Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ தேசிய துக்கநாள் கவனயீர்ப்புப் பேரணிகள்

Featured Replies

தமிழீழ தேசிய துக்கநாள் கவனயீர்ப்புப் பேரணிகள்

இன்று தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இடம்பெற்றுள்ளன

தமிழீழ தேசிய துக்கநாள் கவனயீர்ப்புப் பேரணிகள் இன்று தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இடம்பெற்றுள்ளன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ தேசிய துக்க நாளில் நிய+யோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் மன்ற அலுவலகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்புப் பேரணியை நடத்தியது.

இந்தப் பேரணியை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதம மந்திரி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் செய்தியொன்றை விடுத்திருந்தார்.

இதேவேளை தமிழின அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் இலங்கை அரசின் போர்க்குற்ற மீறல்களைச் சர்வதேச நீதி விசாரணையின் முன் கொண்டுசெல்ல வலியுறுத்தி - ரொறன்றோவிலும், மொன்றியலிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

கனேடியத் தமிழர் தேசிய அவை ஒன்ராறியோ சட்டசபை முன்றிலிலுள்ள குயின்ஸ்பார்க் திடலிலும், மொன்றியலிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாகவும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது.

மூலம்: TVI கனடா

  • தொடங்கியவர்

கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதி நாள்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈழப் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி வீடுகளிலும், கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் தமிழர்கள் 18.05.2011 அன்று அஞ்சலி செலுத்தினர்.

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டணித் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் இரங்கல் கூட்டம் நடத்தினர்.

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=54241

Tamils mark two years since end of Sri Lanka's civil war : http://www.radioaustralia.net.au/asiapac/stories/201105/s3220641.htm (அவுஸ்திரேலியா)

Two years after the end of the bloody civil war in Sri Lanka, reconciliation between Tamils and the Sinhalese remains fraught with challenges. Tamils around the world have gathered to commemorate the tens of thousands of lives lost during the final months of the war - when there was a sharp escalation in violence.

In Melbourne, the Tamil diaspora called on the Australian government to back the findings of a UN advisory report, which recommended an independent investigation into claims of atrocities perpetrated by both the Sri Lankan government and the Tamil Tiger sepatratists.

The Sri Lankan government says the report was "shoddy" and refutes any claims of atrocities.

Tamils demand justice in Hague protest : http://www.rnw.nl/international-justice/article/tamils-demand-justice-hague-protest (ஒல்லாந்து)

Hundreds of Tamil protesters gathered at the International Criminal Court in The Hague on Wednesday to demand justice.

If the international court prosecutors can request judges to issue arrest warrants on charges of crimes against humanity against Libyan leaders, then why not against the leaders in Sri Lanka too? This is the call from the international Tamil community.

Two years ago today the Sri Lankan government declared the defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) bringing an end to a civil war that lasted more than three decades between the Sinhalese and the Tamil communities. But, while the conflict is officially over, the scars run deep.

Edited by akootha

  • தொடங்கியவர்

Tamils remember 2009 Sri Lankan massacre of Tamil civilians - LondonMedia Summary : http://www.demotix.com/news/694901/tamils-remember-2009-sri-lankan-massacre-tamil-civilians-london (இலண்டன்)

Tamils gather to remember the Sri Lankan massacre of more than 40,000 civilian in London's Trafalgar Square. The Tamils are asking for an international independent war crimes investigation.

In Trafalgar Square London Tamils gather to remember the massacre of more than 40000 civilians in Mullivaikkal,Sri Lanka. The Tamils are asking for an international independent war crimes investigation.

The UN panel of experts report of 31st march 2011 indicated that there was credible evidence for an investigation into war crimes committed in the final phase of the war in 2009 in Sri Lanka. The report also charged that the Sri Lankan armed forces have repeatedly targeted civilians after having asked them to move into no fire zones. It is also reported that the Sri Lankan army bombed hospitals ,UN offices and targetted an ICRC ship.

One example of a war crime was looked into by channel 4 and they found credible evidence that at least one person who surrendered was later raped and killed. Her name was Isaiprya and she had been a newsreader in Sri Lanka. Speaking to one leading representative of the British Tamil Forum said that " those who were responsible for these heinous crimes should be brought to book"

2009 இல்

வீரச் சாவடைந்த, படுகொலை செய்யப்பட்ட எம்மினத்தவர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்.

  • தொடங்கியவர்

இறுதிப் போரில் உயிரிழந்தோரின் ஆத்ம சாந்தி வேண்டி களுவாஞ்சிக்குடியில் நினைவஞ்சலி!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது உயிரிழந்தோரின் ஆத்மசாந்தி வேண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களுவாஞ்சிக்குடியில் நேற்று (18.05.11) நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

களுவாஞ்சிக்குடி சக்தி இல்லத்திலுள்ள அநாதரவான குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு இடம்பெற்ற பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

வன்னியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி அன்னை ஆதிபராசக்தி வளாகத்தில் கூட்டுப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சக்தி இல்ல மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழிபாட்டு மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள உரையாற்றினர்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் சுட்டிக்காட்டிய விடயங்களையே ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் குழுவின் அறிக்கை கூறுகிறது. வன்னிப் போரின் இறுதிக் கட்டங்களின் போது இந்த இழப்புகள் ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆயினும் இந்த விடயத்தை நீண்ட காலத்திற்கு முன்பே நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம் என்று பொன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.

