Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிதரன் எம்.பி. மீதான கொலை முயற்சிக்குக் காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் எம்.பி. மீதான கொலை முயற்சிக்குக் காரணம் என்ன?

அவசரகாலச் சட்டம் நீடிப்புக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவா? சபையில் அரியநேந்திரன் கேள்வி

சிறிதரன் எம்.பி.மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி அவசரகாலச்சட்டதை நீடிப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவா? அல்லது ஜனாதிபதிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கா?

இப்படி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரவிநியோகம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரிய நேத்திரன் எம்.எபி.தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது இன்று நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

எவரும், எப்பொழுதும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்றுவர முடியும். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அப்படியானால் இது ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியா என்று கேட்கிறேன். அதேவேளை, நாளை இந்த நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான விவாதம் நடைபெறவுள்ளது. இதனால் இதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இன்று தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி தொடர்பாகவே அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கடந்தவாரம் மட்டக்களப்பில் கூட்டம் ஒன்றை நடத்தினார். அங்கு வாழும் 74.5 வீத தமிழ்மக்களின் பிரதிநிதிகளான எங்களுக்கு அழைப்பு இல்லை.

கிழக்கில் எங்கள் மக்கள் சார்பாக குரல் கொடுக்க தடைவிதிக்கப் பட்டுள்ளது. வடக்கில் திட்டமிட்டு கொலை முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த காலங்களில் எமது சகாக்களான, ரவிராஜ், மகேஸ்வரன், ஜோசப் நடராஜ சிங்கம், சிவநேசன் என தொடர்ச்சியாகப் பலர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று எம்மீது மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன. ஜனாதிபதியோ நாட்டில் கௌரவ சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார்.

அப்படியானால் இப்படியான கொலை மிரட்டல்கள் தொடர்பாக உண்மையை கண்டறிய அக்கறை இல்லையா? அல்லது அதற்கான துணிவு அரசுக்கு இல்லையா?

அன்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் 33 லட்சத்து 3,388 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 20 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 43 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் 65 ஆயிரம் ஏக்கர் காணிகள் மட்டுமே காப்புறுதி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான நட்டஈடு உரிய முறையில் வழங்கப்படவில்லை.

எனவே, பாதிக்கப்பட்ட எல்லா விவசாயிகளுக்குமே பாரபட்சமின்றி உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் காட்டு மிராண்டித் தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதால் ஆலையடி வேம்பு கிராமத்தில் வாழும் 22 தமிழ் குடும்பங்கள் இரவோடு இரவாக அக்கரைப் பற்றுடன் இணைக்கப்பட்டன. மக்களின் விருப்பம் இன்றி அவர்களுக்கே தெரியாமல் வர்த்தமாணி அறிவித்தல் மூலம் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 225 வாக்காளர்கள் இருக்கின்றனர். தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள இந்த நேரத்தில் இப்படிச் செய்வது காட்டு மிராண்டித்தனமான செயலாகும்.

இன்று நாடெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகின்றது. ஆனால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 50 தமிழ் பெண்களும், 5 குழந்தைகளும் கண்ணீருடன் கலங்கி இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்யுங்கள். அல்லது பிணையில் விடுங்கள் அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் என்றார் அரியநேத்திரன் எம்.பி.

http://onlineuthayan.com/News_More.php?id=970

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.