Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது இரகசியமானதொன்றாக இருக்கக் கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது இரகசியமானதொன்றாக இருக்கக் கூடாது யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

.இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது இரகசியமானதொன்றாக இருக்கக் கூடாதென வலியுறுத்தியுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அரசியல் தீர்வை எட்டுவதற்கு முன் தமிழினத்தின் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடலொன்று இடம்பெற வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

வன்னி யுத்தத்தில் உயிர்நீத் மாணவர்களையும் மக்களையும் நினைவு கூர்ந்து யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

உலக வரலாற்றில் தாட்சணியத்திற்கும் நீதியைப் பெறுவதற்கும் சட்டமுறையான பாதுகாப்பைப் பெறுவதற்கும் கைவிலங்குகளின்றிச் சுதந்திரத்துடன் நடமாடுவதற்கும் பாக்கியம் கிட்டாமை எமக்கொரு துரதிர்ஷ்டமே.

முள்ளிவாய்க்காலில் வரையப்பட்ட வடுக்களுடனும், ஆறாத மனக்காயங்களுடனும் உள்ளெழும் அழுகுரலையும் தாங்கிக் கொண்டு உள்ளூரத் தெரியும் ஏதோவொரு நம்பிக்கையை மனதில் எண்ணியவாறு ஆயுதமோதாலின் போது எங்களை விட்டுப்பிரிந்த எமது சக பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், எங்கள் உடன் சகோதரர்கள் ஒவ்வொருவரையும் மனதில் எண்ணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்தித்து நிற்கின்றோம்.

ஆயுதமோதலும், அதனோடு இணைந்த எண்ணற்ற மரணங்களும் நடந்து முடிந்து இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இருப்பினும் நினைத்துப் பார்க்க முடியாத அந்த இறுதி நாட்களும் நேரங்களும் இப்பொழுதும் மனதில் ஊசலாடுகின்றன. எப்பொழுதும் ஊசலாடும்.

வன்னி அவலங்கள் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்னமும் முன்னேற்றமின்றியும், மீள் நிர்மாணம் செய்யப்படாமையும் உள்ளமை வருத்தத்தை அளிக்கின்றது.

ஆயுதமோதலின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்களின் வாழ்வில் உண்மையான மேம்பாட்டையோ வலுவாதாரத்தையோ உருவாக்கவில்லை. மிகப்பெரியளவிலான நிதி ஒதுக்கீடுகளும், அபிவிருத்தித் திட்ட அறிவிப்புகளும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்ற போதும் அவற்றின் நன்மைகள் சாதாரணமாக உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாமை வியப்பளிக்கின்றது.

மாற்றத்தை ஏற்படுத்தாத அபிவிருத்தித் திட்டங்கள், அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சமுக மீள் கட்டுமானத்திற்கான அரசாங்கத்தின் உபாயங்களில் முன்னேற்றகரமான மாற்றத்தையும் வெளிப்படையான அணுகுமுறையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

கல்வியினை அபிவிருத்தி செய்வதே தமிழினத்தின் உறுதியான, ஏமாற்றப்பட முடியாத எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்பதால் தமிழினத்தின் கல்வி அபிவிருத்தி குறித்து அனைத்து சமூகத்தினருடனும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென்றும் இதற்காக அனைவரும் ஒன்றிணைந்த ஒரு செயற்றிட்டத்தினை தயாரிப்பதில் கவனஞ் செலுத்த வேண்டுமென்றும் அழைப்பு விடுக்கின்றோம்.

தமிழர் பிரதேசங்களில் யுத்தத்தின் வடுக்களாக எஞ்சியுள்ள தாய், தந்தையரை இழந்தோர், விழிப்புலனற்றோர், அங்க அவயவங்களை இழந்தோர், கணவனையோ, மனைவியையோ இழந்த குடும்பஸ்தர்கள், பிள்ளைகளை இழந்து தனித்து வாடும் பெற்றோர்கள், முதியோர்கள், உடல் செயற்றினற்றுப் போயிருக்கும் சகோதரர்கள் தொடர்பாகவும் யுத்தத்தினால் இழந்து போயிருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகள், கடின உழைப்பினால் சம்பாதித்துக் கொண்ட சொத்துக்கள் வாழ்வாதார மூலதனங்கள், இயற்கை வளங்கள் என்பவற்றின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய கேள்வியும் சவாலும் எங்கள் முன்னால் விடப்பட்டிருக்கின்றதை ஞாபகப்படுத்துகின்றோம்.

இவற்றின் மீது கவனஞ் செலுத்தி தேவையான ஆய்வினை மேற்கொண்டு பொருத்தமான செயற்றிட்டங்களை தயாரித்து மீளவும் நம்பிக்கையையும், நல்வாழ்வையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று அழைத்து நிற்கின்றோம். இதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் சார்பில் எங்களின் காத்திரமான பங்கு எப்பொழுதும் இருக்கும் என்பதையும் உறுதி பூணுகின்றோம்.

தமிழினத்தின் சமூக உறவு, அபிவிருத்தி, கீழ்க்கட்டுமானம் என்பவற்றில் புலம்பெயர் சமூகத்தின் முக்கியத்தை நாம் அதிகம் உணருவதால் அவர்களின் உறுதியான பங்கினை நாம் தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம். இந்தப் பங்களிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமையை வரவேற்பதுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நாம் எப்பொழுதும் வரலாற்றின் பால் கட்டுப்பட்டவர்களாகவே நடந்து கொள்ள விரும்புகின்றோம். தற்போதைய சூழலில் தமிழினத்தின் அரசியல் தீர்வு மற்றும் உரிமைகள் தொடர்பாக பேச்சுகள் நடாத்தப்பட்டு வரும் சூழல் காணப்படுகின்றது. எது எவ்வாறிருப்பினும் அரசியல் தீர்வு விடயங்களில் கவனஞ்செலுத்துகின்ற அரசுடன் பேச்சு நடத்துகின்ற தலைவர்கள் மக்களால் தமக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி தாங்கள் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன் எந்தவொரு அரசியல் தீர்வு தொடர்பாகவும் இறுதித் தீர்வு எட்டப்படுவதற்கு முன்னர் தமிழினத்தின் அனைத்துத் தரப்பினருடனும் திறந்த நிலையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். அரசியல் தீர்வு என்பது இரகசியமானதொன்றாக மேற்கொள்ளப்படுதல் ஆகாது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

சமூகத்தின் மீதான அக்கறை, எதிர்காலம் குறித்ததான சிந்தனையில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினராகிய நாமும் எப்பொழுதும் தெளிவாகவும் பொறுப்புடனும் செயற்படுவோம் என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களுக்கும் சமூகத்திற்குமிடையிலான தொடர்பாடலையும் ஆக்கப்பூர்வமான உறவினையும் சேதப்படுத்துவதில் பல்கலைக்கழகத்திற்குள்ளும் வெளியிலும் திட்டமிட்டுச் சில சக்திகள் செயற்படுகின்ற போதும் இவை குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்பட்டு சரியான பாதையில் பயணிப்பதை நாம் உறுதி செய்கின்றோம்.

இறுதியாக நாம் ஒன்றுபட்டுச் சிந்திப்பதும் செயலாற்றுவதுமே எமக்குப் பலமும், இன்றியமையாத அவசியமாகவும் உள்ளன. எனவே, தமிழினத்தின் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்த வகையில் சமூக விருத்திக்கானதும், அரசியல் உரிமைக்கானதுமான ஒன்றிணைந்த செயற்பாட்டை முன்னெடுக்க அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன் அத்தகைய முயற்சிகளுக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஆதரவு எப்பொழுதும் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.