Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிபிய உள்நாட்டுப் போரும் மேற்குலகின் வியூகங்களும்

Featured Replies

வட ஆபிரிக்காவில் டியூனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் கிளர்ச்சிகள் கண்ட முடிவமைதிக்கு முற்றிலும் வேறுப்டடதாகவே லிபியாவின் கிளர்ச்சி அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. டியூனீசியாவில் இருந்து இரவோடிரவாக ஜனாதிபதி பென் அலி குடும்பத்தினர் சகிதம் விமானத்தில் ஏறித் தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். எகிப்தில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியைத் துறந்து தலைநகர் கெய்ரோவில் இருந்து வெளியேறி வேறு ஒரு நகரத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் உண்மையில் எகிப்தில் இல்லையென்றும் வேறு நாட்டுக்கு சிகிச்சைக்காகச் சென்று விட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகியிருந்தன. லிபியாவில் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அதிகாரத்தில் இருந்துவரும் கேணல் மும்மர் கடாபிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்த வேகத்தை அவதானித்த போது அவரும் சில தினங்களில் நாட்டைவிட்டுத் தப்பியோடி விடுவாரென்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தனது அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களுக்கு எதிராகத் தனது ஆதரவாளர்களைத் திரட்டி கடாபி எதிர்த்தாக்குதல்களை மூர்க்கத்தனமாக மேற்கொள்ள ஆரம்பித்ததையடுத்து முழு அளவிலான உள்நாட்டுப் போர் மூண்டு பல நாட்களாக நீடித்துக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக இராணுவத்திற்குள் கணிசமான பிரிவினர் திரும்பத் தொடங்கியபோது கடாபியினால் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதென்பது சாத்தியமில்லை என்றே கருதப்பட்டது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக விமானப்படையையும் டாங்கிகள் போன்ற கனரக ஆயுதங்களையும் கூலிப்படையினரையும் பயன்படுத்தி கடாபி மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாகக் கடந்த சில தினங்களாக கிளர்ச்சிக் காரர்களினால் பெரும் முன்னேற்றங்களைக் காண முடியாமல் இருக்கிறது. கிளர்ச்சிக்காரர்களும் கடாபி ஆதரவுப் படைகளும் சக்திகளும் மாறிமாறி நகரங்களைக் கைப்பற்றுவதும் பின்னர் கடுமையான மோதல்களையடுத்து நகரங்களை இழப்பதுமாக ஒரு இழுபறி நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடாபியின் நெருங்கிய நண்பரான வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் கடாபிக்கும் இடையே சமரச முயற்சியை மேற்கொள்ள முன்வந்தாரெனினும் கிளர்ச்சியாளர்கள் கடாபி அதிகாரத்தைத் துறந்து நாட்டில் இருந்து வெளியேறுவதை மாத்திரமே தாங்கள் வேண்டி நிற்பதாகத் திட்டவட்டமாக அறிவித்ததனால், அந்த முயற்சி பயனற்றுப் போய்விட்டது. நாட்டைவிட்டு வெளியேறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு கடாபி விடுத்ததாகக் கூறப்படும் அழைப்பையும் கூட கிளர்ச்சியாளர்கள் நேற்றைய தினம் நிராகரித்துவிட்டதாகவும் தாங்கள் கைப்பற்றிய நகரங்களைத் தொடர்ந்தும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவர்கள் போராடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எகிப்தில் இடம்பெற்ற கிளர்ச்சியின் திசைமார்க்கத்தைத் தீர்மானித்ததில் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகளினாலும் செலுத்தக் கூடியதாக இருந்த செல்வாக்கை லிபியாவில் காண முடியவில்லை. முபாரக்கைத் தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருப்பதற்கு சூழ்ச்சித்தனமாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காமல் போனதன் பின்னரே அவரைக் கைவிடுவதற்கு மேற்குலகம் தீர்மானித்தது. ஆனால், கடாபியின் விவகாரத்தைப் பொறுத்தவரை, அவரைப் பழிவாங்குவதற்கு தங்களுக்குக் கிடைத்த அரியவாய்ப்பாகவே மேற்குலகம் மக்கள் கிளர்ச்சியை நோக்குகிறது. கிளர்ச்சி செய்யும் சக்திகளுக்கு அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் உதவிவருகின்றன என்பது அம்பலமாகியிருக்கிறது. அத்துடன் எந்த நேரத்திலும் லிபியாவில் இராணுவத் தலையீட்டைச் செய்வதற்குத் தயாரான நிலையில் அமெரிக்க படைகள் மத்திய தரைக் கடலில் குவிக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச சமூகத்துடன் இணைந்தே லிபியா விவகாரத்தில் அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கும் என்று கூறியிருக்கும் ஜனாதிபதி பராக் ஒபாமா கேணல் கடாபி லிபியாவை ஆட்சிசெய்வதற்கான நியாயபூர்வத் தன்மையை இழந்து விட்டதால் அவர் வெளியேற வேண்டுமென்றும் பிரகடனம் செய்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

