Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது:-

26 ஏப்ரல் 2011

அறிக்கையை ஆராய UNP குழுவொன்றை நியமித்துள்ளது:- ஐ.நா இணக்க பாடுகளை மீறும் செயல் விஜேதாச ராஜபக்ஷ:-

UN நிபுணர் குழு அறிக்கையை இலங்கை மீண்டும் நிராகரிப்பு

ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது.

தாரூஸ்மானின் தலைமையில் 214 பக்ககங்களைக் கொண்ட நிபுணர் குழு அறிக்கை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கை அடிப்படையற்றது என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இன்னமும் சந்தர்ப்பம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

நிபுணர் குழு அறிக்கையை ஆராய்வதற்கு ஐ.தே.க குழுவொன்றை நியமித்துள்ளது:-

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை ஆராய்வதற்காக, ஐக்கிய தேசியக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.

நிபுணர் குழு அறிக்கையை உன்னிப்பதாக ஆராய்ந்து அதன் பின்னர் கருத்துக்கள் வெளியிடப்படும் என கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக கடமையாற்றிய பிரட்மன் வீரக்கோன் தலைமையில் இந்த குழு நிறுவப்பட்டுள்ளது.

பிரமட்மன் வீரக்கோன் தலைமையிலான குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் உத்தீயோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான முனைப்புக்களின் போது பிரட்மன் வீரக்கோன் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் விருப்பம் அத்தியவசியமானது பான்-கீ-மூன்:-

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த இலங்கையின் விருப்பம் அத்தியவசியமானது என ஐ.நா செயலாளர் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் விருப்பமின்றி விசாரணை நடத்த வேண்டுமானால், ஐநாவில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

பான்-கீ-மூன் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதுடன் அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு கூறியுள்ளார். அறிக்கை வெளியிடப்பட்டமையானது இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் எனவும் பான்-கீ-மூன் கூறியுள்ளார். எவ்வாறாயினும் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனக்கு தனிப்பட்ட ரீதியிலான அதிகாரங்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர்குழுவின் அறிக்கை ஐ.நா இணக்கபாடுகளை மீறும் செயல் என்கிறார் விஜேதாச ராஜபக்ஷ:-

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமமிக்கப்பட்ட ஆலோசனை குழுவொன்று இலங்கைக்கு எதிராக அறிக்கை தயாரிப்பது, ஐ.நா இணக்கபாடுகளை மீறும் செயல் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளருக்கு கடித் ஒன்றை அனுப்பியுள்ள அவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோமிய இணக்கப்பாட்டு யாப்பில் இலங்கை கையெழுத்திடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இலங்கைக்கு எதிராக போர் குற்றம் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான அறிக்கை வெளியிடப்படுவதன் மூலம் நாட்டில் வாழும் மக்களுக்கு இடையில் கட்டியெழுப்பப்படும் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார ஸ்திர தன்மைகள் சீர்குலையக் கூடும் எனவும் விஜேதாச ராஜபக்ஷ கூறியுள்ளார். ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் மூலம் அழிவு ரீதியான சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையே பொறுப்புக் கூறவேண்டும் என விஜேதாச ராஜபக்ஷ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

gtn

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நிராகரித்தால் ஐநாவின் உறுப்பு நாடுகளின் தீர்மானத்திற்கு விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஏதாவது ஒரு நாடு வீட்டோ அதிகாரத்தின் மூலம் அதனை நிராகரிக்க முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.