Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள்

Featured Replies

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் 8

- ஆக்கம்: நிராஜ் டேவிட்

உளவியல் யுத்தம் அல்லது உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற முக்கியமான ஒரு விடயம் பற்றü இந்தத் தொடரில் சற்று விரிவாக ஆராயந்துகொண்டிருக்கின்றோம்.

அதிலும் குறிப்பாக ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உளவியல் யுத்தங்கள் பற்றி பார்த்துக்கொண்டிருக்கின்றோம். சர்வதேசப் போரியல் அரங்குகளில் முக்கியத்துவம் பெற்ற சில உளவியல் நடவடிக்கைகள் பற்றி முதலில் நாம் பார்த்து வருகின்றோம்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள், சிறிலங்கா இராணுவத்தினர், இந்தியப் படைகள் போன்றன ஈழக் களங்களில் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் சில பற்றியும் விரிவாக ஆராய இருக்கின்றோம்.

உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்றதான உளவியல் நடவடிக்கை பற்றித்தாம் தற்பொழுது ஆராந்துகொண்டு இருக்கின்றோம்.

அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய அம்சம் உளவியல் நடவடிக்கையில் (Psychological Operations) இருக்கின்றது.

இந்த வகையிலான உளவியல் நடவடிக்கையை மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, போரிடுகின்ற அனைத்து தரப்புக்களுமே செய்வது வளக்கம்.

மிகவும் பிரபல்யமாக ஜப்பானிய போர் வீரர்களான சாமுராய் வீரர்கள் மத்தியில் ஒரு முக்கியமாக போரியல் நுனுக்கம் இருக்கின்றது. அதாவது, நேரடிச் சண்டைகளில் எதிரியை வீழ்த்தும் முன்னதாக, எதிரியின் உளவியலை வீழ்த்திவிடவேண்டும் என்பது சாமூராய்களின் அடிப்படைப் போரியல் பாடம். சண்டைக்கு வரும் எதிரியை அடிக்கும் முன்னதாக அவனது உளவிலை அடித்துவிடுவது என்பது, சாமுராய்கள் கடைப்பிடித்துவந்த போரியல் யுக்தி.

இன்றைய நவீன போரியல் நடவடிக்கைகளிலும், இந்த யுக்தி பல வழிகளிலும் பல தரப்பினராலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வியட்னாம் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில், கனோய் கன்னா(Hanoi Hannah), என்ற பெண் ஊடகவியலாளர் மேற்கொண்டிருந்த உளவியல் போர், உலகின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவம், வியட்னாமின் வியட்கொங் கெரிலாக்களிடம் படுதோல்வியைச் சந்திக்கக் காரணமாக இருந்தது பற்றி கடந்த வாரம்; ஓரளவு விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

இந்த வாரமும், கடந்த நூற்றாண்டில் ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட மேலும் இரண்டு உளவியல் நடவடிக்கைகள் பற்றிச் சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.

இரண்டாம் உலகமகா யுத்தம் மிக மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஜப்பான் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுகொண்டிருந்த நேசநாட்டுப்படைகளை தடுமாறவைத்த ஒரு விடயம் இருக்கின்றது.

அதுதான், ரேடியோ டோக்கியோ என்கின்ற ஜப்பானிய வானொலி.

இந்த வானொலியின் ஆங்கில சேவையில் "The Zero Hour" என்ற ஒரு நிகழ்சி, நேசநாட்டுப் போர் வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகியிருந்தது. இந்த நிகழ்சியை கவர்சிகரமான தனது குரலினூடாக, மிகவும் வெற்றிகரமாக நடாத்திக்கொண்டிருந் பெண் ஒலிபரப்பாளர் தன்னை டோக்கியோ ரோஸ் ("Tokyo Rose") என்று அழைத்துக்கொண்டார்

டோக்கியோ ரோஸ் என்ற இந்தப் பெயர் நேசநாட்டுப் படையினர் மத்தியில் மிகவும் பிரபல்யமாகியிருந்தது. குறிப்பாக ஆசிய நாடுகளில் சண்டைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேசநாட்டுப் படையினர் இந்த டோக்கியோ ரோசினுடைய நிகழ்சிகளைக் கேட்காமல் உறங்குவதில்லை. அந்த அளவிற்கு இவருடைய நிகழ்சிகள் நேசநாட்டுப் போர்வீரர்கள் மத்தியில் பிரபல்யமாகியிருந்தது.

அப்படி என்ன இவரது நிகழ்சியில் முக்கியமானதாக இருந்தது?

ஜப்பானியப் படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த நேசநாட்டுப் படைவீரர்களைச் செவ்விகண்டு, தனது நிகழ்சியில் ஒலிபரப்பினார் டோக்கியோ ரோஸ் என்ற அந்த வானொலி ஒலிபரப்பாளர்.

நேசநாட்டுப் படைகள் அந்த யுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்று கைதுசெய்யப்பட்டு போர்க்கைதிகளாக இருந்த நேசநாட்டுப் படை வீரர்கள் வானொலியில் கூறினார்கள்.

