Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு

Featured Replies

யோவ் வசிசுதா

உமக்குமா விளங்கவில்லை?. இப்படி போய் என்னய்யா சாதிக்கபோகிறார்கள்? அதாவது அதனால் தமிழருக்கு என்ன நன்மை உண்டு?

கடந்த 28.12.2005 அன்று கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை வெளியே இழுத்துவந்து பெற்றோர் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றுவிட்டனர்.

இப்படி எல்லோரையும் சாகச் சொல்றீங்களா?

உங்கள் உயிர்தான் உங்களுக்கு வெல்லக்கட்டியா?

மற்றவர்களுக்கு தங்கள் உயிரின் மீது ஆசையிருக்காதா?

ஓடாமல் அங்கேயே இருந்து அடிபட்டு சாகச்சொல்கிறீங்களா?

  • Replies 110
  • Views 12.7k
  • Created
  • Last Reply

அப்பாவி மக்கள் இழப்புக்கள் இன்றி தமிழிழம் மலரும்

முடியாது ..... முடியவேமுடியாது

இதுவரை எத்தனை ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து விட்டீர்கள்..... உங்களைப்பொறுத்தவரையில் அவர்கள் போராளிகளாக இருக்கலாம்.... ஆனால் என்னை பொறுத்தவரையில் அவர்களும் அப்பாவி பொதுமக்களே....

பாவம்...பாவம்... எனிமேலும் இப்படியான உயிர்பலி வேண்டவே வேண்டாம்.....

தயவுசெய்து மாற்று வழி பாருங்கள்.....

:roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

அது எவ்வாறு சாத்தியம்??? ஈழத்தில் இராணுவம் இருக்கும் வரை. ஈழத்தைவிட்டு இராணுவம் வெளியேறினாலே தமிழருக்கு நின்மதியான வாழ்வு பிறக்கும். தமிழீழத்தில் தமிழர்கள் தம்மைதாமே ஆழும் நிலைதான் வெகுவிரைவில் வரும்.

இளைஞர்களே!பாதுகாப்பான பகுதிக்கு நகருங்கள் - பொங்கியெழும் மக்கள் படை அறிவிப்பு

தமிழ் இளைஞர்கள் தமக்குப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அதாவது விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சுூழல் எழுந்துள்ளது. சிங்களப் படைகளால் கேவலமாக குதறப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து தப்பிக்க பாதுகாப்பை நோக்கிச் செல்வது என்பது இயல்பான, சரியான செயற்பாடாகும். இவ்வாறு யாழ்ப்பாண பொங்கியெழும் மக்கள் படை தெரிவித்துள்ளது.

யாழ். பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த பல நாட்களாக சிறிலங்கா இனவெறிப் படைகள் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது படுகொலைகளையும், காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்களையும் மேற்கொண்டுவருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் படை உயர்பீடத்தின் வழிகாட்டுதலுக்கமைவாக இத்தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அதாவது எம்மை அச்சுறுத்திப் பணிய வைத்துவிடலாம் என்ற உத்தியுடன் செயற்படுகிறார்கள்.

அத்துடன் சந்திக்குச் சந்தி வீதி ஓரங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகள் தெருவில் செல்கின்றன இளைஞர்களை குறிவைத்தே தமது தாக்குதல்களை நடத்துகின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் மறித்து இளைஞர்களைக் கொல்வதும், அவர்களைக் கைது செய்து இழுத்துப் போவதுவும், அடித்து நொறுக்கி குருதி வழிந்தோட அவர்களைத் தெருவோரங்களில் காட்சிக்காகக் குந்த வைப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. கடந்த 28.12.2005 அன்று கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை வெளியே இழுத்துவந்து பெற்றோர் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றுவிட்டனர். சிங்கள இனவெறி ஓநாய்கள் வெறிகொண்டு அலையத் தொடங்கிவிட்டன. இவை தொடரவே போகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நிலைமையைத் தணிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்தோம். ஆனால் சிங்களப்படைகளோ அப்பாவிகள் மீதான தாக்குதல்களை, படுகொலைகளை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை நிறுத்துவதாக இல்லை. இன அழிப்புப் போரொன்றினை தமிழர்கள் மீது திணிப்பதற்கு சிங்கள அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது. சமாதானம் என்ற கோசம் சிங்கள அரசாங்கத்திக்ற்கு யுத்தத்திற்கான ஒரு வழிமுறையேதான்.