மேற்குலக ஊடகங்கள் லிபியாவில் சர்வதேசத் தலையீடு என்ற பெயரில் அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் இராணுவ ரீதியான தலையீட்டுக்கு வசதி செய்யும் நோக்குடனேயே உலக அபிப்பிராயத்தை உருவகித்துக் கொண்டிருக்கின்றன என்பதை இச்சந்தர்ப்பத்தில் அவதானிக்கத் தவறக்கூடாது. லிபியாவின் ஆகாயப் பரப்பில் விமானங்கள் பறப்பதற்குத் தடைவிதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையூடாக தீர்மானமொன்றைக் கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் பிரிட்டனும் ஆலோசித்து வருகின்றன. ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு முன்பாக அதன் ஆகாயப் பிராந்தியத்தில் இத்தகைய விமானப் பறப்புத்தடை வலயமொன்றை அமெரிக்கா பிரகடனம் செய்ததை உலகம் மறந்துவிடவில்லை. கடாபியின் அரசியல் வாழ்வில் அவரிடம் காணப்படக் கூடியதாக இருந்த அமெரிக்க விரோத, மேற்குல விரோத நிலைப்பாடுகளில் அடையாளம் காணப்பட்ட ஆரோக்கியமான அம்சங்கள் மூன்றாம் உலக நாடுகளின் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், ஏனைய அரபுலக எதேச்சாதிகார ஆட்சியாளர்களைப் போன்றே அவரும் ஊழல் தனமான ஒரு சர்வாதிகாரியாகவும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதில் நாட்டம் கொண்டவராகவும் மாறியிருக்கிறார் என்பதிலும் சந்தேகமில்லை. ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கோரி லிபிய மக்கள் ஆரம்பித்த கிளர்ச்சி தற்போது வல்லாதிக்க மேற்குலக சக்திகளினால் பயன்படுத்தப்படுகின்ற ஆபத்தான சிக்கல் நிலைக்குள் மாட்டுப்பட்டிருக்கிறது. மக்கள் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு கடாபி கையாளும் மூர்க்கத்தனமான அணுகுமுறையின் விளைவாக தீவிரமடைந்திருக்கும் உள்நாட்டுப் போரைப் பயன்படுத்தி அமெரிக்காவும் மேற்குலக சக்திகளும் லிபியாவில் இராணுவத் தலையீட்டைச் செய்யுமேயானால், அரபுலகில் வியாபகமடைந்து கொண்டிருக்கும் ஜனநாயக ஆதரவு அரசியல் அலை பெரும் பின்னடைவைச் சந்திக்கக்கூடிய ஆரோக்கியமற்ற சூழ்நிலை தோன்றும். எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கில் அராஜக சக்திகளின் கையோங்கக் கூடியதாக ஜனநாயக ஆதரவுச் சக்திகள் பலமிழக்கச் செய்யப்படுமேயானால் அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்குமே இறுதியில் வாய்ப்பாகிப் போய்விடும்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=9108:2011-03-09-00-25-31&catid=71:editorial&Itemid=101

  • தொடங்கியவர்

கேணல் கடாபி; புரட்சிக்குள் புரட்சி

ஐம்பதுகளிலிருந்து எழுபதுகள் வரையிலான காலம் தேசிய விடுதலைப் போராட்டத்தின் யுகம்.காலனியாதிக்கம் அப்போது முடிவுக்கு வந்து கொண்டிருந்தது.முடிமன்னர் ஆட்சிகளுக்கும் முடிவு கட்டப்பட்டுக்கொண்டிருந்தது.ராணுவ கொடுங்கோலர்களும் தூக்கியெறியப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்த மூன்று போக்குகளும் ஒரு பொதுத்தன்மையைக் கொண்டிருந்தன.அந்தப் பொதுத் தன்மை ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது மேற்கத்திய ஆதிக்க எதிர்ப்பு என்பதாக இருந்தது.

