Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் மத்தியில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, 16 April 2011 01:45

புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் மத்தியில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – ஓர் அன்பு வேண்டுகோள்

அன்புக்குரிய ஈழத்தமிழ் உறவுகளுக்கு

சமீபகாலமாகஇ புலம்பெயர் தேசங்களிலே ஈழத்தமிழர்கள் மத்தியில் குழுவாதமும்இ வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்திருப்பதானது நாம் அனைவரும் நன்கு அறிந்த விடயங்களில் ஒன்றாகும். பரந்துபட்ட ஜனநாயகத் தளத்தில் கருத்துக்களுடன் கருத்துக்கள் மோதுவதற்குப் பதிலாக, எங்கள் மக்களில் ஒரு பகுதியினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதனைப் பார்க்கும் போது, இதயத்திற்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது. இம்மாதிரியான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எங்கள் மக்களில் ஒரு மிகச் சிறிய பகுதியினரே ஆயினும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் புலம்பெயர் தேசங்களிலே வாழுகின்ற அனைத்து ஈழத்தமிழர்களுக்கும் மட்டும் அன்றி, புலம்பெயர் ஈழத்தமிழர்களினால் இன்று சர்வதேச அரங்கினில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கும் கூட மிகவும் தீங்கு விளைவிப்பதாகவே அமையும் என்பதனை இவற்றிற்குக் காரணமானவர்-கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த இருவருடங்களாக புலம்பெயர்ந்த தேசங்களில் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு ஈழத்தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற தமிழீழத்திற்கான சுதந்திரப் போராட்டத்தினைஇ 'புலிப் பயங்கரவாதம்' என்று உலக நாடுகளுக்குப் பூச்சாண்டி காட்டுவதன் மூலமாகஇ சிறிலங்காவின் பேரினவாத அரசாங்கமானது ஈழத்தமிழினத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தினை சிதைப்பதற்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதனை நாம் அனைவரும் நன்கறிவோம். முள்ளிவாய்க்காலில் வைத்து ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்காவின் பேரினவாத வெறியர்களினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையையும்இ போர்க்குற்றங்களையும், பாரிய மனிதஉரிமை மீறல்களையும் சர்வதேச சமூகத்திடமிருந்து மூடி மறைப்பதனையும்; சிறிலங்காவின் பேரினவாத ஆட்சியாளர்களினால் காலம் காலமாக அநீதிகள் இழைக்கப்பட்டு வரும் ஈழத்தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு சர்வதேச சமூகத்தினரிடமிருந்து பெருகி வரும் ஆதரவினையும், அபிமானத்தினையும்இ 'புலிப் பயங்கரவாதம்' எனும் சாயம் பூசுவதன் மூலமாக அழித்தொழிப்பதனையும் நோக்காகக் கொண்டு, சிறிலங்காவின் சிங்கள பேரினவாத அரசாங்கமானது புலம்பெயர் தேசங்களில் பாரிய நாசகார முன்னெடுப்புக்களிலும், பரந்துபட்ட பிரச்சாரங்களிலும் தீவிரமாக இறங்கியுள்ளது என்பதனையும் ஈழத்தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

இவ்வாறான நெருக்கடிகள் நிறைந்த காலகட்டம் ஒன்றில்இ தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை தொடர்ந்தும் சர்வதேச அரங்கினில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் மிகவும் விழிப்பாகவும், அவதானமாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியதானது காலத்தால் தவிர்க்க முடியாததாகின்றது. எங்கள் எதிரியானவன் மட்டுமல்ல, எங்கள் மக்களின் உரிமைப் போராட்டத்திற்காக நாங்கள் ஆதரவு தேடவேண்டிய-வர்களும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டியவர்-களும்இ எங்கள் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதவர்களுமான மேற்கத்திய நாடுகளும் கூட, எங்களது ஒவ்வொரு அசைவையும் மிகவும் அவதானமாகவும், உன்னிப்பாகவும் உற்று நோக்கிய வண்ணம் இருக்கின்றார்கள் என்பதனை நாங்கள் ஒரு கணமேனும் மறந்து நடந்து கொள்ளல் ஆகாது.

