Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணி வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அணி வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இலங்கை கிரிக்கட் அணி மீது அரச தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையின் அணியின் உப தலைவர் மஹெல ஜயவர்தன மற்றும் முன்னணி வீரர் திலான் சமரவீர ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுயாதீன தொலைக்காட்சியில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், குறித்த ஊடகம் கிரிக்கட் வீரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கமும் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கத் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இலங்கைக் கிரிக்கட் வீரர்களினால் கட்டிக்காக்கப்பட்ட பெருமைகள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் மூலம் தகர்த்தெறியப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களினால் அணி வீரர்களின் மனோ திடத்திற்கு குந்தகம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும், ஏனெனில் இதனை அரச தொலைக்காட்சி ஒன்றே வெளியிட்டுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரச தொலைக்காட்சியின் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக ஜே.வி.பி தகவல் வெளியிட்டுள்ளது.

அணி வெற்றிப்பாதையில் பயணிக்கும் போது அதன் பெருமையை பகிர்ந்து கொள்ளும் அரசாங்கம் தோல்வியடையும் போது குற்றச்சாட்டுக்களை சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி கட்சியின் பிரச்சாரச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அணி வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை –

1:33am

இலங்கை அணி வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

இலங்கையின் முன்னணி அரச தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சுயாதீன தொலைக்காட்சியின் விமசும என்ற அரசியல் விமர்சன நிகழ்ச்சியில் இலங்கை அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக அணியின் உப தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹெல ஜயவர்தன மற்றும் முன்னணி வீரர் திலான் சமரவீரவும் வேண்டுமென்றே ஆட்டமிழந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மஹெல ஜயவர்தன இரண்டு ஓட்டங்களுக்கு சொஹப் அக்தாரின் பந்து வீச்சில் போல்ட் முறையிலும், திலான் சமரவீர சஹிட் அப்ரிடியின் பந்து வீச்சில் ஸ்டம் செய்யப்பட்டும் ஆட்டமிழந்தனர்.

குறித்த இரண்டு வீரர்களும் வேண்டுமென்றே ஆட்டமிழந்த காரணத்தினால் இலங்கை அணி தோல்வியைத் தழுவியதாக குறித்த நிகழ்ச்சியில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், அணி வீரர்கள் மீது இவ்வாறான அபாண்ட பழிகளை சுமத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், சுயாதீன தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் சுயாதீன தொலைக்காட்சிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வர்த்தகர் ஒருவர் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டும் என 18000 அமெரிக்க டொலர் பந்தயம் கட்டியிருந்ததாக குறித்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டதாகவும் இதற்கும் அணி வீரர்கள் ஆட்டமிழந்தமைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசமான விமர்சனங்களினால் அணி வீரர்களின் மனோ திடம் வீழ்ச்சியடையக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/58566/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.