1959 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவக் கொடுங்கோலன் பாடிஸ்டாவைத் தூக்கியெறிந்தார்கள் கியூபப் புரட்சியாளர்கள்.1962 இல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திலிருந்து அல்ஜீரியா விடுதலை பெற்றது.1969 ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிராக இரத்தம் சிந்துதல் இல்லாத இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சிப்பொறுப்பேற்றார் கடாபி.1979 ஈரானில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

வலிமையான தேசிய சோசலிசம்,காலனியாதிக்கத்திற்கும் முடியரசுகளுக்கும் மாற்றாக அப்போது முகிழ்த்தது.

இந்த வலிமையான தேசிய சோசலிசம் என்பது பொதுத்துறைத் தேசவுடமையாக்கம்,நிலச்சீர்த்திருத்தம்,மையப்படுத்தப்பட்ட ஒற்றைக் கட்சி அதிகாரம் என்பதனை அடிப்படையாகக் கொண்டிருந்தன.இந்த அரசுகள் அனைத்தையும் பனிப்போர் அரசியலின் அடிப்படையில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதனை அடிப்படையில் சோவியத் யூனியன் ஆதரித்தது.வலிமையான மையப்படுத்தப்பட்ட தேசிய அரசுகள் எனும் அடிப்படையில் உள்நாட்டில் இந்த அரசுகள் அனைத்தும் பன்மைத்துவ அரசியல் போக்குகளை மறுத்தன.அரசியல் ஜனநாயகம்,மாற்றுக் கருத்துக்கான சுதந்திரம் என்பது இந்த வகையில் அற்றுப்போனது.பல்கட்சி ஆட்சிக்கான போட்டிகள்,அதனையொட்டிய தேர்தல் முறை என்பன இல்லாத போதில் லிபியாவில் கடாபியின் குடும்ப அதிகாரமும் உறவினர்கள் மற்றும் அவரது இனக்குழும அதிகாரமும் ஏற்படுவது தவிர்க்கவியலாததாக ஆகியது.

கியூபாவின் தேசிய சோசலிசம் மார்க்சியத்தை வழிகாட்டு நெறியாகக் கொண்டிருந்தது.அல்ஜீரியா இஸ்லாமிய அடிப்படைவாதம் தவிர்த்த மதச்சார்பற்ற தேசிய சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.ஈரான் இஸ்லாமிய மதகுருவின் அதிகாரம் கொண்ட இஸ்லாமிய மக்களாட்சியைத் தேர்ந்து கொண்டது.வறிய மக்களின் நலன்பேண் அரசாகவும் சமகாலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத மரபு கொண்டதாகவும் ஈரான் ஆகியது.

லிபியா அன்றைய காலகட்டத்தில் மிகக் கடுமையான ஏகாதிபத்தியமேற்கத்திய எதிர்ப்பு கொண்டதாகவும் உள்நாட்டில் வலிமையான மையப்படுத்தப்பட்ட ஒற்றையதிகார அமைப்பாகவும் இறுகியது.பாலஸ்தீன,வட அயர்லாந்து,கொலம்பிய கெரில்லாக்களை கடாபி ஆயுதம் வழங்கி ஆதரித்தார்.அநேகமாக உலகெங்கிலும் அன்று செயற்பட்டுக்கொண்டிருந்த அனைத்து ஆயுத விடுதலை அமைப்புக்களையும் கடாபி ஆதரித்தார்.காலனிஆதிக்கத்திற்கு எதிராக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முடியாட்சிகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை அவர் காட்டி வந்திருக்கிறார்.

