Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய விமானங்கள் உணவுப் பொதிகளைப் போட்டஅந்தக் காலத்தை விடவும் தற்போது மோசமான நிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விமானங்கள் உணவுப் பொதிகளைப் போட்டஅந்தக் காலத்தை விடவும் தற்போது மோசமான நிலை!

எம்மைக் கூர்ந்து கவனித்து வருகின்றன சர்வதேச நாடுகள்

(லங்கா ஈ நியூஸ் 04-05-2011) தியவன்ன ஓயாவுக்கு வெளியில் தான் சகல விதமான விலை அதிகரிப்புகளும் இடம்பெறுகின்றன. நாடாளுமன்றத்தில் எதுவுமே தெரிவதில்லை. மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை கூட இந்தச் சபைக்கு காட்டப்படுவதில்லை என ஜே.வி.பி உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி நேற்று நாடாளு மன்றத்தில் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றம் நேற்று மாலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. நேற்றைய வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் மிகவும் மந்தமாகவே இருந்தது. எனினும் ஆளும் கட்சி உறுப்பி ரான ஏ.எச்.எம்.அஸ்வர் கேள்வி நேரத்தின் போது சபையில் சிறிது கலகலப்பை ஏற்படுத்தினார். கிளிநொச்சி மாவட்டத்தில் சங்குப்பிட்டி பூநகரி வீதி தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார்.இந்தக் கேள்விக்கு நெடுஞ் சாலைகள் அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். ஆனால் அங்கே தான் ஒரு சிக்கல் ஏற்பட்டது. கேள்வியை எழுப்பிய அஸ்வர் தனது கேள்வியை தமிழ் மொழியிலேயே கேட்டார். ஆனால் அதன் சரியான மொழி பெயர்ப்பு அமைச்சர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாக ஐயா! நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பது புரியவில்லை. மொழிபெயர்ப்பாளர்கள் கூறுவதும் புரியவில்லை. தயவு செய்து சிங்களத்தில் கேளுங்கள் என்றார் அமைச்சர். இல்லை இல்லை கிளிநொச்சியில் தமிழ் பேசும் மக்களே பெரிதும் வாழ்கின்றனர். சங்குப்பிட்டி வீதியில் இருந்து பூநகரி நெற்புலவு கிராமத்துக்கு பிரவேசிக்கும் வீதி சிதைவுற்ற நிலையில் இருக்கின்றது.இதனால் அங்கு நெல் மற்றும் தென்னை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பாதையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கமாட்டீர்களா?நான் கேட்கும் கேள்வி கிளிநொச்சியில் வாழும் தமிழ் மக்களுக்கும் புரிய வேண்டும். அதனால் தமிழில் தான் கேட்பேன் என்று அடம் பிடித்தார் அஸ்வர் எம்.பி.

அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இன்னும் சிலர் ஐயா! நீங்கள் சிங்களத்தில் கேளுங்கள் என்று கூறினார். இது நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு சிறிது கடுப்பை ஏற்படுத்திவிட்டது. ஏன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு நான் தமிழ் மொழியில் பேசுவது பிடிக்கவில்லையா? அல்லது தமிழில் பேசக் கூடாது என்கிறீர்களா? என்று ஒரு போடு போட்டார் அஸ்வர். கமத் தொழிலில் அமைச்சரிடமும் ஒரு கேள்வியை எழுப்பினார் அஸ்வர். அதாவது பூநகரிப் பிரதேசத்தில் பல கிராமங்களில் உள்ள நெல் வயல்களில் புதிய வகையான நோய்த் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் கிருமி நாசினிகளுக்காக பெரும் பணத்தை செலவிட முடியாதிருக்கின்றனர்.எனவே கமத்தொழில் அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஸ்வர் கேட்டார்.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார் அமைச்சர்.

தொடர்ந்து சபை நடவடிக்கை ஆரம்பமாகின.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தி விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். ஒட்டுமொத்தமாக இந்த நிபுணர் குழு அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறினார் பீரிஸ்.அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் ஒழுக்கசீலர்கள் என்றும் இராணுவ நடவடிக்கைகள் துன்பியல் நிகழ்வு என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது அமைச்சருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தத்தானே செய்யும். இந்த அறிக்கை பக்கச் சார்ப் பானது. ஒரு தலைப்பட்ஷ மானது என்று கூறியதுடன் கடந்தகால கசப்புணர்வுகளை மீண்டும் தூண்டிவிடுவதாகவும் ஆறிவரும் புண்ணைக் கிளறி விட்டு வேடிக்கை பார்ப்பதாகும் என்றும் கண்டித்தார்.

