Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளின் அச்சம் கலந்த இரவுகள்-ஒரு பார்வை

Featured Replies

புனர்வாழ்வளிக்கப்பட்டதாகக் கூறி விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளது இயல்பு வாழ்வு மீண்டும் கேள்விக் குறியாகியிருக்கின்றது. தமது குடும்பத்துடன் இணைந்து வாழ்வதில் பெரும்பாலான முன்னாள் போராளிகள் அச்சங் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். அதிகத்து வரும்

கெடுபிடிகள், மீண்டும் விசாரணைக்கென அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றமை, சித்திர வதைகளுக்குள்ளாகின்றமையென குற்றச்சாட்டுக்கள் அவர்களிடமிருந்து எழுந்த வண்ணம் உள்ளன.

கிளிநொச்சி, வட்டக்கட்சியின் குறித்த கிராமமொன்றினில் மட்டும் புனர் வாழ்வளிக்கபட்ட தாகக் கூறப்படும் 24 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பெரும் பாலானவர்கள் ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், தற்போதே குடும்பங்களுடன் இணைந்துள்ளனர். எனினும் இவர்கள் இரவு வேளைகளில் தாக்கப்படுவதும், முகாம்களுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதும் தொடர்வதாக கூறுகின்றனர். இதனால் பெரும் பாலானவர்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போயே உள்ளனர்.

இதேநிலை யாழ்ப்பாணத்திலும் தொடர்வதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் யாழ்ப்பாணத்தில், குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். எனினும் அவர்களது சுதந்திரமான நடமாட்டம் பெரும்பாலும் முடக்கப்பட்டேயுள்ளது. வாரத்தினில் ஒரு நாள், படை முகாமினில் ஒப்பமிடும் நாளைத் தவிர பெரும்பாலானவர்கள் வீடுகளுள் முடங்கியே இருக்கின்றார்கள்.

பெரும்பாலும் நகரப்பகுதிகளோ முகாம் சூழல்களோ புனவர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் போராளிகளுக்கு அச்சமூட்டுபவையாகவே உள்ளன. இச்சூழல் அவர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடவோ, வேலைவாய்ப்புக்களை தேடிக்கொள்ளவோ முடியாததாகவே இருக்கின்றது. பெரும்பாலும் தொழில் தருநர்களும் அச்சங்காரணமாக இதே மனோ நிலையுடனேயே உள்ளனர்.

இதனிடையே யாழ். குடாநாட்டில், குடும்பத்துடன் வசித்துவரும், முன்னாள் போராளிகள் அனைவரையும் மே 19 இன் பின்னர், விசேட சந்திப்பிற்காக படைத்தளமொன்றுக்கு வர அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசிகளுடாக இந்த அழைப்புக்கள் தமக்கு உரிய தரப்பிடமிருந்து கிடைத்திருந்ததாக, முன்னாள் போராளிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகின்றது. இவ்வறிவிப்பு அவர்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 9 பேரைக் காணவில்லை

மட்டக்களப்பைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான ஒன்பது பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின் னர் அவர்களது பெற்றோரிடம் ஒப் படைக்கப்பட்டிருந்தனர். கடந்த வாரத்தில் இவர்கள் காணாமற் போயிருக்கிறார்கள் என்று அவர்களின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளால் முன்னர் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் ஷெல்கள் என்பவற்றை மீட் பதற்காக இவர்களைப் படையினர் அழைத்துச் சென்றிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.