Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணிவெடி அகற்றலுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவிகளை இலங்கை அரசே தட்டிக் கழித்து வருகின்றது :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிவெடி அகற்றலுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவிகளை இலங்கை அரசே தட்டிக் கழித்து வருகின்றது :

23 ஏப்ரல் 2011

கண்ணிவெடி அகற்றலைத் துரிதப்படுத்துவதற்குக் கிடைக்கவேண்டிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவிகளை இலங்கை அரசே தட்டிக் கழித்து வருகின்றது என யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் நிறுவனப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கண்ணிவெடி விழிப்புணர்வுக்கும் உதவிக்குமான சர்வதேச தினத்தையொட்டிய நிகழ்வுகள் யாழ். இந்துக்கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்படி குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்தனர்.

இலங்கை அரசு இதுவரை காலமும் ஒட்டோவா உடன் படிக்கையில் கைச்சாத்திடவில்லை. இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடாததன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவிகள் இலங்கைக்குக் கிடைக்கவில்லை.

இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசு கைச்சாத்திடும் பட்சத்தில் இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுக்குத் தேவையான அனைத்து நிதியுதவிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும். அதன் மூலம் எமது கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளைத் திறம்பட விரைவாக நிறைவேற்ற முடியும்.

அதேவேளை, தற்போது எம்மிடம் உள்ள ஆளணி வளம், இயந்திர வலு மூலம் மட்டுமே கண்ணிவெடி அகற்றலை மேற் கொண்டு வருகின்றோம். இந்தப் பணி தாமதமாவதற்கு முக்கிய காரணம் இதுவே. இந்த நிலையில் கண்ணிகள் அகற்றும் பணி எப்போது நிறைவடையும் என்று கூற முடியாதுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.இந்தச் சந்திப்பில் பிரிட்டனைச் சேர்ந்த ஹலோட்ரஸ் நிறு வனத்தின் இலங்கைப் பணிப்பாளர் அடம் ஜெஸ்கின்ஸ்லி, இதே நிறுவனத்தின் யாழ். பிராந்திய பணிப்பாளர் ரொம் ஜோதி மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யு.என்.டி.பியின் பிராந்திய தொழில்நுட்ப ஆலோசகர் ஜான்குறூப், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றல் பிரிவின் சிரேஷ்ட திட்டமிடல் அதிகாரி டெனிசன் மற்றும் இந்த மாவட்டங்களில் யுனிசெப் நிறுவன மிதிவெடி அபாயக் கல்வித் திட்டமிடல் பணிப்பாளர் ம.வசந்தகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

GTN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணிவெடி அகற்றினால் பின் தமிழர் தமது பூர்வீக நிலங்களுக்கு திரும்பி விடுவார்கள் பின் எப்படி நிலத்தை சுருட்டுவது?

ஸ்ரீ லங்கா தட்டி கழிப்பதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.