தமிழ்க் கட்சிகளுடனும் பேசுகின்றோம்

அத்தோடு நின்றுவிடவில்லை. யுத்தத்தின் பின் வடக்குää கிழக்கு மாகாண மக்கள் அபிவிருத்திக்காக பல கோடிகளை செலவிடுகின்றோம். நிரந்தரமான தீர்வு ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை களையும் ஆரம்பித்துள்ளதாக வும் குறிப்பிட்டார். ஏற்கனவே ஐந்து முறை பேசி விட்டார்கள். ஆறாவது தடவையாகவும் பேசப்போகின்றனர். எதைச் செய்யப் போகின்றார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஆகாயத்தில் உணவுப் பொட்டலம்

இந்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரம சிங்கவும் தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திப் பேசினார். நமது நாட்டின் இறைமைக்கு சவால் விடும் வகையில் எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும். இந்திய விமானங்கள் வடக்கில் ஆகாயத்திலிருந்து உண வுப் பொட்டலங்களைப் போட்ட காலத்தை விட மோசமான ஒரு நிலையில் இருக்கின்றோம். சர்வதேசம் நம்மை மிகவும் கூர்மையாக அவதானித்து வருகின் றது என்று கூறியதோடு அரசு நேர்மையான வழியில் மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஐ.தே.கட்சி ஆதரவு வழங்கும் என்று கூறினார்.

படைத்தரப்பினரின் அச்சுறுத்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமக்கு விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக சிறப்புரிமை பிரச்சினை ஒன்றைக் கிளப்பினார்.

இதனைத் தொடர்ந்து பிரதேச அபிவிருத்தி வங்கி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது. தமிழ் மொழி பெயர்ப்பால் பிரச்சினை. இந்தச் சட்ட திருத்தம் தொடர் பாக ஐ.தே.க உறுப்பினர் ஆர்.யோகராஜன் ஒரு பூர்வாங்க ஆட்சேபனையை எழுப்பினார். அதாவது நாடாளுமன்ற ஒழுங் குப்பத்திரத்தில் பிரதேசிய சங்வர்த்தன வங்கி. என்று சிங்கள மொழியில் குறிப்பிட்டதை அப்படியே தமிழிலும் எழுதியுள்ளார்கள். இது தவறு. தமிழ் மொழியும் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது வெறும் பெயரளவில் மட்டும் தானா? சரியான தமிழ் மொழி பெயர்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார் யோகராஜன். அப்போது சபைக்கு தலைமை தாங்கிய அஸ்வர் இந்த விடயம்தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இப்படியான தவறுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

எல்லாமே தியவன்ன ஓயாவுக்கு வெளியேதான்

இந்த அரசாங்கம் ஆயிரமாயிரம் மக்களைக் கூட்டி மேதின ஊர்வலம் நடத்துகின்றது. இது உழைக்கும் தொழிலாளர்களின் தினம். ஆனால் மேதின மேடையில் முழங்கியவர்கள் எவரும் தொழிலாளர்களைப் பற்றிப் பேசவில்லை. நாடாளுமன்றத்துக்கு தெரியாமலே பால்மாää கோதுமைமாää காஸ்ää சீனிää பருப்பு என அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளெல்லாம் நாளாந்தம் அதிகரிக்கப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களின் அத்தியாவசியமான உணவான கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதால் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் பற்றி எல்லாம் இந் தச் சபையில் கேட்கமாட்டீர்கள். உங்களுடைய தேவைக்காக குறை நிரப்புப் பிரேரணை களை மட்டும் இங்கே கொண்டு வந்து நிறைவேற்றுகின்றீர்கள்.எல்லா விடயங்களும் நாடாளு மன்றத்துக்கு வெளியே அதாவது தியவன்ன ஓயாவுக்கு வெளியே தான் தீர்மானிக்கப் படுகின்றன என்று நக்கலடித்தார் சுனில் ஹந்துன்நெத்தி. பிரதேச அபிவிருத்தி வங்கி தொடர்பான விவாதம் மிகவும் மந்த கதியிலேயே நடந்து முடிந்தது.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.