Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்காணிப்பை வலுப்படுத்த நாடெங்கும் 144 படை முகாம்கள் பாதுகாப்புத் திட்டம்-பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்பை வலுப்படுத்த நாடெங்கும் 144 படை முகாம்கள் பாதுகாப்புத் திட்டம்-பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச!

May 21, 2011

இலங்கையின் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இன்னொரு ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஆயுதப்படைகளை மீள்நிலைப்படுத்தும் திட்டம் ஒன்றை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நடைமுறைப்படுத்தவுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் 90 இராணுவ முகாம்களும், 54 சிறப்பு அதிரடிப்படை முகாம்களும் இலங்கை முழுவதும் அமைக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு இராணுவ முகாமும் தலா 1000 படையினரைக் கொண்டதாகவும், சிறப்பு அதிரடிப்படை முகாம்கள் ஒவ்வொன்றும் தலா 150 படையினரைக் கொண்டதாகவும் அமைக்கப்படவுள்ளன.

அரசியல் நோக்கம் கருதி அமைக்கப்படும் இந்த முகாம்களின் அடிப்படை நோக்கம் அரசுக்கு எதிரான கிளரச்சிகள் தொடர்பான கண்காணிப்பை மேற்கொள்வதாகவே இருக்கும்.

பனாகொட இராணுவ முகாமே இவற்றின் அரசியல் கண்காணிப்புக்கான தலைமையகமாக இயங்கும்.

அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கவசவாகனங்கள், நகரும் காலாற்படையினரை உள்ளடக்கிய ஒரு பிரிகேட் படைப்பிரிவும் உருவாக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டம் தற்போது மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதேவேளை சில இடங்களில் மேலதிகமாக, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஒருகட்டமாக யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, அங்குள்ள படையினருக்கு தமிழ் கற்பிக்கும் வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Source viyapu.

சிங்களத்தின் 'புலி வருது', 'புலி வருது' .. என்ற நாசகார திட்டமிடல் நோக்கத்தின் ஒரு முக்கிய பகுதியே இது.

சர்வதேச உலகிற்கு இன்னும் புலிகள் உள்ளார்கள் என்று பொய் சொல்லி அதை காரணமாக வைத்து: தமிழின அழிப்பு, சிங்கள குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த முகாம்கள் உதவும்.

அதைவிட தமிழர் தரப்புக்கு அரசியல் உரிமைகளை மறுக்கவும், ஆள்கடத்தல், கொலை, வெருட்டல் போன்ற அரச பயங்கரவாதத்திற்கும் துணையாக இதை பாவிப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.