Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா நிபுணர் குழு அறிக்கை கூறாது விட்ட முக்கிய விடயங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா நிபுணர் குழு அறிக்கை கூறாது விட்ட முக்கிய விடயங்கள்.

Posted by: on May 6, 2011

இருபதாம் நூற்றாண்டு ஜேர்மனியில் நடந்த யூத இனப் படுகொலை காரணமாக ஜெனோசைற் (Genocide) என்ற புதிய சர்வதேசச் சட்டம் ஜநாவால் உருவாக்கப்பட்டது. இனப் படுகொலைத் தடுப்புத் தண்டனைச் சட்டம் (The Convention on the Prevention and Punishment of Genocide) டிசம்பர் 1948ல் நிறைவேற்றப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது.

இந்தச் சட்டத்தின் முதலாம் சரத்து (Article 1) மிகவும் முக்கியமானது. ஒரு தேசிய, இன, வகுப்பு, மதம் சார்ந்தோரை முற்றாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்த குறிப்பிட்ட வன்செயல்களை இனப் படுகொலையாக இந்தச் சட்டம் கணிப்பிடுகிறது.

இனப்படுகொலை போர்க் காலத்தில் செய்யப்பட்டாலும் அமைதிக் காலத்தில் செய்யப்பட்டாலும் சர்வதேசச் சட்டத்தின் கீழ் அது குற்றமாகும். இதைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் இந்தச் சட்டத்தின் பங்காளிகள் உடன்படுகின்றனர். (Ref. Oppenheim’s International Law by Lauterpacht, Vol 2, 7th Edition.p585)

உலக நீதிமன்றம் (World Covrt) என்றழைக்கப்படும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2007 பெப்பிரவரி 26ம் நாள் பொஸ்னியா தொடர்பான தீர்ப்பின் 293,294ம் பந்திகளில் ஜெனோசைற் என்ற இனப் படுகொலைக் குற்றத்திற்கு 6 மில்லியன் போன்ற பெரும் தொகையினரைப் படுகொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியது.

சிறேபிறேனிக்காவில் கொல்லப்பட்ட 7,000 பொஸ்னிய முஸ்லிம்கள் ஜெனோசைற் குற்றமாகக் கணிப்பிடப்படுவதற்குப் போதுமானவர்கள் என்று அது தீர்ப்பு வழங்கியது. கொல்லப்பட்டவர்கள் சிறேபிறேனிக்கா முஸ்லிம்களில் ஐந்தில் ஒரு பங்கினராவர்.

பொஸ்னியா வழக்கில் உலக நீதி மன்றம் ஜெனோசைற் என்ற சொல்லைப் பாவிக்கும் வரை பிறிதொருவரும் அந்தச் சொல்லை இந்தப் படுகொலைகள் தொடர்பில் பயன்படுத்தவில்லை. அதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. ஜெனோசைற் சட்டத்தின் பங்காளிகளுக்கு அதைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் வேண்டிய கடப்பாடு இருக்கிறது.

அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக அவர்கள் அனைவரும் ஜெனோசைற் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குத் தயங்கினார்கள். ஐநா நிபுணர் குழு அறிக்கையும் இதே தயக்கத்தைக் காட்டுகிறது. காரணம் மிகத் தெளிவானது. ஜெனோசைற் நடந்ததாக அறிக்கையிட்டால் முதலாம் சரத்து வலியுறுத்துவது போல் ஜெனோசைற் சட்டத்தின் பங்காளி நாடுகள் படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக ஐநா நிபுணர் குழு மிகவும் சமயோசிதமாக இந்த வார்த்தைப் பிரயோகத்தைத் தட்டிக் கழித்துள்ளது. 7,000 பொஸ்னிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு உலக நீதிமன்றம் அது ஜெனோசைற் குற்றமென்று தீர்ப்பு வழங்கித் தண்டனையும் வழங்கியுள்ளது.

ஐநா நிபுணர் குழு அறிக்கையின் 137ம் பந்தியில் வன்னிப் போரில் கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கை 40,000 வரை இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது கூடவாக இருக்கலாமேயன்றிக் குறைய வாய்ப்பில்லை. அறிக்கை சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் கூட அது ஜெனோசைற் குற்றம் சுமத்தப்படுவதற்குப் போதுமான எண்ணிக்கையே.

