Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாக்குக்குள் என்ன வைத்திருக்கிறது கூட்டமைப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாக்குக்குள் என்ன வைத்திருக்கிறது கூட்டமைப்பு?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Viruvirupu, Monday 09 May 2011, 12:15 GMT

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கொழும்பு, ஸ்ரீலங்கா: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திவரும் பேச்சுக்கள் எந்தத் திசையில் செல்கின்றன? இதுபற்றிச் சில தகவல்கள் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அடிபடுகின்றன.

இந்தப் பேச்சுக்கள் இந்தியாவின் பரிந்துரையான 13வது சட்டத்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன என்பது ஏற்கனவே தெரிந்த தகவல். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முந்திய இந்தியப் பரிந்துரையில், சிக்கலை ஏற்படுத்தும் அம்சங்களாக இருப்பவை எவை?

வடக்கு – கிழக்கு இணைப்பு, காணி அதிகாரங்கள் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ஆகியவையே சிக்கலுக்குரிய அம்சங்களாக இருக்கின்றன.

இவற்றில் வடக்கு – கிழக்கு இணைப்பு ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் கைவிடப்பட்டு விட்டதாகத் தெரிகின்றது. அதைப்பற்றி அவர்களே இப்போது பேசுவதைக் குறைத்து விட்டார்கள். இதனால் அந்த விஷயம் பேச்சுவார்த்தை மேஜையில் இல்லை என்று சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம்.

அடுத்த சிக்கலான விஷயத்தின் கதி?

தற்போது நடைபெறும் பேச்சுக்களில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிடும் நிலையில் இருப்பதாகவே கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா அரசுடன் நடைபெறும் கூட்டமைப்பின் பேச்சுக்களில் பரிச்சயமுள்ள அரசியல் பிரமுகர் ஒருவரிடம் விறுவிறுப்பு.காம் இதுபற்றிக் கேட்டபோது, “கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல் ஏறக்குறைய உண்மைதான்” என்றார்.

எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, கூட்டமைப்பு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கைவிட்டதாக அறிவிக்கப் போவதில்லை. ஆனால், அதைப்பற்றிப் பேசப் போவதுமில்லை. அந்த விஷயத்தை ஸ்கிப் பண்ணிக்கொண்டு, மற்றய விஷயங்களைப் பற்றியே பேசப் போகின்றது.

கூட்டமைப்புக்கு இந்தியத் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனை அனேகமாக, “கொடுப்பதை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். மிகுதியைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்பதாகவே இருக்கலாம்.

கூட்டமைப்புக்கு இது மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் ஒரு சங்கடமான அவஸ்தை நிலைதான். இதைக் கூட்டமைப்பு எப்படிக் கையாளும்? அல்லது இதை எப்படி மக்களிடம் எடுத்துச் செல்லும்? அதையும் ஊகித்துக் கொள்ளலாம்.

மேலோட்டமான அரசியல் தீர்வின் அவசியம் பற்றிய பொதுப்படையான அறிக்கை ஒன்று இரா. சம்பந்தர் போன்ற அதி சீனியர் ஒருவரிடமிருந்து வரும். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றிய கிளை அறிக்கை ஒன்று, கூட்டமைப்பின் வேறொரு தரப்பிலிருந்து (அனேகமாக சுரேஷ் பிரேமச்சந்திரன்) காரசாரமாக வரும்.

முதல் அறிக்கை கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு. இரண்டாவது அறிக்கை கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரின் உத்தியோகபூர்வமற்ற ஆதங்கம்.

கிட்டத்தட்ட ஒரு இரட்டை நிலைப்பாடு.

இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இதில் அவர்களைக் குறை சொல்லவும் முடியாது. காரணம், கூட்டமைப்புக்கு இதை விட்டால் வேறு தேர்வு ஏதுமில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வின் பரிமாணம் இப்போது மாறிவிட்டது. இதற்குள் சர்வதேச அரசியல், வெளிநாட்டு நிர்ப்பந்தம் என்று ஆயிரத்தெட்டு இழுபறிகள் வந்துவிட்டன.முன்புபோல இது உள்நாட்டு விவகாரமல்ல. இந்தியா, அமெரிக்கா, ஐ.நா. என்று, பல கைகள் இதில் சம்மந்தப்பட்டு விட்டன.

தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்தேயாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுவிட்டது. அதேபோல ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கூட்டமைப்புக்கு ஏற்பட்டு விட்டது.

இந்த நிர்ப்பந்தங்களைத் தாண்டி, இரு தரப்பும் அரசியல் செய்ய முடியாது என்பதே நிலைமை.

கூட்டமைப்பு, தங்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு ஒரு டிராஃப்ட் இருப்பதாகச் சொல்கின்றது. ஆனால் அதைப் பகிரங்கப் படுத்துவதில் சங்கடமும் படுகின்றது. இதிலிருந்து குறிப்பிட்ட அந்த டிராஃப்ட்டில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுக்கான அழுத்தம் இல்லை என்று ஊகிக்கலாம்.

இருதரப்புக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் இன்னமும் 3 தினங்களில் (12ம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சுற்றோடு அலுவல் முடியுமா என்று தெரியாது.

ஆனால் ஏதோ ஒரு சுற்றில் முடியத்தான் போகிறது. அதுவும் விரைவில். அப்போது தெரியப் போகின்றது, சாக்குக்குள் என்ன இருக்கிறது என்ற விஷயம்!

நன்றி - விறுவிறுப்பு.கொம்

http://viruvirupu.com/2011/05/09/1482/

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

சாக்குக்குள் சிங்களம் எதை விடும் என்று தாங்கள் தீர்மானிக்கின்றீர்களோ.....?

அதுவே நிச்சயமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் விறுவிறுப்பாக களத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்.செஞசரி அடிக்கிறாரோ அல்லது போல்ட் ஆகப்போகிறாரோ என்று பொறுத்து இருந்து பார்ப்போம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.