Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு – சனல்4 தொலைக்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Apr 21, 2011 / பகுதி: செய்தி /

சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு – சனல்4 தொலைக்காட்சி

சனல்4 தொலைக்காட்சி சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கானொளிகளை வெளியிட்டுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகள் முளுவதும் சிங்கள இராணுவமே நிறைந்திருப்பதாகவும்,

தமிழர்களின் பொரும்பாலான குடியிருப்புகளை அவர்கள் தம்வசம் வைத்திருப்பதாகவும், மக்களின் ஆயிரம் ஆயிரம் வாகனங்களையும் இராணுவம் தம்வசம் கொண்டிருப்பதாகவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பல பெண்கள் சிங்கள இராணுவத்தால் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருப்பதாகவும் ஆதாரபூர்வமாக வெளியிட்டது.

மேலும் இரகசியமாக மக்களை சந்தித்த சனல்4 செய்தியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதையும் வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளதாக தமிழ் மக்கள் தெவித்துள்ளனர்.

pathivu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'கடவுள் ஏன் இப்படி எங்களைத் தண்டிக்கிறார்?' ஒரு பெண் கேட்கிறாள்:- 1 -

21 ஏப்ரல் 2011

26 வருட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகிய நிலையில் இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குப் பிரதேசத்தில் இருந்து சனல் 4 தொலைக்காட்சிக்கு மிகஅபூர்வமான சில காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

போர் முடிவடைந்த பின்னரும் கூட இலகுவில் எவரும் சென்று விட முடியாத பிரதேசங்கள் அவை. அங்கிருந்து சனல் 4 தொலைக்காட்சிக்குக் கிடைத்த இந்தக் காணொளிகள் பக்கச்சார்பற்ற தகவல் மூலங்களிலிருந்தே கிடைக்கப் பெற்றுள்ளன.

அக்காணொளிக்காட்சியில் தன்னை இனங்காட்டாத ஒரு பெண் சொல்கிறார் 'ஆறு அல்லது ஏழு படையினர் வந்தார்கள். சொல்ல முடியாத கஸ்டங்களை அவர்கள் தந்தார்கள். என்னால் எப்படி அதனை விபரிக்க முடியும்?' அவர்கள் என்னைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தார்கள். அந்த நேரத்தில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை எப்படி விளக்க முடியும்?

அப்பகுதிகளில் பாலியல் தொந்தரவுகள் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. ஆனால் அவை குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத சூழல் அங்கு நிலவுகிறது என்கிறார் ஒரு தொண்டர் நிறுவனப் பணியாளர்.

அந்த மக்களுடைய நிலங்கள் ஹோட்டல்களுக்காகவும், வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் உல்லாசப் பிரயாணத்துறைக்காகவும் அபகரிக்கப்படுகின்றன. ஆனால் அவர்களோ வெறும் தரப்பாளின் கீழ் வாழ்க்கை நடாத்துகின்றனர். இவ்வாறு அல்லலுறும் ஒரு பெண் கேட்கிறாள் 'கடவுள் ஏன் இப்படி எங்களைத் தண்டிக்கிறார்?'

இந்தக் காணொளிக் காட்சியை எடுத்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பணயம் வைத்தே இதனை எடுத்திருக்கிறார்கள். இந்தப் பிரதேசங்கள் இன்னமும் முழுமையான இராணுவக்கட்டுப்பாட்டின் கீழேயே இருந்து வருகின்றன. அங்குள்ள மக்கள் மிகுந்த பயத்துடனும் பீதியுடனுமே வாழ்ந்து வருகிறார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் திட்டமிட்ட ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருதலையும், பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதையும் இந்தக் காணொளிக்காட்சி ஆதாரத்தோடு வெளிக் கொணர்கிறது.

இலங்கையில் இடம் பெற்ற போரின் இறுதி சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அத்தோடு பெருவாரியான மக்கள் இடப் பெயர்வுக்கும் ஆளானார்கள்.

சனல்4க்குக் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின்படி போரின் முடிவில் ஒரு இலட்சம் மக்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை இல்லாமலிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின்படி போர் கடுமையாக இடம் பெற்ற வன்னிப் பிராந்தியத்தில் 2008இல் 430,000 பேர் இருந்துள்ளார்கள். அதன் பின்னர் சில மாதங்கள் இடம்பெற்ற மோசகரமான அழிவு யுத்தத்தின் முடிவில் அரசாங்கம் அப்பகுதியிலிருந்தவர்களை முகாம்களுக்கு அப்புறப்படுத்தியது. ஐநா தகவல்கள் அவ்வாறு முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 290,000 எனச் சொல்கிறது. ஆக ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் என்ன ஆனார்கள் என்ற தகவல்கள் எதுவுமில்லை.