அன்றைய யுகத்தில் கடாபியின் செயல்பாடு நிச்சயமாகவே உலகை முன்னுந்திச் செல்லும் நடவடிக்கை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எனினும் தேசிய சோசலிசம் என்பது ஒரு உள்ளார்ந்த முரணையும் கொண்டிருந்தது.ஜனநாயகம் என்பதனையும் மக்கள் திரளின் பங்கெடுப்பு என்பதனையும் அது தொடர்ந்து மறுத்து வந்தது.வெகுமக்களின் விமோசனம்,மனிதனது விடுதலை என்பது குறித்த தத்துவ அடிப்படையைக் கொண்டிருந்ததால் கியூபா ஒற்றைக் கட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் லிபியாவைப் போன்று இனக்குழும அதிகாரமாக ஒரு வகையிலான மன்னராட்சி அதிகாரமாக அது இறுகிவிடவில்லை.பிடல் காஸ்ட்ரோவின் பின் அவரது வாரிசுகள் கியூபாவில் ஆட்சியில் அமரவில்லை.கியூபப் புரட்சிக்குத் தலைமையேற்ற தளபதிகளில் ஒருவரான ராவுல் காஸ்ட்ரோதான் தலைமையேற்றிருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக பரந்துபட்ட அரபு சோசலிசத்தை வலியுறுத்திய பாத்தியக் கருத்தியலால் ( ஆச்ஞீடஞீடடிண்t ஐஞீஞுணிடூணிஞ்தூ) அரபு ஒற்றுமை மற்றும் சோசலிசம்வழிநடத்தப்பட்ட ஈராக்,சிரியா போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் தமது வாரிசுகளையே அரசின் தலைமைப் பதவிக்கு உரித்தானவர்களாக வளர்த்தார்கள்.கடாபியும் அவரது வாரிசுகளையே லிபியா அதிகாரத்துக்கான முடிமன்னர்களாக ஆக்கி வைத்திருக்கிறார்.

கியூபா ஒருபோதும் தனது இராணுவப்படைகளை மக்களுக்கு எதிராக நிறுத்தவில்லை.என்றாலும் எதிர்வரும் நாட்களில் சோசலிச மறுகட்டமைப்பு எனும் அளவில் ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் இணைப்பதான ஒரு மிகப்பெரும் சவால் கியூபாவுக்குக் காத்திருக்கவே செய்கிறது.

அரபு தேசியத்தைப் பேசிய அனைவரும் குறிப்பாக ஈராக்கின் சதாம் ஹுசைன்,லிபியாவின் கடாபி போன்றவர்கள் இலத்தீன் அமெரிக்கப் புரட்சியாளர்களுடனும் ஆபிரிக்கப் புரட்சியாளர்களுடனும் நல்லுறவையே கொண்டிருந்தார்கள்.ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது தேசிய விடுதலைப் புரட்சியாளர்கள் அனைவரும் சதாம் உசைனையே ஆதரித்தனர்.நிகரகுவாப் புரட்சியாளரான டேனியல் ஒர்ட்டேகா நேரில் பாக்தாத் வந்து சதாமைக் கட்டிப் பிடித்துப் பாராட்டவும் செய்தார்.என்ன விநோதம்!ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி,சதாம் ஹுசைனால் ஒடுக்குமுறைக்குள்ளான அவர்கள் தமது அடிப்படை இருத்தலுக்காகவும் அடிப்படை மனித உரிமைகளுக்காகவும் அப்போது சதாம் ஹுசைனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள்.அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்ட லிபியாவில் கம்யூனிஸ்ட கட்சி என்பது செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை.

லிபியாவின் அரசியல் குணாம்சத்தையும் அதனது ஆட்சியின் தன்மைகளையும் அது இன்று எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகளையும் இந்தப் பின்னணியில் இருந்து புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்வோம்.

1996 ஆம் ஆண்டிலிருந்து லிபிய அதிபர் கடாபியின் பெயரில் வழங்கப்படும் மனித உரிமை விருதுகளை இதுவரை பெற்றவர்களின் பட்டியலில் இருந்து நாம் இதனைத் துவங்குவோம்.தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா,கியூபாவின் பிடல் காஸ்ரோ,நிகரகுவாவின் டேனியல் ஒர்க்டேகா,வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸ் போன்றவர்களோடு பல்வேறு மூன்றாம் உலக சேவை அமைப்புகளும் இந்த விருதுகளைப் பெற்றிருக்கின்றன.

இவர்களோடு ரோஜர் கராடி எனும் முன்னாள் மார்க்சியரும் பின்னாளில் இஸ்லாமுக்கு மதம் மாறியவருமான சிந்தனையாளர் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்.ரோஜர் கராடி ஐம்பதுகளில் யூகோஸ்லாவியா மீதான சோவியத் யூனியனின் படையெடுப்பை அடுத்து பிரேஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறியவர்.இஸ்லாத்தைத் தழுவிய அவர் ஹிட்லர் யூதப் படுகொலை என்பதைச் செய்யவில்லை எனப் பேசுபவராகப் பின்னாளில் பரிமாணம் பெற்றார் என்பது மட்டுமல்ல,ஈரானிய ஆட்சியாளர்களின் விமர்சனமற்ற ஆதரவாளராகவும் அவர் ஆகினார்.

