Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா நிறுவனத்திற்கு காலிமுகத்திடலில் நிலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mar 13, 2011 / பகுதி: செய்தி /

சீனா நிறுவனத்திற்கு காலிமுகத்திடலில் நிலம்!

காலிமுகத்திடலில் உள்ள நிலத்தை கொள்வனவு செய்ய முன்வந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் போரின் போது சிறீலங்காவுக்கு தாக்குதல் விமானங்களை வழங்கிய சீன விமான உற்பத்தி நிறுவனமும் அடங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சிறீலங்கா அரசு அபிவிருத்தி என்ற போர்வையில் தனது நிலங்களை விற்பனை செய்து வருகின்றது.

காலிமுகத்திடலில் இருந்த சிறீலங்கா இராணுவத்தின் தலைமையகத்தை அகற்றிய சிறீலங்கா அரசு அதனை ஆடம்பர விடுதிகளை அமைப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யது வருகின்றது. அந்த பிரதேசத்தில் ஐந்து நட்சத்திர விடுதிகளை அமைப்பதற்காக தமது விண்ணப்பங்களை வழங்கிய நிறுவனங்களில் சீன நிறுவனம் இரண்டாது இடத்தில் உள்ளது. சீனாவை சேர்ந்த சீன தேசிய வான் தொழில்நுட்ப இறக்குமதி – ஏற்றுமதி நிவனமே 125 மில்லியன் டொலர்களை வழங்கி காலிமுகத்திடலின் ஒரு பகுதி நிலத்தை கொள்வனவு செய்துள்ளது.

காலிமுகத்திடலில் மூன்று ஆடம்பர விடுதிகளை அமைப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் பெறப்படும் 325 மில்லியன் டொலர்களைக் கொண்டு (3.8 பில்லியன் ரூபாய்கள்) மிகவும் நவீன முறையில் முப்படையினரினதும் தலைமையகங்களை அமைக்கத் திட்டமிடுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

வன்னியில் போர் நடைபெற்றபோது இந்த நிறுவனமே சிறீலங்கா அரசுக்கு தாக்குதல் விமானங்களையும், போக்குவரத்து விமானங்களையும், அதற்கான ஆயுதங்களையும், தொழில்நுட்பவியலாளர்களையும், ராடார்களையும் வழங்கியிருந்தது.

இதனிடையே, போரின்போது சிறீலங்கா அரசினால் இந்த நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களுக்கான பணம் இன்றுவரை செலுத்தப்படவில்லை எனவும், அதற்காகவே காலிமுகத்திடல் நிலத்தை சிறீலங்கா அரசு குறிப்பிட்ட நிறுனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

pathivu

சீனாவிடம் வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கு இன்னும் பணம் செலுத்த வேண்டியுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது சீன நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களுக்கும் வெடிப்பொருட்களுக்கும்  இலங்கை இன்னும் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் காலிமுகத்திடல் பகுதியில் நட்சத்திர ஹோட்டலொன்றை அமைப்பதற்கு சீன விமானத் தயாரிப்பு நிறுவனமான சைனா நெஷனல் ஏரோ டெக்னோலஜி இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் இற்கு காணி வழங்குவது மேற்படி கொடுப்பனவு நிலுவைக்காகவே என்ற செய்திகளை பாதுகாப்புச் செயலாளர் மறுத்துள்ளார்.

இக்காணிக்காக நிறுவனம் மேற்படி காணிக்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை (137 கோடி பில்லியன் இலங்கை ரூபா) உடனடி பணமாக வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18002-q-q.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலிமுகத்திடல் காணி விற்பனைக்குக் காரணம் அதுவல்ல – கோத்தபாய விளக்கம்!

Posted by admin On March 14th, 2011 at 3:03 am

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது சீன நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களுக்கு இன்னம் செலுத்தப்பட வேண்டிய நிலுவைப் பணத்தை செலுத்துவதற்காகவே சீன நிறுவனங்களுக்கு காலி முகத்திடலில் நட்சத்திரக் ஹோட்டல் அமைப்பதற்கு அரசு காணி வழங்குகிறது என்று வெளியான செய்திகளைப் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

யுத்தத்தின்போது சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களுக்கான நிலுவைப் பணம் இன்னும் செலுத்த வேண்டியுள்ளது என்று உள்நாட்டு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையால் காலி முகத்திடல் காணி விற்பனை மூலம் பெறப்படும் பணத்தை ஆயுதங்கள், வெடிபொருட்கள் கொள்வனவு செய்தமைக்காகச் செலுத்த வேண்டிய நிலுவைப் பணத்தைச் செலுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வெளியான செய்திக்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ வழங்கிய பேட்டியில் தெரிவித்தவை வருமாறு:-

காலி முகத்திடலில் சூழவுள்ள இராணுவத் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு, ஆகியன இடமாற்றம் செய்யப்படவுள்ளன. அந்தப்பகுதியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கு மூன்று நிறுவனங்களுக்கு காலிமுகத்திடல் பகுதியில் காணி வழங்கப்படவுள்ளது.

ஷசைனா நெஷனல் ஏரோ டெக்னோலஜி இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் என்ற சீன விமான தயாரிப்பு நிறுவனமொன்றும் மேற்படி கூறப்பட்ட ஹோட்டல் அமைப்பதற்கு உரிமை பெறவுள்ள மூன்று நிறுவனங்களில் ஒன்றாகும்.

உல்லாச ஹோட்டல், பல் செயற்பாட்டுக் கட்டடம் மற்றும் கடைத் தொகுதிக் கட்டடம் ஆகியன அமைப்பதற்கான காலி துறைமுத்திடல் பகுதியில் 6 ஏக்கர் காணி விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, மேற்படி சீனா விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு காணி வழங்கப்படவுள்ளது. இதற்கு அருகில் ஷங்ரி லா ஹோட்டல் நிறுவனம் 6 ஏக்கர் காணியில் ஹோட்டல் அமைக்கவுள்ளது.

ஷசைனா நெஷனல் ஏரோ டெக்னோலஜி இம்போர்ட் அன்ட எக்ஸ்போர்ட்| நிறுவனம் இக்காணிக்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. இந்த நிறுவனம் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட பிரதான அரங்கான பறவைக்கூடு அரங்கிற்கு அண்மையில் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறது.

காலி முகத்திடல் பகுதியில் இராணுவத் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு ஆகியன அமைந்துள்ள காணியில் மூன்று ஹோட்டல்கள் அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இக்காணி விற்பனை மூலம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் மூன்றாவது ஹோட்டலை அமைக்கவுள்ள நிறுவனம் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை.

காணி விற்பனை மூலம் திரட்டப்படவுள்ள நிதியில் பெரும்பகுதி மத்தேகொடவில் அமைக்கப்படவுள்ள முப்படைகளின் தலைமையக கட்டடங்களின் நிர்மாணத்திற்கு செலவிடப்படும். படைத் தலைமையகங்களை மத்தேகொடவிற்கு இடமாற்றும் யோசனையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் பதவிக் காலத்தில் நாடாளுமன்றத்தை ஸ்ரீ ஜயவர்த்தனபுரவிற்கு மாற்றிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது ‘சைனா நெஷனல் ஏரோ டெக்னோலஜி இம்போர் என்ட எக்ஸ்போர்ட்’ நிறுவனத்தினரிடம் இருந்து போக்குவரத்து மற்றும் போர் விமானங்களை அரசு கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.