பெரும்பாலானவர்கள் இன்னமும் தமது குடும்பத்தவரைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஏனைவர்கள் நீதி கேட்டு போராடி வருகிறார்கள். டொக்ரர் மனோகரனும் அவர்களி;ல ஒருவர். அவருடைய மகன் படையினரால் 2006ஆம் ஆண்டு கொல்லப்பட்டான். தன்னுடைய மகனுடைய படுகொலைக்கும், இலங்கையில் இவ்வாறு பாதிப்புக்குள்ளான ஏனையவர்களுக்காகவும் தான் நீதி கேட்டப் போராடி வருவதாக அவர் சனல் 4 தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் போரின் இறுதி மாதங்களில் என்ன நடைபெற்றது என்பது குறித்த அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை ஐநா வெளியிடவுள்ளது. ஆனால் ஏற்கெனவே இந்த அறிக்கையின் சில பகுதிகள் கசிவுக்குள்ளாகி உள்ளன.

அது மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளையும், சர்வதேச சட்டங்கள் பெருமளவுக்கு மீறப்பட்டமையையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அறிக்கை இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களை மேற்கொண்டதனை சுட்டிக்காட்டியிருந்தது.

அரச படையினர் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு, சித்திரவதை என்பவற்றோடு பொதுமக்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் குண்டு வீசியமையையும் சுட்டிக்காட்டியதோடு விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமையையும் பதிவு செய்திருக்கிறது.

படையினர் கைது செய்தவர்களைப் படுகொலை செய்வதாக சனல் 4இல் வெளியான காணொளிக்காட்சியை நிபுணர் குழுவிடம் அது கையளித்திருந்தது. அதனையும் தனது விசாரணையில் நிபுணர் குழு சேர்த்துக் கொண்டிருந்தது.

இலங்கை அரசாங்கம் ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து முழுமையான பதில் எதனையும் முன் வைக்கவில்லை. எனினும் இந்த அறிக்கை முழுக்கத் திரிக்கப்பட்டும் தவறான தகவல்களைக் கொண்டதாகவும் உள்ளது எனத் தெரிவித்திருந்தது.

2009இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரச படைகள் மேற்கொண்ட படுகொலைகளை 1995இல் பொஸ்னிய யுத்தத்தில் 7000 பேர் படுகொலை செய்யப்பட்ட சேர்பேனியப் படுகொலைகளோடு ஒப்பிட்டிருக்கிறார் ஐநாவின் முன்னாள் பேச்சாளரான கோர்டன் வைய்ஸ்.

gtn

பல காலமாக எதிர்பார்த்திருந்த செய்தி, பிரிந்து வாழவேண்டிய தேவையை வலியுறுத்தும் செய்தி,

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 தொடர்ந்து எமக்கு நடந்த அந்நிதியை வெளிப்படுத்தி வருகிறது. அதற்காக நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இது நான் நன்றி தெரிவித்ததற்குப் பதிலாக அவர்கள் எழுதிய பதில்.

நிச்சயம் எல்லோரும் அவர்களது சேவையைப் பாராட்டிக் கடிதம் எழுதவேண்டும். எமக்கான ஆதரவை அவர்கள் தொடர்ந்தும் வழங்க அது உறுதுணையாகவும், ஊக்கமாகவும் இருக்கும்.

Dear Anton,

Thank you for contacting Channel 4 Viewer Enquiries regarding THE CHANNEL 4 NEWS.

I am glad that you enjoyed and appreciated the coverage of the situation in Sri Lanka. A lot of time and effort goes into making our news broadcasts and your feedback is greatly appreciated.

I will pass your comments on to the News Team and thank you again for contacting us.

Kind regards,

Dylan Redmond

Channel 4 Viewer Enquiries

For information about Channel 4 have a look at our FAQ section at www.channel4.com/help

Original Message Follows: ------------------------

Dear Producer, Thank you very much for your continuous coverage on Srilankan war crimes. Because of your timely telecast the World is seeing what happened during the last stages of the war. Really appreciate your service to a small community like Srilankan Tamils. We see you as Saviour and a light at the end of the tunnel. Well done and thank you again. Yours truly Anton

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.