போரின் போது உயிரிழந்த சிறுவர்கள் உட்பட பொது மக்களின் ஆத்ம சாந்திக்காக நேற்று விசேட பூசை வழிபாடுகளை நடத்தியதாக அவர் தெரிவித்தார். துன்பமான தினமாக மே 18 ஒவ்வொரு வருடமும் அனுட்டிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்திய துக்கமான நாள். கடந்த வருடமும் மட்டக்களப்பில் இந்தத் தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={056709A8-EC97-40D2-8245-288F450DFE30}

  • தொடங்கியவர்

கனடா ரொறன்ரோ- 'போர்க்குற்ற நாள்' நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

தமிழின அழிப்பின் 2ம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18.2011) சிறிலங்கா அரசின் போர்க்குற்ற மீறல்களை அனைத்துலக நீதிவிசாரணை முன் கொண்டுசெல்வோம் எனச் சபதம் எடுத்து கனடியத் தமிழர் தேசிய அவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் போர்க்குற்ற நாள் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.

இந்நிகழ்வு மே மாதம் 18.2011 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு ரொறன்ரோ நகர மத்தியில் அமைந்துள்ள ஒன்ராரியோ பாராளுமன்றத்தின் முன்பாக குயின்ஸ் பார்க் திடலில் (Ontario Parliament - Queen's Park) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியலாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றினா. அத்துடன் சிறிலங்கா அரசின் போர்க்குற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இறுதி நிகழ்வாக தீப வணக்க நிகழ்வு இடம்பெற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஓன்ராரியோப் பாரளுமன்ற உறுப்பினர் கிளன் மூறே (Glen Murray) பொதுச்சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல்,அமைதி வணக்கம் , மலர் வணக்கம்; இடம்பெற்றன.

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களான பொப் றே (Bob Rae), மைக்கல் புறு (Michael Prue), ராதிகா சிற்சபைஈசன், மனித உரிiமைகள் சட்டவல்லுநர் குர்பற்வன்ற் பனூன் (Gurpatwant Panun), மாநகரசபை உறுப்பினர் லோகன் கணபதி, ஜேம்ஸ் கிளாக் (Canadian Peace Alliance), பிரியந் (தமிழ் இளையோர் அமைப்பு), சன்டி கட்சன் (Ontario Chairperson, Canadian Federation of Students), வனிதா இராயேந்திரம் (நாடு கடந்த தமிழீழ அரசு ஜனநாயகவாதி), கிருஸ்ணா சரவணமுத்து (கனடியத் தமிழர் தேசிய அவை பேச்சாளர்) ஆகியோர் உரை நிகழ்த்தினர்.அத்தோடு எழுச்சிப் பாடல்களும் எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன.

இன்றைய தினம் மழை நாளாக இருந்தபோதும் வேலை நாளாக இருந்தபோதும் முதியோர்,இளையோர்,குழந்தைகள் என வயது வேறுபாடின்றி உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். இன்று காலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தபோதும் நிகழ்வு தொடங்கி முடியும் வரை மழை பெய்யவில்லை. இறுதியாக மக்கள் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி வணக்கம் செலுத்திய வேளை வானமும் கண்ணீர் விடுவது போல் மழை தூறியது. இயற்கை தனது கடமையினை செய்தமையானது மக்களை உணர்வு மேலிடச்செய்தது.

பல தமிழ் வர்த்தக நிலையங்கள் தாமகவே இன்று மாலை தமது வர்த்தக நிலையங்களை மூடி இந்நிகழ்வுக்கு ஒத்தாசை புரிந்தமை குறிப்பிடத்தக்கது. கனடிய தேசிய ஊடகங்கள் இந்நிகழவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுடன் நேரடி ஒளி, ஒலிபரப்புச் செய்ததும் சிறப்பம்சமாகும்.

ரொறன்ரோவிலிருந்து ஒலி - ஒளிபரப்பாகும் பிரதான தமிழ் ஊடகங்களான கனடியத்தமிழ் வானொலி (CTR) பல்கலாச்சார வானொலி (CMR) , சர்வதேச தமிழ் வானொலி (GTR) ரி.வி.ஐ தொலைக்காட்சி (TVi) தமிழ் வண் (Tamil One) ஆகியன போர் குற்றம் தொடர்பான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கனடியத் தமிழர் தேசிய அவையினருடன் ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக்கழங்கள் மற்றும் இளையோர் அமைப்பினர் என வயது வேறுபாடின்றி தமது உறவுகளின் இழப்பினை நினைந்து உணர்வு பூர்வமாக நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஆரம்பத்திலிருந்து முடிவுறும்வரை பங்காற்றினர்.

இறுதியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு 9.30 மணியளவில் போர்க்குற்ற நாள் நிகழ்வு நிறைவுபெற்றது.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

பணிமனை :- 5310 Finch Avenue East, Unit 10

தொலைபேசி :–1 866 263 8622 / 416 646 7624

மின்னஞ்சல் :- info@ncctcanada.ca

இணையத்தளம் :- www.ncctcanada.ca

post-1724-0-89139900-1305846810_thumb.jp

Edited by akootha

  • தொடங்கியவர்

இத்தாலியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவுநாள்

ஈழத்தமிழர் மக்களவையின் ஏற்பாட்டில் இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற முள்ளிவாய்கால் மே18 இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும் குருதிக்கொடையுடன் மெழுகுதிரி ஊர்வலமும் மலரஞ்சலியும் அகவணக்கத்துடன் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.

http://rste.org/2011/05/19/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.