நேசநாட்டுப் படைத்துறை அதிகாரிகள் எப்படி சொகுசு வாழ்கை வாழ்ந்துகொண்டு, கீழே உள்ள படைவீரர்களை அநியாயத்திற்குப் பலிகொடுத்து வருகின்றார்கள் என்று கவலைப்பட்டார்கள்.

இராணுவத்தில் உள்ள ஓட்டைகள், இழுபறிகள், இழப்புக்கள், இரகசியங்கள்.. இப்படி பல விடயங்களை தம்மிடம் சரணடைந்த அல்லது தம்மால் கைதுசெய்யப்பட்ட நேசநாட்டுப்படைவீரர்களிடம் இருந்து சித்திரவதை செய்தும், மிரட்டியும் பெற்றுக்கொண்ட ஜப்பானியப் படையினர், அவற்றினை டோக்கியோ ரோசினுடைய நிகழ்சியினுடாக ஒலிபரப்பினார்கள்.

நேசநாட்டுப்படை வீரர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய விடயங்கள் இவைகள்தான்.

விழுந்தடித்துக்கொண்டு இந்த நிகழ்சிகளைக் கேட்டார்கள் நேசநாட்டுப்படைவீரர்கள்.

ஆனால் இந்த நிகழ்சிகளில் ஒலிபரப்பான விடயங்கள், அந்த நிகழ்சியைச் செவிமடுத்த நேசநாட்டுப்படைவீரர்களை பாரிய அளவில் உளவியல் சோர்வடைய வைத்தது. இராணுவத் தலைமை மீதான சந்தேகம், மற்றைய நேசநாடுகள் மீதான வெறுப்பு, காழ்ப்புணர்வு, ஜப்பானியப்படை பற்றிய அச்சம், நம்பிக்கையீனம் என்று பலத்த உளவியல் சோர்வினை அவர்களுக்கு ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகமகாயுத்தகாலத்தில் ஜப்பானுக்கு எதிராக நேசநாட்டுப்படைகளின் சண்டைகளில் அந்தப்படைகளுக்கு பாரிய நெருடல்களை ஏற்பட்டுத்திய ஒருவிடயம் என்று - இந்த உளவியல் யுத்தத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்: ஒரு சந்தர்பத்தில் ஜப்பானியப்படைகளை தம்மால் வெல்லமுடியாமல் போய்விடுமோ என்று நேசநாட்டுப்படைத்துறைத் தலைமை நினைக்கும் அளவிற்கு இந்த உளவியல் யுத்தம் பாரிய தாக்கத்தினை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

இத்தனைக்கும் அந்த உளவியல் யுதத்தை நடாத்திய டோக்கியோ ரோஸ் என்ற ஜப்பானியப் பெண் ஒரு அமெரிக்கப் பிரஜை என்பது, இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர உலகிற்குத் தெரிய வந்தது. டோக்கியோ ரோஸ் என்ற பெயரில் உளவியல் யுத்தத்தை நடத்திய பெண்ணை அமெரிக்கப் படைகள் ஒரு சந்தர்பத்தில் கைது செய்திருந்தார்கள்.

அமெரிக்கப்பிரஜா உரிமையைப் பெற்று அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இவா டோக்கூறி ((Iva Ikuko Toguri) என்ற பெண்ணே டோக்கியோ ரோஸ் என்ற பெயரில், நேசநாட்டுப் படையினருக்கு எதிரான உளவியல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்திருந்தார் என்கின்ற உண்மை அமெரிக்கப் படைகளை மாத்திரமல்ல முழு உலகத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இதேபோன்று, இரண்டாம் உலகமகாயுத்த காலத்தில் உலகப் பிரசித்திபெற்ற பீ.பீ.சி செய்தி ஊடகம் ஒரு முக்கிய உளவியல் யுத்தத்தை மேற்கொண்டிருந்தது.

1940ம் ஆண்டு மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பிரித்தானியா மீது ஜேர்மனி ஒரு பாரிய ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளும் சாத்தியம் காணப்பட்டது. இதற்கு முன்னோடியாக ஜேர்மனி தனது சக்தி வாய்ந்த போர்விமானங்களின் துணைகொண்டு வான் வழித் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டிருந்தது.

அந்தக் காலப்பகுதியில், ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியா மீது ஒரு ஆக்கிரமிப்புப் பாய்ச்சலை மேற்கொள்ளும் திட்டத்தில் ஜேர்மணியப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

ஜேர்மனியின் சக்திவாயந்த படை அணிகள். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதன் ஆயுதக் கண்டுபிடிப்புக்கள். எண்ணிக்கையில் அதிகமான இராணுவத்தினர். அந்த நேரத்தில் இப்படியான பலத்தைத் தனதாகக் கொண்டிருந்த ஜேர்மனி பிரித்தானியாமீது தாக்குதல் நடாத்தியிருந்தால், நிச்சயமாகவே ஜேர்மனியிடம் பிரித்தரியா இலகுவாக வீழ்சி கண்டிருக்கும் என்றே போரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

அந்த நேரத்தில் பிரித்தானியா மிகவும் பலவீனமானதொரு நிலையிலேயே இருந்தது. அதனுடைய படைகள் ஆசியாவின் பல இடங்களிலும் நிலைநிறுத்திவைக்கப்பட்டிருந்ததால், ஜேர்மனின் பலம் மிக்க படையெடுப்பைத் தடுத்துநிறுத்துவது தம்மால் முடியாது என்று உணர்ந்து பிரித்தானிப்படைத்துறை அதிகாரிகள் கலங்கி நின்றார்கள். பிரித்தானியா ஜேர்மனியிடம் வீழ்வது உறுதி என்றே பிரித்தானிய தலைவர்கள் நம்பினார்கள்.

