Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சன் சீ கப்பலில் சென்ற கடற்புலியை நாடு கடத்த கனேடிய அதிகாரிகள் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சன் சீ கப்பலில் சென்ற கடற்புலியை நாடு கடத்த கனேடிய அதிகாரிகள் உத்தரவு

[Wednesday, 2011-03-09 03:50:27]

�சன் சீ� கப்பலில் சென்ற அகதிகளில் ஒருவரான- விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரை நாடு நடத்த கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் உறுப்பினரான மைக்கல் மைக் பாலென் தகவல் வெளியிடுகையில்,

� தமிழ்ப் புலிகள் என்று அறியப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் சமஷ்டி அரசினால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே �சன் சீ� கப்பலில் வந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு அடைக்கலம் வழங்க முடியாது. அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏழு ஆண்டுகள் உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் அந்த அமைப்பில் இருந்து விலக அவர் முனையவில்லை. புலிகளின் கடற்படையான கடற்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்துள்ள இவர் 1994ம் ஆண்டு இலங்கை கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றைத் தாக்கி அழிக்க முயன்ற தாக்குதலில் காயமடைந்துள்ளார். போர்க்கப்பலை அழிக்கும் புலிகளின் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

புலிகளுடன் இருந்த இவர் தீவிரமான போர்க்குற்றங்களைப் புரிந்தார் என்று நிரூபிக்க வேண்டிய தேவை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபைக்கு இல்லை. அவர் புலிகள் அமைப்பின் ஒரு உறுப்பினராக மட்டும் இருந்துள்ளார்.� என்று தெரிவித்தார்.

நாடு கடத்தப்படவுள்ள புலிகள் அமைப்பு உறுப்பினரின் அடையாளங்களை வெளியிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரது சட்டவாளர், இந்த உத்தரவுக்கு எதிராக சமஷ'டி நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

�சன் சீ� கப்பலில் கனடா வந்த 492 பேரில் தீவிரவாத நடவடிக்கைகள், போர்க்குற்றங்கள், ஆட்கடத்தல்களில் தொடர்புடையவர்கள் என்று கனேடிய அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட 32 பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithy.com

Tamil migrant ordered deported over ties to terror group

As members of the Tamil Tigers’ sea division, their mission that day was to destroy a navy vessel delivering arms to a government-controlled area.

Shots were fired and the Tigers prevented the ship from completing its weapons run. But the navy vessel wasn’t the only thing to sustain damage as a result of the gunfight – so, too, did the refugee claim of one of the Tigers who later sailed to Canada.

http://www.theglobeandmail.com/news/national/british-columbia/tamil-migrant-ordered-deported-over-ties-to-terror-group/article1934241/

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அக்கப்பலில் வந்த சிலரும், இப்படிப்பட்ட போராளிகளை அடையாளம் காட்டக் கனடா அரசுக்கு உதவினார்கள் என்பது வேதனையான சம்பவமாகும். அப்படிக் காட்டிக் கொடுத்தால், தாங்கள் விடுதலை செய்யப்படலாம் என்ற ஆசை வார்த்ததைக்கு மயங்கி இப்படியான வேலைகளைச் செய்யத் துணை போனார்கள். அவ்வாறே தாய்லாந்தில் தமிழர் பிடிப்பட்டு, நாடு கடத்தப்பட்டதற்கு இவர்களின் தகவல்களுக்கும் உதவியதாக அறிய முடிகின்றது. இது அவர்களைக் குற்றம் சாட்டவல்ல. வேறு யாராவது அப்படியான பயணத்தை மேற் கொண்டால், இப்படி மற்றவர்களைக் காட்டித் தப்பிக்கலாம் என்பதைச் செய்து விடாதீர்கள்.

ஆனால் 78 பேரோடு வந்த கப்பல் பயணிகளுக்குக் கூட இது வரை எவ்வகை முன்னேற்றகரமான செயற்பாட்டையும் கனடா அரசு செய்து விடவில்லை. அவர்களின் கோப்புக்கள் இது வரை திறக்கப்படாமலேயே இருக்கின்றது. அவர்கள் தற்காலிக அனுமதியில் தான் இருக்கின்றார்கள். அவர்கள் செயற்பாடுகள் இப்போதும் கண்காணிப்படலாம். ஒரு கூட்டமாக வருகின்ற மக்கள் கூட்டத்துக்கு நிச்சயமாக ஒரு பின்பலம் இருக்கின்றது என்பதே கனடா அரசின் சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

தனித்தனியாக வந்திருந்த பலருடைய விண்ணப்பங்கள், ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. தீர்வும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஏஜென்சிமாரை நம்பி கனடாவுக்குக் கப்பல் வந்து, எதிர்காலம் என்ன என்பது பற்றித் தேடிக் கொண்டிருக்காதீர்கள். பாதுகாப்பான வழிகளையும், எதிர்காலத்துக்குப் பிரச்சனையில்லாத பாதையையும் தேர்ந்தெடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.