Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமக்காக பணி புரியுமாறு இராணுவம் வற்புறுத்துகின்றது - முன் நாள் போராளிகள்

Featured Replies

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011

சரணடைந்த போராளிகளை அவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்படுவதாக அரசு கூறுகின்றது.அவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களில் சண்டையிடும் போராளிகளாக இருந்த பலரும் அடங்குகின்றனர். விடுவிக்கப்பட்ட இத்தகைய முன்னாள் போராளிகள் இயல்புவாழ்வுக்குத் திரும்புவதற்கு இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விடுவிப்புக்குப் பின்னரான கண்காணிப்பு என்ற போர்வையில் முன்னாள் போராளிகளை அதிலும் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் போராளிகளாக இருந்தவர்களை அடிக்கடி செல்லிடப்பேசிகளில் தொடர்பு கொள்ளும் அரச புலனாய்வாளர்கள் அவர்களைத் தமது உளவுத்தேவைகளுக்கு பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.இதனால் முன்னாள் போராளிகள் பலர் அச்சமடைந்துள்ளனர். எமது வாழ்நாளில் கணிசமான பகுதி வீணாகிய நிலையில், இனியாவது வாழ்கையைச் சிக்கலின்றி நகர்த்த முயற்சிக்கின்றோம். ஆனால் அரச புலனாய்வாளர்கள் அதற்கு அனுமதிப்பார்கள் போன்று தெரியவில்லை. அடிக்கடி தொடர்புகொள்ளும் அவர்கள் என்னைத் தமக்கு உளவுத் தகவல்கள் தரும் ஒரு நபராக மாற்றப்பார்க்கின்றனர் இது என்ன சிக்கலில் கொண்டு போய் என்னை மாட்டி விடுமோ என்று பயமாக இருக்கிறது'' என்றார் முன்னாள் போராளி ஒருவர்.

புலனாய்வாளர்களின் தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்ப்பதோ, அவர்கள் கேட்பதை செய்து கொடுப்பதற்குத் தவறுவதோ தமக்கு உயிராபத்தை ஏற்படுத்தி விடக் கூடும் என்ற அச்சமும் முன்னாள் போராளிகளிடம் காணப்படுகிறது."என்னால் அவர்களை தவிர்க்க முடியாது. அது என்மீதான சந்தேகத்துக்கு வழிவகுக்கும் அப்படி நடந்தால் நான் மீண்டும் உள்ளே தான் இருக்க வேண்டி வரும். அதேநேரம் அவர்கள் கேட்கும் உளவுத்தகவல்களை பெற்றுக் கொடுக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை.எந்த ஆயுதப் படைகளுடனும் தொடர்புகளைப் பேண எனக்கு விருப்பமில்லை. ஆனால் நான் என்ன செய்ய நான் விரும்புவது நடக்கவில்லை. நாட்டை விட்டு ஓடிவிட்டால் போதும் போல் உள்ளது என்றார் அந்தப் போராளி.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.