ஆகவேஇ புலம்பெயர் தேசங்களில் தமிழீழத்தின் சுதந்திரத்தினை நோக்கிய எங்களது செயற்பாடுகள் அனைத்தையும் நாங்கள் ஒற்றுமையுடனும், மிகவும் அவதானத்துடனும், நிதானத்துடனும் முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளின் அரசாங்கங்களுக்கும்இ மக்களுக்கும் எங்கள் மீது நல்லெண்ணமும், நல்ல அபிப்பிராயமும், நல்ல அபிமானமும்இ இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நல்ல நம்பிக்கையும் ஏற்படுத்தும் வண்ணம் எங்கள் அனைவரதும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இருத்தல் வேண்டும். தமிழீழத்தின் சுதந்திரத்தை உண்மையாக நேசித்து, நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தக் கடமை இருக்கின்றது. எங்களுக்குள் காணப்படும் ஒற்றுமையின்மையும் எங்களுக்கிடையே அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களும் தமிழீழ சுதந்திரப் போராட்டப் பாதையின் முன்னால் வந்து வீழ்ந்து கொண்டிருக்கின்ற பாரிய தடைக்கற்களே அன்றி, அவை வேறெதுவுமில்லை எனும் உண்மையை நாங்கள் அனைவரும் உணர்ந்து கொள்வதன் மூலம், இவ்வாறான மனிதநேயமற்ற செயல்களை நாங்கள் இனிவரும் காலங்களில் முற்றாகத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். சோதனைகளும்இ வேதனைகளும் மிகுந்த இந்த நேரத்தில், புலம்பெயர் தேசங்களிலுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும், எதுவித பாகுபாடுமின்றி, மிகவும் விழிப்பாகவும், அதேசமயம் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். ஒரே ஈழத்தமிழ்த்தாயின் வயிற்றிலிருந்து பிறந்துள்ள நாங்கள் அனைவரும்இ எங்களுக்குள் எவ்வளவுதான் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், நாங்கள் அனைவரும் சகோதரங்கள் என்பதனை மறவாது, 'சுதந்திரத் தமிழீழம்' எனும் எங்கள் இலட்சியத்தை நோக்கி, உறுதியுடன், ஒன்றுபட்டு பயணிக்க வாருங்கள் என்று உங்கள் அனைவருக்கும் நான் உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். எங்களுக்கிடையே காணப்படும் கருத்து வேற்றுமைகளைக் காரணம் காட்டிஇ எதிரியானவன் எங்களைத் தவறாகப் பயன்படுத்தும் அளவிற்கு நாங்கள் என்றுமே அவனை அனுமதிக்கக் கூடாது என்று உங்கள் அனைவரையும் நான் ஆதங்கத்துடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சகோதரங்களாகிய எங்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் நாங்கள் அனைவரும் எங்களுக்குள் கூடிப்பேசித் தீர்ப்போம். புலம்பெயர் தேசங்களில் வன்முறைக் கலாச்சாரத்தினை நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வதன் மூலம் அடியோடு சாய்ப்போம். ஜனநாயகப் பண்புகள் நிறைந்த பரந்துபட்ட கருத்தாடல் களத்தில் சகோதர உணர்வுடன் நாங்கள் அனைவரும் கைகோர்த்து, ஒற்றுமையுடன் தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தார்மீகக் கடமை எங்கள் ஒவ்வொருவரின் மீதும் வரலாற்றினால் சுமத்தப்பட்டிருக்கின்றது. இதனை நாங்கள் அனைவரும் எங்கள் கருத்தில் கொண்டு, தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நின்று தமிழீழத்தின் தேசியத் தலைவனினதும், மாவீரர்களினதும் தியாகங்களை எங்கள் மனதினில் இருத்திய வண்ணம்இ விட்டுக் கொடுப்புக்-களுடனும், புரிந்துணர்வுடனும், தியாகசிந்தனையுடனும், எங்கள் தாயகத்தின் சுதந்திரத்தை நோக்கி பயணிக்க வேண்டியவர்களாக நாங்கள் அனைவரும் இருக்கின்றோம்.

எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் வரலாற்றுக் கடைமையினை நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு தவறுவோமானால், நாங்கள் வரலாற்றினாலும், எங்கள் மக்களினாலும் என்றென்றைக்கும் மன்னிக்கப்பட முடியாதவர்களாகி விடுவோம். அனைத்து தமிழ் ஊடகங்களும், இணையதளங்களும் தங்களுக்கு முன்னால் உள்ள தங்களது வரலாற்றுக் கடைமையினை சரிவர உணர்ந்து கொள்வதன் மூலம், ஈழத்தமிழினத்தின் ஒற்றுமைக்காகவும் உயர்விற்காகவும் தமிழீழம் எனும் இலட்சியத்தினை அடைவதற்காகவும் நேர்மையுடனும் உண்மையுடனும் உழைப்பதற்கு முன்வர வேண்டும் என்று அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன். புலம்பெயர் தேசங்களிலுள்ள ஈழத்தமிழினத்தின் இளைய சமுதாயம் வன்முறைகள் அறவே இல்லாதஇ அன்பும்-பண்பும்-அறமும்-அறிவும்-ஆற்றலும் மிக்க, 'சுதந்திரத் தமிழீழம்' எனும் இலட்சியத்தில் உறுதியுள்ள,ஒரு வீரமிக்க சமுதாயமாக மலர்ந்து வளர வேண்டும் என்பது தமிழீழத்தின் தேசியத்தலைவனின் நீண்ட காலக் கனவாக இருந்தது என்பதனையும் உங்கள் அனைவருக்கும் ஞாபகப்படுத்திக் கொள்வதற்கும் இந்த அடியவன் இவ்விடத்தில் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் -

நன்றி.

- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் -

இவண், உண்மை அன்புள்ள,

ஜெயசங்கர் முருகையா

நா.க.த.அ. உறுப்பினர்.

சங்கதி

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.