Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பிரயாணம் செய்யும் ஒருவருக்கு அநுராதபுரம், பொலநறுவை ஊடாகப் பயணிப்பதான ஒரு உணர்வே எழும் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பிரயாணம் செய்யும் ஒருவருக்கு அநுராதபுரம், பொலநறுவை ஊடாகப் பயணிப்பதான ஒரு உணர்வே எழும் -

23 மே 2011

மகிந்த அரசின் பித்தலாட்டங்களை படம் பிடித்திருக்கிறார் மாலினி மானெல் பெரேரா தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

மே 19ஆம் திகதியன்று சிறிலங்கா விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த இரண்டாவது வருடத்தைக் கொண்டாடுடியது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைய பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து மூன்று தசாப்தகாலமாக நீடித்த போர் முடிவடைந்து விட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து சிறிலங்காவில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று எவரும் இல்லையென்றும் ஆக இரண்டே இரண்டு பிரிவினர் தான் உள்ளனர் அவர்களில் ஒரு பிரிவினர் தாய்நாட்டை நேசிப்போர், மற்றையோர் தாய் நாட்டை நேசியாதோர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. அது மட்டுமன்றி ஜனாதிபதியும் நீதியும் சமத்துவமும் எல்லோருக்கும் பொதுவானவை என்று தெரிவித்தார்.

ஆனால், தென்னிலங்கையிலுள்ள மக்கள் வாழ்க்கையை அனுபவிப்பதைப் போன்றதல்ல வடபகுதியில் வாழும் மக்களின் நிலைமை. இன்னமும் அவர்கள் பேசுவதற்குக் கூட அஞ்சும் சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருவதை நான் தொடர்பு கொண்ட பல்வேறு தரத்திலானவர்களும் தெரிவித்தனர்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த இந்த இரண்டு வருடங்களில், மோதல்கள் எதுவும் இல்லாததாலும் குண்டு வீச்சுக்கள் எதுவும் இல்லாததாலும் சிறிலங்காவின் பெரும்பாலான மக்கள் ஒரு ஒரு அமைதிப் பெருமூச்சை விடுகிறார்கள் என்பது உண்மை தான்.

குண்டு வெடிக்கும் சத்தம் எதுவும் கேட்பதில்லை. அம்புலன்ஸ் வண்டிகள் ஓடித் திரியும் சத்தமும் இப்போது கேட்பதில்லை. வேலைத் தளங்களிலிருந்தோ அல்லது வியாபாரத் தளங்களிலிருந்தோ தங்களது அன்புக்குரியவர்கள் வீடு திரும்பும் வரை பதட்டத்துடன் யாரும் இப்போது காத்திருப்பதில்லை. விடுதலைப் புலிகளின் கொடும் தாக்குதல்கள் இப்போது இடம் பெறுவதில்லை. மகிந்த ராஜபக்சவும் பெரும்பாலான புத்த பிக்குகளும் எதிரியைத் தோற்கடிப்பதற்காக போர் செய்ய அனுமதித்து உத்தரவிட்டு, ஊக்குவித்ததிலிருந்து இவை எதுவும் இப்போது இடம்பெறுவதில்லை. ( இத்தகைய உத்தரவும் அனுமதியும் எவ்வாறு வெற்றியளித்தது என்பதும் அது ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஒரு பொறிமுறை தானா என்பதும் பிறிதொரு விடயம்.)

ஆக, நாட்டின் தென்பகுதியில் வாழும் மக்கள் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று சொல்வதில் தவறேதும் இருக்க முடியாது. அவர்களுக்கு அவர்களுடைய சொந்த வீடு இருக்கிறது வாழ்க்கையை எந்தக் கவலையுமின்றித் தொடர. அவர்களுக்கான வேலை இருக்கிறது அதனைத் செய்து தங்களது வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை அவர்கள் தேடிக் கொள்ள முடியும். அவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் பயிர் செய்து அவற்றின் பயனை அனுபவிக்க முடியும். அவர்களுக்கான பாடசாலை இருக்கிறது. அங்கு அவர்கள் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னெறிக் கொள்ள முடியும். 24 மணித்தியாலங்களிலும் அவர்கள் தங்களுக்குத் தேவையான எதையும் செய்ய அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது.

ஆனால், போருக்குப் பிந்தைய சிறிலங்காவில் தெற்கிலும், கிழக்கிலும், வடக்கிலும் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களும், குறிப்பிடத்தகுந்தளவான தமிழர்கள் அல்லாதவர்களும், (கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவ அல்லாத மதகுருமாரும் இவர்களுள் அடங்குவர்) இதற்கு எதிர்மாறான வாழ்க்கைiயையே வாழ்ந்து வருகின்றனர்.