பிரித்தானியாவை தம்மால் கைப்பற்றிவிட முடியும் என்றே ஹிட்லரும் உறுதியாக நம்பினார்.

பிரித்தானியாவின் தோல்வியும், ஜேர்மனியில் வெற்றியும் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டிருந்த அந்த நிலையில், களமுனையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது பீ.பீ.சி. வானொலி.

தோல்வியின் விழிம்பிலிருந்த பிரித்தானியாவை, முக்கிய உளவியல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதன் ஊடாக பீ.பீ.சி. காப்பாற்றியிருந்தது.

அப்படி என்னதான் செய்தது பீ.பீ.சி.?

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை கபளீகரம் செய்யத் தயாராகிக்கொண்டிருந்த ஜேர்மனியப் படையினரின் உளவியலில் ஒருவிதப் பீதியை ஏற்படுத்திவிடும் பணியியை பீ.பீ.சி. வானொலி செய்தது.

எப்படி அதைச் செய்தது பீ.பீ.சி.?

தனது நிகழ்சி ஊடகாகச் செய்தது.

தற்பொழுது உள்ளது போலவே அந்த நேரத்திலும் பீ.பீ.சி. வானொலி சேவைகளை ஐரோப்பாவில் உள்ள பலரும் விரும்பிக் கேட்டு வந்தார்கள். ஜேர்மனியர்களும் பீ.பீ.சி. யை விரும்பிக் கேட்பது வழக்கம். குறிப்பாக பீ.பீ.சி வானொலி ஒலிபரப்பிய ஆங்கிலப் பாட நிகழ்சி மற்றும் ஜேர்மன் டொச் பாட நிகழ்சிகளை ஜேர்மனியர்கள் விரும்பிக் கேட்பது வளக்கம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட பீ.பீ.சி., தனது பாட நிகழ்சிகளின் ஊடாக ஒரே ஒரு முக்கிய கருத்தை பல வடிவங்களில் திரும்பத் திரும்ப ஜேர்மனியர்களுக்கு கூற ஆரம்பித்தது.

அப்படி என்ன கருத்தை பீ.பீ.சி. ஜேர்மனியர்களுக்கு கூறியது?

ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்குள் நுழையத் தயாராக இருந்தன அல்லவா ஜேர்மனியப் படைகள்? அப்படி அவர்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வரும்பொழுது, அவ்வாறு கடக்கின்ற ஜேர்மனியப் படையினர் அத்தனை பேரையும் ஆங்கிலக் கால்வாயில் வைத்தே எரித்துக் கொன்றழித்துவிடக்கூடியதான ஒருவகை இரசாயன குண்டுகளை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றார்கள் என்று பீ.பீ.சி. வானொலி ஒருவித கதையை கட்டவிழ்துவிட்டிருந்தது.

ஆரம்பத்தில் வெறும் வதந்தியாக வெளிவந்த இந்தக் கதை, தொடர்ந்து படிப்படியாக பாட நிகழ்ச்சிகளின் ஊடாகவும், பாடல்கள், கவிதைகள் ஊடாகவும் எதிரியின் காதுகளுக்கு சென்றுகொண்டிருந்தன. அதனைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தது பீ.பீ.சி.வானொலி.

ஆரம்பத்தில் இதனை சந்தேகமாக நோக்கிய ஜேர்மனியப் படைகள் படிப்படியாக இந்தச் செய்தியை நம்ப ஆரம்பித்தார்கள். ஆங்கிலக் கால்வாய்க்கு இறங்குவதற்கு ஜேர்மனியப் படைவீரர்கள் அச்சப்பட்டனர். அந்தக் கால்வாய்க்குள் இறங்கும்படியான உத்தரவை பிறப்பிப்பிதற்கும் நாசிப் படை அதிகாரிகள் தயக்கம் காண்பித்தார்கள். கடைசியில், ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை ஆக்கிரமிக்கும் தமது போர்த் திட்டத்தையே கைவிட்டது ஜேர்மனியத் தலைமை.

ஒரு பெரும் போரையே தடுத்துநிறுத்தி தனது நாட்டை பெரும் அழிவில் இருந்து காப்பாற்ற பீ.பீ.சி. மேற்கொண்ட அந்த உளவியல் நடவடிக்கை இன்றைக்கும் போரியல் நோக்கர்களால் வியந்து பாராட்டப்படுகின்றது.

