Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொபேட் பிளேக் வருகை நிராகரிப்பு இலங்கைக்கு பாதிப்பு

Featured Replies

வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் லண்டனில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அழைக்கப்பட்டிருந்த பெரும் பாலானவர்களும் பிரயாணங்கள் பற்றி கட்டுரை எழுதுபவர்கள். அமைச்சர் உல்லாசப் பயணம் பற்றியே அங்கு பெரிதாகப்பேசினார்.

1.சுமார் மூவாயிரம் தமிழ்ப் புலி சந்தேகநபர்கள் குற்றஞ் சாட்டப்படாமல் இன்னமும் காவலில் இருந்து வருகின்றார்கள் என்று அவர் ஒப்புக்கொண்டார்.

2.பிளேக்கின் வரவை நிராகரித்தது பாதிப்பை ஏற்படுத்துமா?

3.கே.பி.,பத்மனாதனை இன்ரபோலிடம் ஒப்படைக்குமா இலங்கை?

இலண்டனில் பீரிஸ் நடாத்திய பத்திரிகையாளர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் பி.பி.சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் சிங்களப் பிரிவின் சந்தேசிய நிருபர் மற்றவர் தமிழ் சேவையில் தமிழோசை நிருபர். லண்டன் ஹைட்பார்க் கோணரில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஏனைய நிருபர்கள் யாவரும் புறப்படுவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் பி.பி.சி நிருபர்கள் இருவரும் தாங்கள் இரண்டு கேள்விகளை கேட்க விரும்புவதாக தெரிவித்துக் கொண்டார்கள். அக்கேள்விகள் உல்லாசப் பயணத் துறை தொடர்பானவை அல்ல. ஆனால் இலங்கை அரசுக்கு மிக அக்கறையுள்ள வேறு விடயங்கள். அமைச்சர் அவசரப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் அமர்ந்திருந்து கேட்டார். முதல் கேள்வி இலங்கை மீதான போர்க்குற்றங்களை விசாரித்துக்கொண்டிருக்கும் பான் கி மூனின் நிபுணர் குழுவை இலங்கைப் பிரதிநிதிகள் குழு சந்தித்தது உண்மையா என்பதாகும் "நாம் ஆள்களை அவ்வப்போது சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.'' என்று கூறி கேள்வியைத் தவிர்த்து விட முயன்றார். நிருபர்கள் வலியுறுத்தியதால் மேலும் பல விவரங்களை வெளியிட்டார். அதன் பின் எழுந்து விரைவாக அங்கிருந்து சென்று விட்டார். இதன் மூலம் நிருபர்கள் தமது இரண்டாவது கேள்வியை கேட்பதற்கு அவர் இடம் வைக்கவில்லை. முதல் கேள்வியின் போது அமைச்சர் பீரிஸ் சிறிது சங்கடத்துக்துள்ளானவர் போல் தென்பட்டார். அதற்கு பதில் அளித்தபோது அறிந்தோ அறியாமலோ ராஜதந்திர குண்டு ஒன்றை அவர் போட்டு விட்டார்.

கேட்கப்படாதகேள்வி என்ன வென்றால் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அரசு இன்ரர்போலிடம் கையளிக்கப்போகிறதா என்பதாகும். பிரான்ஸை தளமாகக்கொண்டுள்ள இந்த சர்வதேச பொலிஸ் அமைப்பு ஒருகாலத்தில் புலிகளின் ஆயுதக்கொள்வனவுப் பிரிவின் இந்தத் தலைவரை தனது சிவப்புபட்டியல் நபர்களில் ஒருவராக வரிசைப்படுத்திவைத் துள்ளது. இந்தியாவின் கோரிக்கையின் பேரில் இது நடை பெற்றிருந்தது.பி.பி.சி. சிங்கள சந்தேசிய சேவையில் பின்வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பான் கி மூனின் நிபுணர் குழுவை இலங்கை சந்தித்தது.

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் பான்கிமூனின் நிபுணர் குழுவை இலங்கைப் பிரதிநிதிகள் சந்தித்தார்கள் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.நியுயோர்க்கில் இடம்பெற்ற இந்தச் சந்திப்புப்பற்றி இலங்கை அரசோ ஐ.நா.வோ பகிரங்கப்படுத்தவில்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கைளின் முன்னேற்றம் மற்றும் ஏனைய நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக இலங்கைப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்தார்கள் என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். நிபுணர்குழுவை சந்திக்க முன்னர் பிரதிநிதிகள் செயலாளர் நாயகத்துடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்கள்.லண்டனிலுள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தில் பத்திரிகையாளர் கூட்ட மொன்றில் உரை நிகழ்த்துகையில் அமைச்சர் பீரிஸ் முதலீட்டு வாய்ப்புக்களை முன்னேற்றுவதற்காகவும் தமது நாட்டுக்கெதிராகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துரைப்பதற் காகவும் தாம் ஐரோப்பாவுக்கு வந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.இலங்கையிலுள்ள நிலைமைகளை யதார்த்தமுறையில் பார்க்கவேண்டும். அண்மையில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு வொன்று இலங்கையின் வட பகுதியின் போருக்குப் பிந்திய நிலைமை குறித்து தாம் கொண் டிருந்த மனக்கோலம் தவறானது என்று குறிப்பிட்டிருந்தார்கள் என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார். அவர்களை மேற்கோள்காட்டி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் மேற்குலகில் இலங்கையைப்பற்றி தீட்டப்பட்டுள்ள இருண்ட காட்சிகள் களநிலைமைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றார்.

