Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிக்கை தொடர்பான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி – 15 நாடுகளுக்கு ஜனாதிபதி மடல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை தொடர்பான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி – 15 நாடுகளுக்கு ஜனாதிபதி மடல்!

Posted by admin On May 1st, 2011 at 10:36 am

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு இதுவரை உத்தியோக பூர்வமாகப் பதிலளிக்காத இலங்கை அரசு, அந்த அறிக்கைக்கு எதிரான இராஜதந்திர நடவடிக்கைகளைக் கொழும்பு தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஐ.நா. பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் வீற்றோ அதிகாரம் கொண்ட 5 நாடுகளுக்கும், நிரந்தர உறுப்பினர்கள் அல்லாத 10 நாடுகளுக்கும் தனது நிலைப்பாட்டை விளக்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதம் அனுப்பி வைக்கவுள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படைகள் அற்றது; தவறான உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டது என்று கூறி அதனை அடியோடு நிராகரித்துள்ளது அரசு. எனினும், இந்த அறிக்கையால் உலக அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அது அஞ்சுகிறது.

எனவே, அதனைச் சமாளிப்பதற்குத் தேவையான ராஜதந்திரப் போரை அது முன்னெடுத்து வருகின்றது. அதேசமயத்தில் நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்க அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் முயற்சித்து வருகின்றன. எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கை வரவுள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் அறிக்கை தொடர்பில் அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை இலங்கைத் தலைவர்களுக்கு விளக்க உள்ளார்.

அறிக்கை வெளியாவதற்கு முன்னரே பிளேக்கின் பயணம் திட்டமிடப்பட்டு விட்டது என்றாலும், இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது நிச்சயம் அவர் அறிக்கை விடயத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வார் என்று நியூயோர்க்கில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னோடியாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டினன், கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஏனைய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தியா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நோர்வே, தென்னாபிரிக்கா, தென்கொரியா, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகள் இந்த இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். கொழும்பிலுள்ள ஐ.நா. அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையில் நிலைத்து நிற்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நிபுணர் குழுவின் அறிக்கை எந்த வகையில் உதவும் அல்லது உதவ முடியும் என்பது தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. அதேவேளையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்டுள்ள ரஷ்யா மற்றும் சீனா ஆகியன, அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளன.

எனினும், அறிக்கை ஐ.நா. பாதுகாப்புச் சபையிலேயோ மனித உரிமைகள் சபையிலேயோ சமர்ப்பிக்கப்படலாம் என்ற அச்சம் கொழும்பில் அரசியல் தலைமையிடம் நிலவுகிறது. அவ்வாறான ஒரு சூழலில் இலங்கையைப் பாதுகாக்கக்கூடிய ராஜதந்திர நடவடிக்கைகளில் கொழும்பு தீவிரம் காட்டி வருகின்றது. அதற்காகவே அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்ப ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார். அந்தக் கடிதத்துடன் இணைப்பு ஆவணம் ஒன்றும் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அநேகமாக அது, இறுதிப் போர் தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சு தயாரித்த வெள்ளை அறிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரிதம்.கொம்

Here are the contacts for 2011 UN security council member's e-mail ids. Please write when time permits :-)

ஐ.நா. பாதுகாப்பு பேரவை : ஐந்து வீட்டோ உரிமை உள்ள நாடுகளும் பத்து தற்காலிக நாடுகளும்

நாங்களும் எமது கடிதங்களை, ஆவணங்களை, படங்களை அனுப்பி வைப்போம்.

China: ChinaMissionUN@Gmail.com HE Mr. LI Baodong http://www.china-un.org/eng/

France: france@franceonu.org HE Mr Gerard ARAUD http://www.franceonu...p.php?rubrique2

Russian Federation: rusun@un.int HE Vitaly Churkin http://www.un.int/ru...ndex_plain.html

United Kingdom, UK@UN.int HE Mark Lyall Grant http://ukun.fco.gov.uk/en/

USA: http://archive.usun....s/Contact2.html HE Susan Rice http://www.usunnewyork.usmission.gov/

Bosnia and Herzegovina: bihun@mfa.gov.ba HE. Mr. Ivan Barbalić www.bhmisijaun.org/

Brazil: delbrasonu@delbrasonu.org HE Maria Luiza Ribeiro Viotti http://www.un.int/brazil/

Colombia: colombia@colombiaun.org H.E. Mr. Nestor Osorio http://www.colombiau...glish/Home.html

Gabon: mission.gabon@ties.itu.int, gabon@un.int HE Guy Blaise Nambo-Wezet http://www.un.int/gabon/

Germany: info@new-york-un.diplo.de HE Dr. Peter Wittig http://www.new-york-un.diplo.de/

India India@un.int, ind_general@indiaun.net HE Hardeep Singh Puri http://www.un.int/india/

Lebanon: mission.lebanon@ties.itu.int, contact@lebanonun.org HE Najla Riachi Assaker http://www.un.int/wc...nt/site/lebanon

Nigeria: mission-nigeria@bluewin.ch, HE Martin Ihoeghian Uhomoibhi http://www.nigeriaunmission.org/

Portugal: portugal@un.int HE José Filipe Moraes Cabral http://www.missionofportugal.org/pmop/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.