மாவோவின் மேற்கோள்களின் தொகுப்பான சிகப்புப் புத்தகம் போல கடாபியின் அரசியல் தத்துவத்தை விளக்கி கடாபி மூன்று பகுதிகளிலான பச்சைப் புத்தகத்தையும் எழுதினார்.

இவ்வாறு கடாபியின் ஆட்சியதிகாரத்தின் தன்மை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் கடுமையான யூத எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் உள்நாட்டில் 42 ஆண்டுகளாகத் தொடர்ந்து குடும்ப ஆட்சியதிகாரத்தில் இருக்கும் எதேச்சõதிகார இனக்குழும ஆட்சியாகவும் இருந்தது.நான்கு பெரும் இனக் குழுமங்களைக் கொண்ட லிபியாவில் இனக்குழுக்களுக்கிடையிலான போட்டிகளுக்கிடையில் தனது ஆட்சியதிகாரத்தை நிறுவியவராகவும் கடாபி ஆகினார்.

90 சதவீதத்துக்கும் மேலான நிலப்பரப்புப் பாலைவனமாக இருக்க அதனது வளமான எண்ணெயைக் கொண்டு லிபியாவை ஒரு செல்வவளமிக்க நாடாக அவர் ஆக்கினார்.லிபியாவின் இன்றைய சராசரி மனிதனின் வாழ்காலம் 75 வயது என்பதனையும் நாம் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும்.

பின்னாளில் கடாபி எதிர்கொள்ளும் இன்றைய நெருக்கடிகளுக்கான காரணம் என்ன?

இரண்டு உலகப் போர்கள் உலகின் எந்த ஆட்சியாளரையும் பாதித்தது போலவே கடாபியையும் பாதித்தது.அதனைப் பொருட்படுத்தாதற்கான விலையையே அவர் தற்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார்.முதலாவதாக அவர் எந்த மூன்றாம் உலக விடுதலை ஆட்சியாளர்களும் செய்திராத சதாம் ஹுசைன் மட்டுமே செய்த காரியங்களைச் செய்ததன் மூலம் நேரடியான அமெரிக்க மேற்கத்திய இராணுவத் தலையீட்டை அவர் வருவித்துக் கொண்டார்.இரண்டாவதாக சோவியத் யூனியன் வீழ்ச்சியின் படிப்பினைகளை தமது நாட்டில் அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதில் மக்கள் திரளின் குரலுக்குச் செவிசாய்த்தல் என்பதனையும் அவர் பிற மத்திய கிழக்குவட ஆபிரிக்க ஆட்சியாளர்கள் போலவே மறுத்து வந்திருக்கிறார்.

ஜேர்மனி,இங்கிலாந்து போன்ற நாடுகளில் அந்த நாட்டுப் பிரஜைகளின் படுகொலைக்கு அவர் நேரடியான காரணமாக இருந்திருக்கிறார்.ஜேர்மனியில் நடனவிடுதிக் குண்டுவெடிப்பு,பிரித்தானியாவில் காவல்துறைப் பெண்மணியின் கொலை,அமெரிக்காவின் பேனம் விமானத்தை வெடி வைத்துத் தகர்த்தமை போன்றவற்றில் அவரது அரசு நேரடியாகச் சம்பந்தப்பட்டமை ஐயமற நிரூபிக்கப்பட்டதால் அவர் மீதான இராணுவ நெருக்கடியை மேற்குலகும் அமெரிக்காவும் வெளிப்படையாகத் திணித்தன.

குவைத்தின் மீது படையெடுத்த அவமானகரமான சதாம் ஹுசைனின் காரியம் போன்றதாக இது ஆகியது.இதனது தொடர் விளைவாக சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டத்ன்பின் தனது பாரிய அழிவு ஆயுதத் திட்டத்தை கடாபி கைவிட நேர்ந்தது.பானம் விமான வெடிப்புப் பிரச்சினையில் அதில் மரணமுற்றவர்களுக்கு அவர் நஷ்டஈடு வழங்கவும் நேர்ந்தது.விளைவாக டோனி பிளர்,சார்க்கோஸி,பெர்லுஸ்கோனி,ஹிலாரி கிளின்டன் போன்றோர் லிபியாவுக்கு விஜயம் செய்து கடாபியைச் சந்தித்தனர்.பிரித்தானிய,பிரேஞ்சு,இத்தாலிய நிறுவனங்களுக்குத் தனது எண்ணெய் வளத்தைத் திறந்துவிட்டார் கடாபி.

