Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“வன்னியின் தற்போதைய நிலவரங்கள் எப்பிடியிருக்கின்றன'

Featured Replies

“வன்னியின் தற்போதைய நிலவரங்கள் எப்பிடியிருக்கின்றன' என்று கேட்டார் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழுகின்ற நண்பர் ஒருவர். வன்னியில் நடைபெற்ற (இறுதிப்) போர் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ள சந்தர்ப்பத்தில் நண்பருடைய இந்தக் கேள்வி முக்கியத்துவத்துக்குயது.

முதலில் நண்பருடைய கேள்வி பல தொனிகளையுடையது என்பதைக் கவனிக்க வேண்டும்.

காணொளியை காண.......

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1839:2011-05-22-08-07-45&catid=1:latest-news&Itemid=18

1. போர்க்கால வன்னிக்கும் தற்போதைய வன்னிக்குமிடையில் என்ன வித்தியாசம்?

என்பது.

2. முள்ளிவாய்க்கால் அவலம் என்று சொல்லப்படுகின்ற போர்க்கால அவலங்கள் காயங்களிலிருந்து சனங்கள் மீண்டிருக்கிறார்களா இல்லையா என்பது?

3. வன்னியின் இன்றைய மக்களின் வாழ்க்கை அங்கே மேற்கொள்ளப்படுகின்ற புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளைப் பற்றியது.

4. வன்னிப் பகுதியில் படையினன் நடவடிக்கைகள் மற்றும் இராணுவத்தின் அமைப்பு எப்படியிருக்கிறது என்பதைப் பற்றியது.

இவைகளைப் பற்றி அறிவதே நண்பருடைய நோக்கம். அதாவது, போருக்குப் பிந்திய நிலைமையில் வன்னி மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதைப் பற்றி அறிவது.

போருக்குப் பிந்திய வன்னியின் நிலைமைகள் மிகவும் சிக்கலுக்குரிய ஒன்றாக மாறியுள்ளன. சுருக்கமாக விவரிக்க முடியாத அளவுக்கு வன்னி நிலைமையும் அந்த நிலைமைக்குக்கான காரணங்களும் இருக்கின்றன.

போர்க்கால உயிழப்புகள் தற்பொழுது தவிர்க்கப்பட்டுள்ளன. மக்களிடம் மரணம் பற்றிய அச்சம் தற்போதில்லை.

அப்போதிருந்த பயணத் தடை, தொடர்பாடற் தடைகள் நீங்கியுள்ளன. தற்பொழுது இலங்கையின் எந்தப் பகுதிக்கும் வன்னி மக்கள் பயணம் செய்ய முடியும். உலகத்திலுள்ள எவரோடும் தொடர்பு கொள்ள இயலும். பொருட்களை அவற்றின் நிர்ணய விலையில் வாங்கிக் கொள்ளடியும். குறிப்பாக, எந்தப் பொருளையும் தாராளமாக வாங்கலாம். மீண்டும் மக்கள் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். மேலும், திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். சுயமாகவே தொழில்களைச் செய்யக் கூடியதாக இருக்கிறது. படையினராலும் சிவில் நிர்வாகத் தரப்பினடமிருந்தும் சில தடைகள், தாமதங்கள் இருந்தாலும் அவற்றைக் கடந்து மக்கள் தங்கள் இயல்பில் இயங்குகிறார்கள்.

அழிவடைந்த வீடுகளும் சிதைந்த கட்டிடங்களும் புதிதாக நிர்மாணிக்கப் படுகின்றன. மின்சார விநியோகம் துதமாக்கப்பட்டுள்ளது. போர்க்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஐயாயிரம் பேர் வரையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலைகளும் மருத்துவமனைகளும் திருத்தப்படுகின்றன.

மந்த கதியிலேனும் வீதி அபிவிருத்தி நடக்கிறது. விவசாயம் மற்றும் கடற்றொழில்களில் மக்கள் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தொழில்களுக்கிருந்த கட்டுப்பாடுகளும் தடைகளும் பெருமளவுக்கும் தளர்ந்துள்ளன.

