Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கருத்து வெளியிடுவோருக்கு ஒரு கோடி சன்மானம் வழங்க தயார் மஹிந்த இறஞ்சல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கருத்து வெளியிடுவோருக்கு ஒரு கோடி சன்மானம் வழங்க தயார் மஹிந்த இறஞ்சல்!

Posted by admin On April 16th, 2011 at 9:55 am / No Comments

ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கருத்து வெளியிடும் எதிர்க் கட்சியினருக்கு ஒரு கோடி வரையிலான நன்கொடை வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. வன்னி இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக 2010 ஆம் ஆண்டு யூன் மாதம் 10 திகதி நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கும் இதன் பிரதியை ஒப்படைத்திருந்தது.

இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளிவி வகார அமைச்சு உடனடியாகவே குற்றம் சுமத் தியிருந்ததுடன் அரசாங்கத்தின் தரப்பில் இவ் அறிக்கை தொடர்பில் பதிலளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இந் நிலையில் இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிடும் எதிர்க்கட்சி அர சியல்வாதிகளுக்கு நன்கொடை என்னும் பெயரில் பணம் வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங் கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள இச் செய்தி யில் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதி ராக கருத்துக்களைத் தெரிவிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாவும், மாகாண சபை உறுப்பினர் களுக்கு தலா 75இலட்சம் ரூபாவும் நன் கொடையாக வழங்குமாறு பாதுகாப்புச் செய லாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையைக் கண் டித்து கட்டுரைகளை எழுதும் தனிப்பட்ட ஊட கவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங் களுக்கும் நன்கொடைகளை வழங்குமாறு கோத்தபாய ராஜபக்­வுக்கு உத்தரவிடப்பட் டுள்ளதாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள் ளது. நன்கொடை எனும் பெயரில் வழங்கப்படும் இக் கொடுப்பனவுகளை பாதுகாப்பு அமைச் சின் இரகசியக் கணக்கில் பதிவு செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கூறி யுள்ளதாகவும் இச் செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ளது.

அதேவேளை நிபுணர்கள் குழுவின் அறிக் கைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேம தாச, ஜோன் அமரதுங்க, தயாசிறி ஜெயசேகர, சஜீவ சேனசிங்க, புத்திக பத்திரன மற்றும் கபீர் காசிம் போன்றவர்களிடம் இருந்தும் கருத்துகளைப் பெற்று வெளியிடுமாறு அரச ஊடகங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக் கையில் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற் கொள் வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரி விக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக் கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.