Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டாக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றத்திற்கு தலைமையேற்ற குறொசிய அதிபருக்கும் தளபதிகளுக்கும் தண்டனை

Featured Replies

[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 17:49 GMT ] [ தி.வண்ணமதி ]

குரோசியாவின் இரண்டு ஜெனரல்களைப் போர்க் குற்றவாளி என ஐ.நா மன்று தீர்பளித்திருக்கும் அதேநேரம் மூன்றாவது ஜெனரலை இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்திருக்கிறது.

1990ம் ஆண்டளவில் இடம்பெற்ற பால்கன் போரில் குறோசியா நடந்துகொண்ட முறை தொடர்பாக கடந்த வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபையினது நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறோசியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

1995ம் ஆண்டு குறோசியன் லாண்ட் மற்றும் கரஜான பிராந்தியத்தில் [Croatian land and drive Serbs out of the Krajina region] குறேசியா முன்னெடுத்த படை நடவடிக்கையின்போது அதனைத் தலைமையேற்று நடாத்திய குறோசியாவினது ஜெனரல் அன்ரி கொரொவினா போர்க் குற்றங்களிலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டார் ஐ.நா நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஜெனரல் கொரொவினா [General Gotovina] தலைமையிலான படையினர் நகரங்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடாத்தியதாகவும் பொதுமக்களைப் படுகொலைசெய்ததாகவும் அவர்களது சொத்துக்களை சூறையாடியதாகவும் கூறி இவருக்கு எதிராக 24 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தனக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் நான்கு ஆண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்துவந்த இந்த ஜெனரல் 2005ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதே சம்பவத்தில் பங்கெடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஜெனரல் லேடன் மார்கக் [Mladen Markac] என்பவருக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் குற்றம் சுமத்தப்பட்ட மூன்றாவது ஜெனரலான ஐவன் செர்மாக் Ivan Cermak மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மீளப்பெற்றிருக்கின்ற நீதிமன்றம் அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறது.

யூக்கோஸ்லாவியாவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக நெதர்லாந்தின் கேக் நகரில் [The Hague] அமைக்கப்பட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட போர்க் குற்றத் தீர்ப்பாயம் [war crimes tribunal] குறோசியாவின் மறைந்த அதிபர் பிராங்ஜோ ருட்ஜ்மனிற்கு [late president of Croatia, Franjo Tudjman] எதிராக தீர்ப்பினையும் வழங்கியிருந்தது.

குறோசியாவின் மத்திய மற்றும் தென் பிராந்தியங்களில் காலம் காலமாக வாழ்ந்துவந்த சேர்பியர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு அந்தப் பிராந்தியத்தில் குறோசியர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கையினை அந்த நாட்டினது முன்னாள் அதிபர் ருட்ஜ்மன் தலைமையேற்று [The leader of a Joint Criminal Entreprise] நடாத்தியிருந்தார்.

1991ம் ஆண்டு பெல்கிறேட்டின் ஆதரவுடன் சேர்பியக் கிளர்ச்சியாளர்கள் தமக்கென தனியானதொரு ஆட்சியலகினை உருவாக்கிகொண்டார்கள்.

யூக்கோஸ்லவாவியாவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக கேக்கில் அமைக்கப்பட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட போர்க் குற்றத் தீர்ப்பாயம் குறோசியாவின் மறைந்த அதிபர் பிராங்கோ ருட்மனிற்கு எதிராக தீர்ப்பினையும் வழங்கியிருந்தது.

கரஜினா என்ற இந்த நகரத்திலிருந்து சேர்பிய இராணுவத்தினரையும் பொலிசாரையும் வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின்போது 300 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருந்தனர், பல வீடுகள் சூறையாடப்பட்டிருந்தன. அத்துடன் 90,000 குறோசியர்கள் குறோசியாவிலிருந்து வெளியேறியிருந்தனர். இந்த நிலையில் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன.

கரஜினா நகரத்தினை வெற்றிகொண்டமையானது மிகப்பெரும் இராணுவ வெற்றியென்றும் நாட்டிற்குக் கிடைத்த பெருமையென்றும் குறோசியா கருதியது.

இந்த நிலையில் குறித்த இந்தப் படைநடவடிக்கையினைத் தலைமையேற்று நடாத்திய இந்த மூன்று ஜெனரல்களையும் போர் வீரர்களாகவே குறோசியா போற்றிப் புகழ்ந்தது.

இந்த நிலையில் இவர்கள் மூவருக்கும் எதிராகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் பகீரதப் பிரயத்தனத்தினை மேற்கொண்டிருந்தது. இதன் காரணமாக இந்தச் தீர்ப்பாயத்தினது விசாரணைகளுக்கு குறோசியா முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஐ.நாவினது இந்தத் தீர்பாயத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பானது ஏற்றுக்கொள்ளமுடியாதது எனத் தற்போது கூறியிருக்கும் குறோசியாவினது பிரதமர் ஜட்றங்கா கொசர் [Prime Minister Jadranka Kosor of Croatia] தீர்ப்பினை மாற்றுவதற்கு ஏதுவாக தங்களாலான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ளப்போவதாகக் கூறியிருக்கிறார்.