இதேபோன்று உலக போரியல் வாலாற்றில், ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட உளவியல் நடவடிக்கைகள் ஏராளம் இருக்கின்றன.

தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான இந்த முக்கிய உளவியல் நடவடிக்கையை, உலகின் பல இராணுவங்களும் மேற்கொண்டு பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.

(எமது வாசகர்கள் விரும்பினால் இந்த நடவடிக்கைகள் பற்றி மற்றொரு சந்தர்பத்தில் விரிவாகப் பார்ப்போம்.)

தற்பொழுது, இந்த உளவியல் நடவடிக்கைள் ஈழ யுத்தத்தில் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றி ஆராய இருக்கின்றோம்.

ஊடகங்களைப் பாவித்து, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்து, தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் இந்தவகை உளவியல் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகளும், சிறிலங்கா இராணுவமும் கடந்த காலங்களில் எவ்வாறு மேற்கொண்டிருந்தன என்று, அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்..

nirajdavid@bluewin.ch

===========================================

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 7

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81777

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 6

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81740

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 4, 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81340

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் - 1,2,3

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80292

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் 9

ஆக்கம்: நிராஜ் டேவிட்

தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய உளவியல் நடவடிக்கை (Psychological Operations) பற்றி கடந்த இரண்டு மாதங்களாக இப்பத்தியில் ஓரளவு விரிவாகப் பார்த்து வருகின்றோம்.

எதிரியைக்; கிலிகொள்ள வைப்பதான உளவியல் போர் பற்றியும், இந்த வகையான உளவியல் போர் எப்படியான தாக்கத்தை உலகப் போரியல் அரங்குகளில் ஏற்படுத்தியிருந்தது என்றும் பார்த்திருந்தோம். சிறிலங்காவின் போரியல் அரங்குகளில் இந்தவகை உளவியல் போரை சிறிலங்கா அரச படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் எவ்வாறு கையாண்டிருந்தார்கள் எப்பது பற்றித்தான் இனி வரும் வாரங்களில் ஆராய இருக்கின்றோம்.

எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதான இந்த முக்கிய உளவியல் யுத்தத்தை விடுதலைப் புலிகளும், மற்றைய தமிழ் போராட்ட அமைப்பினரும் தமது போராட்ட நடவடிக்கைகளின் பொழுது பல சந்தர்பங்களில் உபயோகப்படுத்தியிருந்தார்கள். குட்டிமணி சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்படும்வரை குட்டிமணி பற்றிய ஒரு அச்சம் கலந்த ஆச்சரியம் சிறிலங்கா படைகள் மத்தியில் இருந்து வந்தது. அதாவது, குட்டிமணி தனது பற்களில் துப்பாக்கிச்சன்னங்களை கட்டிவைத்திருப்பதான ஒரு வதந்தி சிங்களப் படையினர் மத்தியில் காணப்பட்டது.

புலிகளின் தலைவர் உட்பட பல போராட்டத் தலைவர்கள் சிறிலங்காப் படைகள் வைத்திருந்த உப இயந்திரத் துப்பாகியின் (Sub-Mechine Gun) சுடு குழலில் உள்ள துவாரங்களை பார்த்து, „ இந்தத் துவாரங்கள் வழியாகவெல்லாம் குண்டுகள் வெளியேறுமா?“ என்று ஆச்சரியப்பட்ட காலத்தில், அதாவது நவீன துப்பாக்கிகளை தமிழ் ஆயுத அமைப்புக்கள் தமதாகக்கொண்டிராத காலகட்டத்தில், தமிழ் போராளிகள் அதி நவீன ஆயுதங்களைப் பாவித்துவருவதாகவும், அவர்கள் வைத்திருக்கும் ஆயதங்களினால் ஒருதடவை சுட்டால் பத்துபேருக்கு குண்டு பாயுமாம் என்ற அச்சம் கலந்த வதந்தி தென் இலங்கை மக்கள் மத்தியில் பரவி இருந்தது.