எனவேதான் தமிழ் இளைஞர்கள் தமக்குப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அதாவது விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சுூழல் எழுந்துள்ளது. சிங்களப் படைகளால் கேவலமாக குதறப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து தப்பிக்க பாதுகாப்பை நோக்கிச் செல்வது என்பது இயல்பான, சரியான செயற்பாடாகும். பொங்கியெழும் மக்கள் படையினராகிய நாம் சிங்களப் படைவெறியர்களது தமிழின அழிப்புகளை தடுத்தேயாகவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். நாம் ஓயப்போவதும் இல்லை, தளரப்போவதும் இல்லை. தமிழினத்தினது சுதந்திரத்தையும், கௌரவத்தையும், பாதுகாப்பினையும் உறுதிசெய்வதற்காக நாம் அனைவருமே ஒன்றிணைந்து போராடுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.eelatamil.net/sankathi/index.ph...=1073&Itemid=26

இது எங்கள் தனியரசு (தமிழிழ) பிரச்சனை ஒடுக்கப்படுகின்ற மக்கள் அதற்கு எதிராக பேராடுகின்றனர் அது மக்கள் பிரச்சனை அதை விடுங்கள் முதலில் உங்கள் நாட்டில் சாதிச்சண்டையால் எத்தனை ஆயிரம் மக்கள் பலியாகின்றனர் அதை நிறுத்த வழியை பாருங்கள் பின்பு மற்றையவை பற்றி அலசலாம்

" இது புலம் பெயர்ந்தவர்கள் காணுகின்ற களமாகும். இது பலத்தின் களம். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத் தேவையில்லை!. நாம் நியாயத்தின் பால்இ நீதியின் பால் நிற்பவர்கள். எம்முடைய ஒற்றுமையையும்இ மனவலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் முயன்றாலும் நாம் அவற்றை எதிர்கொள்வோம!' . வெற்றியும் காணுவோம்."

உந்த உயிர்பலி வேண்டாம் மாற்று வழிபற்றிய பெருந்தன்மையான அறிவுரை சுனாமி மீளகட்டமைப்புக்கு உருவாக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பை அரசாங்கம் நீதிமன்றத்தின் பெயரால் செயலிழக்கச் செய்தபோது அரசாங்கத்துக்கு குடுத்திருக்காலாமே?

சுனாமியில் அனர்த்தத்தில் அவதிப்படும் மட்டக்களப்பு மக்களின் நிவாரப்பணிகளை முன்னின்று நடத்திய கொளசல்யன் அண்ணாவை கொலை செய்த போது குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கையாக ஆவது விட்டிருக்கலாமே?

இப்ப நடக்கிற கொலைகள்தான் உயிர்பலியாக தெரியுதா? நாட்டுப்பற்றாளர் நடேசன், மாமனிதர் சந்திரநேரு, சிவராம் எல்லாம் உயிர்கள் இல்லையா?

ஆடு நனையுது என்று ஓநாய் அழுததாம்

உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்

அப்ப வானம்பாடி உண்மையான இந்தியன் இல்லையா...??? இந்தியாவை விட்டு ஜேர்மனியில் வசிக்கிறீர்... :wink: :P :P

கடந்த 28.12.2005 அன்று கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை வெளியே இழுத்துவந்து பெற்றோர் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றுவிட்டனர்.

இப்படி எல்லோரையும் சாகச் சொல்றீங்களா?

உங்கள் உயிர்தான் உங்களுக்கு வெல்லக்கட்டியா?

மற்றவர்களுக்கு தங்கள் உயிரின் மீது ஆசையிருக்காதா?

ஓடாமல் அங்கேயே இருந்து அடிபட்டு சாகச்சொல்கிறீங்களா?

யோவ் வசிசுதா

உங்களின் ஆதங்கம் எனக்கு வடிவாக தெளிவாக விளங்குகின்றது..... கோபமடையாதீர்கள்..... எங்களின் உயிர்தான் எங்களுக்கு வெல்ல்க்கட்டியென்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது... அப்படி சொல்லவும்மாட்டேன்.............. உங்கள் எல்லோரையும் சாகும்படி எப்பவும்,எந்த இடத்திலும் சொல்லவில்லை..........

நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிட்டுவீர்கள் போல் உள்ளது...... சரி பறவாYஇல்லை......

நான் சொன்னேன் இந்த சிறிய நாட்டிற்குள் எப்படி எவ்வளவு மைல் வேகத்தில் சுற்றிசுற்றி ஓடப்போகிறீர்கள்..

ஒருசிலர் பாதுகாப்பு தேடி புலிகளின் பகுதிக்கு சென்றால் மற்றவர்களின் நிலமை என்னவாகும்......அதனை யோசித்தீர்களா......நீங்கள் எல்லோரும் ஒரேஇடத்தில் ஒற்றுமையாக இருக்கும் போது உங்களை எவனும் எளிதில் நெருங்கமுடியாது.....

