களில் நேற்றைய பார்வதி அம்மாளின் நிகழ்வுகளில் பங்குபற்றியவர்கள் மற்றும்ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்களை மூடியவர்கள் என பல்வேறு தரப்பினரையும் இலக்கு வைத்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் கைத்தொலைபேசி மற்றும் புகைப்படக் கருவி ஊடாக ஒளிப்பதிவு செய்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு ஆட்களைத் தேட இந்தத் தரப்பு முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய தினம் வல்வெட்டித்துறை மயானப் பகுதிக்குச் சென்று குறிப்பாக பார்வதி அம்மாளின் சிதை சேதமாக்கப்பட்டமையை பார்வையிட முற்படுபவர்கள் தொடர்பில் இலக்கு வைத்து இந்தக் குழு முழுமையாக செயற்படுவதாக அங்கிருக்கும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவிககின்றனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/58312/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.