இதுபோன்று தமிழ் போராளிகள் பற்றி தென் இலங்கை மக்கள் மத்தியில் மிகைப்படுத்தப்பட்ட வகையில் பரவிக்கொண்டிருந்த வதந்திகள்தான், 83 இனப்படுகொலை காலகட்டத்தில் கொழும்பிற்கு புலிகள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி கேட்டு சிங்கள இனவெறிக் கும்பலை தலைதெறிக்க ஓடவைத்திருந்தது. 1983ம் ஆண்டு மட்டக்களப்பு சிறைச்சாலை உடைக்கப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஏராளமான தமிழ் அரசியல் கைதிகள் தப்புவிக்கப்பட்டார்கள். புளொட் அமைப்புத்தான் இந்தச் சிறை உடைப்படை நடாத்தியது. இந்தச் சிறை உடைப்பு நடைபெற்றுக்கெண்டிருந்த நேரத்தில், சிறையில் இருந்து தப்பித்துசென்ற தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் முகமாக, நுற்றுக்கணக்கான புளொட் போராளிகள் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அணிவகுத்து நின்றதாகவும், அவர்களனைவரது கரகங்களிலும் வெள்ளி நிறத்தினாலான புதுவகைத் துப்பாக்கிகள் பளபளத்துக்கொண்டிருந்ததாகவும் மக்கள் மத்தியில் பேச்சடிபட்டது. மக்கள் மத்தியில் அடிப்பட பேச்சுக்கள் நாளாவட்டத்தில் தமிழ் சிங்கள ஊடகங்களிலும் வெளிவர ஆரம்பித்தன. தமிழ் போராளிகள் பற்றிய அச்சம் கலந்த ஆச்சரியம் சிங்களத்திற்கு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இத்தனைக்கும் அந்தச் சிறை உடைப்பில் ஈடுபட்ட போராளிகள் வெறும் ஒற்றைத் துப்பாக்கிகளையும், ஒரிரு கைத்துப்பாக்கிகளையும் தவிர வேறு எந்தவித ஆயுதங்களையும் தம்மிடம் வைத்திருக்கிவல்லை என்பதுதான் உண்மை. மட்டக்களப்பு ஆணைப்பந்திப் பிள்ளையார் கோவிலுக்குள் மறைந்திருந்த வாசுதேவா தலைமையிலான குழுவினர் தம்மிடம் இருந்த இரண்டு ஒற்றைத் துப்பாக்கிகளின் நீண்ட முனைகளை வாளினால் அறுத்து சாக்குகளில் மறைத்துக் கொண்டுவந்திருந்தார்கள். அவ்வளவுதான்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஈழவிடுதலைப் போராளிகள் பற்றிப் பரவ ஆரம்பித்திருந்த வதந்திகள், சிறிலங்காவிற்கும் அதனுடைய படைத்துறைக்கும் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

இந்த வதந்திகள் இரண்டுவிதமான அனுகூலங்களை தமிழர் தரப்பிற்கு ஏற்படுத்தியிருந்தன. முதலாவது, எதிரியை கிலிகொள்ள வைக்கக் கூடிய ஒருவகை Fear Psycho இனை ஏற்படுத்தி, எதிரியின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தவும், ஆட்டங்காணவைக்கவும் போராளிகளுக்கு உதவின.

இரண்டாவது, தமிழ் போராட்ட அமைப்புக்கள் பற்றிய ஒருவித மிகைப்படுத்தப்பட்ட மாயையை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கி, "அடுத்த பொங்கல் தமிழீழத்தில்தான்",... "அடுத்த புதுவருடத்தில் தமிழீழக்கொடி ஏற்றப்படும்..." என்பதான நம்பிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து, பாரிய உளவியல் தெம்பை தமிழ் மக்களுக்கு உருவாக்க முடிந்தது.

இதனால் ஆயுதப் போராட்டத்தினால் வெற்றியைப்பெற்றுவிடமுடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்தது. அடுத்ததாக, இப்படி நம்பிக்கையூட்டும் உளவியல் நடவடிக்கைகள் பாரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியதன் விளைவாக போராட்டத்திலும், அதனது வெற்றியிலும் நம்பிக்கைவைத்து ஆயிரக் கணக்கில் தமிழ் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.

அதாவது எதிரியை அச்சமடையவைத்து, அவனைக் குழப்பி, அவனது நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் அல்லது தடுமாறவைக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் உளவியல் நடவடிக்கைகள், மறுபக்கத்தில் தமது தரப்பில் பாரிய உளவியல் உரத்தை ஏற்படுத்தும் என்பதும் ஒரு மிகப்பெரிய அனுகூலம்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பல போராட்ட அமைப்புக்கள் இந்த உளவியல் நடவடிக்கைகள் விடயத்தில் அதிக தெளிவைப் பெற்றிருக்கவில்லை. எதிரியை அச்சமடைய வைத்து, அவனைத் தடுமாற வைத்து, அவனைக் குழப்பநிலையில் வைத்திருப்பதான உளவியல் நடவடிக்கைளை பெரும்பாலும் தமிழ் மக்கள் மத்தியில் தானாகப் பரவிய வதந்திகள்தான் செய்துகொண்டிருந்தன. எவராலும் திட்டமிட்டு அவை மேற்கொள்ளப்படவில்லை. எதிரியை அச்சமடையவைக்கும்படியான இந்தவகை உளவியல் நடவடிக்கையை முதன்முதலில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் திட்டமிட்டு மேற்கொண்டார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்தான், எதிரியை அச்சநிலைக்குள் வைத்திருக்கும் இந்தவகை உளவியல் நடவடிக்கையை முதன்முதலில் திட்டமிட்டு உருவாக்கினார்.