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி வானம்பாடி நான் எந்த நாட்டிலும் தற்பொழுது சுகமாக வாழ்கிறேன் என்றது உண்மைதான்,, ஆனால் யாழ்குடா நாடு இடப்பெயர்வில அவதிப்பட்ட 5 லட்சம் மக்களில நானும் ஒருத்தன்,, அதன் அனுபவம் உம்மைவிட எனக்கு நல்லா தெரியும்,, ஏன் ஓடினம் எண்டு தெரியுமா? செல் அருகில் விழ விழ ஓடினம்,,, யாழ்ப்பாணத்தை சிங்களவன் பிடிக்கும்பொழுது நீ யாழ்ப்பாணத்தில நிண்டு இருந்தால் புரிஞ்சு இருக்கும் ஏன் வன்னிக்கு எல்லோரும் ஒடுறாங்க எண்டு,, 5 லட்சம் சனமும் அன்று வன்னிபோனதாலதான் உயிர் காப்பாற்றப்பட்டது,, எத்தனை கரும்புலி கடற்புலிகள் மக்களை காப்பாதற்காக கிளாலி கடல்ல வெடிச்சு இருக்கிறாங்க என்றது உனக்கு தெரியுமா? அன்று பெரிய பலத்துடன் புலிகள் இல்லாத பொழுது, பல லட்சம் மக்களை காப்பாற்றிய பெருமை அந்த இயக்கத்தைத்தான் சாரும்,, இப்பொழுது எவனாவது வன்னிக்குள் வாலை ஆட்டுவான் எண்டு எதிர்ப்பார்க்கிறீரா??? இவ்வளவு மக்களையும் போராளிகளை இழந்து விடுதலையின் வாசலில் வந்து நிற்கும் மக்களைப்பார்த்து எனி மாற்று வழியைப்பாருங்கள் எண்டு சிம்பிளா சொல்லுறியே உன்னையெல்லாம்,,,,,,, இதுதானய்யா உங்களைப்போல உள்ள ஆக்களில உள்ள மைன்ஸ் பொயின்ற்,,, உங்களால அப்ப மோதமுடியாது எண்டுதானே விளகி போனியள்? இப்ப எங்கிருந்து வந்தது உந்த வாய்வீராப்பு??

அதைவிடுங்க,,1970 ஆண்டு அமைதி நிலையா? அமா அமா அது உண்மைதான்,, ஆனால் அன்றே சிங்களவன் தமிழரை உள்ளால சுறண்ட வெளிக்கிட்டான் தெரியுமா? உண்ட வீட்டுக்க ஒருத்தன் அத்து மீறி புகுந்து தண்ட ஆட்களை இருத்திப்போட்டு, உண்ட சொந்த வீட்டுக்கு தண்ட முகவரியை போட்டு, உண்ட பிள்ளைகள் இதுதான் படிக்கனும் இதைத்தான் வணங்கனும் எண்டு சொல்லிகொண்டு இருக்க இருக்க,, கேனையன் மாதிரி அமைதியா கேட்டுக்கொண்டு அமைதியா வாழச்சொல்லுறியே நியேல்லாம் தன்மானம் உள்ள மானம் ரோசம் சூடு சுறனை உள்ள மனிதனா?? :evil: :evil:

70 களில் என்னையா நடந்தது? கொஞ்சம் தெளிவாக கூறலாமே.....

பாக்கிஸ்தானோட சண்டைபோட்டு ஒரு எதிரியை விலை கொடுத்து வாங்கினவை.... அதாவது வேலில போன ஓணானை வேட்டிக்கை எடுத்து விட்டவை

அப்ப வானம்பாடி உண்மையான இந்தியன் இல்லையா...??? இந்தியாவை விட்டு ஜேர்மனியில் வசிக்கிறீர்... :wink: :P :P

இப்ப வானம்பாடி சொல்லுவார் இந்தியாவிலை யுத்தம் நடந்து தான் உயிருக்கு பயந்து ஓடிவரவில்லை.

தாய் நாடு என்று உரிமை கோரிறனீங்கள் அங்கை நிண்டு பிரச்சனை எண்டு வரும் போது சண்டை பிடிக்காமல் ஒடிவரக் கூடது என்று. இது உமக்கு தேவையோ? :oops:

சரியப்பா நான் வேணாங்கல... இதனால் என்ன முடிவு கிடைக்கும் என்றே கேட்கின்றேன்..../.