குறோசியப் படையினர் பொதுமக்களை இலக்குவைத்து வகைதொகையற்ற எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்பது வெறுமனே சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டேயன்றி இதுவிடயம் தொடர்பாக எந்தவொரு சாட்சியங்களும் விசாரணைக்குட்படுத்தவில்லை எனக் குறோசிய வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.

குறிப்பிட்ட இந்தப் படை நடவடிக்கையினைத் திட்டமிட்டவர்கள் யாரோ அவர்கள் கரஜினா பிராந்தியத்திலிருந்து சேர்பியர்களை நிரந்தரமாக வெளியேற்றுவதையே நோக்ககாகக் கொண்டிருந்தனர். பலப்பிரயோகத்தின் ஊடாகவும் இதர நடவடிக்கைகள் ஊடாகவும் தங்களது நோக்கங்களை இவர்கள் நிறைவேற்றிக்கொண்டனர் என நீதியரசர்கள் கூறுகிறார்கள்.

குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த குறோசியாவின் முன்னாள் பிரதமர் ருட்ஜ்மன், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கொஜ்கோ சுசக் மற்றும் குறோசிய இராணுவத் தளபதி ஜாங்கோ பொபெட்கோ ஆகியோரை உள்ளடக்கிய குழுவில் ஜெனரல் கொரொவினா ஒரு அங்கமாகச் செயற்பட்டு வந்ததாக நீதிபதிகள் கூறுகிறார்கள். ஜெனரல் கொரொவினா தவிர்ந்த ஏனைய மூவரும் தற்போது உயிருடன் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணை தொடர்பாக குறோசியா அதிகாரிகள் கருத்து தெரிவித்த போது ஐக்கிய அமெரிக்க இராணுவ ஆலோசகர்களும் வேர்ஐினியாவை தளமாகக் கொண்ட Military Professional Resources என்ற ஒப்பந்த நிறுவனமும் குறோசிய படைகளுக்கு பயிற்சி அளித்ததுடன் அவர்களது இராணுவ நடவடிக்கை திட்டமிடலுக்கு உதவியதாகவும் அமெரிக்காவின் Drone aircraft செர்பியர்களின் நடமாட்டம் பற்றி தங்கள் படையினருக்கு தகவல்களை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது பெயர்குறிப்பிட விரும்பாத குறோசிய அதிகாரி தனிப்பட்ட முறையில் தெரிவிக்கும்போது சிஐஏயும், பென்டகனும் தங்கள் நடவடிக்கைகளை திட்டமிட உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இப்போர்க்குற்ற விசாரணையாளர்கள் இத்தகவல்கள் தங்கள் விசாரணை நோக்கத்திற்கு பொருந்தவில்லை எனத் தெரிவித்தனர்.

செய்தி வழிமூலம்: http://www.nytimes.com/2011/04/16/world/europe/16hague.html

puthinappalakai.com

எவ்வாறு இவர்கள் மீது ஐ.நா. போர்க்குற்றம் நிரூபித்தது? எவ்வாறு சிரலியோனின் சார்ல்ஸ் டெய்லர், யுகொசிலாவியாவின் மிலோசவிச் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்கள்?

கள உறவு நெடுக்ஸ் அவர்கள் கூறியது போன்று நாமும் ஒரு சர்வதேச சட்டவியாலர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். சரியான முறையில் தகவல்களை பெறல் வேண்டும். உலகத்தமிழர் பேரவை இல்லை நாடுகடந்த அரசு இதற்காக பணம் தேவைப்பட்டால் ஒரு பகிரங்க வங்கி கணக்கை திறந்து உதவி கேட்க வேண்டும்.

  • தொடங்கியவர்

தங்கள் தரமான கருத்துக்கு நன்றி அகோர்த்தா அவர்களே

ஒரு தாயக உறவுடன் மேலுள்ள எனது கேள்வியை கேட்டேன். அவர், இப்பொழுது "போர்குற்றம்" (war crimes) என சிங்கள இனவாத அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அடுத்த கட்டமாக "இன அழிப்பு / இன சுத்திகரிப்பு' (genocide) என்ற ஐ.நா. நிலைக்கு மாற்றவேண்டும் என்றார்.

அதுவே ஒரு ஐ.நா. / சர்வதேச தரப்பூடாக ஒரு மக்கள் வாக்கெடுப்பு மூலம் (referendum) தனி நாட்டு இட்டுச்செல்லும் என்றார்.

சொன்னவர் ஒரு சட்ட வல்லுநர் அல்ல. ஒரு இன உணர்வாளர் மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.