பின்வந்த நாட்களில் உலகின் பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தில் அமெரிக்காவினதும் மேற்கத்திய நாடுகளதும் செல்லப்பிள்ளையாக கடாபி ஆகினார்.அமெரிக்கமேற்கத்திய பொருளாதார வட்டத்தினுள் அதிகார வட்டத்தினுள் இவ்வாறுதான் கடாபி வீழ்ந்தார்.

உள்நாட்டினுள் கடாபிக்கு எதிர்ப்பு திரள்வதற்கான காரணம் என்ன?இந்த எதிர்ப்பின் பின்னணியில் இருக்கும் சக்தி யாவர்?

லிபியாவின் அறுபது இலட்சம் ஜனத்தொகையில் 15 இலட்சம் வரையிலானவர்கள் மாணவர்கள்.ஜனத்தொகையில் 85 சதவீதமானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள்.அவர்களது விழிப்பு நிலைக்கு உகந்ததாக லிபியாவின் அரசியல் அமைப்பு இல்லை.அரசியல் கட்சிகள் லிபியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.தொழிற்சங்க அமைப்பு இல்லை.வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமை எவருக்கும் இல்லை.கடாபியின் அரசியல் தலைமை குறித்து விமர்சனம் செய்வதற்கோ அல்லது மாற்றுத் தலைமை குறித்துச் சிந்திப்பதற்கோ வாய்ப்பு இல்லை.

ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகிறது.லிபியாவின் நான்கு இனக்குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தனது தலைமையின் இருத்தலுக்காகப் பயன்படுத்துவதும் ஒருவரைப் பிறிதொருவருக்கு எதிராக நிறுத்தி மற்றவரை அழித்தொழிப்பதுமே கடாபியின் வழிமுறையாக இருந்து வந்திருக்கிறது.இராணுவத்திலும் கூட தனக்கு விசுவாசமானவர்களையே கடாபி முன்னிறுத்தி வந்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க,மேற்கத்திய நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்ட பின்னால் கடாபியின் ஏழு மகன்களும் ஒரு மகளும் வியாபார ஒப்பந்தங்களின் வழியில் மிகப்பெரும் சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள்.நாட்டின் எண்ணெய் வளத்தில் கால்பகுதி வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு உரிமையாக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் காரணத்தினாலேயே இளைஞர்கள் அதிகமும் கடாபிக்கு கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.இனக்குழுத் தலைவர்கள் பென்காசி நகர் எழுச்சியை உடனடியாக அங்கீகரிக்க அவர்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட அடக்குமுறையே காரணமாக ஆகிறது.இதனோடு நாட்டின் ஜனத்தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையினர் வாழ்கிற திரிபோலியை அடுத்துப் பெரிய நகரான பென்காசியில் இராணுவத்தினர் வெகுமக்களோடு இணைந்து தமது அதிகாரத்தை அங்கு நிலைநாட்டியிருக்கிறார்கள்.

சீனா,இந்தியா,எகிப்து போன்ற நாடுகளின் லிபியத் தூதர்கள் கடாபியை எதிர்த்து பதவி விலிகியிருக்கிறார்கள்.பெப்ரவரி 25 ஆம் திகதி நிலவரங்களின்படி லிபியாவின் பாதி மக்கள் தொகை வாழும் பிரதேசங்கள் கடாபியின் எதிரிகளான கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்திருக்கிறது.திரிபோலியில் மட்டுமே கடாபி தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியிருக்கிறார்.தான் இழந்துவிட்ட நாட்டின் பாதிப்பகுதியை மீளவும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான இராணுவத் தாக்குதலை கடாபி தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.

அவரது தந்திரோபாயங்கள் அவரது குழப்பமான மனநிலைக்குச் சான்றாக இருக்கின்றன.தனக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் எகிப்து,துனீசியா போன்ற நாடுகளின் கிளர்ச்சியாளர்களினதும் சதிதான் காரணம் என ஒரு புறம் சொல்கிறார் கடாபி பிறிதொருபுறம் அல்கைதா பயங்கரவாதிகள்தான் காரணம் எனச் சொல்கிறார்.இளைஞர்களுக்கு போதை மருந்து ஊற்றிக்கொடுத்து அவர்களைக் கலவரத்துக்குத் தூண்டுகிறார்கள் எனச் சொல்கிறார் அவர்.

