Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Mullivaikal Remembrance Day 2011

Featured Replies

Mullivaikal Remembrance Day 2011

DATE: Wednesday, 18 May 2011

VENUE: Trafalgar Square

(Nearest Tube: Charing Cross)

TIME: 6pm-8:30pm

may18.png

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... முன்பெல்லாம் ஓர் நிகழ்வானால் மாதங்களுக்கு முன் அறிவிப்பார்கள் ... இன்றோ??? ... வேறு பல சிக்கல்களும் இருக்கலாம், கூலிக்கு வேலை செய்பவர்கள், சிங்கள தூதரக எதிர் நடவடிக்கைகளை தவிர்பதற்கு இருக்கலாம்!! ... இந்நிகழ்வு வரவேற்கத்தக்கதொன்று! ... எல்லோரும் ... கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்!

... யாழும் தன் பங்கிற்கு இதனை முன் பக்கத்தில் போடும் என நினைக்கிறேன் ...

... எமக்கெல்லாம் இனி, புலத்தில் அந்த அமைப்பு செய்ய வேண்டும்? இந்த அமைப்புத்தான் செய்ய வேண்டும்? என்ற பேதமில்லை! ... யார் மக்களோடு, மக்களுக்காக நிற்கிறார்களோ, செயற்படுகிறார்களோ அவர்களுகளோடு சேர்ந்து நிற்போம்!!!

  • தொடங்கியவர்

Activities evolving similar to Jewish holocaust remembrance is held in the UK

http://www.srilankaguardian.org/2011/05/activities-evolving-similar-to-jewish.html

Video from TGTE Youth

Tuesday 17th May 2011

@ 5pm

Castle Lecture Theatre

London Road Building

Southbank University

SE1 6LN

ஜெனீவாவுக்கு இலவச பேரூந்து வசதிகள் இலண்டன் நகரில் இருந்து செல்ல விரும்புவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்பு இலக்கம் : 02084706655.

Urgent Request to British Tamils:

Free buses are going for May 18th Geneva Protest to urge UN for war crimes inquiry which will be held in parrallel with Trafalgar Square event.

Those who wish to attend Please call 02084706655.

மே 18 இனவழிப்பு நாளில் ஒன்றாய் அணிதிரள்வோம்

முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் இனவழிப்பு செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு லண்டனின் மத்தியிலுள்ள ட்ரபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) எதிர்வரும் 18ஆம் நாள் நடைபெறவுள்ளது.

மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணிவரை இந்த நிகழ்வை நடத்துவதற்கு பிரித்தானிய காவல்துறையினர் எமக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த இனவழிப்பின் உச்சகட்டமாக இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவேந்துவது மட்டுமன்றி, இந்தப் படுகொலைகளைப் புரிந்தவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதும் புலம்பெயர்ந்த மக்களின் கடமையாகும்.

மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல், போர்க்குற்றச்சாட்டு, இனப்படுகொலை என கட்டம் கட்டமாக முன்னேறக்கூடிய பின்புலத்தைக்கொண்ட அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் ஒரே சக்தியாகவுள்ள புலம்பெயர்ந்த மக்கள், முள்ளிவாய்க்கால் இனவழிப்பை மூடிமறைக்க முயலும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும், ஏனைய சக்திகளுக்கும் இந்த நாளில் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் மீது நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த இனவழிப்பின் உச்ச கட்டமே முள்ளிவாய்க்கால் என்பதை அனைத்துலகிற்கு இடித்துரைத்து, தொடரும் இனவழிப்பை தடுத்து நிறுத்தி, நீதி கேட்கும் எமது பயணத்தை ஓயாது முன்னெடுப்போம்.

குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், பெண்கள், ஆண்கள் என அகவை, பால் வேறுபாடின்றி கொத்துக் குண்டுகள், எறிகணைகள், எரி குண்டுகள், சுடுகலன்கள் என பல்வேறுபட்ட உலகத்தால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளை அவர்கள் மேல் பொழிந்து கொன்று குவித்தது சிறீலங்கா அரசாங்கம். மேலும் காயப்பட்ட மக்களை உயிருடன் குழிகளில் போட்டுப் புதைத்தும் எரித்தும், எஞ்சிய மக்களை கைது செய்து சித்திரவதை செய்தும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தி அதன் பின் கொன்று புதைத்தது.

18ஆம் நாள் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தினத்திலே இனவழிப்புப் போரினால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் திருவுருவப் படங்களை வைத்து உறவினர்களுடன் சேர்ந்து அவர்களை நினைவு கூர பிரித்தானிய தமிழர் பேரவை தீர்மானித்துள்ளது.

எனவே இன அழிப்புப் போரினிலே படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் தகவல்கள், திருவுருவப் படங்கள் இருப்பின் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு அவற்றினை 14.05.2011 ஆம் திகதிக்கு முன்னர் தந்துதவுமாறும், அத்துடன் காணாமற் போனோர் விபரங்கள் இருப்பின் அவற்றை தந்துதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

உருவப்படங்கள் A5 என்ற அளவுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும். படங்களின் மூலப்பிரதியை வைத்துக் கொண்டு படத்தின் பிரதியை கையளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பின்வரும் விபரங்களை படத்தின் பிற்பகுதியில் தெளிவாக எழுதி கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

1. படுகொலை செய்யப்பட்டவரின் முழுப்பெயர், சம்பவம் நடைபெற்ற இடம், திகதி, எவ்வாறு நடைபெற்றது.

2. தகவல் வழங்குவோர் விபரம்:- முழுப்பெயர், தொலைபேசி இலக்கம், உறவுமுறை.

3. காணாமல் போனவர்களின் முழுப்பெயர், தாயக முகவரி, சம்பவம் நடைபெற்ற இடம், திகதி எவ்வாறு நடைபெற்றது.

4. தகவல் வழங்குவோர் விபரம்:- முழுப்பெயர், தொலைபேசி இலக்கம், உறவுமுறை

அத்துடன் முள்ளிவாய்க்கால் தினமன்று அனைத்து மக்களையும் எழுச்சியுடன் அணிதிரண்டு வந்து இழந்த எமது உறவுகளை உணர்வு பூர்வமாக நினைவுகூருமாறும், இந் நிகழ்வு தொடர்பான பணிகளில் பணியாற்ற விரும்புகின்றவர்கள் உடனடியாக பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

உங்களது விபரங்களை எமது பிரேதேச ரீதியான தொடர்பாளர்களை தொடர்பு கொண்டு அங்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வழங்க வேண்டிய இடங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:

175 Tooting high Street, Tooting SW17 0SZ

079 0375 0245

432 Alexander Avenue, Rayners lane, Harrow HA2 9TW

079 5895 3394

258 High Street North, Manor Park, E12 6SB078 3295 4281

247 Lewisham Way, Near Lewishan College, SE4 1 XF

078 1396 9192

Walththamstow, Willowfield-school, Clifton Ave, E17 6HL

075 7760 3882

079 6115 8453

079 4034 3935

Out of London (Bermingham, Manchester etc..)

079 2702 3912

079 3921 5177

075 3338 1189

அனைவரும் கருப்பு உடையணிந்து எமது உள்ளக்கிடக்கையை உலகறியச் செய்வோம்.

பேரூந்து ஒழுங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

நிலமேல் தொடருந்து நிலையம்: Charing Cross (3 நிமிட நடைதூரம்)

மிக அருகிலுள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையம்: Charing Cross (Bakerloo & Nothern Lines)

சில நிமிட நடை தூரத்திலுள்ள ஏனைய நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள்: Leicester Square, Piccadilly Circus, Embankment

அனைவரும் ஒன்றுபட்டு அனைத்துலக சமூகத்தை தட்டியெழுப்பி, எமது உறவுகளின் படுகொலைக்கான நீதியினைப் பெறுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.