இவை ஒரு குறிப்பிட்ட அளவுக்கான வளர்ச்சியே. அதாவது, மீள் குடியேற்றம் நடந்த போதிருந்த நிலைமையை விட இப்போது எவ்வளவோ மேலாக நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஏனைய விடயங்கள் முன்னேற்றகரமானவையாக அமையவில்லை. மக்கள் தங்களின் காயங்களிலிருந்தும் வலிகளிலிருந்தும் இன்னும் விடுபடக்கூடிய நிலைமைகள் சீராக முன்னெடுக்கப்படவில்லை. இதுதான் அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது.

போனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. இந்த இழப்பீடு இரண்டு வகையானது.

1. உயிழப்புகளுக்கும் உடல் உறுப்புகளை இழந்ததற்குமானது.

2. சொத்து மற்றும் தொழில் இழப்புகளுக்கானது.

இதைவிடவும் அங்கே உட்கட்டுமான அபிவிருத்தி இன்னும் சீர் செய்யப்படாதேயிருக்கிறது. வன்னியின் வீதிகள் இன்னும் அதே பழைய புழுதித் தெருக்களாகவே இருக்கின்றன. இன்னும் பல ஊர்கள் இருளடைந்தே காணப்படுகின்றன. அதாவது, “இருட்டும் புழுதியும் வன்னிக்கு அளிக்கப்பட்ட வரங்கள்' என்ற நிலை இன்னும் மாறவில்லை. இதைவிட, ஒவ்வொரு வீட்டிலும் காணாமற் போனோருக்காகக் காத்திருக்கிறார்கள். அல்லது போரின் பின்னர் சரணடைந்தவர்களுக்காக தடுப்பு முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்படவேண்டியவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இராணுவத்தினன் ஆதிக்கம் இன்னும் அங்கே குறையவில்லை. முன்னர் இருந்த நிலைமை இறுக்கங்களும் கண்காணிப்பும் இப்போது குறைந்திருக்கிறது உண்மை என்ற போதும் எங்கே பார்த்தாலும் இராணுவ நடமாட்டம் என்ற நிலை நீங்கவில்லை.

இதைவிட, மக்கள் மருத்துவ வசதிகள் குறைந்த நிலையிலேயே இருக்கிறார்கள். வன்னியிலுள்ள அநேகமான மருத்துவ மனைகளுக்கு மருத்துவர்கள் இல்லை. இதனால், இவர்கள் பெரும் சிரமங்களுக் குள்ளாகியிருக்கின்றனர்.

பல பணிகளுக்கும் பொருத்தமான தேவையான உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் இல்லை என்ற நிலையே காணப் படுகிறது. ஆனால் இலங்கைத் தீவிலேயே அதிகமான பிரச்சினைகளோடும் தேவைகளோடும் வன்னி மக்களே இருக்கின்றனர். போரினால் சிதைந்த உட்கட்டுமானங்கள், போரின்போது இழக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிர்வாக இயந்திரம் போன்றவற்றை ஈடுசெய்ய வேண்டிய நிலையில் வன்னி மக்கள் இருக்கின்றனர்.

எனவே, அவர்கள் எல்லாவற்றுக்காகவும் நிர்வாக இயந்திரத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியவர்களாகவும், நிர்வாக இயந்திரத்தின் தேவைகளைப் பெறவேண்டியவர்களாகவும் உள்ளனர்.

ஆனால், இதற்கேற்ற வகையில், வன்னியில் ஒழுங்கான சிவில் நிர்வாக நடை முறைகள் இல்லை. பதிலாக அங்கே இலஞ்சம் ஊழலும் பெருக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர். இலஞ்சத்தைப் பெறுவதற்காகவே பணிகளில் இழுத்தடிப்புகளைச் செய்கின்றனர் அதிகாரிகள். இதனால், தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மக்கள் தினம் அலைந்து கொண்டிருக் கிறார்கள். இது மக்களுக்கு மனச் சுமையை ஏற்படுத்துவதுடன், தங்களுக்கான சேவைகளைப் பெறுவதில் காலதாமதத்தையும் ஏற்படுத்துகிறது.

