Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சதீவு அந்தோனியார் திருவிழா 19, 20 திகதிகளில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு அந்தோனியார் திருவிழா 19, 20 திகதிகளில்!

Posted by admin On March 14th, 2011 at 2:51 am /

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இம்மாதம் 19ஆம், 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஊடாக பக்தர்கள் கச்சதீவுக்கு செல்லவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். மறை மாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் இத்திருவிழா நடைபெறவுள்ளது. இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவிலுள்ள அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இந்திய, இலங்கை பக்தர்கள் கலந்துகொள்கின்றமை வழமையானது.

இவ்வருடமும் திருவிழாவை விமர்சையாகக் கொண்டாடுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

saritham.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு உற்சவத்துக்கு தமிழக குருமார் 65 பேர்:25 அருட் சகோதரிகளும் பங்கேற்கின்றனர்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று ஆரம்பமாகவிருக்கும் வருடாந்த உற்சவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 65 குருமாரும் 25 அருட்சகோதரிகளும் பங்கேற்கவிருக்கின்றனர்.ஆலயத்தில் நேற்று சிலுவைப் பாதையும் திருப்பலிப் பூசையும் இடம்பெற்றன. நெடுந்தீவில் இருந்து சென்ற குருமார் இந்த நிகழ்வை நிறைவேற்றி வைத்தனர்.

பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக நெடுந்தீவுத்துறைக்கு வந்த போதும், அவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இன்று காலை முதலே பொதுமக்கள் செல்ல முடியும் எனப் படையினர் தெரிவித்தனர்.

கடற்கொந்தளிப்பு காரணமாக ஆலயத்துக்குச் சமீபமாக படகுகள் செல்லமுடியாத நிலை காணப்படுவதால், 50 அடி நீளமான தற்காலிக பாலம் ஒன்றைக் கடற்படையினர் அமைத்துள்ளனர். 300க்கு மேற்பட்ட கடற்படையினர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களின் வசதிக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு உதவி அரச அதிபர் பணிமனை, நெடுந்தீவு பிரதேச சபை, நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்கக்கிளை ஆகியவற்றின் தற்காலிகக் பணிமனைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

குடிதண்ணீர், சுகாதார வசதிகள் உரிய முறையில் செய்ப்பட்டுள்ளதாக நெடுந்தீவுப் பிரதேச சபையின் செயலாளர் க. தம்பிராசா தெரிவித்தார்.இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் ஆலயத்தை வந்தடைவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

uthayan.

இந்த முறையும் சீன கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவர்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Saturday, March 19th, 2011 | Posted by thaynilam

கச்சதீவில் கடற்படையினருடன் ஈ.பி.டி.பியினரும் பொதுமக்களை சோதனை

கச்சதீவிற்கு செல்லும் மக்களை நெடுந்தீவு இறங்குதுறை மற்றும் குறிக்கட்டுவான் இறங்குதுறை ஆகியவற்றில் வைத்து கடற்படையினருடன் ஈ.பி.டி.பியினரும் பொதுமக்களை சோதனையிட்டு வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று கச்சதீவில் படகுகளில் சென்று இறங்கும் தமிழக மக்களையும் அங்குவைத்து ஈ.பி.டி.பியினரும் சிறிலங்கா கடற்படையினரும் சோதனையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முதலே அங்கு ஈ.பி.டி.பி குழுவினர் அங்கு சென்று தாங்கள் தங்கியிருப்பதற்காக தற்காலிக கொட்டில்களை அமைத்ததுடன் அங்கு வரும் மக்களை சோதனையிடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பொறுப்பாளர் றெக்சியன் தலைமையிலான குழுவினரே அங்கு சென்றுள்ளனர். கச்சதீவு ஆலய உற்சவத்தில் ஈ.பி.டி.பியின் பிரசன்னம் அங்கு செல்லும் மக்களின் அமைதியை குலைக்கும் நடவடிக்கை என தீவுப்பகுதியைச்சேர்ந்த கத்தோலிக்க பங்குத்தந்தை ஒருவர் தெரிவித்தார்.

நெடுந்தீவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈ.பி.டி.பி குழுவினர் தற்போது கச்சதீவையையும் ஆக்கிரமித்திருப்பது குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3896

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.