Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் பாதையில் செல்கிறதா அசாம் விடுதலை இயக்கம்?

Featured Replies

[ புதன்கிழமை, 30 மார்ச் 2011, 09:54 GMT ] [ தி.வண்ணமதி ]

'உல்பா' அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பின்பற்றியே செயலாற்றுகிறார் என்பதைக் காட்டும் வகையில் அண்மையில்கூட ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. உல்பா அமைப்பில் அதிக விசுவாசம் கொண்ட தளபதிகளுடன் அதன் தலைவர் பரேஸ் பறுவா காணப்படும் ஒளிப்படங்களும் காணொலிகளும் வெளிவந்திருக்கின்றன.

இவ்வாறு அசாமை தளமாகக் கொண்ட 'Times of Assam' என்னும் ஆங்கில இணைய ஊடகத்தில் வெளிவந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்றும் நம்பவேண்டிய நிலைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் தள்ளப்பட்டபோது தங்களது தவறான முடிவுகளாலேயே அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டது எனக்கூறி அசாம் பிராந்தியத்தின் நாளிதழ் ஒன்று பத்தியொன்றை வெளியிட்டிருந்தது.

அந்தப் பத்தியை எழுதியவர் வேறு யாருமல்ல,' உல்பா' [united Liberation Front of Asom - ULFA] இயக்கத்தின் தலைவர் பரேஸ் பறுவா [Paresh Baruah] தான். படைத்துறைசார் நுட்பங்கள் தொடர்பாக தனக்கு அதிகம் தெரியும் எனக் கூறும் வகையில் உல்பா அமைப்பின் தலைவர் இந்தப் பத்தியினை எழுதியிருந்தார்.

இன்றுள்ள நிலைமைகளின் அடிப்படையில் அவதானிக்கும்போது விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளினால் அதிகம் கவரப்பட்ட இந்தத் தலைவர், புலிகளமைப்பு சாதித்தது எவையோ அவற்றில் ஒன்றிலேனும் இவர் வெற்றிபெறவில்லை என்பது தெளிவு.

பல ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை கரும்புலி அணியினை உருவாக்கியபோது அந்த அணிக்கான உறுப்பினர்களில் பெயர் விபரங்களில் முதலாவதாக பிரபாகரனின் பெயரும் இரண்டாவதாக அவரது மகளது பெயரும் பதியப்பட்டதாம்.

தமிழ்த் தேசத்தினைக் கட்டியெழுப்புவதற்கான இந்தப் போராட்டத்தில் தன்னையும் தனது மகளையும் தியாகம் செய்வதற்கு தங்கள் தலைவர் பிரபாகரன் தயாராக இருக்கிறார் என்பதை அறிந்த அந்த அமைப்பின் நூற்றுக்கணக்காண போராளிகள் கரும்புலி அணியின் பால் கவரப்பட்டார்களாம். இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலி அணி நாளுக்கு நாள் பெரிதாகியதாம்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலி அணியின் வினைத்திறனைக் கண்டு கவரப்பட்ட உல்பா அமைப்பின் தலைவரும் தனதமைப்பின் மத்தியில் இதுபோன்றதொரு கட்டமைப்பினை உருவாக்குவதற்கு முனைந்தார். இருப்பினும் தன்னையோ அல்லது தனது குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களையோ இந்த அணியுடன் இணைத்துக்கொள்ளும் அளவுக்குத் துணிவு இவரிடம் இருக்கவில்லை.

ஆனால் உல்பா தீவிரவாத அமைப்பின் 28வது பற்றாலியனின் தளபதி ரபான் பறுவா [Tapan Baruah] தன்னையும் இந்தத் தற்கொலைத்தாக்குதல் அணியுடன் இணைத்துக்கொண்டார். எவ்வாறிருப்பினும் 2002ம் ஆண்டு இடம்பெற்ற சதியொன்றின்போது இந்தத் தளபதி மரணமடைந்த நிலையில் தற்கொலைத் தாக்குதல் அணியினை உருவாக்கும் உல்பாவின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

அண்மைக் காலமாக பிரபாகரனது பாதையெதுவோ அதனை அடியொற்றியே உல்பாவின் பரேஸ் பறுவா செயற்பட்டுவருவதாகக் தெரிகிறது. அதாவது உல்பா அமைப்பின் முதன்மைப் பொறுப்புகளுக்குத் தனது பிள்ளைகளை அவர் நியமித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் வான் அணிக்குப் பொறுப்பாக தனது மகனை நியமிப்பதற்கு ஏதுவாக அமெரிக்காவிடமிருந்து வான்பொறியியல் கல்வியினை பெறுவதற்கு பிரபாகரன் வழிசெய்திருந்தார். அதேபோலவே உல்பா அமைப்பின் தலைவர் பரேஸ் பறுவா தனது மகன் அங்குர் கான் சங்லீ [Ankur Khan Sunglee] என்பவரை அருணுதோய் டொகோற்றியா [Arunudoy Dohotiya] என்ற புனைபெயரில் அமைப்பினது பரப்புரைப் பிரிவுக்குப் பொறுப்பாக நியமித்திருக்கிறார்.

ஆனால் இங்கு பிரபாகரனது செயற்பாட்டுக்கும் உல்பா அமைப்பின் செயற்பாடுகளுக்கும் பெரும் வித்தியாசத்தினை அவதானிக்க முடிகிறது. அடிப்படைப் பயிற்சியினை முடித்துக்கொண்ட பிரபாகரனது மகன் தனது திறமைகளின் காரணமாகவே அமைப்பின் மத்தியில் வேகமாக வளர்ச்சியினைக் கண்டிருந்தார்.

