Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றொபேட் ஓ பிளேக்கின் பயணம் குறித்த செய்திகளை கொழும்பு ஊடகங்கள் மறைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Featured Replies

றொபேட் ஓ பிளேக்கின் பயணம் குறித்த செய்திகளை கொழும்பு ஊடகங்கள் மறைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் றொபேட் ஒ பிளேகின் இலங்கைப் பயணம் குறித்த செய்திகளை அரச ஊடகங்களும் தனியார் சிங்கள ஆங்கில ஊடகங்களும் இருட்டடிப்பு செய்து வருவதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்.

றொபேட் ஓ பிளேக் கொழும்பு சென்றவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார். கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுடனும் கலந்துரையாடினார். ஆனால் இவை குறித்த எந்த செய்தியும் கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள ஆங்கில நாளேடுகளில் பிரசுரிக்கப்படவில்லை.

றொபேட் ஒ பிளேக் கிளிநொச்சி முல்லைத்தீவு அகிய மாவட்டங்களுக்கு நேற்றுப் பயணம் செய்து மக்களையும் அதிகாரிகளையும் சந்தித்தார். அரசாங்கத்தின் பாதுகாப்பு இன்றி தனியார் உலங்கு வானூர்தியில் அவர் சென்றார். அது தொடர்பான செய்திகள் படங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. அரச ஊடகங்கள் எதுவும் றொபேட் ஒ பிளக்கின் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆனால் நிபுணர் குழவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செய்திகளுக்கும், நிழற்படங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7698

  • தொடங்கியவர்

அரசியல் தீர்வு விடயத்தில் மேற்குலகு தீவிர கரிசனை! போர்க்குற்ற விசாரணையை முன்வைத்து அழுத்தம்!!

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்துவதன் ஊடாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் மேற்கத்தைய நாடுகள் தீவிர கரிசனை கொண்டிருப்பதாக தெரிய வருகின்றது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

நிபுணர்கள் குழுவின் இப் பரிந்துரையை சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் வரவேற்றுள்ள நிலையில், மேற்கத்தைய நாடுகளும் இக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கொழும்பு சுயாதீனமான விசாரணைகளைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இத்தகைய கருத்தை தற்போது கொழும்புக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சூஸன் ரைஸ் ஆகியோரும் வலியுறுத்தியிருந்தனர்.

அதேவேளை, நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்த வரவேற்பானது. இந்தியாவின் ஆதரவு இல்லாமல் வெளிப்பட்டிருக்காது எனவும் ஒரு கருத்து உண்டு. இத்தகையதொரு அழுத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக ஏற்படுத்துவதன் மூலம் கொழும்புக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான ஒரு நெருக்கடியை ஏற்படுத்த புதுடில்லி திட்டமிட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.

இந் நிலையில், ரொபேர்ட் ஓ பிளேக் கொழும்பைச் சென்றடைந்தவுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸைச் சந்தித்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை மீண்டும் சந்தித்து ரொபேர்ட் ஓ பிளேக் ஆலோசனை நடத்தவுள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ரொபேர்ட் ஓ பிளேக் தொடர்ச்சியாக நடத்துகின்ற இச் சந்திப்புக்களுக்கு முக்கிய அரசியல் பின்னணி ஒன்று இருப்பதாகவும் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான காய்நகர்த்தலுக்கு ஊடாக தமிழ் மக்களுக்கான நியாயமான ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு கொழும்பை நெருக்கும் வகையில் இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இத்தகையதொரு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பின்வாங்கினால், போர்க்குற்றங்கள் தொடர்பில் கொழும்பை மேற்கத்தைய நாடுகள் நெருக்கிப் பிடிக்கும் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. தேவேளை, மேற்குலகின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற அரசாங்கத்தின் உப குழுக் கூட்டத்தின் பின்னர் எதிர்பாரத விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்தித்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐ.நா அறிக்கையை வைத்து தன்னை அடிபணிய வைக்க முடியாது என்றும், மேற்குலக ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு தான் அடிபணியப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை காண்பதற்கு தான் தயாரக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு இரு வருடங்கள் ஆகின்ற நிலையில், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு காத்திரமான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பதற்கு ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={1B5D5951-771B-4A33-B8A3-BC6A69A50980}

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.