சுமார் மூவாயிரம் தமிழ்ப் புலி சந்தேகநபர்கள் குற்றஞ் சாட்டப்படாமல் இன்னமும் காவலில் இருந்து வருகின்றார்கள் என்று அவர் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்கா ராஜாங்க உதவி அமைச்சர் றொபேர்ட் பிளேக் அண்மையில் அமெரிக்க செனேட் சபையில் நிகழ்த்திய உரையில் இலங்கைக்கு அச்சுறுத்தல் எதையும் விடுக்கவில்லை யென்று பீரிஸ் கூறினார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய பொறுப்புக்கூறும் பொறி அமைப்பொன்றை நிறுவ அமெரிக்கா அச்சுறுத்தவில்லை என்றார்.கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி றொபேர்ட் பிளேக் நியுயோர்க்கில் கருத்து வெளியிடு கையில் தமது அரசு பொறுப்புக் கூறும்படியாக வற்புறுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார். "சர்வதேச தரங்களை நிறை வேற்றக் கூடியதான வெளிப்படைத்தன்மையுள்ள செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிலைநாட்டும் என்பது எமது பலத்த எதிர்பார்ப்பாகும். எதுவானாலும் அவ்வாறான ஒரு பொது அமைப்பு இல்லாத பட்சத்தில் அப்படியான தொரு சர்வதேச பொறிமுறைக்கான அழுத்தம் அதிகரிப்பதாய் இருக்கும்.'' என்று பிளேக் கூறியிருந்தார்.அமெரிக்க செனேட் சபையில் உதவி அமைச்சர் பிளேக் நிகழ்த்திய ஒரு குறுகிய உரை யில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.

26 வருட மோதலில் இருந்து இன்னமும் மீண்டு கொண்டிருக்கும் இலங்கை நாடு தென் இந்தியாவின் தென் கோடியில் அமைந்திருக்கிறது. மத்திய குடாக்கடல் நாடுகளிலிருந்து கிழக்காசியாவுக்கு பெற்றோலிய மற்றும் வணிகப் பொருள்களைக் கொண்டு செல்லும் கப்பல் பாதையில் நேரடியாக அது அமர்ந்திருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவுக்கு இலங்கையின் மீது அதி முக்கிய அக்கறையுள்ளது. வன் முறையிலான தீவிரவாதம் கடத்தல்கள், கடற்கொள்ளை போன்றவற்றை முனைப்புடன் தடுத்து நிறுத்தும் செயற்பாட்டில் இலங்கையானது விருப்பமுடன் செயற்படக் கூடிய தகுதியைப் பெற்றிருக்கிறது. அதன் மூலம் அப்பிரதேசத்தின் கடல் பகுதியின் பாதுகாப்புக்கு அதனால் உதவிட முடியும்.ஆனால் அந்த அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான கவலை தரும் பதிவுகள் ஜனநாயக நிறுவனங்களின் பலவீனத்தன்மை மற்றும் செயற்பாடுகள் மேலும் தமிழ் புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தை அது நடத்தியிருந்த விதம் ஆகியவை அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் எமது நோக்கத்தை தடுத்துக்கொண்டிருக்கிறது.அடிப்படை மனித உரிமைகள் ஜனநாயகம், ஆட்சி நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் ஓர் உண்மையாக நிலைத்து நிற்கும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான உறுதியான செயற்பாடுகள் ஆகியவற்றில் முன் னேற்றம் ஏற்படும் வரையில் எமது பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்வேறு வகையிலும் வரை யறுக்கப்பட்ட நிலையிலேயே இருக்க முடியும்''