எந்த விதமான கள அனுபவமோ அன்றி போதிய பயிற்சிகளோ இல்லாத தனது மகனுக்கு உல்பா அமைப்பின் தலைவர் இரண்டாம் லெப்டினன் தர நிலையினை வழங்கியிருப்பதோடு திடீரெனத் தனது மகனை அமைப்பின் பரப்புரைப் பிரிவுக்கு பொறுப்பாகவும் நியமித்திருக்கிறார்.

உல்பா அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பின்பற்றியே செயலாற்றுகிறார் என்பதைக் காட்டும் வகையில் அண்மையில்கூட ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. உல்பா அமைப்பில் அதிக விசுவாசம் கொண்ட தளபதிகளுடன் அதன் தலைவர் பரேஸ் பறுவா காணப்படும் ஒளிப்படங்களும் காணொலிகளும் வெளிவந்திருக்கின்றன.

மக்கள் மத்தியில் வெளியே தோற்றாமல் இருந்த பிரபாகரன் மக்களின் மத்தியில் நல்லதொரு பெயரெடுக்கும் வகையில் தனது ஒளிப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தார். புதிர் நிறைந்ததொரு மனிதர் எனத் தனக்கிருக்கும் பெயரை மாற்றும் வகையில் உல்பா அமைப்பின் தலைவரும் தனது ஒளிப்படங்களை வெளியிடுகிறார் என்றே கூறவேண்டும்.

உல்பா அமைப்பின் மத்தியில் இரண்டாம் லெப்டினன் என்பது இந்திய இராணுவத்தின் சப் லெப்டினன் என்ற நிலைக்குச் சமனானதாகும். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக வழங்கப்படும். குறித்த ஒருவர் அமைப்பின் மத்தியில் இந்த நிலையினை அடையவேண்டுமெனில் போராளிகள் பல ஆண்டுகாலப் பயிற்சியினையும் படைத்துறை அனுபவத்தினையும் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இதுபோன்ற வரலாற்றினைக் கொண்ட உல்பா அமைப்பினது தலைவர் தனது மகனுக்கு இரண்டாம் லெப்டினன் என்ற நிலையினை வழங்கியிருக்கிறார். அங்குர் எனப்படும் அருணுதோய் டொகோற்றியா என்ற இவர் உல்பா அமைப்பின் தலைவர் என்ற ஒரே காரணத்திற்காகவே அவருக்கு இந்தப் பதவிநிலை வழங்கப்பட்டிருக்கிறது.

படைத்துறைசார் நடவடிக்கைகள் தொடர்பாகவோ அல்லது மக்கள் உறவுகள் தொடர்பாகவோ அசாம் தொடர்பாகவோ போதிய அறிவுகள் அதுவுமற்ற இவர், அமைப்பின் பரப்புரைப் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு அனுப்புகின்ற அந்த அமைப்பின் ஊடக அறிக்கையினைப் பொறுத்தவரையில் அவை முதிர்ச்சியற்ற தன்மையினைக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

எல்லாவற்றையும் விட மேலாக அசாம் பிராந்தியத்தின் மக்கள் மத்தியில் அதிக நன்மதிப்பினை பெற்ற கல்விமானாகிய கலாநிதி கைரென் கொகெயின் [Dr Hiren Gohain] என்பவருடன் அச்சு ஊடகங்கள் வாயிலாக முதிர்ச்சியற்ற வகையில் சொற்போரில் உல்பாவின் புதிய பரப்புரைப் பொறுப்பாளர் ஈடுபட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரகனது பாதையொதுவோ அதனையோ தானும் பின்பற்ற முனையும் உல்பா இயக்கத்தின் தலைவர் பரேஸ் பறுவா ஒரு துணிகரமான போர் வீரனுமில்லை, சுயநலமற்ற புரட்சியாளனுமில்லை என்பதுதான் உண்மை.

உல்பா அமைப்பின் தலைவர் அமைப்பின் மத்தியில் தற்கொலை அணியினை உருவாக்கியிருந்தபோதும் தன்னையோ அல்லது தனது குடும்ப உறவுகளையோ அதில் இணைப்பதற்கு மறுத்துவிடார். பின்களத்திலிருந்தே போரைத் தான் வழிநடாத்துவேன் என்றும் களமுனையில் இருந்து போரைத் தான் வழிநடாத்தப்போவதில்லை என்றும் காட்டும் வகையிலேயே உல்பா அமைப்பின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.

ஏனையவர்களைப் பயன்படுத்தி தனக்கு ஆதாயம்தேட முற்படுபவர்தான் அமைப்பின் தலைவர் பரேஸ் பறுவா. இந்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடுவதன் ஊடாக உருப்படியானதொரு தீர்வினைப் பெறுவதுதான் ஒரேவழி என அமைப்பின் பெரும்பான்மையானவர்கள் கூறுகின்றபோதும் ஆயுதவழிப் போராட்டங்கள் மாத்திரம் தங்களது இலட்சியத்தினை அடைவதற்கான மார்க்கம் என பரேஸ் பறுவா உறுதியாகக் கூறுகிறார். மகனுக்கும் அதிகாரங்களை வழங்கியதன் மூலம் தன்னைச் சுற்றி நம்பிக்கையானதொரு தளத்தினை ஏற்படுத்துவதற்கு அவர் முனைகிறார்.

தங்களது தாயகமாம் அசாமுக்காக உல்பா அமைப்பின் தலைவர் பரேஸ் பறுவா போராடவில்லை, மாறாக தனது நலன்களை முன்நிறுத்தியே செயலாற்றுகிறார் என்பதை இந்தச் சம்பவங்கள் தெளிவுடன் எடுத்துக்காட்டுகின்றன

http://www.puthinappalakai.com/view.php?20110330103500

thuuuuuuuuuuuuuuuuuuuu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.