Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நாவைச் சிக்கென பற்றிக் கொள்ளுங்கள்

Featured Replies

ஐ.நாவைச் சிக்கென பற்றிக் கொள்ளுங்கள்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-19 07:37:47| யாழ்ப்பாணம்]

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வம் நேரில் தோன்றி, மகனே! என்ன வேண்டும் என்று கேட்கமாட்டா. இறைவன் வழிகாட்டுவான். அந்த வழியைப்பின்பற்ற வேண்டும் என்பதே அந்தப் பழமொழியின் முடிபு.அதன் பிரகாரம் ஈழத்தமிழர்களாகிய நாமும் திக்கற்றவர்களே! இந்தியா பாதுகாக்கும்-தமிழகம் விடாது என்றெல்லாம் நினைத்து நம்பி எல்லாம் இழந்தாயிற்று.

எங்களுக்கு உதவ எவருமே இல்லை என்ற கையறு நிலையில், இப்போது ஒரு வழி பிறந்திருக்கின்றது. இந்த வழி பிறப்பதற்கு உள்ளூர்த் தமிழ் அர சியல் தலைமைகள் காரணமன்று. மாறாக, சர்வ தேச மனித உரிமை அமைப்புகள், மன்னிப்புச் சபை, சனல் 4, விக்கிலீக்ஸ் மற்றும் சர்வதேச ஊடகங்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் என்பவற்றின் பகீரதப் பிரயத்தனம் என்பனவே ஐ.நா. சபையின் தலையீட்டுக்குக் காரணம் எனலாம்.போர் நடந்து முடிந்த கையோடு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வந்திருந்தார்.

உலங்கு வானூர்தியில், போர் நடந்த வன்னியை பார்வையிட்டார். வன்னிப் பெரு நிலப்பரப்பில், ஏற்பட்ட அழிவுகளை போரை நடத்திய அரசின் உலங்கு வானூர்தியில் சென்று அவர்கள் காட்டிய இடத்தை பார்வையிட்ட ஐ.நா. செயலாளர் போரின் இறுதிக் கால வடுக்களை அப்படியே ஜீரணிப்புச் செய்யத்தலைப்பட்டார். பல சந்தர்ப்பங்களில், பான் கீ மூன், விஜய் நம்பியார் போன்றவர்கள் ஈழத்தமிழர்களுக்கு பாதகமாக நடந்து கொண்டனர். இருந்தும் சர்வதேச ஊடகங்கள் தங்கள் திறத்தை காட்டியதால்,ஐ.நா. செயலாளர் நாயகம் நடுங்கிப் போனார்.

இனியும் வன்னிப் போர் வடுக்களை மறைக்க- மறுக்க முற்படுவது தனது பதவிக்கு ஆபத்தான தென்ற நிலையிலேயே,ஐ.நா. செயலாளர் நாயகம் ஆலோசனைக் குழுவை நியமித்தார். அந்த ஆலோசனைக் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் அரசும், விடுதலைப்புலிகளும் நடந்து கொண்ட தவறான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதே நேரம், வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பில் அதிகார அலகொன்று வழங்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.அருமையான முன்மொழிவு. சர்வதேசத்தின் கண்காணிப்பு இருக்குமாயின் அது இலங்கை அரசுக்கும் அதிகாரத்தைப் பெறும் தமிழ்த்தரப்புக்கும் இடையே ஓர் சுமுகமான நிலையை பேணிக் கொள்ள முடியும்.

அத்துடன் தருவதாகக் கூறி பின் தர மறுக்கும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் போகும். எனவே ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்த ஆலோசனையை சிக்கெனப்பற்றிக் கொள்வோம். அதுவே உதவுகரம் இல்லாத ஈழத்தமிழினத்துக்கு தெய்வம் காட்டும் துணையாகும்.

நன்றி

வலம்புரி

எங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி சொல்லி உலக நாடுகளை தன் வசம்படுத்தியது சிங்களம், இன்று எங்களுக்கும் அதே சந்தர்ப்பம் கிடைத்துள்ளது இதை திறம்பட பயன்படுத்தவேண்டும், எமக்கு ஆதரவான அமைப்புக்கள் ஊடகங்களை ஆதரிப்போம் பலப்படுத்துவோம்,

  • கருத்துக்கள உறவுகள்

ஜ.நாடுகள் பற்றி தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் .......கருத்து....(விடுதலை...பக்கம்..171)

ஏற்கனவே,ஜ.நா சபை நிறுவனம் வாயிலாக மானிடத்திற்குப் பொதுவான பண்பாட்டு விழுமியங்கள் தொகுக்கப்பட்டு ஜ.நாவின் சாசனங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டு உள்ளன.அடிப்படை மனித உரிமைகள்,மனிதசுதந்திரங்கள் ,அரசியல் உரிமைகள்,தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகள் போன்ற உரிமைப் பிரகடனங்களாகவும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களாகவும் மானிடத்திற்குப் பொதுவான பண்பாட்டு விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு ஜ.நா செயற்பட்டு வருகிறது.இந்த அறநெறிக் கோட்பாடுகளை ஜ.நாவில் அங்கம் வகிக்கும் உலகநாடுகள் அனைத்துமே ஏற்றுக் கொண்டுள்ளன.மானிடத்திற்கான பொதுவிழுமியங்களை மேலும் செழுமைப்படுத்தி,விரிவுபடுத்தவும் ஜ.நா முயன்று வருகிறது.ஒரே தார்மீகஒழுங்கில் மனித குலத்தை ஒன்றுபடுத்தி நெறிப்படுத்த இந்த உலக நிறுவனம் நிறுவனம் ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

எங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி சொல்லி உலக நாடுகளை தன் வசம்படுத்தியது சிங்களம், இன்று எங்களுக்கும் அதே சந்தர்ப்பம் கிடைத்துள்ளது இதை திறம்பட பயன்படுத்தவேண்டும், எமக்கு ஆதரவான அமைப்புக்கள் ஊடகங்களை ஆதரிப்போம் பலப்படுத்துவோம்,

[/quote

- இந்த போர்குற்ற விசாரணைகளில் அதிகளவு உதவிய ஊடகங்களில் சனல் 4 ம் ஒன்று.

Please open this page and open 'send a comment' and then 'channel4' and again 'send praise' and open your mind in the box. Thank you.

http://help.channel4.com/SRVS/CGI-BIN/WEBCGI.EXE?New,Kb=C4_Author,Company={2EA1BB9C-510E-44A5-A481-01EB1DDA1669},USETEMPLATE=contact_ve.tem

- இன்ற சிற்றி பிரஸ், அதன் தனிநபராக மத்தியூ லீ அவர்கள் எமக்காக (நீதிக்காக) அதிகளவு குரல் கொடுத்து வருகின்றார்

Matthew.Lee@innercitypress.com

Edited by akootha

இந்த நிறுவனங்களுக்கு தமிழ் தொழில் அதிபர்கள் உதவிகள் செய்யவேண்டும், http://innercitypress.com/ மூலம் நன்கொடைகளை வழங்கமுடியும்,

Edited by hari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.