Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 09:29

இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது. அதனால் பொதுமக்களின் உயிரிழப்புக்களை அது கண்டுகொள்ளவில்லை என இலங்கைக்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவையான சந்தேசியவிற்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

போரின்போது முற்றுகையினால் ஓரிடத்தில் குவிந்த பொதுமக்களின் அவலங்களைப் போக்க ஐ.நா இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும் என்று நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் ஐ.நா அதனை ஏன் செய்யவில்லை என்று எழுந்துள்ள கேள்விக்கு, இறுதிக் கட்டப் போர்க்காலத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக முறையான மீளாய்வு ஒன்றைச் செய்வதன் மூலமே இதற்கான பதிலைப் பெறமுடியும் என்று கோர்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அப்போது ஐ.நா பணியகம் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்தது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது இலங்கை அரசாங்கம் எதிர்த்தது. ஆட்சேதங்கள் எவ்வளவு, அது எப்படிக் கணக்கிடப்பட்டது என்பன போன்ற கேள்விகளை எழுப்பியது. இது எமது கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையாகவே இருந்தது.

தம்மால் கனரக ஆயதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், பொதுமக்களின் இரத்தம் சிந்தப்படவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் வாதிட்டது.

ஆனால் அதற்கு முரணான வகையில் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை உள்ளது. பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறும் அந்த அறிக்கையில் அரசபடைகளின் எறிகணைத் தாக்குதல்களிலேயே அதிகளவு இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் கனரக ஆயுதங்களை அரசபடைகள் பயன்படுத்துகின்றன என்ற பலத்த சந்தேகம் ஐ.நாவுக்கு அப்போது இருந்தது. இறுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற வாக்குறுதியை உலகத் தலைவர்களுக்கு இலங்கை அரசு வழங்கியது. ஐ.நா பொதுச் செயலாளருக்கும் அந்த வாக்குறுதியை அளித்தது.

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான இறுதி 5 மாதங்களில் பலமுறை மீண்டும் இந்த வாக்குறுதியை அளித்த போதும் அவையெல்லாம் வெறும் பொய்களாகவே இருந்தன.

ஆனால் கனரக ஆயுதங்களைத் தொடர்ந்தும் இலங்கை அரசு பயன்படுத்தி வந்தது என்பது இறுதியில் தெளிவாகத் தெரியவந்தது.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்க ஐ.நா இன்னும் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இதை நான் தனிப்பட்ட முறையில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

ஐ.நாவைப் பொறுத்த வரையில் இலங்கை விவகாரம் தொடர்பாக அதன் உறுப்பு நாடுகளிடத்தில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை என்றே கூற வேண்டும். ஐ.நா பாதுகாப்புச் சபைக்குள்ளேயும் எதுவும் நடக்கவில்லை.

மனிதஉரிமைகள் பேரவைக்குள்ளேயும் எந்தவொரு முயற்சிகளும் இடம்பெற்றதாக எமக்குத் தென்படவில்லை. ஐ.நா தலைமைச் செயலகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட வெறும் ஊகத்துக்குரியவையாகவே இருந்தன.

ஐ.நா என்பது ஒர் இராணுவ நோக்கத்துக்கான அணியோ அல்லது அரசியல் ரீதியான அமைப்போ அல்லது கண்காணிப்புப் பொறிமுறையோ அல்ல.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நாவுக்கு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குரிய பங்கே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன் ஐ.நாவிடம் இருந்து பெரும் தலையீடுகள் எதுவும் ஏற்படுவதை அந்தக் காலகட்டத்தில் இலங்கை அரசு விரும்பவில்லை.

