Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளை தேடி நான்காம் மாடிக்கு வந்த மக்களின் கண்ணீர் பேட்டிகள்...பேட்டி -2

Featured Replies

ஏ.குகனேஸ்வரன் (58)--தங்கநகர், கிளிவெட்டி, மூதூர்.

நான் விவசாயம் செய்கிறேன். எனக்கு ஐந்து பிள்ளைகள். காணாமல் போனவர் இரண்டாவது மகள் தயானந்த குமாரி. பிரியா வென்றும் அவளை அழைப்போம். 2008.11.19 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து அவளை அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் சென்றவர்கள் கடற்படை மற்றும் பொலிசாராயிருக்கவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். எங்கள் வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் பொலிஸ் பரிசோதனை நிலையம் அமைந்துள்ளது. காணாமல் போகையில் என் மகளுக்கு 26 வயது. அவள் NGO ஒன்றில் பணிபுந்து வந்தாள். என் மகளுக்கு புலிகள் அமைப்புட னோ வேறெந்த அமைப்புடனோ எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று நான் உறுதியுடன் கூறுவேன்.

இது சம்பந்தமாக ஐ.சி.ஆர்.சி மற்றும் திருகோண மலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் நான் முறைப்பாடுகள் செய்துள்ளேன். இதுவரை எந்தத் தகவலும் இல்லை ஐ.சி.ஆர்.சி இடம் இருந்து கடந்த மாதம் ஒரு கடிதம் வந்தது. அதில் பதிவைப் புதிப்பிக்கும்படி கேட்டிருந்தது. மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டு காணாமற் போனவர்கள் பற்றி நடவடிக்கை எடுக்கலாமென திருகோணமலையைச் சேர்ந்த சிங்கள சட்டத்தரணி ஒருவரும், எங்கள் மாதர் சங்கத்தின் தலைவியும் சொன்னதன் பேரில் நாங்கள் வன்னி மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த சுமார் 85 பேர் கொழும்பு புறப்பட்டுப் போனோம்.

மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டபின் அவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஒரு அறையில் தங்கி அடுத்த நாள் வெலிக்கடைச் சிறைச் சாலைக்குச் சென்றோம். அங்கு எங்களை உள்ளே அனுப்பவில்லை. சிலர் மட்டும் சென்றார்கள். அங்கு விசாரணை செய்து தீர்ப்பளிக் கப்பட்ட கைதிகள் மாத்திரம்தான் இருப்பதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

பின்னர் நாங்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு நான்காம் மாடிக்கும் சென்றோம். அங்கு எங்களை ஒவ்வொரு குழுவாக உள்ளே அழைப்பித்து விசாரணை செய்தார்கள். படங்களையும் விவரங்களையும் வாங்கிப் பார்த்தார்கள். என் மகளின் படத்தை வாங்கிப் பார்க்கையில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும் போது என் மகள் அவர்கள் பாதுகாப்பிலோ அவர்களுக்குத் தெரிந்த வேறு இடத்திலோதான் இருக்கவேண்டும் என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது.

அரசுதான் கவனமெடுத்து எங்களுக்கு எங்கள் பிள்ளைகளைத் தேடித் தரவேண்டும். வேலி பயிரைக் காப்பாற்றவேண்டும். வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது?

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1764:2011-05-08-06-56-29&catid=1:latest-news&Itemid=18

Edited by சிறிலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்
<_< இவர்களின் துன்பங்களை சிங்களம் தனது ஐ.நா எதிர்ப்பு அரசியலுக்காகப் பாவித்திருக்கிறது. நியாயமாவது மண்ணாவது ??!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.