80களின் ஆரம்பத்தில் அவர் ஆரம்பித்த இந்த உளவியல் நடவடிக்கையை அவர் 4ம்கட்ட ஈழ யுத்தத்தின் கடைசி வரைக்கும் பல்வேறு வடிவங்களில் தொடரவே செய்தார். வே.பிரபாகரன் மேற்கொண்ட அந்த உளவியல் நடவடிக்கைகள் கடந்த 30 வருடங்கள் தமிழ் மக்களை தலைநிமிர வைத்தன. தலையில் குடும்பிகட்டிக்கொண்டு, காதுகளில் தோடு அணிந்துகொண்டு சிங்கள மக்களுக்குப் பலவினர்களாகத் தெரிந்த தமிழர்களை, அதே சிங்கள மக்கள் அச்சத்துடன் பார்க்கும்படியான ஒரு மாற்றத்தை உருவாக்கியது திரு.வே.பிரபாகரன் செய்த அந்த உளவியல் நடவடிக்கைகள்தான்.

மட்டக்களப்பில் இருந்து புறப்பட்ட புகையிரம் மன்னம்பிட்டி தாண்டியதும், அல்லது யாழில் இருந்து புறப்பட்ட புகையிரதம் மதவாச்சி தாண்டியதும் தமிழ் பெண்கள் தமது நெற்றிய் வைத்திருக்கும் குங்குமப் பொட்டுக்களையெல்லாம் அழித்துவிட்டு, பேசாமடந்தைகளாகப் பயணம் செய்து, பாலுக்காகவோ அல்லது வேறு உபாதைகளுக்காகவே தமிழில் அழும் தமது பிள்ளைகளின் வாயை அடைத்தபடி தமிழர்கள் பயணம் செய்து, கொழும்பு வருவார்கள். கொழும்பு வந்ததும் "அவன் முனா".. 'இவர் சீனா.." என்று சங்கேத பாசைகளிலும் வெறும் சைகளினாலும் அச்சத்துடன் பேசிவந்த தமிழ் மக்களை, நெற்றியில் இரண்டு பெரிய குங்குமப் பொட்டுக்களை வைத்துக்கொண்டு, உரத்த குரலில் தமிழில் பேசியபடி வெள்ளவத்தையில் நடமாடும்படி செய்த பெருமை, திரு.பிரபாகரன் அவர்கள் கடந்த 30 வருடங்களாக மேற்கொண்டுவந்த உளவியல் நடவடிக்கைகளையே சாரும்.

80களுக்கு முன்னர் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் தொடர்பாக பல நகைச்சுவைப் பேச்சுக்கள் இருந்துவந்தன. சிங்களவர்களுக்கு கறுப்பு நிறத்தில் பிள்ளைகள் பிறந்துவிட்டால், அதனை "தெமல பாட்ட’ (தமிழர்களின் நிறம்) என்றுதான் குறிப்பிடுவார்கள். அதேபோன்று, சிங்களவர்களின் வீடுகளில் அதிக சத்தம் போட்டு கும்மாளம் அடித்தால், „என்ன தமிழர்களுக்கு சம்பளம் கிடைத்தது போல சத்தம் போடுகின்றீர்கள்..“ என்று கேலியாகக் கேட்கும் நிலை தென் இலங்கையில் இருந்துவந்தது. தமிழர்கள் என்படுபவர்களை மிகவும் பலவீனமான, கேவலமான ஒரு கூட்டமாகத்தான் சிங்களவர்கள் பார்த்துவந்துவந்தார்கள்.

சிங்களவர்களால் கேவலமாகப் பார்க்கப்பட்டு வந்த அதே தமிழர்களை அச்சத்துடனும், மரியாதையுடனும் சிங்களவர்களைப் பார்க்கவைத்தது, புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் செய்த உளவியல் நடவடிக்கைதான்.

திரு.வே.பிரபாகரன் செய்த அந்த உளவியல் நடவடிக்கைகள் என்ன?

பிரபாகரனின் அந்த உளவியல் நடவடிக்கைகள் எதிரிக்கு எப்படியான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது?

திரு.பிரபாகரனின் உளவியல் நடவடிக்கையை சிங்களதேசம் எப்படி எதிர்கொண்டது.

திரு.பிரபாகரனுக்கும் அவரது உளவியல் நடவடிக்கைகளுக்கும் எதிராக சிங்கள தேசம் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் என்ன?

இவை பற்றி தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாக ஆராய்வோம்.

தொடரும்..

nirajdavid@bluewin.ch

  • தொடங்கியவர்

உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் - பாகம் 10

ஆக்கம்: நிராஜ் டேவிட்

உளவியல் நடவடிக்கைகள் (Psychological Operations) என்கின்ற மிக முக்கியமான விடயம் பற்றிய அறிவும் அதளிவும் புலம்பெயர் தமிழர்களுக்கு இருப்பது மிக மிக அவசியம் என்பதன் காரணமாக, இந்த விடயம் பற்றி சற்று ஆழமாக நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்றதான உளவியல் நடவடிக்கை பற்றித்தாம் தற்பொழுது ஆராந்துகொண்டு இருக்கின்றோம். அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடையவைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய உளவியல் நடவடிக்கை பற்றி கடந்த இரண்டு மாதங்களாக இத்தொடரில் விரிவாகப் பார்த்து வருகின்றோம்.