இராணுவத்தின் அடாவடியால் ஆத்திரப்பட்டு புலிகளில் இணையும் இளைஞர் தொகையைக் குறைக்கலாம்... :wink: :P :P

யார்ரா இவன் ஒருத்தன் சும்மா நொட்டு நொசுக்கு எண்டு கொண்டு... :x :x

இலங்கை முழுவதும் மிக அமைதியான வாழ்க்கை

அப்ப 1957 இனக்கலவரம் 1977 ல கலவரம்.. எல்லாம் அமைதியாத்தான் நடந்ததா..????

ஒய் சரியா தெரிஞ்சு கதையுமோய்... :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

தல,, வானம்பாடி கேக்கிறதால பல நன்மைகள் எங்களுக்கும் இருக்கு.. எத்தனை உண்மைகள் வெளிவரும் பாருங்க,, அதேவேளை வானம்பாடியின் மாற்றுக்கருத்தாளன் எண்ட இரட்டை முகமூடி மீண்டும் மீண்டும் கிழிபட்டுக்கொண்டு இருக்கு,, பாவம் அவரால் பல உண்மைகளை யாழ்கள உறுப்பினர்கள் அறிந்து கொண்டு இருக்கிறார்கள்,, :idea: :idea:

அடடா இங்க சிலர் அநியாயத்திற்கு நல்லவங்களா இருக்கிங்களே :lol::lol::lol::lol::lol::lol:

இப்ப வானம்பாடி சொல்லுவார் இந்தியாவிலை யுத்தம் நடந்து தான் உயிருக்கு பயந்து ஓடிவரவில்லை.

தாய் நாடு என்று உரிமை கோரிறனீங்கள் அங்கை நிண்டு பிரச்சனை எண்டு வரும் போது சண்டை பிடிக்காமல் ஒடிவரக் கூடது என்று. இது உமக்கு தேவையோ? :oops:

காஸ்மீரில பாக்கிஸ்த்தான் போடுறான் குண்டு அங்க போகவேண்டியதுதானே... இல்லை பெங்களூரில விஞ்ஞானியைச் சுட்டாம்ங்கள் அதைப் போய்தடுக்கிரதுதானே...!

  • தொடங்கியவர்

யோவ் வசிசுதா

உங்களின் ஆதங்கம் எனக்கு வடிவாக தெளிவாக விளங்குகின்றது..... கோபமடையாதீர்கள்..... எங்களின் உயிர்தான் எங்களுக்கு வெல்ல்க்கட்டியென்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது... அப்படி சொல்லவும்மாட்டேன்.............. உங்கள் எல்லோரையும் சாகும்படி எப்பவும்,எந்த இடத்திலும் சொல்லவில்லை..........

நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிட்டுவீர்கள் போல் உள்ளது...... சரி பறவாYஇல்லை......

நான் சொன்னேன் இந்த சிறிய நாட்டிற்குள் எப்படி எவ்வளவு மைல் வேகத்தில் சுற்றிசுற்றி ஓடப்போகிறீர்கள்..

ஒருசிலர் பாதுகாப்பு தேடி புலிகளின் பகுதிக்கு சென்றால் மற்றவர்களின் நிலமை என்னவாகும்......அதனை யோசித்தீர்களா......நீங்கள் எல்லோரும் ஒரேஇடத்தில் ஒற்றுமையாக இருக்கும் போது உங்களை எவனும் எளிதில் நெருங்கமுடியாது.....

அப்படியென்றால் சிங்கள வெறிபிடித்த இராணுவம் யாழ்பாணத்தில் இருப்பது மாபெரும் தவறு, மனித உரிமை மீறல் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்கள் அப்படித்தானே??? இதனைத்தானே தமிழ் மக்களாகிய நாங்களும் சொல்கின்றோம்.

முடியாது ..... முடியவேமுடியாது

இதுவரை எத்தனை ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து விட்டீர்கள்..... உங்களைப்பொறுத்தவரையில் அவர்கள் போராளிகளாக இருக்கலாம்.... ஆனால் என்னை பொறுத்தவரையில் அவர்களும் அப்பாவி பொதுமக்களே....

பாவம்...பாவம்... எனிமேலும் இப்படியான உயிர்பலி வேண்டவே வேண்டாம்.....

தயவுசெய்து மாற்று வழி பாருங்கள்.....

