Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா அறிக்கை:சிங்கள பத்திரிகையாளர்களின் ஒளிவு மறைவற்ற பேட்டிகள்

Featured Replies

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை மற்றும் இன விவகாரங்களுக்கான தீர்வு தொடர்பாக கொழும்பு சிங்கள பத்திரிகையாளர்களின் ஒளிவு மறைவற்ற பேட்டிகள்.இதில் பிரபல சிங்களப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களின் பேட்டிகள் வருமாறு.

மனிக் டி சில்வா பிரதம ஆசிரியர் “ஞாயிறு ஐலண்ட்' பத்திரிகை

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது மிகவும் நியாயமற்ற அறிக்கை என்றே நான் கருதுகிறேன். இந்த அறிக்கை குறித்து நாட்டில் பெரும்பாலானோர் அதிருப்தியையும், வருத் தத்தையும் தெவித்து வருகின்றனர். இதில் இருக்கும் நியாயமற்ற விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு, பான் கீ மூனுக்கு சேறு பூசி, மேற்கத்தைய நாடுகளைக் குறை கூறிக் கொண்டு இருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. விபரமாகவும் நியாயமாகவும் நடந்ததாகக் கூறப்படும் மனித உமை மீறல்கள் குறித்து அரசாங்கம் பதில் கூறவேண்டும். இவ்வாறு பதில் கூறும் போது இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஒரு நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது.

அதிகாரப் பகிர்வு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், அதிகாரப் பகிர்வை மத்திய அரசாங்கத்தின் ஊடாகக் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய விரும்பம்.

மத்திய அரசாங்கத்தின் ஊடாக மாதிரி ஒன்றை அமைத்து அதன் ஊடாக அதிகாரத்தைப் பகிர வேண்டும். மத்திய அரசாங்கத்தின் ஊடாக தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களுக்கும் அதிகாரத்தைப் பகிரவேண்டும்.

இவ்வாறு மத்திய அரசாங்கத்தின் ஊடாக அதிகாரத்தைப் பகிர வேண்டும் என நான் கூறுவது ஏனென்றால், மத்திய அரசாங்கத்தின் மூலமாக மாகாண அடிப்படையில் அரசாங்கம் அதிகாரங்களை பகிர்வதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை நிலை கொள்ளச் செய்ய முடியும் என நான் நம்புகின்றேன். பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை பெற வேண்டும்

“திவயின' பத்திகையின் பிரதம ஆசியர் மெல் பெரேரா

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், தருஸ்மனுடைய அறிக்கை குறித்து கூறினால், நிபுணர் குழுவொன்றை நியமிக்க ஐக் கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எந்தவொரு அதிகாரம் இல்லை. அது தான்தோன்றிப் போக்குடைய சட்ட விரோதமான குழுவென்றே அதனைக் கருத வேண்டும்.

அந்தக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமான விடயமாகும். எனினும், அந்த அறிக்கையில் இரண்டு சாராருக்கும் எதிராகக் குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கலாம். இந்த இரண்டு சாராரும் தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக கருத்துத் தெவிக்கையில், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்தியாவிலிருந்து இராஜதந்திர குழு வொன்று இலங்கைக்கு வரவுள்ளது. இந்தக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு உரிய தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.

எனினும், இந்த விடயத்திற்கு நியாயமான தீர்வொன்றையே முன்வைக்க வேண்டும்.அவ்வாறு தீர்வொன்றை முன்வைத்தால், அது மிகவும் சிறந்ததாகவே இருக்கும்.

இதன்போது ஒருசாரார் அவர்களுக்குத் தேவையான பக்கச்சார்பான தீர்மானங்களை முன்வைக்காமல் நியாயமான தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது. உண்மையில் கூறப் போனால், எமது நாடு ஒரு சிறிய நாடு. இரண்டு கோடி ஜனத் தொகையைக் கொண்ட நாடும் கூட. இந்த நாட்டைத் துண்டாடாமல் அனைத்து இன இலங்கை வாழ் மக்களும் ஒன்றாக சமாதானத்துடன் வாழக் கூடிய வகையில் ஒரு தீர்வொன்றே இந்த அதிகாரப் பகிர்வுக்கு சிறந்தது என்பதே எனது கருத்தாக உள்ளது.