பொது மக்களை அழிக்கும் நோக்கில் செய்யப்பட்ட குறிப்பிட்ட வன்செயல்களை (Specific Acts such as Killing with Intent to Destroy – Article 1 Genocide Convention) ஐநா நிபுணர் குழு அறிக்கை 176, 202ம் பந்திகளில் பட்டியலிடுகிறது. ஆனால் ஜெனோசைற் என்று குற்றஞ் சொல்ல மறுக்கின்றது.

சர்வதேசச் சட்டவியலாளர்களின் பார்வையில் ஐநா படுதோல்வி அடைந்த மிகவும் துன்பகரமான நிகழ்ச்சிகளாக சிறேபிறேனிக்காப் படுகொலைகள் இடம்பெற்றன. யூத இன அழிப்பை நிறுத்த இயலாத சர்வதேச சமூகம் அதே இயலாமையை சிறேபிறேனிக்காவில் காட்டியுள்ளது.

2011 மார்ச்சு, ஏப்பிரல் மாதங்களில் ஐவரி கோஸ்ற், லிபியா தொடர்பாக ஐநா மிகவும் துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிறிலங்கா தொடர்பாக அதே வேகத்தை ஐநா காட்டவில்லை. சர்வதேச அமைதி, நீதி, நியாயம், பாதுகாப்புத் தொடர்பான கட்டுமானங்களை மீறுவதற்கு சிறிலங்காவை அனுமதிக்கக் கூடாது என்று நீதியாளர்கள் விரும்புகின்றனர்.

சிறிலங்காவைச் சர்வதேச சமுகம் தப்பிக்க விடுமேயானால் றுவான்டா, பொஸ்னியா தொடர்பாக உலக நீதி மன்றம் கட்டியெழுப்பிய நீதிப் பாரம்பரியம் தகர்ந்துவிடும். அத்தோடு ஜெனோசைற் சட்டம் தனது வலுவை இழந்து அர்த்தமற்றதாகி விடும்.

21ம் நூற்றாண்டு ஆரம்பித்த பிறகு நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை என்று வன்னித் தமிழ்ப் பொதுமக்களில் 40,000 பேர் கொல்லப்பட்டதை ஐநா அறிக்கை குறிப்பிடத் தவறியுள்ளதையும் கண்டிக்க வேண்டி உள்ளது.

ஐநா நிபுணர் குழு அறிக்கை குறிப்பிடாமல் விட்ட இன்னொரு முக்கிய விடயம் இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா மாத்திரம் நடத்தவில்லை. எல்லா விதமான உதவிகளையும் இருபதிற்கும் மேற்பட்ட நாடுகள் வழங்கியதால் தான் இறுதிப் போரில் அரசினால் வெற்றி பெற முடிந்தது.

ஆயுத உதவிகள் செய்த நாடுகளில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், இஸ்ரேயில், ஈரான், அமெரிக்கா, செக் குடியரசு, ருஷ்யா, உக்கிரேயின் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், நச்சு வாயு ஆயுதங்கள் இந்தியாவின் சிபாரிசுடன் ருஷ்யா வழங்கியுள்ளது. நரம்பைச் செயலிழக்கச் செய்யும் நியூரோபராலிற்றிக் (Neuroparalytic) றொக்கற்றுகளை ஈரான் வழங்கியது.

பொருளாதார உதவிகளை மேற்குலக நாடுகள் , ஐப்பான், சீனா, இந்தியா, ஈரான், லிபியா, ஆகியன வழங்கியுள்ளன. புலனாய்வுத் தகவல் வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் அதன் பங்காளி நாடு அமெரிக்கா இருக்கிறது.

இந்தியாவின் இராணுவ அணியொன்று இறுதிக் கட்டப் போரில் பங்கு பற்றியது. இந்தியப் புலனாய்வாளர்கள் ஐம்பது வரையிலானோர் சிறிலங்கா படையினருடன் தரையில் செயற்பட்டனர். 2009 ஐனவரியில் கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய வேவு விமானங்கள் வன்னிக்கு மேலாகப் பறந்து தகவல் திரட்டிப் போருக்கு உதவின.

