Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அணு ஆட்டம்!-2

அது என்ன மக்கள் விஞ்ஞானம்?

மூட நம்பிக்கைக்கான விஷ முறி மருந்து அறிவியல்! - ஆடம் ஸ்மித்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும்இ அவரது துணை​வியார் டி.ஏ.மதுரமும் பாடிய பாடல்களில் அற்புதமான தத்துவங்களும்இ அரசியல் தர்க்கங்களும்இ யதார்த்த அலசல்களும் நிறையவே இருக்கும். ஒரு பாடலில் கலைவாணர் பாடுவார்...

''கோழியில்லாமல் தன்னால முட்டை​களில்

குஞ்சுகளைப் பொரிக்கவெச்சான்இ

உங்கொப்பன்இ பாட்டன் காலத்தில்

யாரிந்த கோளாறைக் கண்டுபிடிச்சா

யாரிந்தக் கோளாறைக் கண்டுபிடிச்சா?''

விஞ்ஞானபூர்வஇ தர்க்க ரீதியானஇ அதிகார​வர்க்கஇ ஆணாதிக்கப் பார்வைகளைஇ சிந்தனை​களைஇ வாதங்களை அவர் முன்வைக்கஇ மதுரம் அம்மையார் அவற்றை லாகவமாகஇ நறுக்கென எடுத்தெறிவார்:

''அந்தக் குஞ்சுகள் பொரிக்கவெச்ச கோளாறுக்​காரனை

முட்டை ஒண்ணு பண்ணச் சொல்லுங்க பார்ப்போம்இ

முட்டை ஒண்ணு பண்ணச் சொல்லுங்க!''

தயாரிக்கும் திராணியின்றிஇ பொரிக்க​வைப்பதை மட்டுமேஇ ''என்னே பெரும் விந்தை!’ எனக் கொண்​டாடுகிறது நவீன விஞ்ஞானம். மனித வாழ்வைப் பொறுத்த வரைஇ விஞ்ஞான - அஞ்ஞான வரம்புகள் தெளிவாக வரையறுக்கப்பட முடியாதவை. அஞ்ஞானத்​தில் விஞ்ஞானம் கலந்துஇ அதை நம்பிக்கைஇ மதம் என்று அழைக்கிறோம். விஞ்ஞானத்தில் அஞ்ஞானமும் கலந்து இருப்பதைஇ பலரும் ஏற்கவே மறுக்கிறோம்.

ஒருவர் வாழ்வின் அனைத்து சுகஇ துக்கங்களையும் அனுப​வித்துஇ 100 வயதில் முழுமை அடைகிறார். இன்​னொருவர்இ ஐந்து வயதிலேயே அகால மரணமடைகிறார். இதை எப்படி விஞ்ஞான ரீதியாக விளக்குவது? கவிஞர் கண்ணதாசன் சுட்டிக் காட்டுவதுபோலஇ ''நடக்குமென்பார்இ நடக்காது; நடக்காதென்பார்இ நடந்துவிடும்!''. அப்படி 'நடப்பது’ விஞ்ஞானமா... அஞ்ஞானமா அல்லது கலவையாஇ மந்திர தந்திரமாஇ வினோதமாஇ விந்தையாஇ சாகசமாஇ அற்புதமா... என்னவென்பது?

'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி’ என்று தொடங்கும் இன்னொரு பாடலில் கலைவாணர் சொல்கிறார்...

'அஞ்ஞானத்தை அழிக்கப் போறேன்டிஇ

அணுசக்தியாலே ஆயுள் விருத்தி பண்ணப் போறேன்டி!’

அரச விஞ்ஞானம் பற்றி அவர் பேசிக்கொண்டு இருக்கஇ மக்கள் விஞ்ஞானம்பற்றிக் கேட்கிறார் மதுரம் அம்மையார்இ

'வீட்டுக்கென்ன செய்யப்போறீங்க -

அதையும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லிப்​போடுங்க!’