அவ்வாறு ஒன்றாகச் சமாதானமாக அனைத்து மக்களும் இருந்தால், அதிகாரத்தைப் பகிரவோ நாட்டை பிளவுபடுத்தவோ வேண்டிய தேவையில்லை. இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் மிகுந்த ஒற்றுமை இருந்தது. இங்கிருந்து நாம் யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாகச் சென்று வந்தோம்.

அப்போதெல்லாம் எங்களுக்கு எந்த வொரு பிரச்சினையும் இருக்கவில்லை. அப்படியான ஒரு நிலைமை தான் இன்று இலங்கைக்கு வேண்டியுள்ளது. நாட்டை இரண்டாகத் துண்டாடி அதற்கு ஒரு எல்லையை அமைப்பதனால் பாரிய பிரச்சினை தான் ஏற்படும். இந்திய, அயர்லாந்து அதிகாரப் பகிர்வுறை இலங்கைக்கு வாய்ப்பானது

ராஜ்பால் அபேநாயக்க பிரதம ஆசியர் “லக்பிம நியூஸ்'

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை சிறந்த அறிக்கையென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த அறிக்கையானது ஆழமாக விசாரிக்கப்பட்டு அமைக்கப்பட்ட அறிக்கையும் அல்ல. அத்தோடு ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டிய விதமாக அவ்வாறான தான் தோன்றித்தனமான முடிவுகளை எடுக்க முடியாது. அத்தோடு திடீரென குழுவொன்றை அமைப்பதற்கும் அவர்களுக்கு முடியாது. இந்த அறிக்கையை விசாரணை செய்ய வெளியில் இருந்து எவரையும் அழைக்க வேண்டிய தேவையில்லை என அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கருத்தினை முன்வைத்திருந்தது. இந்த அறிக்கையானது சிறந்ததல்ல என்பது இதிலிருந்து தெரிகிறது.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக கருத்துத் தெவிக்கையில், அதிகாரப் பகிர்வு விடயத்தை மிகவும் சிறந்த விதத்தில் கையாள வேண்டும். எனினும் இதுவரை அதிகாரப் பகிர்வு முறை நடைறைப்படுத்தப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள சில விடயங்களை உள்ளடக்கி அதில் உள்ள குறைப்பாடுகளையும் சரி செய்து அதன் ஊடாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது சிறந்ததாகும். இந்தியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் அதிகாரப் பகிர்வு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை நன்கு ஆராய்ந்து அதிலிருந்து சிறந்த விடயங்களையும் நடைறைகளையும் பயன்படுத்தி இலங்கையிலும் அதிகாரப் பகிர்வை மிகவும் சிறந்த விதத்தில் மேற்கொள்வது சிறந்தது என்பதே என்னுடைய கருத்தாகும். தமிழ், சிங்கள மக்கள் புதிய வாழ்வுக்குத் திரும்ப வேண்டும்

விக்டர் ஐவன் “ராவய' பத்திகையின் பிரதம ஆசியர்

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகக் கருத்துத் தெவிக்கையில், எந்தவொரு நாட்டிலும் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் போது பல்வேறு சம்பவங்கள் இடம்பெறும். அவ்வாறு நடக்காது என்று கூற முடியாது. தீவிரவாத அமைப்பொன்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது, இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது பொதுவான ஒரு விடயம்.

உண்மையிலேயே ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை எவ்வாறு இருந்தாலும், யுத்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கத்திற்கு மக்களின் உயிர்களை மீண்டும் தர முடியாது. எனினும், அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

அத்தோடு, அரசாங்கம் மற்றுமொரு விடயத்தைக் கருத்திற் கொள்ள வேண்டும். அதுதான் இந்த பிரச்சினையானது அரசியல் ரீதியான பிரச்சினையாக உள்ளது. இந்த அரசியல் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்க வேண்டும். அத்தோடு யுத்தத்தின் போது பொறுப்புகளை மீறிச் செயற்பட்டிருக்கிறதா? அவ்வாறு அரசாங்கம் செயற்பட்டிருந்தால், அதனை உள்ளக ரீதியாக ஆராய வேண்டியுள்ளது.