கிறிஸ்துவுக்கு முன்னர் 323ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் உலகத்தின் பல பாகங்களையும் வெற்றிகொண்ட மாபெரும் வீரனும், போரியல் மேதையுமான மகா அலெக்சாந்தர் (Alexander the Great of Macedonia), எதிரிக்கு திகைப்பை ஏற்படுத்தும் உளவியல் நடவடிக்கையை எவ்வாறு மேற்கொண்டார் என்று முன்னர் பார்த்திருந்தோம்.

அதேபோன்று, 1162 ஆம் ஆண்டுகளில் மிகப் பிரசித்தி பெற்ற ஆட்சியையும், ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொண்டு சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த மொங்கோலியத்

தலைவர் கெங்கிஸ்கான், இந்த வகையிலான உளவியல் யுதத்தினை எவ்வாறு மேற்கொண்டார் என்றும் பார்த்திருந்தோம்.

இதேபோன்று அப்கானிஸ்தான் யுத்தத்தின் போது அமெரிக்கா எவ்வாறு இந்த வகை உளவியல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது என்றும் பார்த்திருந்தோம்.

வியட்னாம் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில், கனோய் கன்னா(Hanoi Hannah), என்ற பெண் ஊடகவியலாளர் மேற்கொண்டிருந்த உளவியல் போர், உலகின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவம், வியட்னாமின் வியட்கொங் கெரிலாக்களிடம் படுதோல்வியைச் சந்திக்கக் காரணமாக இருந்தது பற்றியும் ஓரளவு விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

இரண்டாம் லக மகாயுத்த காலகட்டத்தில் டோக்கியோ ரோஸ் ("Tokyo Rose") என்ற ஜப்பானியப் பெண் அமெரிக்கப்படையினருக்கு எதிராக மேற்கொண்ட உளவியல் போர் மற்றும் பீ.பீ.சி செய்தி ஊடகம் ஜேர்மனிய நாசிப்படைகளுக்கு எதிராக மேற்கொண்டிருந்த உளவியல் யுத்தங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடையவைத்து, அவனைத் தடுமாறவைக்கும்படியான இந்தவகை உளவியல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு மேற்கொண்டார்கள்?

-இதுபற்றித்தான் தற்பொழுது சற்று சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளது கரந்தடிப்படையிலான போராட்ட வடிவம் பற்றியும், அந்தப் போராட்டத்தில் அவர்கள் நிகழ்திக்காண்பித்த சாதனைகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ளும் போரியல் வல்லுனர்கள், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பெரிய ஆச்சரியத்தை வெளியிடுகின்றார்கள். அதிலும் குறிப்பாக, உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற விடயம் பற்றியும், அதன் பரிமானங்கள் பற்றியும் சிறிலங்கா இராணுவமே சரியாக அறிந்திராத காலகட்டத்திலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மேற்கொண்டிருந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றி மிகுந்த ஆச்சரியத்தை போரியல் ஆய்வாளர்கள் வெளியிடுகின்றார்கள்.

1970ம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதிpகளில் தமிழர்கள் எனப்படுபவர்கள் மல்லினப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகத்தான் இருந்துவந்தார்கள். மிகவும் பலவீனமான ஒரு இனமாகத்தான் காட்சிதந்தார்கள். அவர்களுடைய அடையாளங்கள் கூட, எளிமையானவைகளாகவும், இனிமையானவைகளாகவும் இருந்தன. குறிப்பாக யாழ்குடாவை எடுத்துக்கொண்டால், யாழ் இசைக்கருவியே அவர்களது அடையாளமாக இருந்துவந்தது. மட்டக்களப்பை எடுத்துக்கொண்டால, பாடும் மீனே அவர்களது அடையாளமாக இருந்து வந்தது.

மறுபக்கம் சிங்கள இனத்தை எடுத்துக்கொண்டால், அவர்களது சின்னம் சிங்கமாகவே இருந்தது வந்தது. அதாவது வீரம்மிக்க ஒரு இனமாகத்தான் சிங்கள இனம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. கரம் ஒன்றில் வெட்டும் வளினைப் பிடித்தபடி கம்பீரமாகப் பார்க்கும் ஒரு சிங்கமே சிங்கள இனத்தை அடையாளப்படுத்த சிறிலங்காவின் தேசியக் கொடியில் பொறிக்கப்பட்டிருந்தது.

சிங்கள இனம் ஒரு வீரம் மிக்க இனம் என்ற கர்வம் சிங்களவர்களுக்கும் இருந்தது. சிங்களவர்கள் ஒரு வீரம்மிக்க இனத்தவர்கள் என்ற பார்வை தமிழர்களுக்கும் இருந்துவந்தது. (சிங்கள இனத்தவர்களை „மோட்டுச் சிங்களவர்கள்...“, „ முரட்;டுச் சிங்களவர்கள்..“ என்று சிங்களவர்களுக்கு இருந்ததாக நம்பப்படுகின்ற வீரத்தை தமிழர்கள் ஏற்காமல் ஏற்றுக்கொண்டுவந்தார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் தமிழர்கள் தமது ஆயதப் போராட்டத்தை தொடங்கினார்கள்.