இந்த அணுவின் கதையைத்தான் நான் சொல்ல விழை​கிறேன்இ மக்கள் விஞ்ஞானப் பார்வையில் இருந்து!

சரிஇ அது என்ன மக்கள் விஞ்ஞானம்?

மக்கள் விஞ்ஞானம் என்பது விஞ்ஞானத்தின் அணுகு​முறைகளைஇ அனுபவங்களைஇ அனுகூலங்களைஇ சாதாரண மக்கள் மத்தியில் பரவலாக்கும் ஓர் இயக்கம். இப்போதைய உலகில் ஆளும் வர்க்கமும்இ அதன் அடியாட்களும் மட்டுமே விஞ்ஞானத்தின் பயன்களை அனுபவித்துஇ தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள அறிவியலை உபயோகிக்கின்றனர்.

'கஞ்சி குடிப்பதற்கிலார்

அதன் காரணங்கள்

எவையென அறிவுமிலார்’ என்கிறார் பாரதி.

பெரும்பான்மையான மக்கள்இ அறியாமைஇ இய​லாமைஇ மூடநம்பிக்கை ஆகிய மூன்றுக்குள் முடங்கிக்​கிடப்பதற்கான காரணம்இ விஞ்ஞானம் அவர்களுக்கு மறுக்கப்படுவதுதான். அந்த மறுத்தலை உடைத்தெறிய உலகின் பல்வேறு இடங்களிலும் பொதுஜன அறிவியல் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இயக்கங்கள் தோன்றுகின்றன. பரிசோதனைக்காகவும்இ சிகிச்சைக்காகவும்இ மருத்துவர் நம் மீது மருந்து​களைப் பயன்படுத்தும்போதுஇ அவற்றைப்பற்றிய தகவல்​களைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை நமக்கு இருப்பதுபோலஇ நம் சுற்றுச்சூழலில் இயங்கும் அணு உலைகள்இ கதிரியக்கம்இ அதன் விளைவுகள் போன்றவைபற்றி உண்மைகளையும் கேட்டுப் பெற நமக்கு உரிமை இருக்கிறது. 'கேட்டுப் பெற’ என்கிற உரிமையைக் காட்டிலும்இ 'தகவல்கள் தெரிவிக்கும்’ கடமை அவர்​களிடத்தில் அதிகமாகவே இருக்க வேண்​டும். அது இல்லை என்பதுதான் இப்போது பிரச்னை!

ஆயினும்இ அந்தத் தகவல்களைஇ கருத்துகளைஇ கண்டுபிடிப்புகளை எல்லாம் மக்கள் விஞ்ஞான இயக்கத்தார்இ அறிவியல் நூல்கள் மூலமாகவும்இ கைப்பிரதிகள் மூலமாகவும்இ குறும் படங்கள் மூலமாகவும் வட்டார மொழி​களில் மக்களிடையே கொண்டு​சென்று விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். விஞ்ஞான அறிவை விருத்தி செய்யவைக்கும் அதே வேளையில்இ மக்கள் மத்தியில் தங்களுக்கு உள்ள நேர்மறை உணர்வுகளைப் பெருக்கிஇ ஒரு சிறந்த மாற்று எதிர்காலத்தை தங்களால் கட்டமைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்க உழைக்கின்றனர்.

சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்கவும்இ நீடித்த நிலைத்த வளர்ச்சி எனும் மாற்று வளர்ச்சிச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும்இ மக்கள் தொழில்நுட்பத்தை ஊக்குவித்துஇ அதற்கான ஆய்வு மற்றும் உருவாக்கலை (சுநளநயசஉh ரூ னுநஎநடழிஅநவெ) பெருகச் செய்யவும் முனைகிறது மக்கள்

விஞ்ஞானம். சென்னையைத் தலைமை இடமாகக்கொண்டுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முதல் பல்வேறு மக்கள் இயக்கங்களும்இ தொண்டு நிறுவனங்களும்இ மக்களுக்கான அறிவியலை எடுத்துச் செல்வதில் சீரிய பணி ஆற்றி வருகின்றன.

