Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரெலியா சிட்னி நகரில் மாட்டீன் பிளேசில் வரும் 18ம் திகதி வன்னிப் பேரவல நினைவு நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா சிட்னி நகரில் மாட்டீன் பிளேசில் வரும் 18ம் திகதி வன்னிப் பேரவல நினைவு நாள்.

On May 18 2009, the extent of the slaughter in our homeland crystallised and changed our lives forever.

Soils of culture once irrigated by rivers of our nation are now swamplands of carnage; trees of life that flourished with the rise of our civilisation now lie mangled and charred amid a web of deceit and shattered dreams.

Two years on, let us remember the thousands of Tamil civilians killed for simply voicing their desire to live freely, with respect and dignity.

To a generation of Tamils eliminated under the gaze of the world, and to those left behind, trapped inside a prison of torment in this bloody aftermath, we give a day of remembrance.

And the fallen heroes who sacrificed everything to give our people meaning, to your bravery and dedication to the ideals of freedom and liberty, we pay our respects.

Lest We Forget.

SYDNEY

Wednesday, 18 May 2011

Martin Place Amphitheater

Martin Place

Sydney, Australia

6.00PM - 8.00PM

Contact Details: 0469 089 883

image001cz.jpg

மேற்கண்ட விளம்பர ஊடகம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணமுள்ளது.... தமிழில் எழுத படிக்க தெரியாத வேற்று மொழியினர் பார்த்தவுடன் புரிந்து கொள்ள எழுத்துருக்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தால் இந்நிகழ்ச்சியின் நோக்கத்திற்கான வெற்றிவாய்ப்புக்கள் இன்னும் அதிகம்.....

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
unledsp.png
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகம் எங்களுக்கிழைத்த அநீதிக்கு நீதி வழங்கும் நேரம் இது -TYO அவுஸ்ரேலியா

எங்கள் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய தமிழீழ மக்களே!

இன்று மே 18! போர்க்குற்ற நாள்! எங்கள் வாழ்வில் ஆறாத ரணத்தையும், மாறாத வலியையும் சுமத்திவிட்ட சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்பின் உச்சக்கட்டம். மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நூற்றாண்டின் மிகப்பாரிய மனிதப்பேரவலம். ஆம் முள்ளிவாய்க்காலில் எமது மக்களை கொத்துக் குண்டுகளால் கொன்று குவித்தும், உயிருடன் புதைகுழிகளில் தள்ளியும், சிங்களம் ஆடிய கோரத்தாண்டவம் முடிந்து இன்றுடன் இரண்டுவருடங்கள் ஆகின்றன. ஓரிரு நாட்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளை பலிகொடுத்துவிட்டு இன்றும் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றது உலக தமிழ்ச்சமூகம். செய்வதேது அறியாது சிதறுண்டு வாழும் எம்மக்களே இது முடிவல்ல. ஈழப்பேரின் இன்னொரு அத்தியாயத்திற்கு எழுதப்பட்ட முகவுரை. கடந்த காலங்களில் பல சந்தர்பங்களில் எமதினம் தோல்விகளை படிக்கற்களாக்கி வெற்றி கனிகளை பறித்ததை நாம் அறிவோம். அதுபோல் இப்போதும் எரிந்த சாம்பலில் இருந்து வெளிவரும் பீனிக்ஸ் பறவைபோல நாமும் வெளிவருவோம். எமது உரிமைக்கான போராட்டத்தை தொடருவோம் என இந்நாளில் உறுதி கொள்வோமாக.

இன்றும் சிங்களம் திட்டமிட்டு இனப்படுகொலைகளை ஈழத்தில் அரங்கேற்றி வருகின்றது. இன்னமும் எம்மக்களை முள்வேலி முகாங்களுக்குள் அடைத்து சித்திரவதை செய்வது மட்டும் இல்லாமல், எமது தாயக பிரதேசங்களில் வளர்ச்சிதிட்டங்கள் என்ற பெயரில் எம்மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்தும் வருகின்றது. இத்துடன் கலாச்சார சீரழிவு, கடத்தல், கற்பழித்தல் மற்றும் படுகொலைகள் என எம்மக்கள் மீது ஏவி, தமிழின அழிப்பை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது சிங்கள அரசு. இத்தருணத்தில் ஈழத்தில் வாழும் எம் உறவுகள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு உதவியாகவும் உறுதியாகவும் புலம் வாழ் தமிழ் சமூகம் கைகொடுக்க வேண்டும் என்றும் ஆஸ்ரேலிய தமிழ் இளையோர் அமைப்பு இத்தருணத்தில் வேண்டிக் கொள்கின்றது.