இது மட்டுமல்ல, நீண்டகாலமாக அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள் வன்னிப் பகுதியில் இல்லாதிருந்ததும் இப்போது அரச நிர்வாக நடை முறைகள் அறிமுகமாகியிருப்பதும் மக்களுக்கு புதியதொரு நெருக்கடி நிலையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. புதிய அரச நிர்வாக நடவடிக்கைகள் அவர்களுக்குப் பழக்கமில்லா திருக்கிறது. இதனால், அவர்கள் பல சந்தர்ப்பங்களிலும் தடுமாற்றமடைகிறார்கள்.அல்லது நெருக்கடிப்படுகிறார்கள்.

குறிப்பாக, வன்னியில் முன்னர் சாரதி அனுமதிப்பத்திரம் தேவையாக இருக்கவில்லை. இப்போதே அனுமதிப்பத்திரம் அவசியமானது. ஆகவே, அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனத்தைச் செலுத்த முடியாத நிலை அவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, வன்னியில் ஓரிடத்தி லிருந்து இன்னொரு இடத்திற்கு மாடுகளைக் கொண்டு செல்வதற்கு முன்னர் அனுமதி தேவையில்லை.

ஆனால், இப்போது அப்படிக் கொண்டு செல்ல முடியாது. அதற்கான அனுமதியை உரிய தரப்புகளிடம் பெற வேண்டும். ஆகவே, இந்த மாதியான நிர்வாக நடைறைகள் வன்னி மக்களுக்கு இன்று புதியனவாக மேலதிக சுமைகளாக உணரப்படுகின்றன.

அன்றைய சட்ட முறைகள், நிர்வாக முறைமைகள் வேறாக வித்தியாசமானவை யாக இருந்தன. இப்போது இருப்பவை வேறாக உள்ளன. அரசல்லாத ஒரு போராட்ட அமைப்பின் (விடுதலைப் புலிகளின்) நடவடிக்கைகளுக்கும் நிர்வாக மாதிரிகளுக்கும் அரசொன்றின் நடவடிக்கைகளுக்கும் நிர்வாக முறைமைகளுக்கும் இடையில் வாழ நேரிட்ட மக்களின் பிரச்சினைகள் மிகச் சிக்கலுக்குரியன. உதாரணமாக, புலிகளின் நீதித்துறையினால் வழங்கப்பட்ட தீர்ப்பு இன்று செல்லுபடியற்றதாகியிருக்கிறது. புலிகளினால் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்று சொல்லப்பட்டுள்ளது. புலிகளினால் நடைறைப்படுத்தப்பட்ட பொது அமைப்புகளின் செயற்பாட்டு முறைமைகள் முற்றிலும் வேறாக இருந்தன. அவர்கள் போராட்டத்தை முதன்மைப் படுத்தியே இவற்றைக் கையாண்டு வந்தனர். ஆனால், இப்பொழுது இவையெல்லாம் வேறுநிலைக்குப் பெயர்க்கப்பட்டிருப்பதால் உடனடியாக ஒரு “மூச்சுத் திணறல்' நிலையேற்பட்டுள்ளது.

அதாவது, இன்று நிலைமை முற்றிலும் வேறாகியுள்ளது. இது ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்கு மாறுவதில் நடைறைப் பிரச்சினைகளையும், ஏற்கெனவே பழகிய நிலையிலிருந்து விடுபடக்கடினமான நிலைமைகளையும் மக்களுக்குத் தருகின்றது. மக்களுக்கு மட்டுமல்ல வன்னியிலுள்ள நிர்வாக அதிகாகளுக்கும் இதுவொரு சவால்தான். முக்கியமாக காணி மற்றும் விவாகரத்துத் தொடர்பான குடும்பப் பிணக்குகளும் சிக்கலுக்குரியனவாகியுள்ளன.

இதற்கப்பால், போனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உளநிலையை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கை, போரின்போது அங்கவீனமானோருக்கான உதவி நடவடிக்கைகள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான நிரந்தர ஆதரவுத்திட்டங்கள், உறவினர்களை இழந்திருப்போருக்கான உதவிகள், காணாமற்போனோரைப் பற்றிய தகவல்களை வழங்குவதில் உள்ள அக்கறையின்மை, இழப்புகளுக்கான நட்டஈட்டை வழங்குதல், புனர்வாழ்வு நிலையங்களிலும் சிறைகளிலும் உள்ளோரை விடுவிப்பதில் உள்ள காலதாமதங்கள் போன்ற பிரச்சினைகளும் மக்களையும் அதிகாரிகளையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன.