தவிரஇ பல்கலைக்கழக அளவில் நம் நாடு முழுக்க உள்ள அறிவியல் ஆசிரியர்கள்இ அறிவியலாளர்கள் ஆகியோர் வெளியிடும் கட்டுரைகளின் அளவு... சீனாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ ஒப்பிடும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறது. ஆனால்இ ஆராய்ச்சிகளுக்குச் செலவிடப்படும் தொகையோ மிக அதிகம். உங்களின் ஆய்வுகள் தவறாக இருந்தாலும்இ அதைக் கட்டுரை வாயிலாகப் பதிவு செய்துவிடுங்கள். காரணம்இ நாளை அதே துறையில் உங்கள் வழியைப் பின்பற்றி வரும் ஒருவர்இ நீங்கள் விழுந்த அதே இடத்தில்... விழுந்துவிடாமல் இருக்கஇ அது உதவும். அவர் மேற்கொள்ளும் ஆய்வுக்கு உங்களின் 'தவறு’ எந்த விதத்திலேனும் பயன் அளிக்கவும் செய்யலாம். ஆனால்இ அதைச் செய்யவும் யாரும் முன்வருவது இல்லை என்பதுதான் பிரச்னை.

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான அரசு ஊக்குவிப்பும் போதிய அளவு இருக்க வேண்டும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை அரசு நூலகங்களில் வாங்கச் செய்ய வேண்டும் என்றால்இ அதனை வேண்டிய வழியில்இ வேண்டிய அளவில் 'கவனித்து’ வாங்கவைக்கஇ அதற்கெனத் தனி லாபி செயல்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் அல்லது பதிப்பாளர்இ அரசு நூலகங்களிடம் காசு கொடுத்துத்தான் நூல்களை வாங்கச் செய்யும் நிலை தொடரும் ஒரு சமூகத்தில்இ அறிவியல் எப்படி மக்களுக்கானதாக இருக்கும்?

நமது நாட்டுப் பொறியியல் கல்லூரிகளும் ஆங்கில மொழியில்​தான் கற்பிக்கின்றன. வெகுஜனப் பத்திரிகைகளில் அறிவியல் சார்ந்த கட்டுரைகள் எழுதினால்இ சில அறிவியல் வார்த்தைகளைஇ தகவல்களைத் தமிழ்ப்படுத்த முடிவது இல்லை. அந்த வார்த்தையை அப்படியே உபயோகிக்க வேண்டி இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான அறிவியல் பெயர்கள் கிரேக்கம்இ லத்தீன் போன்ற மொழிகளில் இருந்துதான் எடுத்தாளப்பட்டு இருக்கின்றன. அப்படிப் பயன்படுத்தியதாலேயே ஆங்கில மொழிஇ வளர்ச்சியும் பெற்றிருக்கிறது. அதேபோல்இ தமிழிலும் அறிவியல் பெயர்களைஇ அது இருக்கும் நிலையிலேயே நாம் எடுத்தாள்வதில் தவறு இல்லை.

இனி வரப்போகும் அத்தியாயங்களில் இதுபோன்ற சில சிக்கல்​கள் இருப்பதால்இ உங்களை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டிய கடமை இருப்பதாக உணர்கிறேன்!

'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என மனித வாழ்வின் அடிப்படையான அணுவையும்இ தமிழர் வாழ்வின் அடிப்​படையான குறளையும் இணைத்துப் பேசுகிறோம். குறள்போல அணு மிகச் சிறியது. ஆனால்இ மிகவும் பரந்தது. அணுபோன்று குறள் எளிமை​யானது. ஆனால்இ மிக மிக ஆழமானது. திருக்குறளை அணுக்குறள் என்பது எவ்வளவு பொருத்தமானதோஇ அதுபோல அணுவைக் குற்றணு என்பதும் சரிதான்.

இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாகஇ அணு என்றால் என்ன? அதன் கதை என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அந்த அணுவின் கதை....

- அதிரும்...

நன்றி விகடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.