நான் நினைக்கும் முதலாவது விடயம்தான், இந்த இரண்டு இனங்களுக்கு இடையிலான செயற்பாடுகளே இந்தப் பிரச்சினைக்கு பிரதான காரணமாகும்.

ஒரு சந்தர்ப்பத்தில் சிங்களவர்கள் தமிழ் மக்கள் குறித்து கடைப்பிடித்த கொள்கைகள் மிகவும் பாரதூரமானவை. அதேபோன்று அந்தப் போராளிக் குழுவும் பின்பற்றிய கொள்கையும் பிரதிபலிப்பும் நியாயமற்றவை. தங்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்பதற்காக மக்களை அழிப்பது நியாயமற்றது. எனினும், அந்த விடயங்கள் இடம்பெற்று முடிந்து விட்டன. இப்பொழுது இந்த இரண்டு இனங்களும் அதாவது, தமிழ், சிங்களம் இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன், இரண்டு சாராரும் தங்களுடைய அனுதாபங்களைத் தெரிவித்து அதாவது, தமிழர்கள் சிங்களவர்களிடம், சிங்களவர்கள் தமிழர்களிடம் அனுதாபங்களைத் தெரிவித்து, புதிய வாழ்வை ஆரம்பிக்க வேண்டும். அந்தப் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்கு அரச தரப்பிலிருந்தோ அல்லது அரசியல் ரீதியிலோ இடையூறுகள் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக கருத்துத் தெவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தற்போது ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேல திகமாக ஒன்றைத் தருவதாகக் கூறுகிறார்கள். மேலதிகமாக ஒன்றைத் தருவதாகக் கூறுவதை நான் நினைக்கிறேன், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கும், பிரச்சினைகள் தோன்றும் சந்தர்ப்பங்களின் போதும் நடவடிக்கை எடுப்பதற்கும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவான செனட் சபையொன்றை அமைப்பதாகும். அவ்வாறான ஒன்றை வழங்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், உண்மையிலேயே கூறப்போனால் வடக்கில் பெரும் பான்மையாக இருப்பது தமிழர்கள். ஏனைய இடங்களில் இரு சாராரும் கலந்து வாழ் கிறார்கள். கலந்து இருக்கும் போது பிரச்சினைகள் ஏற்படக் கூடும். தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காகப் போராடிய விடயத்தைக் கருத்திற் கொண்டு நான் நினைக்கிறேன் அனைத்து அதிகாரங்களுடனும் வடக்கிற்கு மாகாண சபையொன்றும் வழங்குவேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது சரியென்று நான் கூறவில்லை. ஏனைய மாவட்டங்களுக்கு பிரதேச சபைகளை வழங்க வேண்டும். அப்போது ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கும் போது தமிழ் மக்களுக்குக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

மட்டக்களப்பிற்கு தமிழ் மாவட்டம் ஒன்று கிடைக்கும். மலைநாட்டின் நுவரெலியாவி லுள்ள மக்களுக்கு ஒரு மாவட்டம் கிடைக்கும்.அதேபோல கிழக்கு மாகாணத்திற்கும் முஸ்லிம் மாவட்டம் ஒன்று கிடைக்கும். ஏனைய இடங்களில் கலப்பு மாவட்டம் ஒன்று இருக்கும். அவ்வாறு இருந்தால் இந்தப் பிரச்சினை இலகுவாகத் தீரும். இது என்னுடைய தனிப் பட்ட கருத்து. அரசாங்கத்தினதோ அல்லது அதன் சார்பிலான கருத்தோ அல்ல. அனைத்துப் பகுதிகளுக்கும் நிர்வாக அதிகாரம் பகிரப்படுவது மக்களுக்கு நல்லது