ஆபிரிக்க நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கூலிப்படையினரைத் தமது சொந்த மக்களைக் கொல்வதற்காக அவர் பாவிக்கிறார். 1969 புரட்சியின் நிரந்தரப் பாதுகாவலராக அதனது உரிமையாளராகக் கருதிக்கொள்ளும் அவர் தான் நாட்டின் ஜனாதிபதி அல்ல.மாறாக புரட்சியின் தலைவன் என்பதன் பெயரால் அந்தப் புரட்சியைப் பாதுகாப்பது தனது கடமை எனச் சொல்கிறார்.புரட்சியைப் பாதுகாப்பது எனும் பெயரிலேயே புரட்சிக்குள் புரட்சியாக எழுந்திருக்கிற மக்கள் எழுச்சியை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துவிடுவதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

அமெரிக்க மேற்கத்திய அரசுகள் மத்திய கிழக்கில் டுனீசியாவில் மக்கள் திரள் எழுச்சி எனும் பெருநெருப்பு எழுந்தபோது முபாரக்,பென்அலி,

கடாபி போன்றவர்கள் குறித்து உடனடியாக அவர்களால் ஒரு நிலைப்பாடு எடுக்கமுடியவில்லை.பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயர் முபாராக் போனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வந்துவிடுவார்கள்.முபாரக் நமது நண்பர் என்றார்.பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி, பென் அலி போனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வந்துவிடுவார்கள்.பென் அலி எமது நண்பர் என்றார்.இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ்கானி கடாபி போய் லிபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாத அரசு வருவதைத் தன்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை என்றார்.கடாபி தமது நண்பர் என்றார்.

வரலாறு இவர்களைத் தாண்டித்தான் பயணம் செய்கிறது.ஈராக்கிலும் துனீசியாவிலும் படையினர் தவிர்க்கவியலாது மக்கள் சார்பாக நின்றனர்.லிபியாவில் படையினர் பிளவுபட்டிருக்கிறார்கள்.எனவே, உள்நாட்டு யுத்தமே சாத்தியமாக இருக்கிறது.

முபாரக்கையும் பென் அலியையும்,கடாபியையும் தம்மால் காப்பாற்ற முடியாது எனும் சூழலில் மக்கள் எழுச்சியை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கும் மத்திய கிழக்கில் தொடர்ந்தும் தமது நலன்களைப் பேணவேண்டுமாயின் இதுதவிர்க்க முடியாதது எனும் நிலைப்பாட்டுக்கும் அமெரிக்கர்களும் மேற்கத்தியர்களும் வந்தார்கள்.

தனது மக்களின் மீதே ஹெலிகொப்டர்களையும் குண்டுவீச்சு விமானங்களையும் பயன்பத்துகிறார் கடாபி என்பதால் உலக நாடுகளின் விமர்சனங்களும் கடாபியின் மீது திரும்பியிருக்கிறது.கடாபி தனது மக்கள் மீதான தமது தாக்குதலை நிறுத்துவார் என்பதற்கான சூழல் இல்லாதபோது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை ஆதரவுடன் ஈராக்கில் செய்ததுபோல முதலில் விமான சஞ்சாரமற்ற வான் வெளியை அமெரிக்காவும் மேற்கத்திய நாட்டுத் தலைவர்களும் லிபியாவின் மீது உருவாக்குவார்கள்.பிற்பாடு நேட்டோ படைகள் அங்கு நிலைகொள்வதற்கான சாத்தியம் இருக்கிறது.மறுபடியும் ஒரு ஈராக்காக லிபியா ஆவதற்கான சாத்தியங்களும் உண்டு.இதனைத்தான் பிடல் காஸ்ட்ரோ எதிர்வு கூறியிருக்கிறார்.

இத்தகைய நேட்டோ தலையீட்டை நாம் கண்டிக்க வேண்டும் எனும் காஸ்ட்ரோ லிபிய மக்களும் கடாபியும் தமக்குள் இணக்கம் காணவேண்டும் என வலிறுத்தியிருக்கிறார்.தமக்கான பொறுப்புகளை கடாபி தட்டிக் கழித்துவிட முடியாது எனவும் காஸ்ட்ரோ தெரிவித்திருக்கிறார்.