இந்தச் சிக்கல்களுக்கு அரசாங்கம் மட்டுமல்ல, அதற்கப்பால் பல தரப்பினரும்தான் காரணமாக இருக்கின்றனர். பலரும் அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்டி விட்டுத் தாம் தப்பி விடுகின்றனர். அல்லது தாம் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கு முயற்சிக்கின்றனர்.

ஆனால், பொறுப்புச் சொல்ல வேண்டிய பிரதான கடப்பாட்டில் அரசாங்கமே இருப்பதால், அது முதற் கண்டனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் பொறுப்புச் சொல்லவும் வேண்டும்.

அதேவேளை, அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு ஏனைய தரப்பினர்கள் தப்பிவிட முடியாது.

அரசாங்கம், படைத்தரப்பு, சிவில் அதிகாகள், வன்னியில் முதலீடுகளை ஆரம்பிக்க முயற்சிக்கும் தென்னிலங்கைத் தரப்புகள், சில தமிழ் ஊடகங்கள், புலம்பெயர் அமைப்புகளில் சில, மற்றும் வன்னிக்கு வெளியே இருக்கின்ற தமிழ் மக்களில் ஒரு சாரார் எனப் பலர் “வன்னியின் தொடரும் நெருக்கடி நிலை'க்குக் காரணமாக இருக்கின்றனர் என்பதே உண்மையாகும். குறிப்பாக, அரசாங்கத்திடம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள் நிலைப் படுத்துவது தொடர்பாக ஒரு வேலைத்திட்டம் ஒழுங்கு படுத்தப்பட்ட நிலையில் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதற்காக அரசாங்கத்தினால் சிறப்பாக இரண்டு அமைச்சுகள் (மீள்குடியேற்ற அமைச்சு, புனர்வாழ்வு அமைச்சு ஆகியன) உருவாக்கப்பட்டன. என்றபோதும், இந்த அமைச்சுகளால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் பிரத்தியேகமாக நடைபெறவில்லை. போருக்குப் பிந்திய தேவைகளைக் கருத்திற் கொண்டே இந்த அமைச்சுகள் இரண்டும் உருவாக்கப்பட்டன என்பதை நீங்கள் இலகுவாகவே புரிந்து கொள்வீர்கள். (இதைப் பற்றி மின்னரும் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருக்கிறோம்).

ஆனால், என்ன செய்வது? அதற்கேற்ற வகையில் இந்த அமைச்சுகள் செயற்பட வில்லை. இதில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக விநாயகர்த்தி ரளிதரன் இருந்துமே காரியங்கள் எதுவும் முன்னேற்றகரமாக நடக்கவில்லை என்பது கவனத்திற்குயது.

இந்த அமைச்சுகள் இரண்டும் சிறப்பாக இயங்கியிருக்குமேயானால், ஏறக்குறைய வன்னியின் நிலைமைகளில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இப்பொழுது அங்கேயிருக்கின்ற மக்கள் தங்களின் இருண்ட காலத்திலிருந்தும் கடந்த காலத்தின் வலிகளிலிருந்தும் மீண்டிருப்பார்கள்.

ஆனால், அது துரதிருஷ்டவசமாக நடக்கவில்லை.

போருக்குப் பிந்திய வன்னியில் முதலில் புனரமைப்பு நடவடிக்கைகள் நடை பெற்றிருக்க வேண்டும். இந்தப் புனரமைப் பானது மக்களைக் கடந்த காலத்தின் வலிகளிலிருந்து மீட்டிருக்கும். அவர்கள் மெல்ல மெல்ல புதியதொரு சூழலுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பர்.

போனால் பாதிக்கப்பட்ட சமூகங்களைக் கையாள்வது மிகக் கடினமானது. அவர்களுடைய காயங்களை ஆற்றுவதன் மூலமாகவே அவர்களுடைய கடந்த கால வலிகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்து புதிய மகிழ்ச்சிப் பிராந்தியத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்று சொல்வார்கள். இதற்கு மூன்று விஷயங்களைக் கவனத்தில் எடுத்துச் செயற்படுத்தப்பட வேண்டும்.

