Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியீடு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Friday, 25 March 2011 00:46

புலிகளின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியீடு?

ஆயுதங்களை மௌனித்து விட்டதாக விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாகவும் நாடு கடந்த அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களிற்கு விடுத்த அறிவிப்பை திசை திருப்புமுகமாகவும் இன்று அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் சிறீலங்காப் படைகளின் வேறு வேறு படைப்பிரிவுகளின் உயரதிகாரிகள் ஐந்து பேர் பலியாகியுள்ளது போன்றும் சங்கிலியன் படையணி இதற்கு உரிமை கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில்,

இந்தச் செய்தியை இன்னமும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை எனத் தெரிவித்த கொழும்புத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இந்தச் செய்தி யாரோ ஒருவரால் ஏதோ ஒரு விடயத்தைத் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே விடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று ஹேஸ்யம் கூறினார்.

இராணுவத்தின் வேறு வேறு படைப்பிரிவுகள் ஒன்றாக செல்வது போர்க்காலத்தைத் தவிர்ந்த நிலையில் மிகவும் அரிது என்றும் அவர்கள் தமது படைகளிற்கான பிராந்தியத்திலேயே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வன்னியிலுள்ள 59வது படையணி, கொழும்பிலுள்ள 1வது சிறப்புப் படையணி போன்றன ஒன்றிணைந்து ஹபரணைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லையெனவும், ஹபரணை இப்போது உல்லாசப் பயணிகளின் புரியாக மாறி விட்டதாகவும் அங்கே கொட்டேல்கள் எடுப்பதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்ததார்.

அத்தோடு இராணுவத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் இவ்வாறு ஒன்றாகப் பயணம் செய்வது என்பது நம்பும்படியாக இல்லையெனவும், அவர்கள் விரும்பாவிட்டால் கூட அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களுடனே அவர்கள் பயணம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்த மேற்படி ஊடகவியலாளர் இந்த ஒரு உண்மையே இச் செய்தி பொய்யென்பதை நிரூபிக்கும் எனத் தெரிவித்தார்.

அனுராதபுரத்திலிருந்து திருமலைக்கு செல்லும் வீதியில் திருக்கொண்டையாமடு வீதிக்கும், குருநாகல-திருமலைப் பெருந்தெருவுக்கும் அண்மையாக அமைந்துள்ள ஹபரணைக்கு இன்று வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சிறப்புப் படையணிகளும் சென்றிருக்க சந்தர்ப்பமே இல்லையென்று அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு விடுத்த செய்தி மிகவும் தாக்கமுள்ளதாயும், உண்மைநிலையை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்த காரணத்தால் அவரின் அறிக்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்களை திசை திருப்ப இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sankathi

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ஒரே கல்லில் பல மாங்காய் பறிக்க நினைக்கிறான்.

இந்தச் செய்தியை வெளியிடுவதன் மூலம்...

* பொன்சேகாவுக்கு விசுவாசமான இராணுவ வீரர்களை போர்குற்றவாளிகளை போட்டுத்தள்ளப் போறான். போட்டிட்டு தான் தப்பிக்கப் பார்க்கிறான்.!!

* அவசரகால சட்டத்தை நீட்டிக்க வசதி செய்கிறான்.இதன் மூலம் எதிர் கட்சிகளை நசுக்கி தங்களின் குடும்ப ஆட்சியை தொடருவான்.

* சரணடைந்த போராளிகளின் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை இல்லாமல் செய்யப் போறான். தொடர்ந்து அவர்களை கொஞ்சம் கொஞ்சமா படுகொலை செய்வான்.

* வடக்கு கிழக்கு எங்கும் இல்லாத சங்கிலியன் படையை காட்டி இராணுவத்தை தொடர்ந்து இருத்தி ஆக்கிரமிப்பை உறுதி செய்வான். சிங்கள குடியேற்றங்களை விரிவாக்குவான்.

* சிறீலங்காவில் தமிழர் பதிவை நியாயப்படுத்துவான்.

* புலம்பெயர் தமிழர்களின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டுகிறது என்று ஒரு கதையை கட்டி மீண்டும் பயங்கரவாத முலாம் பூசி புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளை பயங்கரவாதமாக இனங்காட்டி அவற்றை தடுக்க்க மேற்குலகை நிற்பந்திப்பான். இப்படியாக அவனுக்கு பல மாங்காய்கள் கிடைக்கும்.

Edited by nedukkalapoovan

கொல்லப்பட்டவர்களின் விபரங்கள்

1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே

1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலகே

சிறப்புப்படைஅணியின் கோல்ப் கெம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்தகுணசேகரா

“ரோமியோ” கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் கவிந்த அபயசேகரா

“எக்கோ” படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசல விஜயக்கோன்

அவளவு ஆக்களும்..பொன்சேகா விசுவாசிகள்..:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.