பிளேக் செனேட் சபைக் குழுவின் முன் நிகழ்த்திய உரை மிகவும் முக்கியமானதொன்று. இலங் கையின் கவலைதரும் செயற் பாட்டு பதிவுகள் காரணமாக அதனை முழுமையாக பயன் படுத்திக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்று அவர் குறிப் பிட்டிருக்கிறார். அதன் படி தான் அந்த எச்சரிக்கை வருகிறது பொறுப்புக் கூறும் தன்மை தொடர் பாக நம்பகமான அர்த்த முள்ள நடவடிக் கைகள் எடுக்கத் தவறும் பட்சத்தில், சர்வதேச ஆணைக்குழுவொன்றை நியமிக் கும்படியாக அழுத்தங்கள் உருவாகும் என்று பிளேக் குறிப் பிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவிருந்த அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் றொபேர்ட் பிளேக் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவிருந்த செய்தி இதுவாகத்தான் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் பிளேக் இலங்கைக்குவருவதை இலங்கை அரசாங்கம் எதிர்த்துள்ளது. அவர் வருகைதந்து செய்தியை வழங்கிய பின்னர் நடத்தும் செய்தியாளர் மநாட்டில் வெளியிடக்கூடிய செய்திகள் யாவும் அரசுக்கு சாதகமாக இருக்காது என்று சிரேஷ்ட அரசுத் தலைவர்கள் கருதுகிறார்கள். இப்போதுள்ள தேசிய புதுவருட கொண்டாட்ட உணர்வை அது கெடுத்துவிடும் என்பதோடு சர்வதேச மட்டத்திலும் நிலைமைகளை மோச மாக்கிவிடும் என்று கருதப்படுகின்றது.லிபியா, சிரியா மற்றும் நாடுகளை அமெரிக்கா தாக்குவதுபோல அது இருக்கும், எந்தவகையிலும் எமக்கு உதவிபுரியாது என்று அமைச்சர் ஒருவர் கூறினார்.

இந்த நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ள செய்திகளில் பிளேக்குடன் எந்த விததொடர்பும் சாத்தியமில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான காரணம் வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வெளிநாட்டில் இருக்கிறார் என்பதாகும்.இவ்வாறு தெரிவித்திருப்பதானது அமெரிக்காவைப் பொறுத்தவரை மொக்கயீனப்படுத்தும் வகையிலான விடயமாகும். ஒருவேளை நன்றாக ஆராயப்படாமல் தெரிவிக்கப்பட்டதாய் இது இருக் லாம். ராஜதந்திர முறையில் பார்த்தால் வெளி நாட்டு அமைச்சர் ஒருவர் நாட்டில் இல்லாதவிடத்து அவருக்கு பதிலாக பிரதி அமைச்சர் ஒருவர் செயற்படுவார். அந்தப் பதவியை வகிக்கக் கூடிய தகுதி உடைய ஒருவரே அவ்வாறு நியமிக்கப்படுவார். இந்த நிலையில் வெளியுறவு அமைச்சர் நாட்டில் இல்லாமையால் ஒரு விடயம் ஆராயப்பட முடியாதென்பது முடியா தென்பது ஒரு நொண்டிச்சாட்டாகும். பீரிஸ் இப்போது லண்டனில் பிரதி வெளிநாட்டமைச்சர் அலஸ் டயர் பேர்ட்டுடன் ஆலோசனைகள் நடத்திக்கொண்டிருக்கிறார். அமைச்சர் வில்லியம் ஹேக்குடன் அல்ல இலங்கையின் தரப்பில் கூறப்படும் விளக்கத்தின் படி பார்த்தால் அமெரிக்கா வுடனான எல்லா விதபேச்சு வார்த்தைகளும் ஜி.எல். பிரிஸின் மீதே தங்கியுள்ளன அவர் இலங்கையில் இல்லாதவேளையில் இலங்கையின் சார்பில் எந்தவொரு ராஜதந்திர நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்பதையே இது காட்டுகின்றது.எல்லாவற்றையும் பார்க்கையில் உதவி அமைச்சர் பிளேக்கின் வருகையை இலங்கை அரசு விரும்ப வில்லை என்பது தெளிவாகின்றது.அமெரிக்காவை இவ்வாறு உதாசீனம் செய்திருப்பதானது அந்நாட்டின் வெறுப்பை மேலும் அதிகரிக்கவே செய்வதாய் இருக்கும். அத்துடன் அந்நாட்டின் தூதுவராக வரவிருந்த ஒருவர் கொண்டுவரவிருந்ததை விட மோசமான எதிர் விளைவுகளை இது ஏற்படுத்தக் கூடும். அமெரிக்காவின் நேசநாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் இந்த விதமான செயற்பாட்டினை ஆதரிக்கப்போகின்றவை என்பது தெரியவில்லை. அப்படியான ஒரு நிலைமையில் அமெரிக்காவை ஆதரிக்காவிட்டாலும் இலங்கையை இந்தியா ஆதரித்து நிற்கும் என்று சொல்லமுடியாது. கடந்த வார சம்பவங்கள் புதுடில்லிக்கும் கொழும்புக்கு மிடையிலான உறவுகள் மோசமடைந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.

நேற்று 10-04-2011 அன்று சண்டே ரைம்ஸ் பத்திரிகை எழுதியிருந்த அரசியல் விமர்சனத்திலிருந்து ஒரு பகுதி இது. நன்றி உதையன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.