1. போருக்குக் காரணமாக இருந்த பிரச்சினைகளுக்கும் காரணிகளுக்கும் தீர்வைக் காண்பது.

2. பாதிப்புகளுக்கான இழப்பீடும் புனரமைப்பும்.

3. புதிய அபிவிருத்தி.

ஆகவே, அரசாங்கமே இந்த மூன்று விடயங்களுக்குமான வேலைத்திட்டத்தை வகுத்திருக்க வேண்டும். இவ்வாறு வகுக்கப்படும் திட்டத்துக்கு சகல தரப்பினருடைய ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கவும் வேண்டும்.

ஆனால், அரசாங்கத்துக்கும் பிற தரப்புகளுக்கும் இடையிலான இழுபறிகளும் முரண்களும் வன்னியையும் வன்னி மக்களையுமே பாதித்திருக்கிறது. குறிப்பாக புலம் பெயர் மக்கள் அரசாங்கத்துடன் கொண்டிருக்கும் முரண் நிலை என்பது வன்னி மக்களை மேலும் பாதித்துள்ளதுடன் அவர்களைத் தனிமைப்படுத்தும் அபாயநிலையையும் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் புனரமைப்புப் பணிகள் முழுமையடையவில்லை என்பது இன்னொரு விதத்திலான பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் புனரமைப்புப் பணிகளில் அரசாங்கம் உதவக்கூடிய வெளிநாடுகளும் தொண்டர் அமைப்புகளும் ஒரு கூட்டுச் செயற்திட்டத்தை மேற்கொண்டிருக்கு மேயானால், இப்போது கணிசமான வெற்றியும் பெறுபேறும் கிடைத்திருக்கும்.

இது போனால் பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே இயல்பு நிலையின் வளர்ச்சியையும் வேகத்தையும் அதிகத்திருக்கும்.

ஆனால், அரசாங்கத்தின் இறுக்கமான நிலைப்பாடுகள், தொண்டர் அமைப்புகளின் பணிகளையும் உதவிகளையும் வரையறுத்துச் சுருக்கி விட்டன. அத்துடன், அரசாங்கத்திற் கும் வெளிச் சக்திகளுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் இழுபறி நிலை. முரண்கள் அரசியல் இராஜதந்திர நெருக்கடிகள் எல்லாம் அந்தத் தரப்பின் உதவிகளையும் ஒத்துழைப்பையும் குறைத்துள்ளன. ஆகவே, அரசாங்கத்தினால், தேவைப் படுகின்ற அளவுக்கு உதவிகளை மேற்கொள்ளவோ புனரமைப்பை விரைவு படுத்தக் கூடியதாகவோ முடியவில்லை.

மேலும், யுத்த முடிவுக்குப் பிறகு இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஒரு தெளிவான தீர்மானத்துக்கும் நடவடிக்கைக்கும் அரசாங்கம் வந்திருக்குமேயானால், போனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வளிப்பதில் மட்டுமல்ல, இலங்கையின் நெருக்கடி நிலைகளில் இருந்தும் அது மீண்டிருக்கும். ஆனால், இந்தப் பின்னடைவு நிலைக்கு அரசாங்கத்தினதும் சிங்கள அதிகாரத் தரப்பினரதும் கடும்போக்குகளே காரணமாகும்.

போருக்குப் பின்னரான நிலைமைகளை அரசாங்கம் சீர்செய்ய முன்வந்திருக்கு மேயானால், அது போருக்குப் பின்னரான நடவடிக்கைகளுக்காக ஒரு கூட்டுச் செயற்பாட்டுத்திட்டத்தை உருவாக்கி யிருக்கும். இப்போது அந்தத் திட்டத்தின் நடவடிக்கைகள் குறிப்பிட்டளவு வெற்றியையும் கொடுத்திருக்கும்.

ஆனால், அரசாங்கத்தின் இறுக்கமான நிலைப்பாடுகள் அதற்கு இடமளிக்காத காரணத்தினால், வன்னியிலும் (போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில்) முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. இலங்கையின் நெருக்கடி நிலைமைகளும் தணியவில்லை.