சாத்வீகப் போராட்டம் என்று சப்பைக்கட்டு கட்டி வீரச் சிங்களவர்களிடம் அடிவாங்கிக்கொண்டிருந்த தமிழர்கள், ஓரு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்துவிட்டார்களாம் என்ற செய்தி ஆரம்பத்தில் சிங்களவர்களுக்கு சிரிப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபக்கம் தமிழர்களை எடுத்துக்கொண்டால், இயல், இசை, நாடகம் என்ற ஒரு வட்டத்திற்குள் நின்றபடி, மிஞ்சினால் உண்ணாவிரதம், பகிஷ்கரிப்பு என்று போராடிவிட்டு, ~தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த தமிழர்களுக்கும், ஆயுதப் போராட்டம் என்பது ஆரம்பத்தில் மிருந்த நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருந்தது. சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போராட்ட அமைப்புக்களுக்கு மேற்கூறப்பட்ட இரண்டு தரப்பினருடைய உளவியல் ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய தேவை இருந்தது.

அதாவது தமிழர்களைக் கோளைகளாக எண்ணியிருந்த சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தவேண்டிய ஒரு தேவை இருந்தது. அத்தோடு, பல தசாப்த காலமாகத் தம்மைப் பலவீனர்களாக எண்ணி வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களுக்கு, ஒரு கம்பீரத்தையும், வீர உணர்வினையும் ஏற்படுத்தவேண்டிய தேவை போராட்ட அமைப்புகளுக்கு இருந்தது.

இந்த உளவியல் தேவையை சந்திக்கும்படியான முதலாவது நகர்வினைச் செய்தவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள்தான். தமது ஆயுதப் போராட்ட அமைப்பிற்கான பெயரையும், சின்னத்தையும் 'புலி" என்று உருவகப்படுத்தியதன் ஊடாக, ஒருவித உளவியல் நடவடிக்கையை எதிரி மீதும், தனது சொந்த இனத்தின் மீதும் பிரயோகித்தார் பிரபாகரன். பாரிய அளவில் வீரத்தை வெளிக்காண்பித்த சோழப் பேரரசின் சின்னமாக புலிச்சின்னமும், கொடியாகப் புலிக்கொடியும் இருந்ததால், தமிழர்களின் சாம்ராஜ்யம் மீண்டும் உதிக்க அரம்பித்துவிட்டது என்பதை வெளிப்படுத்தவே பிரபாகரன் ~புலியை| தமது அமைப்பின் பெயரிலும், கொடியிலும், சின்னமாக பொறித்திருந்தார்.

இருந்தபோதிலும், இந்தப் ~புலிச் சின்னம்| ஒரு பெரிய உளவியல் நடவடிக்கையை எதிரிகள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் இன்றுவரை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றது.

புலி என்பது சிங்கத்திற்கு நிகரான வீரத்தைக் கொண்டது. சிங்கத்தைச் சந்திக்கும் தைரியமும் காட்டில் புலிக்கு மட்டும்தான் உண்டு. தமிழில் உள்ளது போலவே புலி பற்றி நிறை பழமொழிகள் சிங்களத்திலும்; உள்ளன. தமிழர்கள் வீரம் மிக்கவர்கள், தமக்கு அச்சத்தை ஏற்படுத்த வல்லவர்கள் என்கின்ற எண்ணத்தை சிங்களவர்களுக்கு ஏற்படுத்த இந்தப் புலிச் சின்னம் தமிழர் தரப்பிற்குப் பெரிய அளவில் உதவவே செய்தது.

ஆரம்பத்தில் "புதிய தமிழ்ப் புலிகள்“ என்றுதான் தமது அமைப்பிற்குப்; பெயரை வைத்தார் பிரபாகரன்: Tamil New Tigers - அதாவது TNT என்ற பெயரில்தான் தனது அமைப்பை சிங்களத்திற்கும் உலகிற்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். ரீ.என்.ரீ. என்பது உலகில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபல்யமான வெடிபொருளின் (Trinitrotoluene) பெயர். அனைவரும் அச்சத்துடன் நோக்கும் அந்த வெடிபொருளின் பெயரிலேயே தமது அமைப்பின் பெரை வைத்ததுன் மூலம் எதிரியை அச்சப்படுத்தும் உளவியல் யுத்தத்தை ஆரம்பத்திலேயே மேற்கொண்டிருந்தார் திரு.பிரபாகரன். 1976 மே மாதம் 5ம் திகதி தமது அமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்து, ~தமிழீழம்|, அதன் விடுதலை தொடர்பான அந்தத் தமிழ் புலிகளின் வேட்கையையும் உலகிற்கு வெளிப்படுத்தி ஆச்சரியப்படவைத்தார்.

எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடையவைத்தல் என்கின்றதான உளவியல் நடவடிக்கையை கடந்த 30 வருடங்களாக திரு.பிரபாகரன் தனது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகக் கச்சிதமாகச் செய்து வந்திருந்தார்.

ஈழப் போராட்ட களங்களில் திரு.பிரபாகரன் அவர்கள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகளின் ஒருசில பக்கங்களை அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்…

nirajdavid@bluewin.ch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.