Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஐ.நாவிற்கு எடுத்து விளக்கப்பட்டிருக்கிறது

Featured Replies

சிறிலங்காவில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகிச் செல்கின்றது என மனித உரிமை அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்து விளக்கியிருக்கின்றன.

சிறிலங்காவினது மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக பல மனித உரிமை அமைப்புக்கள் எழுத்துமூல அறிக்கையினை ஐ.நாவின் மனித உரிமைச் சபையிடம் சமர்ப்பித்திருக்கின்றன.

எதிர்வரும் மார்ச் 16ம் திகதிவரை ஐ.நா மனித உரிமைச் சபையினது 16வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.

ஐ.நாவின் மனித உரிமைச் சபையினது முன்னைய அமர்வுகளின் போது சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை அது நிறைவேற்றத் தவறிவிட்டது என அனைத்து வகையான இனவாதங்களுக்கும் எதிரான அனைத்துலக அமைப்பு [international Movement Against All Forms of Racism - IMADR] வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்த ஓர் ஆணைக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களைச் சேர்ந்த சாட்சிகள், "குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாது தப்பிவாழ்வதாகவும், தமக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து போயிருப்பதாகவும்" கூறியிருக்கிறார்கள்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற இந்தக் கட்டமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறுவப்பட்டிருந்தது.

18ஆவது சீர்திருத்தம்

"சிறிலங்காவில் செயற்பட்டுவரும் மனித உரிமை ஆணைக்குழுவானது சுதந்திரமாகச் செயற்படமுடியாத நிலைமையினை 18வது அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஏற்படுத்திவிட்டது" என இனவாதத்திற்கு எதிரான இந்த அனைத்துலக அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிலிருந்தும் எழுந்த காத்திரமான எதிர்ப்புகளின் மத்தியில் கடந்த செப்ரெம்பரில் கொண்டுவரப்பட்ட 18வது அரசியலமைப்புச் சீர்திருத்தமானது நாட்டினது அதிபருக்கு அளவுகடந்த அதிகாரங்களை அள்ளி வழங்கியிருக்கிறது.

வடக்குக் கிழக்கு தொடர்ந்தும் இராணுவ மயமாவது, நீதிக்குப் புறம்பான கொலைகள், கட்டாயத் தடுத்துவைப்பு மற்றும் காணாமற் போதல் என்பன அதியுச்ச கரிசனைக்குரிய விடயங்களாகும் என இந்த அமைப்பு தனதறிக்கையில் தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும், போர் தொடர்பான மற்றும் மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளைத் தீர்க்கும் வகையிலான பரிந்துரைகளைத் தான் அமைத்திருக்கும் இந்த ஆணைக்குழு வழங்கும் என சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.

வடக்குக் கிழக்குப் பகுதியில் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதோடு மனித உரிமைப் பாதுகாவலர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என அனைத்துலக கத்தோலிக்க அமைப்பான பக்ஸ் றொமானா [The International Catholic Movement Pax Romana] ஐ.நாவின் மனித உரிமைச் சபையில் முன்வைத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

சிறிலங்காவினது வடக்குக் கிழக்குப் பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் கருத்துச்சுதந்திரமும் ஒன்றுகூடும் சுதந்திரமும் முற்றாக மறுக்கப்பட்டிருக்கிறது என இந்தக் கத்தோலிக்க அமைப்பு கூறுகிறது.

மனித உரிமைப் பாதுகாவல்களைப் பாதுகாத்தல்

யாழ்ப்பாணத்தில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் கொல்லப்படுவதும் அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதும் தொடரும் அதேநேரம், மக்கள் மத்தியில் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது சிறிலங்கா அராசங்கம் தொடர்ந்தும் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக இந்த அமைப்பு தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறது.

மனித உரிமை ஆர்வலரான பட்டாணி ரபீக் என்பவர் பெப்பிரவரி 2010 முதல் காணாமற்போயிருப்பதையும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஐ.நாவின் மனித உரிமைச் சபையினது செயற்பாடுகளுக்குச் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க மறுக்கிறது என்றும் சித்திரவதையினை இல்லாதுசெய்வேன் என அது பலமுறை உறுதியளித்தபோதும் அப்பாவி மக்கள் சித்திரவதைக்குள்ளாவதை இல்லாது செய்வதற்கான உருப்படியான எந்த நடவடிக்கையினையும் சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவில்லை என கொங் கொங்கினைத் தளமாகக் கொண்ட ஆசிய சட்ட வள மையம் [Asian Legal Resource Centre - ALRC] கூறுகிறது.

சிறிலங்காவிலுள்ள உள்ளூர் மனித உரிமைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலகுகளை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஐ.நா மனித உரிமைச் சபை முன்னெடுக்கவேண்டும் எனவும் இந்தச் சட்ட வள மையம் கோரியிருக்கிறது.

'விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த' மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அவர்கள் மீண்டும் பெறுவதற்கு வழிசெய்வதென அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக ஐ.நா மனித உரிமைச் சபையினது கூட்டத்தொடரில் கருத்துத் தெரிவித்த சிறிலங்காவினது பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

"பயங்கரவாதத்தினை இல்லாதொழித்தல் என்பது அனைத்து சனநாயக நாடுகளினதும் பொறுப்பாகும். ஆனால் குறிப்பிட்ட சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெறுவதை அனுமதித்திருக்கின்றன" என அவர் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்துலக விசாரணை

காத்திரமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்ற போதும் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்களைப் பக்கச்சார்பின்றிச் சுதந்திரமாக விசாரிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவருவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை ஐ.நா மனித உரிமைச் சபையில் குறிப்பிட்டிருக்கிறது.

கடத்தல்கள், கட்டாயக் காணாமற்போதல்கள் கொலைகள் மற்றும் சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் தொடரும் அனைத்து வகையான வன்முறைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என மனித உரிமைச் சபை சிறிலங்காவிற்கு அழைப்பு விடுக்கவேண்டும் என மன்னிப்புச்சபை கூறுகிறது.

"பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய குடுப்பங்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டுமெனில் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் அனைத்து வகையான வன்முறைகளும் ஐ.நாவின் தலைமையிலான சுதந்திரமான அனைத்துலக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்" என மன்னிப்புச்சபை சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தவிர, செயலாளர் நாயகம் பன் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைத்த வல்லுநர்கள் குழுவினது இறுதி அறிக்கை வெளியிடப்படவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை கோரியிருக்கிறது.

ஆனால் தான் அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது அனைத்துவகையான மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கிறது என சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்திவருகிறது.

"குறிப்பிட்டதொரு பிரச்சினையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான உள்நாட்டு முனைப்புக்கள் இடம்பெறாவிட்டால் மாத்திரமே அந்த விடயம் தொடர்காக அனைத்துலக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுதான் நடைமுறை" என சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை முறையாக விசாரிக்கவேண்டும் என்ற அண்மைய அமெரிக்க செனற் சபையினது தீர்மானம் தொடர்பாகப் பதிலளித்த சிறிலங்காவினது வெளிவவகார அமைச்சு, "குறிப்பிட்ட இந்தத் தீர்மானத்தினை வரைந்தவர்கள் யாரோ அவர்கள் சிறிலங்கா அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் திறனை தவறாக எடைபோட்டுவிட்டார்கள்" என குறிப்பிட்டிருந்தது.

http://www.puthinappalakai.com/view.php?20110309103358

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.