தொகுத்துச் சொல்வதானால், வன்னியின் போதாக்குறைகள் பலவாக இருக்கின்றன. மருத்துவர்கள் பற்றாக்குறை. (வன்னிப் பகுதிக்குக் கடமையாற்றச் செல்வதற்கு அதிகமான மருத்துவர்கள் தயாராகவில்லை).

அரசாங்க அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஆசியர்கள் போன்றோர் வன்னியில் கடமையாற்ற விரும்பவில்லை. வன்னிக்கான புதிய இடமாற்றங்களைப் பலரும் எதிர்க்கின்றார்கள். அதேவேளை, வன்னியிலிருந்து வெளியேறவே பலரும் விரும்புகின்றனர்.

வன்னியில் அரசாங்கத்தரப்பின் அனுசரணையோடு இயற்கை வளங்களான மரம் வெட்டுதல், மண் அகழ்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

படையினர் பல நிர்வாக நடவடிக்கை களிலும் தலையிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக, தொண்டர் நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற உதவிப் பொருட்களை வழங்குவதற்குக் கூட படையினன் தலையீடுகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சிங்களக் குடியேற்றம்.

கோம்பாவில் பிரதேசத்தில் திட்டமிடப்பட்ட வகையில் வெளியில் பாதுகாப்பாக காடுகள் வளர்ந்து நிற்க உள்ளே காடுகள் வெட்டப்பட்டு பெரியளவில் மாடிக் கட்டிடங்களும் தொடர் கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றது. இவை இராணுவத்தினருக்கானது என இராணுவத்தினர் பலர் அங்கு சென்று வந்த மக்கள் பலருக்குத் தெரிவித்துள்ளனராம்.

தற்போது மேற்படிப்பிரதேசத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை அண்டி மிகக் குறுகிய அளவில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் தொடர்பாக,

யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் பல இன்னமும் மீட்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. அவற்றை மீட்பது தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோற்றுப்போயுள்ளன. அது தொடர்பாகவும் கவனமெடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

எனவே, இவ்வாறான காரணங்கள் வன்னி மக்களையும் வன்னிப் பகுதியையும் பாதித்துக் கொண்டேயிருக்கின்றன. இங்கே இன்று தேவைப்படுவது, நடந்த நிகழ்ச்சிகளுக்காக வருந்துவது மட்டுமல்ல, நிகழ்கால வாழ்க்கையிலிருப்போரையும் எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போரையும் உதவியளித்து வழிநடத்துவதேயாகும்.

இதுதான் வன்னியையும், வன்னி மக்களையும் கடந்த கால இருளிலிருந்தும், வலிகளிலிருந்தும் காயங்களை நினைவு படுத்தும் அடையாளங்களிலிருந்தும் மீட்டடுப்பதற்கான வழிகளாகும்.

“வன்னி எப்படி இருக்கிறது?' என்ற செய்தி அறிவது புதினம் கேட்பது எல்லாவற்றுக்கும் அப்பால், இவ்வாறான உதவிகளே இன்றைய தேவை. யுத்தம் முடிந்த இரண்டாண்டுகளாகி விட்டன. இந்த இரண்டாண்டுகளிலும் வன்னி மக்களுக்காக என்னென்ன பணிகளைச் செய்திருக்கிறார்கள்? என்று ஒவ்வொருவரும் தமது இதயத்தின் மேல் கையை வைத்து ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.

சிங்கள ஊடகத்தின் தமிழ் பிரிவு ஒளிபரப்பிய காணொளி ஒன்று.....

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1839:2011-05-22-08-07-45&catid=1:latest-news&Itemid=18

Edited by சிறிலிங்கம்

ஆம், இன்று குண்டு மழை பொழியவில்லை, மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழுகின்றனர், 2007-2009 ஆன காலப்பகுதியுடன் ஒப்பிடும்பொழுது.

தனது மண்ணில் நிம்மதியாக வாழ்ந்தவனை நிர்வாணத்துக்கும் வழியில்லாமல் செய்துவிட்டு கோமணம் கொடுக்கப்பட்ட நிலையில் தான் இந்த மக்கள் உள்ளனர்.

முன்னர் ஒரு கள உறவால் இணைக்கப்பட்ட இணைப்பு, வன்னியில் அல்ஜசீரா நிருபர் :

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84359

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.