Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி ஆசிரியர் கைது

Featured Replies

கைது செய்யப்பட்ட பென்னட் ரூபசிங்க

இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் இணைய தளம் ஒன்றின் ஆசிரியர், மிரட்டல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

லங்கா ஈ நியூஸ் என்னும் செய்தி இணைய தளத்தின் செய்தி ஆசிரியரான பென்னட் ரூபசிங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இந்த இணைய தள அலுவலகம் முன்னர் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரின் தமயனை பென்னட் ரூபசிங்க தொலைபேசியில் மிரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்டு செயற்படுகின்ற எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பைச் சேர்ந்த கில்ஸ் லோர்டட் அவர்கள் இந்த கைதைக் கண்டித்துள்ளார்.

அந்தச் செய்தி ஊடகத்துக்கு எதிரான தொடர்ச்சியான தொல்லைகளின் ஒரு பகுதியாகவே இதனை தான் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

''அந்த இணைய தளம் தனது பணிகளைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்கு அந்த உரிமை இருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை சர்வதேச நியமங்களுக்கு இசைவாக செயற்படுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறோம்'' என்று கில்ஸ் லோர்டட் கூறியுள்ளார்.

இந்த ஊடகத்தில் பணியாற்றிய கேலிச்சித்திர செய்தியாளரான பிரகீத் எக்னலிகொட ஒருவருடத்துக்கு முன்னதாக காணாமல் போனார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

bbc tamil

  • கருத்துக்கள உறவுகள்

லங்கா ஈ நியூஸ் ஆசிரியருக்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Posted by admin2 On March 31st, 2011 at 10:24 pm /

வெல்லம்பிட்டிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட லங்கா ஈநியூஸ் ஆசிரியரை ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஜயகீ டி அல்விஸ் பொலிசாருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

லங்கா ஈநியூஸ் இணைய தளத்தின் ஆசிரியரான பென்னட் ரூபசிங்க சுதத் ஜயலத் என்பவரை தொலைபேசி மூலமாக அச்சுறுத்தினார் என்பதற்காக பொலிசார் கைது செய்திருந்தனர்.

லங்கா ஈநியூஸ் அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூத்தயா என்ற சந்தேக நபருடைய சகோதரனையே பென்னட் ரூபசிங்க தொலைபேசி மூலமாக அச்சுறுத்தினார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் பூத்தயாவின் சகோதரரான சுதத் ஜயலத்தைக் கடந்த 11 ஆம் திகதி ஆயுதக்குழு ஒன்றை ஏவிவிட்டு ஆயுத முனையில் அச்சுறுத்தியதாகவும், லங்கா ஈநியூஸ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான முக்கிய தகவல்களைப் பொலிசாருக்குத் தெரிவிக்காமல் மறைத்திருந்தார் என்றும் லங்கா ஈநியூஸ் ஆசிரியர் பென்னட் ரூபசிங்க மீது பொலிசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பென்னட் ரூபசிங்க மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்காக வருமாறு பொலிசார் அழைப்பு விடுத்திருந்ததையடுத்து, அவர் அங்கு சென்றபோதே அவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

லங்கா ஈநியூஸ் ஆசிரியர்கைது செய்யப்பட்டுள்ளதை ஆர்எஸ்எவ் மற்றும் சிபிஜே ஆகிய சர்வதேச ஊடக நிறுவனங்கள் கண்டித்துள்ளதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பகிரங்க அறிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

லங்கா ஈநியூஸ் இணைய தளம் தொடர்ச்சியாக இனந்தெரியாதவர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அதன் கேலிச்சித்திர செய்தியாளராகிய பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் ஒரு வருடத்திற்கும் மேலாகின்றது.

saritham.com

லங்கா ஈநியூஸ் இணையதளத்தின் பிரதம ஆசிரியராகிய சந்தருவன் சேனாதீர மற்றும் அதன் முக்கிய செய்தியாளர்கள் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.