மீள்குடியமர்வினதும் நல்லிணக்கத்தினதும் உண்மையான நடைமுறை அர்த்தத்திற்காகக் காத்தருக்கும் மக்கள்:

அங்குள்ள மக்கள் எவ்வாறு வாழ்ந்து வருகிறார்கள் என்பது ஒரு மிகப் பெரிய கேள்வி.

வடபகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் இவை குறித்துப் பேசத் தயங்குகின்றனர். தங்களது துயரங்கரளைப் பேவசுவதை விட அமைதியாக இருப்பதே மேலானது என்று அவர்கள் சொல்கிறார்கள். அரசாங்கத்தின் உதவிகள் கிடைது: வந்தாலும் பெரும்பாலான மக்கள் இன்னமும் முகாம்களிலேயே தான் வாழ்ந்து வருகிறார்கள். சிறிலங்கா அரசாங்கம் காலத்துக்குக் காலம் அவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டனர் என அறிவித்தாலும் அவர்கள் இன்னமும் இடைத்தங்கல் முகாம்களிலேயே தான் வாழ்ந்து வருகிறார்கள். மீள்குடியேற்ற வழிமுறைகளில் தங்கள் குடியிருப்புக்களை அமைக்க சிலர் வெறும் பத்துத் தகரங்களைத் தான் பெற்றிருக்கிறார்கள். பலருக்கு உலருணவுதவி நிறுத்தப்பட்டிருக்கிறது. தொழில் வாய்ப்புக்களும் அற்ற நிலையில் உலருணவுதவியும் இல்லாது அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார்கள். இத்தகைய உணவுப் பற்றாக்குறை காரணமாக மற்றும் மனஅழுத்தம் தொடரும் நிலையில் காரணம் எதுவுமற்று 48 பேர் தற்கொலை செயது கொண்டுள்ளார்கள். இவர்களுள் வயதானவர்கள் இளையவர்கள் ஆண் பெண் இருபாலாரும் அடங்குவர். இவர்களில் பலர் நன்கு கல்வி கற்றவர்கள். ஆனால் இவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை.

பெருமளவிலான நிலங்கள் பாதுகாப்புப் படையினராலும், பல்தேசிய நிறுவனங்களாலும் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இக்காணிகளின் உரிமையாளர்களோ செய்வதெதுவும் அறியாது அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னமும் பல இடங்களில் பாரிய விஸ்தீரணத்தில் உயர்பாதுகாப்ப வலயங்கள் தொடர்ந்திருந்து கொண்டு தானிருக்கிறது. சிறிலங்கா இராணுவத்தினர் தான் பெரும்பாலான பிரதேசங்களில் நிர்வாகத்தை நடாத்தி வருகிறார்கள். எனினும் அப்பகுதிகளில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. எனவே தான் அப்பகுதிகளில் வாழும் மக்கள் சொலடகழறாhடகளட அங்கு மனஅமைதி என்பது இல்லையென்று. கண்ணால் காணக்கூடிய அபிவிருத்தி என்னவென்றால் கட்டிடங்களும் தெருக்களும் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளமை தான்.

அபிவிருத்தியை மக்கள் விரும்புகிறார்கள் தான். அதேவேளை அவர்கள் சொல்கிறார்கள், போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் எங்களுக்கு எவ்வாறான வாழ்க்கை இருந்ததோ அந்த வாழ்க்கை எமக்கு வேண்டும் என்று. அதேவேளை எங்களுக்கு நீதியும் வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். எல்லா அநியாயங்களும் எங்களுக்கு நடந்தது. எங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் இழந்தோம். எங்கள் சில உறவுகளைப் பற்றி ஒரு தகவல் தானும் தெரிய வரவில்லை. அவர்கள் எங்காவது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூடத் தெரியாது. ஏங்களது சொத்துக்கள் அனைத்தையும் நாம் இழந்தோம். எங்கள் கௌரவத்தையும் இழந்தேர். இப்போது நாங்கள் பிச்சைக்காரர்களாக இருக்கிறோம். தங்கி வாழ்பவர்களாக ஆகிவிட்டோம். இப்போதாவது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை எங்களுடைய வழியில் கட்டியமைத்தாக வேண்டும்.

ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பிரதான வீதியில் இலங்கை இராணுவத்தினர் 60 உணவு விடுதிகளையும் தங்கு விடுதிகளையும் நடத்தி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு வேலைக்கான வாய்ப்பக்களi வழங்கி அவர்கள் உழைப்பதற்கு வழிவகை செய்து அவர்கள் தங்களுடைய கால்களில் தங்கி நிற்;பதற்கான வாய்ப்புக்களை வழங்காமல் இராணுவத்தினர் ஏன் இதனைச் செய்ய வேண்டும்? என்று தமிழர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