பொதுமக்களின் உயிரிழப்பு பற்றி இந்திய மத்திய அரசிற்கு நன்றாகத் தெரியும். அதை மறைப்பதற்கும் உலகம் அறியாமல் தடுப்பதற்கும் அது கடும் முயற்சி எடுத்தது. போர் நிறுத்தம் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்திய மத்திய அரசும் தமிழ் நாடு மாநில அரசும் கூட்டாகச் செயற்பட்டன.

விசாரணை அறிக்கை மேற்கூறியவற்றைக் கணக்கில் எடுக்கவில்லை. ஜெனோசைற் சட்டத்தின் கீழ் இனப் படுகொலைகள் நடப்பதைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் பொறுப்பான நாடுகள் படுகொலைகளைப் பல விதமாக ஊக்குவித்துள்ளன. இதைச் சுட்டிக் காட்டத் தவறியது அறிக்கையின் மிகப் பெரிய குறைபாடாகும்.

அறிக்கையின் 417 தொடக்கம் 420 வரையான பந்திகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பானது. புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் விடுதலைப் புலிகளுக்கு மன வலிமையும் நிதி ஆதார வலிமையும் பல தசாப்தங்களாக வழங்கியதை ஒரு பாரிய குற்றம் போல் அறிக்கை குறிப்பிடுகிறது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் எடுத்த கவன ஈர்ப்புப் போராட்டங்கள் உலக மட்டத்தில் வன்னிப் படுகொலைகள் பற்றிய விழிப்பை ஏற்படுத்தியது. அரசு நலன்புரி நிலையங்கள் என்று பொய்யுரை கூறிய முட்கம்பி வேலி சூழ்ந்த தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டோரின் உண்மை நிலவரத்தை உலகிற்கு உணர்த்தி அவர்களுடைய விடுதலைக்கு வழி வகுத்தவர்கள் புலம் பெயர் தமிழர்களே.

புலம்பெயர் தமிழர்கள் பற்றிக் குறிப்பிடும் அறிக்கை இனத்துவத் தேசியம் (Ethnic Nationalism) பற்றிய கருத்தை வெளியிடத் தவறியுள்ளது. எல்லைகளால் பிளவு பட்ட ஒரே மொழி, பண்பாடு, வரலாற்றைக் கொண்ட இனங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கு வருவதானது நவீன உலக இயல்பு.

புலம் பெயர் தமிழர்கள் புலிகளுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவு சிங்களத் தேசியவாதத்தை ஊக்குவித்தது என்ற அறிக்கைக் கூற்று நிராகரிக்கப்பட வேண்டிய வரலாற்றுத் திரிபு.

சிங்களத் தேசியவாதம் மிகப் பழமையானது. தமிழர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆள வேண்டும் என்ற இலக்கு சிங்கள ஆன்மாவில் ஊறிய விடயம். அதிலிருந்து விடுபட்டு விடுதலை பெறுவதற்குத் தமிழ்த் தேசியம் இன்று வரை முயற்சி செய்கிறது.

http://www.tamilkathir.com/news/4747/58//d,full_article.aspx

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு முன்னர் தமிழர்களுக்கு நடப்பது "இன படுகொலை" ( Genocide) என விவரித்து எழுதியதற்கு ஒரு பேராசிரியர் அளித்த பதிலில் ஒரு பகுதி:

குறிப்பாக ஆயுதம் தாங்கிய ஒரு குழு தமிழர்களுக்கு பாதுகாப்பு அளித்ததால், தமிழ் மக்களை காக்க ஒரு பாதுகாப்பு அமைப்பு இருந்ததாக அவர் எழுதியிருந்தார். மற்றைய இன அழிப்பு படுகொலைகளில் அவ்வாறு இருக்கவில்லை என சுட்டிக்காட்டியதோடு சிங்களம் செய்வது ஒரு நாள் போர்க்குற்றம் ஆகும் எனவும் எழுதினார்.

