Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவைப் பகைத்துக் கொள்ளவேண்டாம் - இலங்கைக்கு டெல்லி கொடுத்த அட்வைஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு ஈழத்தமிழர் பிரச்னையும் முக்கியக் காரணம் என்பதை மத்திய அரசு புரிந்து கொண்டிருக்க வே ண்டும். ‘‘ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்’’ என டெல்லி தலைவர்கள் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் திருப்பித் திருப்பிச் சொன்னது இதைத் தான் உணர்த்துகிறது.

தமிழகத் தேர்தல் முடிவுகள் இந்தமுறை இலங்கையில் ஆர்வமாக கவனிக்கப்பட்டது. இனப்படுகொலையை வேடிக்கை பார்த்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் தோல்வியும், ஜெயலலிதாவின் வெற்றியும் இலங்கைத் தமிழர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இந்த உற்சாகம் வழக்கம்போல் இலங்கை அரசுக்கு எரிச்சலை ஏற்படு த்தி இருக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு இந்திய அரசு அவ்வளவாக முக்கியத்துவம் தராது எனத்தான் இலங்கை நினைத்தது.

இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலை தான் என ஐ.நா. நிபுணர்கள் குழு உறுதி செய்தது. இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க, தங்களுக்கு ஆதரவான நாடு களின் உதவியைக் கோரி வருகிறது இலங்கை. அதன்படி, இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் கடந்த வாரம் டெல்லி வந்தார்.

பிரீஸ் இந்தியா வந்ததில் இருந்தே அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் சந்தித்த இந்தியத் தலைவர்கள் அனைவருமே, ‘‘இலங்கை விவகாரம் தமிழக த்தில் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கவனமாக நடந்து கொள்ளுங்கள். தமிழக முதல்வரை பகைத்துக் கொள்ள வேண்டாம்’’ என்கிற வாசகங்களையே திரு ப்பித் திருப்பி சொல்லியிருக்கிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சகம், ‘‘தேவையில்லாமல் ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர் நீங்கள் நினைப்பது போல் சாதாரண ஆளில்லை’’ என்று சொல்ல, பிரீஸுக்கு தர்மசங்கடமாய் போய்விட்டது. ஏனெனில், ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை அரசு, ‘‘ஜெயலலிதாவை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை’’ என்று கூறியிருந்தது.

இதற்குப் பிறகுதான் வெளியுறவு அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பினார். அதில், ‘‘இருநாட்டு மக்களின் நன்மைக்காக உங்களுடன் இணைந்து செயலாற்ற இலங்கை அரசு விரும்புகிறது’’ என்கிற வரிகளும் இடம் பெற்றிருந்தன.

மத்திய அரசு தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்பதை நம்ப மறுக்கிறார்கள் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள். ‘‘தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையில் அரசு அமைத்துள்ள ஜெயலலிதா நினைத்தால் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எவ்வளவோ செய்ய முடியும். சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவது, தமிழக மீனவர்களைக் காக்க மத்திய அரசை வற்புறுத்துவது என அவர் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

ஆனால் அவர் இதைச் செய்யாமல் இருப்பதற்காக, ஜெயலலிதாவை தங்களோடு இணைத்துக் கொள்ள முயற்சிக்கிறது காங்கிரஸ். அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலையும் மனதில் கொண்டு காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது. இதற்காகத் தான் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் நடிக்கிறது. இதை முதல்வர் ஜெயலலிதா நம்பினால் தமிழர்களுக்குத்தான் கேடு’’ என்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

ஆதாரங்களை அழிக்க இலங்கை முயற்சி?

இதற்கிடையே, இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்னும் மீள் குடியமர்வு செய்யப்படவில்லை என ஐ.நா. அதிரடியாக அறிவித்துள்ளது. “2011 மே மாதம் 13-ம் தேதி நிலவரப்படி, உள்ளூரில் இடம் பெயர்ந்த குறைந்தது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 888 பேர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. முகாம்களில் இருந்து வெளியேறியவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் அவர்களது வீடுகளுக்கோ, விவசாய நிலங்களுக்கோ திரும்பவில்லை’’ என சொல்கிறது அந்த அறிக்கை.

ஐ.நா. சுமத்திய போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அழிப்பது அல்லது அதனை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாம். “புலம்பெயர் தமிழ் மக்களும், மனித உரிமை அமைப்புகளும் தற்போது நம்பிக்கொண்டிருக்கும் போர்க்குற்ற ஆதாரங்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் பல போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தயாரிப்பதற்கு இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்த அணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’’ என உறுதியாகச் சொல்கின்றன வெளிநாட்டு ஊடகங்கள்.

அதாவது போலியான வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுத்து அதனைத் தமிழர்களின் ஊடக இணையங்கள் மற்றும் சர்வதேச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப விடுவது அதன் முதல் திட்டமாம். பின்னர் அதனை போலியானவை என இலங்கை அரசு நிரூபித்து தற்போது பேசப்படும் போர்க்குற்ற விசாரணைக்கான முனைப்புகளை முறியடிக்க நினைத்துள்ளதாம். மேலும், விடுதலைப் புலிகள் போர்க் குற்றம் புரிந்ததாக வீடியோக்களையும் புகைப்படங்களையும் போலியாகத் தயாரித்து வெளியிட்டு போர்க்குற்ற விசாரணைகளைத் திசை திருப்பவும் நினைக்கிறதாம் இலங்கை அரசு.

இந்த வேலைகள் அனைத்தும் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் நடக்கவுள்ளதாகவும் பனாங்கொட ராணுவ முகாமில் இது தொடர்பான பணிகள் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இலங்கை ராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து தனியார் நிறுவன தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கணினி உதவியுடன் புதிதாக உருவாக்கப்படும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் விநியோகம் செய்வதற்கு அவர்கள் மத்தியில் இயங்கும் இலங்கை உளவாளிகளைப் பயன்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய யு.எஸ்.பி. சேமிப்புக் கருவிகளுடன் சில முகவர்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடு களுக்குச் சென்றுள்ளனர். முதலில் இதனை பணத்துக்கு விற்பதோடு, பின்னர் அதனை போலியானது என நிரூபிப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து வரு வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ஒருசில புகைப்படங்களை சில தமிழ் இணையங்களுக்கு இலங்கை புலனாய்வுத்துறை இலவசமாக அனுப்பியுள்ளது. இருப்பினும் அவை போலியானவை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது என்கின்றன வெளிநாட்டு ஊடகங்கள்.

எப்படியோ தப்பித்தால் போதும் என தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறது இலங்கை. உப்பைத் தின்றுவிட்டு தண்ணீர் குடிக்கமாட்டேன் என்றால் எப்படி?

ரிப்போர்ட்டர் டீம்

- குமுதம் ரிப்போட்டர்

இவையெல்லாம் இலங்கையின் இறுதி முயற்சி ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.