சர்வதேச சமூகம் மௌனம் காக்க, பிராந்திய வல்லரசுகளின் உதவியோடு எமது உரிமைக் குரலை நசுக்கிவிடலாம் என்று நினைத்து சிங்களம் நடத்திய இன அழிப்பு யுத்தம் இன்றைக்கு அதன் தலைக்கே ஆபத்தாக வந்;திறங்கியுள்ளது. ஐநாவின் போர்க்குற்ற அறிக்கையும், அதன் மீது சர்வதேச சமூகம் எடுத்துவரும் நடவடிக்கைகளும், ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழினத்திற்கு ஓரு கலங்கரை விளக்கமாக மாறியுள்ளதில் எந்த ஐயமும் இல்லை. ஆனாலும் சர்வதேசநாடுகளின் புவிசார் கொள்கைகளாலும், சிங்கள அரசின் நயவஞ்சக சூழ்ச்சிகளாலும், இந்த நடவடிக்கைகள் வளைக்கப்பட்டு அழிக்கப்படும் அபாயங்கள் உள்ளன. எனவே உலகமெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் நாங்கள் விழிப்புடன் செயற்படவேண்டும்.

அமைப்புகள் எதுவாக இருந்தாலும், கொள்கைகளால் வேறுபட்டு இருந்தாலும், எங்கள் எல்லோரினதும் நோக்கம் தமிழீழமும், தமிழர் உரிமையும் தான் என்பதை சர்வதேசம் உணர ஒரே குரலில் ஒலிக்கவேண்டிய தருணம் இது.

சர்வதேச சமூகம் எங்களுக்கிழைத்த அநீதிக்கு நீதி வழங்கும் நேரம் இது. இந்த சந்தர்ப்பத்தை நாம் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் செய்வார்கள், அந்த அமைப்பு பார்த்துக்கொள்ளும் என மற்றவர்களிடம் உங்கள் பொறுப்புக்களை செலுத்தாமல், இது என்கடமை, எனது உரிமை என உள்உணர்ந்து தங்கள் பங்களிப்பை ஆற்ற வேண்டும். இந்த சமயத்தில் சென்ற வாரம் தாய்த் தமிழகத்தில் நடந்தேறிய சம்பவங்களை இங்கு நாம் நினைவுகூற விரும்புகின்றோம். எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு நீதிவழங்கி எமது தழிழக உறவுகள் தங்களின் கடமையை நிறைவேற்றியுள்ளனர். அவர்களுக்கு தமிழ் இளையோர் அமைப்பின் நன்றிகளை இத்தருணத்தில் உரித்தாக்குகின்றோம். இதே போல் இனிவரும் காலங்களிலும் தங்கள் ஒத்துளைப்பை வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

உலகமெங்கும் வாழ் எம் தமிழ் உறவுகளே! இன்று போர்க்குற்ற நாளாக நாம் கொண்டாலும், இது காலம்காலமாக சிங்களம் நடத்திவரும் எங்கள் இனவழிப்பின் முக்கியமான ஒரு சம்பவம். எனவே நாங்கள் ஒவ்வொருவரும் சிங்கள அரசையும், சிங்கள ராணுவத்தையும் இனவழிப்பு கூண்டில் ஏற்றுவதற்கான பரப்புரைகளை மேற்க்கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களே! எங்கள் சமூகம் தவிர்ந்த மற்றைய சமூக மக்களிடம் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்தியம்புவதன் மூலமாகவும், உங்கள் நாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவும் இனவழிப்பு குற்றவளிகளை கூண்டில் எற்றி தண்டிப்பதுடன், எங்களுக்கான நீதியாக எமது சுயநிர்ணய உரிமையையும், எங்கள் தேசம் ஈழத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இத்தருணத்தில் உங்களுடன் இணைந்து எங்கள் மக்களின் உரிமையையும், எங்கள் தேசத்தையும் வென்றேடுக்க ஆஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு செயற்படும் என உறுதிகூறுகின்றோம்

உலக தமிழினமே ஒன்றுபடுவோம்!