---------------------------------------------------------------------

You are right to suggest that the Sri Lankan government is using the so-called "war on terror" as a justification for wiping out the Tamil Tigers. But the government is careful not to declare that its intent is to wipe out Tamils. So, if the matter was brought to the ICC today, there is no way that the Sri Lankan government (for all its faults -- and I personally think that it is a terrible government) would be indicted for genocide. I think you might be able to make the case that the government is supressing freedom of expression. There are accusations that it may have been involved in the assassinations of high profile journalist who simply criticized the government's handling of the war against the Tamil Tigers. I think a case could be made against the government for war crimes or crimes against humanity. But, to give you my honest opinion -- and I just got back from giving a talk at Harvard Law school on this issue of "core crimes" -- I don't think that the Sri Lankan government will be charged with "genocide".

The systematic elimination of 6 million Jews was genocide. The systematic killings of 800,000 Tutsi in Rwanda was genocide. The millions of Cambodians killed by Pol Pot's regime was genocide. What is happening to the Darfurian today is genocide. Note that in every case, the victims were considered defenseless. I don't think you can consider the Tamil Tigers a defenseless group. They have military training, they have weapons, they have the means to conbat the Sri Lankan government forces. So you can't place them in the same category as the ones I mentioned above.

So, in conclusion, the answer is "NO" - the assault on the Tamil Tigers is not Genocide. But what the Sri Lanka government is doing is also unacceptable and if it is not careful, it can be charged with crimes against humanity, or war crimes, one day.

I hope this explanation helps. From an international law perspective, one has to be very careful with the way terms like genocide are used.

Best wishes to you.

Andy

மேலே எழுதப்பட்ட பதில் மாசி மாதம் 2009 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.

ஐ.நா. அறிக்கை வந்தபின்னர் அவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு அவரின் வாதத்தின் அடிப்படையில் இன்று தமிழ் மக்களுக்கு நடப்பது ஒரு "இனப்படுகொலை" என கூறலாமா? என கேட்டுள்ளேன். பதில் இன்னும் இல்லை.

எமக்கு முன்னுள்ள சாதிக்கப்பட வேண்டிய வரலாற்று தேவை இந்த "போர்குற்றம்" என்பதில் இருந்து அங்கு நடந்தது / நடப்பது "இனப்படுகொலை" என ஐ.நா. உட்பட சர்வதேசத்தால் ஆதாரத்துடன் ஏற்க வைப்பதே.

பொதுவாக எட்டு கட்டங்கள் உள்ளதாக இனப்படுகொலை வரைவிலக்கணம் கூறுகின்றதாம்.

The 8 Stages of Genocide

Genocide is a process that develops in eight stages that are predictable but not inexorable. At each stage, preventive measures can stop it. The process is not linear. Logically, later stages must be preceded by earlier stages. But all stages continue to operate throughout the process.

http://www.genocidewatch.org/aboutgenocide/8stagesofgenocide.html

http://www.genocidewatch.org/images/8StagesBriefingpaper.pdf

Edited by akootha

இல்லாததை இணைக்க முயற்சிப்பதும் திருத்தியமைப்பதும் காலத்தைக் கடத்தும். இருக்கும் விடயங்களை வைத்துக் கொண்டுதான் நகர்வுகள் இருக்க வேண்டும். தற்போதய நிலையில் சர்வதேசம் இலங்கையைப் பதிலளிக்கச் செய்ய வேண்டும். அதற்கான நிர்ப்பந்தங்கள் வலுவானதாக இருக்க வேண்டும். நிபுணர் குழுவின் அடிப்படையில் போர் நடந்த பகுதிகளில் தடயங்கள் ஆராயப்பட்டால் போர்க் குற்றம் நிருபணமாகலாம்.

இவை நிருபணமானால் அண்மையில் உள்ள பிராந்திய வல்லரசின் பங்கு என்னவாகவிருந்தது என்ற கேள்வி எழும். இதனால்தான் இந்த அறிக்கை சிலவற்றை விட்டுச் சென்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.

எப்படியான நல்ல கட்டுரைகள் பல தமிழில் வருகின்றது , ஆனால் அதைவிடமுக்கியம் ஆங்கிலத்தில் சர்வதேசத்துக்கு விளங்க கூடியதாக ஆங்கில ஊடகங்களில் வர செய்யவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.