Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் புலிகள் தயாரித்த வீடியோ. தோலுரிக்கும் யுத்தக் குற்றம், இந்தியாவின் தர்மசங்கடம்.

Featured Replies

போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது தொடர்பான ஆதாரங்களை, இந்த வாரத்தில் ஐ.நா. அறிக்கையாக வெளியிடுகிறது என்ற பரபரப்பு தகவலால் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்கள் மீது இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மற்றொரு சான்று கிடைத்துள்ளதை ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’என்ற இணையம் கடந்த வாரம் வெளியிட்டது.

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இந்தப் படங்களில் பொதுமக்களின் சடலங்களைத் தெளிவாகக் காட்டமுடியவில்லை என்றும் அந்த இணையம் வேதனைப்பட்டுள்ளது.எனினும்,புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை நிரூபிக்க முடியும் என்றும் ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

புவியியல் ஆய்வாளரான புரொம்லி என்பவர், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது செயற்கைக்கோள் மூலம் யுத்த நிலவரங்களை சேகரித்துள்ளார். இதன் மூலம் வன்னியில் ஏற்கெனவே பொதுமக்கள் ஒன்றுகூடிய இடங்கள்,வீரர்கள் ஓய்வெடுத்த இல்லங்கள், பொதுக்கட்டடங்கள்,பொதுமக்களின் பாதுகாப்பு வளையங்கள் ஆகியவற்றின் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தியதை உறுதி செய்திருக்கிறார்.

இந்நிலையில்,அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில், “இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் 70 ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இலங்கை அரசின் முகாம்களில் இருந்த 13ஆயிரத்து 113 பேர் காணாமல் போனார்கள்’’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கருத்தரங்கில் அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி காருண்யன் அருள்நாதன் பேசுகையில், “2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆயிரம் தமிழர்களும், மே மாதம் மட்டும் 25 ஆயிரம் தமிழர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே,புலிகள் தலைமை தயாரித்த கேசட்டைத் தேடும் வேட்டையும் துவங்கியிருக்கிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தில் புலிகளின் தலைமையால், ‘அறிவித்தல் வீடியோ’ ஒன்று அவசர, அவசரமாகத் தயாரிக்கப்பட்டது. இறுதிப் போரில் புலிகள் பின்னடைவை எட்டிய நிலையில்,ஆனந்தபுர போருக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் பல அதிர்ச்சியான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளதாம்.

புலம்பெயர் நாடுகளில் யார்,யார் தலைமை ஏற்க வேண்டும், நிதித்துறைக்கு யார் பொறுப்பு,மற்றும் நாடு வாரியாகப் பிரித்து, யாரெல்லாம் புலிகளுக்காக இயங்கலாம் போன்ற பல விஷயங்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக அதில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புலிகள் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை உணர்ந்து,தங்கள் இயக்கத்தின் எதிர்கால செயல் வடிவம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பல விஷயங்கள் அதில் விளக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த வீடியோவை எடுத்ததாகச் சொல்லப்படும், நம்பிக்கைக்குரிய போராளி ஒருவர் இது குறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு அது அனுப்பப்பட இருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

‘கணினி வீடியோ கோப்புக்கு மாற்றப்பட்டு வெளி நாட்டிற்கு அனுப்பப்பட்டதா? இல்லை... அதை கணினிக்கு மாற்றும் முன்னரே போர் முடிவுக்கு வந்ததா? என்று எனக்குத் தெரியவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார். அப்படி அது வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தால், அதனை சுயநலம் கருதி சிலர் மறைத்து வைத்திருக்கலாம். அல்லது அதனை வெளிநாட்டுக்கு இணையம் மூலம் அனுப்பும் முன்னர் இதன் முழுப்பகுதியும் ராணுவத்தின் கைக்கு வந்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைமை அடுத்த போராட்டத்தை எவ்வாறு முன் நகர்த்துவது, பொறுப்பாளர்களாக, செயற்பாட்டாளராக, இணைப்பாளராக மற்றும் நிதிப் பொறுப்பாளராக எவர், எவர் இருக்கவேண்டும் என்பதனை நாடுவாரியாகப் பிரித்து அறிவித்துள்ளனர்.

தமக்கு நம்பிக்கைக்கு உரியவர்களின் பெயரையும், போராட்டத்தை முன்னெடுக்க ஏற்றவர்களையும் அவர்கள் முன்மொழிந்துள்ளனர். இந்த வீடியோ மக்கள் மத்தியில் சென்றால் பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். ஆனால் அந்த வீடியோ கேசட் தற்போது எங்கு உள்ளது என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இது சிங்கள ராணுவத்தின் கைகளுக்குச் சென்றிருந்தால், புலிகளுக்கு நம்பிக்கையானவர் யார், யார் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

இந்த நிலையில், இலங்கைப் பிரச்னையில் மேலும் சூடு ஏற்படுத்தும் வகையில் இலங்கை போர் குறித்து ஆய்வு செய்துள்ள ஐ.நா. நிபுணர் குழு இருநூற்று இருபது பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரித்திருக்கிறது அதில், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச தன்னாட்சி பெற்ற ஆணைக்குழு ஒன்றை ஐ.நா.நியமிக்க வேண்டும் என ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமான விஷயங்களே காணப்படுகிறதாம்.

இலங்கைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் இவ்வறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை தொடர்பாக சற்று மௌனம் காப்பது நல்லது என இலங்கை அரசு கருதுவதாகவும், எது நடந்தாலும் அதனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்போம் என அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் அரசு வட்டாரங்களில் பேசப்படுவதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். ஐ.நா.வின் அறிக்கை ஒருவாரத்துக்குள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இலங்கை ராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா கடந்த புதன்கிழமை பேசுகையில், “இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கி வரும் நிதி உதவிகளைப் பயன்படுத்தி புதிய ராணுவ வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளோம்’என்று கூறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது ஐ.நா.ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை அரசுக்குப் பாதகமாக வெளிவரும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை உலகத் தமிழர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Thanks to kumudam reporter.

படம் மற்றும் வீடியோ பார்க்க...

http://www.thedipaar.com/news/news.php?id=27146

Edited by easyjobs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.