இந்த நெருக்கடியான சூழலில்,பிரித்தானிய அரசு படுகேவலமாகத் தனது காய்களை நகர்த்தியிருக்கிறது.பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் கடாபி வெனிசூலாவுக்கு ஓடிவிட்டதான ஒரு பரப்புரையை கட்டவிழ்த்துவிட்டார்.கடாபி இதனை மறுத்தது ஒரு புறமிருக்க வதந்தியை மறுத்திருக்கும் வெனிசூலா வெளியுறவுத்துறையமைச்சர் லிபிய மக்கள் இந்தப் பிரச்சினையில் இறுதித் தீர்ப்பு வழங்குபவர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.காஸ்ட்ரோவும் சரி வெனிசுலா அரசும் சரி,கடாபியை ஆதரிப்பது எனும் நிலைப்பாட்டுக்கு அவர்கள் செல்லவில்லை.கடாபி மக்களது குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவே அவர்கள் சொல்கிறார்கள்.கடாபி இதனைச் செவிமடுப்பார்கள் எனத் தோன்றவில்லை.விளைவாக இந்தியா,இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் தமது பிரஜைகளை லிபியாவிலிருந்து தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன.கடாபி தனது மக்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=9250:2011-03-10-23-48-12&catid=72:article&Itemid=100

  • தொடங்கியவர்

கடாபியும் ராஜபக்சேயும்

லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள், ‘புரட்சி’ செய்து வருகிறார்கள். எதிர்ப்புக்கு அமெரிக்காவும் பின்புலமாக இருப்பதால் அய்.நா.வும், லிபியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அய்.நா. மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றிருந்த லிபியா, அதிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. அய்ரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு விரைவில் லிபியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஆலோசனை நடத்தி வருகிறது. லிபியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான விசாரணை நடத்திட அய்.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது. அப்பாவி மக்களைப் படுகொலை செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அறிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அய்.நா.வின் தலைமையகமான ஜெனிவாவுக்கு சென்று, அங்கே மனித உரிமைக் குழு கூட்டத்துக்கு வரும் பல்வேறு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து லிபியாவுக்கு எதிராக கருத்துகளை விவாதித்துள்ளார்.

அமெரிக்காவின் போர்க் கப்பலும் விரைந்துள்ளது. அய்க்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்டப் பிரிவின் நல்லெண்ணத் தூதராக இடம் பெற்றிருந்த கடாபி தனது மகள் ஆயிஷாவை நியமித்திருந்தார். அவரையும் அப்பதவியிலிருந்து அய்.நா. நீக்கியுள்ளது. இதேபோல் தமிழ் ஈழத்தில் தமிழர்கள் மீது இலங்கை அரசு இனப்படுகொலைகளை நடத்தியபோது, அய்.நா.வும், சர்வதேச நாடுகளும் இனப் படுகொலைக்கு எதிராக அதை தடுத்து நிறுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை. இந்தியாவே தமிழர்களுக்கு எதிராக போரை நடத்தியதால் உலக நாடுகள் ஒதுங்கிக் கொண்டன. ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான அரசியல் அமைப்புகள் ஈழத் தமிழர்களிடம் இல்லாமல் போனதும் ஒரு காரணம் தான். புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்திய உறுதியான போராட்டங்கள் எந்த அசைவையும் உருவாக்க முடியாமலே போய் விட்டது.

லிபியாவின் அதிபர் கடாபியும் போர்க் குற்றவாளி ராஜபக்சேவுக்கும் நெருங்கிய குடும்ப உறவுகள் உண்டு. ஈழத் தமிழர்கள் மீது இனப் படுகொலைகளை ராஜபக்சே கட்டவிழ்த்துக் கொண்டிருந்தபோதே, கடாபியுடன் நெருக்கமாக இருந்தவர் ராஜபக்சே. இப்போது லிபியாவில் மக்கள் நடத்தும் போராட்டத்தை எதிர்த்து கடாபிக்கு ஆதரவாக இலங்கை பேரினவாத ஆட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ராஜபக்சே கடாபி குடும்ப உறவுகளுக்கு இணைப்பு சங்கிலியாக இருப்பர் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பெரும்புள்ளி என்று ‘ஏர் லங்கா நியூஸ்’ இணையதளம் கூறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கை அரசு மேற்கொள்ளும் வர்த்தக உடன்படிக்கைகள் இவர் வழியாகவே நடப்பதாகவும், ராஜபக்சேயின் ஆதரவு கடிதத்தை, கடாபியிடம் கொண்டு போய் சேர்த்தது, இந்த நபர்தான் என்றும், அந்த இணைய தளம் கூறுகிறது. கடாபி நாட்டை விட்டு வெளியேறும்போது அவருக்கு புகலிடம் அளிக்க இலங்கை தயாராக உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13524:2011-03-11-10-43-27&catid=1264:2011&Itemid=524

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.