அதை இந்திய அரசிடம் சொல்லுமோய் இலங்கை அரசு தமிழரைக் கொல்கிறது... அவர்களிற்க்கு உதவி செய்ய வேண்டாம் எண்டு...... :P

நீங்கள் எல்லாரும் ஒண்றாய் சேர்ந்து தரும் முடிவைதமிழன் ஏற்கவேணும் எண்றது உங்களின் ஆசையாயும் இந்திய இறையான்மைக்கும் நன்மை... ஆனால் தமிழரின் சாவிற்க்கு இந்தியா இலங்கைக்கு வளங்கிய உதவிகள்தான் பெரும் காரணம் எண்டு எங்களுக்கு நண்குதெரியும்.... :evil:

தல,, வானம்பாடி கேக்கிறதால பல நன்மைகள் எங்களுக்கும் இருக்கு.. எத்தனை உண்மைகள் வெளிவரும் பாருங்க,, அதேவேளை வானம்பாடியின் மாற்றுக்கருத்தாளன் எண்ட இரட்டை முகமூடி மீண்டும் மீண்டும் கிழிபட்டுக்கொண்டு இருக்கு,, பாவம் அவரால் பல உண்மைகளை யாழ்கள உறுப்பினர்கள் அறிந்து கொண்டு இருக்கிறார்கள்,, :idea: :idea:

ம்ம்ம்.. மாற்றுக்கருத்துக்கும் மாற்று மறுந்து இருக்கப்பா... :P :P :P

அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,

நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....

தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்

அன்புடன்

வானம்பாடி

அப்படியென்றால் சிங்கள வெறிபிடித்த இராணுவம் யாழ்பாணத்தில் இருப்பது மாபெரும் தவறு, மனித உரிமை மீறல் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்கள் அப்படித்தானே??? இதனைத்தானே தமிழ் மக்களாகிய நாங்களும் சொல்கின்றோம்.

தவறு.....தவறு.........தவறு

வல்லரசாக வரத்துடிக்கிற எந்த ஒரு நாடும் தனது வெளியுறவுக் கொள்கையை அநியாம் நியாம் எல்லாம் பாத்து வகுக்க முடியாது. அந்த கொள்கை சார்ந்த விடையங்களை தங்களுது குடிமக்களுக்கு போதிக்கும் கடமையுள்ள அந்த நாட்டின் முன்னணி ஊடகங்களும் நீதி நியாயம் தர்மத்தின் பால் எழுதமாட்டா. தமது தேசிய நலன்களை முன்நிறுத்தித்தான் பிரச்சாரம் மேற்கொள்ளுவார்கள். இதனால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இந்தியக் கூடிமகனை விளங்கிக் கொள்ளலாம் மன்னிக்கலாம்.

ஆனால் இந்தியாக்காறர்களின் மூத்திரத்தை கயிறு என்று பிடித்துக் கொண்டு தாங்கள் நாகரீகமானவர்கள் காந்தியவாதிகள் ஜனநாயகவாதிகள் என்று தனது இனத்துக்கு எதிராக விபச்சாரம் செய்யும் வேற்று நாட்டவர்களை மன்னிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,

நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....

தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்

அன்புடன்

வானம்பாடி

இதோடா,,,, என்னய்யா இப்படி சிம்பிளா கருத்தை முடிச்சீட்டீர்?? அதெப்படியப்பா 5000மேற்பட்ட மக்கள் கொன்றழிக்கப்பட்டதும், பல ஆயிரம் விதவைகள்,, பல நூற்றுக்கணக்கான பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், தாகப்பன், தாயை இழந்த பிள்ளைகள் உருவாக காரணமானவங்களை சும்மா விடச்சொல்லுறீர்? தமிழீழ தமிழ் மக்கள் மனதில் மிகக்கடுமையான வடுவை ஏற்படுத்திவிட்ட இந்தியா, திரும்ப திரும்ப அந்த தவறை ஏதோ ஒரு விதத்தில் புதுப்பித்துக்கொண்டு இருக்கு,,, அதை மக்கள் லேசில் மறக்கமாட்டார்கள்,,

அட உமக்கு உம்மட நாட்டைப்பற்றி கதைக்க குத்துதெல்லோ? அப்ப எதுக்கு எம் நாட்டைப்பற்றி புலம்பல்? :x :x :x

நீங்கள் செய்ததைத்தானே செல்கின்றேம் வேறு இல்லாதது பெல்லாதது ஒன்றும் செல்லவில்லையே அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....என்று கூறுகிறீர்களே அவரை நீங்கள் தானே தெரிவு செய்தீர்கள் அதற்கு நீங்கள் தானே பெறுப்பு உங்கடை நாட்டை மட்டம் தட்டுறது என்டு செல்லுறீங்கள் நீங்கள் கூறும்போது நாங்கள் பார்த்துக் கெண்டிருப்பேமா

இதில் பாருங்கள் உங்கள் இராணுவம் செய்த அனியாயங்களை

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8259

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.