போரால் கணவனை இழந்து பெண்களின் வறுமை காரணமாக மன்னாரின் ஒரு பிரதேசத்தில் சிவப்பு விளக்குப் பகுதியே ஆரம்பித்து விட்டதென்பது ஒரு வலி மிகுந்த ஒரு செய்தி: இந்தப் பெண்கள் அம்மாவட்டத்தின் பல்வேறு தரப்பு ஆண்களால் பாவிக்கப்பட:டு வருகின்றனர் எனத் தெரிய வருகிறது. போரில் கணவனை இழந்து குழந்தைகளுடன் வாழும் இந்தப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எத்தகைய திட்டங்களும் அமுல்படுத்தப்படவில்லை. சிறிலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்பட்டு வரும் கடைகளுக்கு தங்களுடைய கைத்தோலைபேசியை 'ரொப்அப்' செய்யச் செல்லும் கணவனை இழந்த பெண்களுடைய தொலைபேசி இலக்கங்களைக் குறித்துக் கொள்ளும் இராணுவத்தினர் இரவு வேளைகளில் இப் பெண்களுக்குத் தொலைபேசி எடுத்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இது அவர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.

வடக்கில் பிரயாணம் செய்யும் ஒருவருக்கு அநுராதபுரம், பொலநறுவை ஊடாகப் பயணிப்பதான ஒரு உணர்வே எழும் எனச் சொல்கிறார்கள். ஏனெனில் ஆங்காங்கே அரச மரங்கள் நாட்டப்பட்டு அதற்குக் கீழ் புத்தருடைய சிலைகள் ஏராளம் அப்பகுதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன. குறிப்பாக கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் இது பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மொத்தத்திலும் போர் முடிவடைந்து இந்த இரண்டு வருடங்களிலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பெருமளவில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதை பல உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மதத் தலைவர்கள் குழு, தொண்டர் நிறுவனக்குழு, தெற்கிலிருந்து செல்லும் விருந்தினர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்ட இந்த மக்களுடைய பிரதேசங்களுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு மறைந்துள்ள உண்மைகளைக் கண்டுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்த உண்மைகள் அவர்களுடைய குறிப்புப் புத்தகங்களிலும் பைல்களிலுமாக துங்கிக் கிடக்கின்றது என்பது தான் வேதனை. குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அவற்றை ஊடகங்களுக்கு வழங்க வேண்டும் என்ற உணர்வுகூட அவர்களுக்கு இல்லாதிருப்பது தான் துரதிர்ஷ்டம்.

அவர்கள் அவ்வாறு ஊடகங்களுக்கு வழங்குவார்களாயின் அந்தக் கசப்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர்கள் அவர்களாகவே இருக்க முடியும். மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க அது உதவும். பாதிக்கப்பட்ட அந்த மக்களின் உண்மைச் சித்திரத்தை வெளிக்கொணர முயன்ற கிறிஸ்தவ மதகுருமார்களுக்கு புலிகளின் நண்பர்கள் அல்லது கொட்டியா என்ற முத்தரை குத்தலே நடந்திருக்கிறது.

எவ்வாறாயினும், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க இதுவே அரிய சந்தர்ப்பம் என்பதை அதிகாரத்திலுள்ளவர்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அதாவது, புத்த பெருமானின் 2600வது ஜயந்தியைச் சிங்கள் பௌத்தர்கள் கொண்டாடும் இவ்வேளையே அதற்குப் பொருத்தமானது. ஆனால் அவர்களுயைட தமிழ் சகோதரர்களும் சகோதரிகளும் தீராக் கடுந்துன்பத்தில் மூழ்கி இருக்கையில் பெருமெடுப்பில் இவர்கள் இந்த விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.

சிறிலங்கா ஒரு பௌத்த நாடென்ற வகையில் அதன் வரலாற்றில் இதுவொரு குறிப்பிடத்தக்க விழாவாக இருக்கும். அவர்கள் சிங்கள பௌத்தர்களின் உண்மையான இயல்பை வெளிப்படுத்தலாம். உண்மையான பௌத்தத்தின் தன்மையதாக அது இருக்கும். நாட்டின் பொறுப்புவாய்ந்த அதிகாரத் தரப்பினர் இந்தச் சொற்களின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்து கொண்டால்.

மாலினி மானெல் பெரேரா தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

சிங்கள பௌத்த பேரினவாதம் அழகாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாமல் அதன் ஒரே நோக்கம் தமிழின அழிப்புத்தான் என மீண்டும் எமக்கு உணரவைத்துள்ளது.

இறைமை கொண்ட அரசு, மனிதபிமானத்திற்கு ஆன யுத்தம், தமிழருக்கு சம உரிமை உள்ளது என்ற பல கவர்ச்சிகரமான வெற்று வார்த்தகளை கொட்டியே அறுபது வருடத்திற்கும் மேலாக இனஅழிப்பு செய்யும் சிங்களம்.

தனது பாவங்களை மறைக்க வாய்பேச முடியாத புனித பௌத்த மதத்தையும் வேறு சிறைப்பிடித்து வைத்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.