எனவே இறுக்கமானதும், அரசாங்கத்தினது கடும் அழுத்தங்களுக்கும் மத்தியில் இருந்து கொண்டு தான் ஐ.நாவின் மனிதநேய நிறுவனங்கள் செயற்பட வேண்டியிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்வேறு நாடுகள் பங்குபற்றியிருந்தன. அரசுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்புகளை வழங்கிய நாடுகள் மற்றும் உதவுவதில் எல்லா வகையிலும் முன்னின்ற நாடுகள், குறிப்பாக இந்தியா என்று நீண்ட பட்டியலே உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திர காலம் முதல் இலங்கையுடன் உறவுமுறை உள்ளது. 21ம் நூற்றாண்டில் இலங்கையுடனான செல்வாக்கை இந்தியா இழந்து வருகிறது என்றே கூற வேண்டும்.

இந்த விடயத்தில் சீனா மிக வேகமாக இலங்கையுடன் நெருங்கி வருகிறது. இந்த விடயத்தில் இந்தியா சற்றுக் குழப்பிப் போயுள்ளது. அதனால் இலங்கைக்கு உதவிசெய்து கொண்டு வருகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கைக்கு பல்வேறு புலனாய்வு உதவிகளை வழங்கியுள்ளது.

போர் வலயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி விபரங்களும் அதற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவுக்கு பாதுகாப்பு வலயங்களுக்குள்ளேயும் புலனாய்வு வசதிகள் இருந்தன என்று தான் நான் நம்புகிறேன்.

அங்கிருந்த இழப்புகள் பற்றி இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதன் விகிதாசாரங்கள் குறித்து அது கணித்துக் கொண்டிருந்தது. இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைளில் நான் ஈடுபட்டிருக்கவில்லை. அந்தக்கட்டத்தில் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை பலதரப்பினருக்கிடையில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன.

கடைசி வாரத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் பௌதிக ரீதியில் பிரிந்து காணப்பட்டது. பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து அவர்கள் வெவ்வேறான திசைகளில் தப்பிச் செல்ல முற்பட்டார்கள்.

tamilenn

  • கருத்துக்கள உறவுகள்

India 'was aware'

Mr Weiss says he "completely agree" with the panel's findings.

"Casualty figures from a part of that (UN) armoury"

However, the UN was not in a position to stop the final assault against the Tamil Tigers apart from trying to minimise civilian casualties, according to Gordon Weiss.

The former UN spokesman said the Indian government which wanted to "see the Tamil Tigers destroyed" was "fully aware" of the real situation in the battle zone, including the civilian casualties.

"I believe that Indians were aware of the civilian casualties that were happening, because they had pretty good intelligence inside the siege zone."

He admitted that :oBan Ki-moon's chief of staff, Vijay Nambiar, made an agreement between the LTTE and the Sri Lanka authorities to arrange the surrender of senior Tamil Tiger leaders including B Nadesan and Pulithevan.

White flag surrender

"That surrender happened and those people were allegedly executed," Mr Weiss told BBC Sandeshaya.

"I think there was an inducement by the Sri Lanka government for the remaining Tiger leadership to surrender."

Mr Weiss says Mr Nambiar arranged the surrender of senior LTTE leaders to the Govt

The Sri Lanka government is accused of killing and threatening dissenting voices including journalists during the height of the conflict.

Gordon Weiss says the UN humanitarian agencies were also threatened.

"Like the judiciary and the press, the UN was also under pressure from the Sri Lankan government."

Secretary general's advisory panel has also made recommendations to the United Nations.

"The Secretary-General should conduct a comprehensive review of actions by the United Nations system during the war in Sri Lanka and the aftermath, regarding the implementation of its humanitarian and protection mandates," it said.

It also recommended the Human Rights Council (UNHRC) to be invited to reconsider its May 2009 Special Session Resolution regarding Sri Lanka.

The UNHRC's attempts to pass a resolution against Sri Lanka have been unsuccessful after Sri Lanka lobbied the support from India, China and Russia among others.

  • கருத்துக்கள உறவுகள்

கோர்டென் வைஸ் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்புடனான செவ்வியை இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2011/04/110424_gordonweiss?size=au&bgc=003399&lang=ta&nbwm=1&bbwm=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.