Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன நெருக்கடிக்கு தீர்வுகாண்பதை அரசு இனிமேலும் இழுத்தடிக்கக்கூடாது

Featured Replies

இன நெருக்கடிக்கு தீர்வுகாண்பதை அரசு இனிமேலும் இழுத்தடிக்கக்கூடாது ரணில் வலியுறுத்தல்

இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசாங்கம் தீர்மானமொன்றிற்கு வரவேண்டுமென வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இதனை மேலும் இழுத்தடிக்க முடியாதெனக் கூறியுள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் பசறை பிரதேச சபையை ஐ.தே.க. கைப்பற்றியுள்ளது. அச்சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண, பதவியேற்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை பசறையில் இடம்பெற்றபோதே அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மக்கள் கஷ்டத்தை உணர்ந்து அரசை நிராகரித்ததால் ஐ.தே.க. பசறைப் பிரதேசசபையில் வெற்றிபெற்றுள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஜனாதிபதி, அரசாங்கம், மாகாண சபையை ஒருபுறமாக வைத்துவிட்டு மக்கள் எம்மை வெற்றிபெறச் செய்துள்ளனர். இந்நிலையில், ஊழல் மோசடியை நீக்கி நல்லாட்சியை உருவாக்க வேண்டும்.

ஐ.தே.க. மறுசீரமைக்கப்பட்டு கட்சிக்குள் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. நாம் உறுப்பினர்களைப் பலப்படுத்தி கட்சியை பழைய நிலைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். எதிர்வரும் ஜூனிற்கு முன் அரசாங்கம் இதனைச் செய்யாவிடின் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்வோம்.

எரிபொருள், எரிவாயுவினது விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கு முன் அரசாங்கம் இதனைச் செய்துள்ளது. இதன் தாக்கத்தை போட்டி முடிவடைந்ததும் ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் உணர்வர். பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்போகின்றது. இது குறித்து அரசுக்குக் கவலையில்லை. கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கு ஜனாதிபதியின் அமைச்சர்களும் சென்றுள்ளனர். மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில் கடன் பெறப்படுகிறது. இதன் சுமையை மக்களே சுமக்கப்போகின்றனர்.

இனப் பிரச்சினை குறித்து அரசு அக்கறையின்றி உள்ளது. யுத்தம் முடிவடைந்த நிலையில் அப்பகுதி மக்கள் நெருக்கடியான நிலையில் உள்ளனர். தீர்வுகாண வேண்டுமென முதலில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அரசு உருவாக்கியது. அக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவில்லை. இது தொடர்பாக இழுத்தடிக்கும் நிலையே காணப்படுகிறது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=10467:2011-04-03-00-44-04&catid=34:hotn-news&Itemid=99

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.