“த நேஷன்' பத்திகையின் பிரதம ஆசியர் காமினி அபேவர்தன

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக் கையில், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக் கையானது பக்கச்சார்பான ஒரு அறிக்கை யாகவே நான் பார்க்கிறேன். அதற்குக் காரணம் தான், அரசசார்பற்ற நிறுவனங்களினதும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நான்காயிரம் பேரின் கையெழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், ஒரு பக்கத்தை மாத்திரம் கவனித்து தயாரிக்கப்பட்டதே இந்த நிபுணர் குழுவின் அறிக்கையாகும். இந்த அறிக்கையில் அனைத்து பக்கங்களிலும் இலங்கை அரசாங்கத்தின் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

யுத்தம் நிறைவடையும் தறுவாயில் இலங்கை அரசாங்கத்தினால் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உயிர்க் கொலைகள் மற்றும் கொலைகள் பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

நிபுணர் குழுவின் அறிக்கையில் அரசாங் கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராகக் குற்றசாட்டுக்கள் ன்வைக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவே அழுத்திக் காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த தவறுகள் அதில் மறைக்கப்பட் டுள்ளன.

உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், உலகிலேயே பெரிய அளவில் மனிதக் கேடயங் களாகப் பிடிபட்டிருந்தவர்களைக் காப்பாற்றிய ஒரேயொரு நாடு இலங்கை ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மனிதக் கேடயங்களாக சிக்கியிருந்த அப்பாவித் தமிழ் மக்கள் மீட்கப்பட்டனர். யுத்தம் இடம்பெற்ற கால காட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்னம் கூறியிருந்தார், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினர் இருந்த பகுதிக்கு வரவிருந்த 600 பேரை விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்று, அந்தக் கால கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பா லான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தது வெளிநாடுகளில். அந்த அனுபவத்தை நேரடியாக அனு பவித்த ஒருவராக கனகரத்தினம் இருந்தார். அவர் கூறிய விடயம் தொடர்பாக நிபுணர் குழுவின் அறிக் கையில் சுட்டிக்காட்டப்படவோ குறிப் பிடப்படவோ இல்லை. அந்த வகையில் பார்த்தால் அந்த 600 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர் பாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அதனால், இந்த அறிக் கையை நியாயமான அல்லது நடு நிலையான அறிக்கையெனக் கூறுவது கடினமான விடயமாகும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக கருத்துத் தெவிக்கையில், நிர்வாக அதிகாரத்தைப் பகிர்வதில் எவ்விதத் தவறும் இல்லை. ஏனென்றால், நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் நிர்வாக அதிகாரம் பகிரப்படுமானால் அது மக்களுக்கு மிகவும் இலகுவாகவே இருக்கும். அப்படியில்லாமல் நாட்டிற்கு உதவி நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளல் போன்றவைகள் அல்ல, நாட்டில் நிர்வாக அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது.

இந்த நாடு ஒரு பெரிய நாடு அல்ல. சிறிய நாடு. அத்தோடு இந்த நாட்டில் இனப்பிரச்சினையென்ற ஒரு விடயம் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.இந்த நாட்டில் தீவிரவாதமே இருந்தது. அவ்வாறு இனப் பிரச்சினையொன்று இருந்திருந்தால், இந்த கொழும்பு மாநகரில் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் ஒற்றுமையாக சமாதானமாக இருக்க முடியாது. அவர்கள் எந்தவிதமான பிரச்சினை களும் இல்லாமல் எவ்வித கருத்து வேறுபாடு களும் இல்லாமல் சமாதானமாக இருக்கிறார்கள். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இங்கிருக்கும் தமிழர்கள் தங்களுக்கு விரும்பிய இடங்களுக்கும், அங்கிருக்கும் தமிழர்கள் இங்கும் வந்து செல்கிறார்கள். இவ்வாறான சமாதானம் நிலவும் ஒரு காலகட்டத்தில் தருஸ்மனின் அறிக்கையானது இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க வழிவகுக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1794:2011-05-15-16-45-32&catid=1:latest-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.