இனி ஒரு விதி செய்வோம்!

சுதந்திர தேசம் சமைப்போம்!

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்“

தமிழ் இளையோர் அமைப்பு ஆஸ்ரேலியா

http://www.eelampress.com/2011/05/23679/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் போர்க்குற்றவியல் எழுச்சி நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

இன்றைக்கு இளையோர் அமைப்பு மதியம் 12.00 மணியில் இருந்து 6.00 மணி வரை ஒரு முக்கிய செயற்திட்டத்தை மேற்கொண்டார்கள் அவுஸ்திரேலியாவில் வாழும் மக்களுக்கு எமது நாட்டில் நடந்த இன அழிப்பபை பற்றியும், போர்க்குற்றகளைப் பற்றியும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் கவனர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

20 இளையோர் ரிசேட் அணிந்து முகத்தில் முகமூடி போட்டு நிலத்தில் படுத்திருந்து வெளியுலகத்திற்கு எமது நாட்டில் நடக்கிற இன அழிப்பை பற்றி விழிப்புனர்வை ஏற்படுத்தினார்கள் அங்கு பெருமளவிளான மக்கள் வந்து ரிசேட்டில் என்ன எழுதியிருக்கு என்பதை பார்த்து படம் எடுத்தார்கள். நாங்கள் அவர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் கொடுத்து நாட்டில் என்ன நடந்தது என்பதை எடுத்து கூறினர்

அங்கு உரையாடும் போது இரண்டு விதமான மக்கள் வந்து இருந்தார்கள் அதில் ஒரு சிலருக்கு எங்கட நாட்டில் என்ன நடந்தது என்று தெரியாது. அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால். ருவாண்டாவில் இன அழிப்பு நடந்தது அனைவருக்கும் தெரியும், இடாப்பூரில் இன அழிப்பு நடந்தது, அனைவருக்கும் தெரியும் லிபியாவில் நடக்கிற அனைத்து செய்திகளும் வெளிவருகிறது. ஆனால் எங்களுடைய நாட்டில் 40,000ற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள் அந்த செய்திகள் வெளிவரவில்லை என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.

கட்டாயமாக தொடர்ச்சியாக இந்த செய்திகளை அவுஸ்திரேலியாவில் உள்ள மக்களுக்கு கொடுக்க வேண்டும். என்று எங்களுக்கு ஆதரவு தந்தார்கள். சிலருக்கு என்ன நடக்கிறது. என்று தெரியும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து தெளிவுபடுத்தினோம்.

மே 18 போர்க்குற்றவியல் நினைவு நாள் அவுஸ்திரேலியா மாட்டினன் கிரேட் சிட்னியில் 6.00 மணிக்கு தேசியக் கொடியேற்றத்துடனும் ஆரம்பமாகி போரினால் கொல்லப்பட மக்களுக்கு மலர் வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்தனர். இன்நிகழ்வில் Lee Rhiannon (Greens Party Senator), David Shoe bridge (NSW Parliament) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அனைத்து தமிழ் மக்களும் மிகப் பெரிய அழுத்தத்தை கொடுத்து அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு எடுத்து சொல்லவேண்டும் என்று கூறினார். எவ்வளவு கஸ்டங்கள் காத்திருந்தாலும் தொடர்ச்சியாக இந்த போர்க்குற்றச் சாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும். எமது நாட்டில் நடக்கின்ற இன அழிப்பை தடுக்கவேண்டும் என்று வலிறுத்தி கூறினார்கள்.

http://www.eelampress.com/2011/05/23770/

img8030300x200.jpg

img7891200x300.jpg

img7913200x300.jpg

img7927200x300.jpg

img8028300x200.jpg

img8037300x200th.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.